காசே தான் கடவுளடா கைக்கு கைமாறும் பணமே உன்னை கைபற்ற நினைக்குது மனமே"
என்று கண்ணதாசன் கவி avm ராஜா பாடிய சக்கரம் படப்பாடல் மூத்தவர்கள் அறிந்திருப்பார்கள் இளையவர்கள் தேடமாட்டார்கள் ரசனையான பாடல்களை தேவை எல்லாம் குத்துத்தானே!.
(சல்லிதமாய் தெய்யங்கே அய்யே) என்று சகோதர மொழியில் வியாபார உலகில் சொல்லும் ஒரு நகைச்சுவை. இப்படித்தான் ஓட்டிகளும் காசுக்கு ஆசைப்பட்டுத்தான் ஆட்களை கூட்டிச் செல்கின்றார்கள். பலர் சேர்ந்து குழுவாக இயங்கும் இந்த வேலையில் மேலே இருப்பவர் பணத்தினை பிரித்துப் பிரித்துத்தான் கொடுப்பார். பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி நிதி ஒதுக்கீடு போல புணர் நிர்மானம் செய்த பின் தான் சில சட்டச்சிக்கல் கடந்து பணம் கைக்கு வரும் அதுபோல ராஜாவும் ஆட்களை மலேசியாவுக்குள் கொண்டு வந்தால் தான் குமார் காசு கொடுப்பான் என்று தெரியும்.
ஆனால் அவனுக்கு தாய்லாந்து வந்து விட்டால் தன் செயல் மறந்து போவான். வாக்கு வாங்கிவிட்டு பாராளுமன்றம் போன தொகுதி உறுப்பினர் போல. இந்த நிலையில்தான் நாமலிடம் அதிகம் பணம் இருக்கின்றது என்ற கணிப்பில் அதிகம் ஜாலியாக சோமபானம் பருகிவிட்டு தாய்லாந்து பரத்தையிடம் (பழந்தமிழ் இப்படிச் சொல்லும் நவீன உலகு பாலியல் தொழிலாளி என்று சொல்லும்) போன ராஜாவுக்கும் தாய்லாந்தில் தங்கியிருக்கும் மலேசியாவாசி ஒருவருக்கும் தொழில் விரோதம்! (இருவரும் வெவ்வேறு ஆட்களுக்கு ஆட்களை கூட்டிச் செல்லும் தனிநபர்கள்) கைகலப்பில் போக அருகில் இருந்த நாமல் ராஜாவுக்கு உதவிக்குப் போக கைகலப்பு அதிகமாகிவிட்டது.
யாரின் பிழை என்பது எங்கள் அறைக்கு இருவரும் காயத்தோடு வரும் வரை எங்களுடன் இருந்த யாருக்கும் தெரியவில்லை. வந்த கையோடு குமார் அழைப்பு எடுத்த விடயத்தைச் சொல்லியிருந்தான் அகிலன். உடனே ராஜா செய்தது எங்களை எல்லாம் விடுதி மாற்றியது. தான் கெட்டதிலும் ஒரு நல்லது என்பார்கள் அனுபவத்தில் பார்த்தோம். ராஜா உடனே இன்னோர் விடுதியில் தங்கவைத்துவிட்டு சாப்பாடு கொடுக்கும் வசதி செய்துவிட்டு அன்று மாலையே மலேசியா போய் விட்டான். எங்களில் 8 பேரில் 5 பேரிடம் அதிகம் காசு இல்லை. நாங்கள் என்ன சுற்றுலா வந்த அம்பானி வாரிசுகளா? உயிர் தப்ப! ஒடிவந்த ஈழத்து ஏதிலிகள் தாய்லாந்து விசா முடிவடைந்து விட்டது.
மீண்டும் புதுப்பிக்க வேண்டும் என்றால் தலைநகரம் பாங்கொக் போக வேண்டும். சாங்கலா கிராமத்திற்கு உள்ளே வந்த பின் யாரும் அதிகம் விசா பற்றி சிந்திக்கவில்லை. நாமல் அடிப்பட்டதில் காயம்பட்டு வந்து வலியில் துடித்த போது போதை தெளியத்தானே பிழையின் தன்மை புரியும்! நாமலும் ஓட்டி என்றால் ஓடும்பழமும் போல இருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டான்.
நாமல் வலியில் துடித்த போதுதான் எங்களோடு இருந்தவர்கள், அவன் சிங்களவன் என்றே உணர்ந்து கொண்டார்கள். காதலித்து வீட்டைவிட்டு ஓடியவள் காதலித்தவன் அயோக்கியன் என்பதைத் தெரிந்து கொண்டது போல!
////
சல்லிதமாய் தெய்யங்கே அய்யே)-காசேதான் கடவுளின் அண்ணா!பாடல் இதுவோ!
தொடரும்....

23 comments :
இரவு வணக்கம்,நேசன்!நலமா?தாய்லாந்து............ம்ம்ம்.உலகப் படத்தில் பார்த்தது.அப்பப்போ சுனாமித் தாக்குதலின் போதும் தொ(ல்)லைக் காட்சிகளிலும் பார்த்தது.தொடருங்கள்,தொடர்வேன்!///அப்புறம் அந்தப் பாடகர் ஏ.எம்.ராஜா.ஏ.வி.எம் முக்கும் அவருக்கும் தொடர்பில்லை!
நீண்ட நாட்களின் பின் ஒரு பால்கோப்பி கிடைக்குமா?ஹி!ஹி!ஹி!!!
"சக்கரம்"படப் பாடல்,ஏ.எம் ராஜா பாடவில்லையே?ரி.எம்.எஸ் பாடியது.
yoga anna ,naalaikku unga marumagalin
pirantha naala?? vivaram arinja en plaagil yes endru comment podunga .
nesan naan piragu varen ,
ஆஆஆவ்வ்வ்வ் அழகாகச் சொல்லிட்டுப் போறீங்க... சிங்கப்பூரில் நம்மவர்கள பலரும் இதே நிலையில் தங்கித்தான் பல நாடுகளுக்கும் வந்து சேர்ந்தவர்கள்...
எனக்கு ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).
//நாமல் வலியில் துடித்த போதுதான் எங்களோடு இருந்தவர்கள், அவன் சிங்களவன் என்றே உணர்ந்து கொண்டார்கள்//
ஏன் அவ்வளவு அழகாக தமிழ் பேசினவரோ?
அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ:)
வணக்கம் சகோதரர் நேசன்,
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின் எனது வருகை....
விடுமுறையில் இருந்ததால் வரமுடியவில்லை...
பிரெஞ்சுக் காதலியை நிறைய தவறவிட்டு விட்டேன்...
இதோ விட்ட அனைத்தையும் படித்துக்கொண்டிருக்கிறேன்...
ம்ம்ம் கதை நன்றாக போகிறது தொடருங்கள்...............
தொடர்கிறேன்...
சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்!
வாழ்த்துக்கள் ...........
ஒட்டிகளால் கைவிடப்படுபவர்கள் மிக மிக அதிகம்
வரலாறுகளை திரும்பி பார்க்கையில் எப்படி சாத்தியமாயிற்று என்ற நினைவே வருகிறது
இரவு வணக்கம்,நேசன்!நலமா?தாய்லாந்து............ம்ம்ம்.உலகப் படத்தில் பார்த்தது.அப்பப்போ சுனாமித் தாக்குதலின் போதும் தொ(ல்)லைக் காட்சிகளிலும் பார்த்தது.தொடருங்கள்,தொடர்வேன்!///அப்புறம் அந்தப் பாடகர் ஏ.எம்.ராஜா.ஏ.வி.எம் முக்கும் அவருக்கும் தொடர்பில்லை!
//வணக்கம் யோகா ஐயா கொஞ்சம் நலம் இல்லை சில தடுமாற்றம் !ம்ம் தொடர்வதுக்கு நன்றி தனிமரம் இல்லை நீங்கள் இருக்கும் போது முருகா முருகா!
ம்ம் உண்மைதான் am raja என்று தான் வ
ரனும் கவனக்குறைவு மன்னிக்கவும்!
நீண்ட நாட்களின் பின் ஒரு பால்கோப்பி கிடைக்குமா?ஹி!ஹி!ஹி!!!
14 September 2012 12:50
//எப்போதும் பால்க்கோப்பி இருக்கும் யோகா ஐயாவுக்கு.
சக்கரம்"படப் பாடல்,ஏ.எம் ராஜா பாடவில்லையே?ரி.எம்.எஸ் பாடியது.
//ஓ அப்படியா சில ஊடக நெஞ்சங்கள் சொல்லியது ஏ.எம் ,ராஜா பாடியது என்று நான் அப்ப சின்னப்பிள்ளை !ம்ம் இப்படித்தான் தப்புத் தப்பாக வரலாற்றைச் சொல்லி வெறி ஊட்டிவிட்டார்கள் அறிவிப்பில் ஐயா!:)))) நன்றி உண்மைத் தகவலுக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
yoga anna ,naalaikku unga marumagalin
pirantha naala?? vivaram arinja en plaagil yes endru comment podunga .
nesan naan piragu varen , //நன்றி அஞ்சலின்!
ஆஆஆவ்வ்வ்வ் அழகாகச் சொல்லிட்டுப் போறீங்க... சிங்கப்பூரில் நம்மவர்கள பலரும் இதே நிலையில் தங்கித்தான் பல நாடுகளுக்கும் வந்து சேர்ந்தவர்கள்...
எனக்கு ஒரு ஸ்ரோங் ரீ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:).
//ம்ம் விதி அதிரா . ஸ்ரோங் பால்க்கோப்பி கிடைக்கும்!:))))) நன்றி வருகைக்கும் கருத்துக்கும் அதிரா!
வணக்கம் சகோதரர் நேசன்,
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின் எனது வருகை....
விடுமுறையில் இருந்ததால் வரமுடியவில்லை...
பிரெஞ்சுக் காதலியை நிறைய தவறவிட்டு விட்டேன்...
இதோ விட்ட அனைத்தையும் படித்துக்கொண்டிருக்கிறேன்...// வணக்கம் மகி அண்ணா நன்றி படித்த பின் நிறைகுறைகளை சொல்லுங்க அண்ணா!
ம்ம்ம் கதை நன்றாக போகிறது தொடருங்கள்...............
//ம்ம் நன்றி எஸ்தர் -சபி வருகைக்கும் கருத்துரைக்கும்!
தொடர்கிறேன்//நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துக்கும்.
s suresh//:
சுவாரஸ்யமாக செல்கிறது! தொடர்கிறேன்!
//நன்றி சுரேஸ் வருகைக்கும் கருத்துக்கும் ஊக்கிவிப்புக்கும்!
வாழ்த்துக்கள் ...........
ஒட்டிகளால் கைவிடப்படுபவர்கள் மிக மிக அதிகம்
வரலாறுகளை திரும்பி பார்க்கையில் எப்படி சாத்தியமாயிற்று என்ற நினைவே வருகிறது
//ம்ம் நினைவுகள் பலருக்கு பல விதம்!.நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
//நாமல் வலியில் துடித்த போதுதான் எங்களோடு இருந்தவர்கள், அவன் சிங்களவன் என்றே உணர்ந்து கொண்டார்கள்//
ஏன் அவ்வளவு அழகாக தமிழ் பேசினவரோ?
அஞ்சூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ//ம்ம் சகோதரமொழியில் இருப்பவர்கள் நம் மொழி எப்படி அழகாக பேசுவார்கள் என்பதை நான் பார்த்து இருக்கின்றேன் இல்லை நம் தில்லை நடராஜான் அவர்களிடம் கேளுங்கள் சுந்தரம் டிவாகல அவர்கள் இந்துக்கலாச்சார அமைச்சின் செயலார் ஒருகாலத்தில்!ம்ம் மொழி நேசிப்பு வேற இனவாதம் வேற பூசார் அறியாமலா கண்டியில் சின்ன மகாரானி அல்லவா!:))))
late aanaalum muzhukka padikkren...
Post a Comment