நண்பா நலமா இப்படி கேட்க மனதில் இன்னும் கோபம் தீரவில்லை!
ஆயினும் நீயும் நானும் இணைந்தது தமிழ் படித்த காரணத்தால் . நீ ஆங்கிலம் அதிகம் படித்தாய் நான் அது படிக்க வில்லை. வருத்தம் இல்லை எனக்கு எழுத வராது என்று நீ திட்டிய போது !
உண்மைதான் என் படிப்பு 8ம் தரம் தான் இது எல்லாம் நீஅறிந்தாலும் நான் சிரிப்பேன் ஏன் தெரியுமா ?நீ தமிழில் அதிகம் சிரிக்கும் படி எழுதினாய் உண்மையில் உன் எழுத்துக்கு நான் அடிமை .
ஆனால் நீ என்னைப்புரிந்து கொண்டவன் இல்லை என்பதை நேற்று என் தனி கைபேசி அழைப்பில் வரும் நேரம் வரை அறியவில்லை.
அது தான் ஊரில் சொல்லுவார்கள் சட்டம் படித்தவன் சட்டம்பியார் வாழ்பிடித்தவன் அருவருடி என்று நானும் உன்னை வாழ்பிடித்தேன் !
நாலாவது தூண் என்கின்ற ஊடகத்தில் நீ ஒரு அறிவாளி என்று .
ஆனால் உன் படிப்பு உன் வருமானதுக்குகாக பிறரையும் விக்கும் மனிதவி மானம் தாண்டிய தொழில் என்பதை பார்த்த பின் தான் புரிந்துகொண்டேன் உன்னை வாழ் பிடிப்பதை விட மூட்டை தூக்கி பிழைத்து இருக்கலாம் என்று .
நீ உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் உரிமையுடன் சென்னேன். நண்பா சிந்திக்க வேண்டும் சுயசிந்தனைதான் எம் நட்பை தொடரும் சிந்திக்கும் வழியில் வாழ்பிடிக்கும் நண்பன் ஆக என்று .!
அப்போது எல்லாம் சிரித்தாய் மனதில் வஞ்சகம் என்றதை இப்போது அறியும் போது அகம் மகிழ்கின்றேன் படிக்காதவன் தப்பி விட்டேன் என்று.
உன் ஊடக அறிவு வெறும் உணர்ச்சியில் உன்னை விட்டுப் போகும் பலரில் இறுதியாக நான் இருக்கின்றேன்! நட்புடன் பிரிகின்றேன் !கவலை எனக்கு இல்லை பலரை பிரிந்து ஏதிலியாகிய பின் நீயும் ஒரு சிநேகம் தான் உறவு இல்லை!ம்ம்ம்
என் மீது சந்தணம் பூசு .சாணி அழகு ரொட்டி தட்டு ,முற்றம் சுத்திகரிக்கும் விளக்கு மாற்றில் சாமரம் வீசு .அன்னக்காவடி என்று எல்லாம் சந்தோஸமாக திட்டு நண்பா !
ஆனால் உணர்ச்சி வசப்படுபவன் நான் இல்லை !
அகங்காரம் அகீர்திணைக்குஇல்லை உயர்திணை நண்பா! மீண்டும் உன் அழைப்பில் நான் வரமாடேன் நீயும் என் வழியில் வந்துவிடாதே! நட்பு என்ற தமிழ் புனிதம்!ம்ம்ம் அரசியல் தாண்டி!
11 comments :
yaarukku....
கற்பனையில் உதிததது என்றால் பரவாயில்லை தான்... உண்மையிலேயே யாரோ ஒரு நட்பிற்கு எழுதப்பட்டதாய் தோன்றுகிறதே... அப்படியா?
எனக்கும் உள் குத்தல் / உள் சொறிதல் பதிவாகத்தான் தோன்றுகிறது..
காலை வணக்கம்,நேசன்!என்ன சொல்ல?எப்போதோ எங்கோ,யாருக்கோ ஒரு பின்னூட்டத்தில் சொன்னது,நினைவுக்கு வருகிறது.நான் படித்ததில் பிடித்தது மட்டுமல்ல,இன்று வரை நிகழ் வாழ்வில் பார்ப்பது:::: நாக்கு நுனிக்க நறுந்தேனும், நெஞ்சகத்து நீக்கரிய நஞ்சும்-நிலை கொண்ட தீக்குணத்தோன் என் சொலினும் செய்வான் இடர்!
யார் இப்படி உங்களைக் காயப்படுத்தியது நேசன்? வருததமாக இருக்கிறது!
"நாக்கு நுனிக்க நறுந்தேனும், நெஞ்சகத்து நீக்கரிய நஞ்சும்-நிலைபெற்ற தீக்குணத்தோன்,இன் சொல் உரைக்கின்றான் என்று அவனை நம்பாதே,என் சொலினும் செய்வான் இடர்" என்று வர வேண்டும்.
மனதில் உள்ள Delete Key-யை அமுத்துங்க பாஸ்...
//ஊடக நண்பனுக்கு// சிலேடையா!!
//நட்புடன் பிரிகின்றேன் !கவலை எனக்கு இல்லை// மனதில் நட்பு இன்னமும் இருக்கிறது; பிரிவுக் கவலையும் இருக்கிறது என்பதை இந்த வரிகள் தெளிவாகச் சொல்கின்றன. நட்பு குறை காணாது. விரைவில் எல்லாம் நலமாக என் பிரார்த்தனைகள் நேசன்.
என்ன ஆச்சு நேசன் .உங்க நல்ல மனதையும் நட்பையும் அவர்தான் இழந்தார் .
//மனதில் நட்பு இன்னமும் இருக்கிறது; //அந்த தூய நட்பு தோற்காது அவரும் அதனை விரைவில் புரிந்துகொள்வார்
எது என்னவோ நல்ல நட்பை இழந்ததற்கு அவர்தான் கவலைப்பட வேண்டும்..............
என்ன நடக்கிறது என்று விளங்கவில்லை...
ஆனால் படங்களின் எணணிக்கை பதிவு முழுதும் தரவிறங்க விடவில்லை என்பது மட்டும் உண்மை
Post a Comment