06 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி-20


உன்னை நினைந்து நினைந்து மனம் உருகி உருகி நெஞ்சம் நெய்யாய் உருகுதய்யா உன் பட்டுப் பீதாம்பர ஒளி கண்ணில் பட்டு விழிகள் கண்ணீர் சிந்துதய்யா என்பது ஒரு பெருமாள் பஜனைப் பாடலின் பல்லவி. 

அதுபோல பெருமாள் ஓட்டி வருவானா ? என்று மனம் உருகின நேரத்தில் மறுநாள் மதியம் விடுதியின் கீழ்த்தளத்தில் காத்திருந்தபோது, என்ன ரவி கீழ்த்தளத்தில் இருக்கின்றாய் ? உன்னை ரூமில் இல்லையா இருக்கச் சொன்னேன் என்று திரும்பிய பக்கம் பெருமாள் இன்னொரு நண்பனுடன் வந்து நின்றார்;. இல்ல...... நேற்றுப் போனீங்க ஆளைக்காணவில்லை, அதுதான் இங்க வந்து பார்த்தேன்.

ஓ அப்படியா... உங்க மற்ற பிரஞ்கள் எங்க ? அவங்கள் நேற்று வெளியில் போனாங்கள் இன்னும் வரவில்லை, என்று தெரிந்தே பொய் சொல்லவேண்டிய நிலை. அவர்கள் போகும் போது தங்களின் சில உடுப்பைக்கொண்டு போன காந்தனும் சீலனும், ஓட்டி நம்பும் வண்ணம் தங்களின் உடுப்புப் பைகளை விட்டுவிட்டுச் சென்றதில் என் பொய் நிஜம் என்று நம்பிவிட்டார் பெருமாள்!

என்னாச்சு சொல்லித்தானே போனேன், இப்ப இங்க பொலிஸ் நடமாட்டம் அதிகம் அதனால்தான் ரூமைவிட்டு வெளிய வராதீங்க என்று சொன்னேன். ம்ம் சரி அவங்களுக்கு அதிஸ்ரம் அவ்வளவும் தான் இரண்டுநாள் காத்திருக்க முடியவில்லை. பிரிஞ்சு போனவங்களைத் தேடி காலம் கடத்த முடியாது. நாம் இன்று மாலையே மலேசியா போறம். உன் கடவுச்சீட்டைக் கொடுங்க என்றதும் நானும் என்னிடம் இருந்த கடவுச்சீட்டைக் கொடுத்தேன். பெருமாளோடு கூட வந்தவன் என் கடவுச் சீட்டை வாங்கிக் கொண்டு வெளியில் போனான். 





ரூமில் பெருமாள் மிச்சம் இருந்த தாய் பீரினை சுவைத்த வண்ணம் ரவி ஐரோப்பாவில் உன்னைச் சேர்ப்பது என் கடமை துணிந்து இரு யாரும் அனாதை இல்லை. கடவுள் ஏன் உன்னை என்னிடம் வரவச்சார் என்று தெரியாது. ஆனால் இந்தியா பாண்டிச் சேரியில் இருக்கும் என் குருநாதர் அடிக்கடி ஒரு வார்த்தை சொல்லுவார், காரணம் இல்லாமல் காரியம் இல்லை. சில நேரம் சில தத்துவம் பைத்தியக்காரத்தனம் போல இருக்கும். ஆனால் அதுக்காக சூழல் வரும் போது அதன் நிஜம் புரியும். உனக்கு மத நம்பிக்கை இருக்கா உங்க ஊரில் ஐயப்பன் பக்தர்கள் இருக்கின்றார்களா?? 

பெருமாளின் கேள்விகள் என்னை நிலைகுழைய வைத்தது. ராகுலின் பாட்டி ஐயப்பன் பக்தை என்பது ஒருசிலருக்கு மட்டும் தெரியும். ஊரில் இருந்தே சபரிமலை யாத்திரை போகும் காலத்தில் எங்க குடும்பத்துக்கும் அவர்களின் குடும்பத்துக்கும் இடையில் இருந்த உறவு விட்டுப்போச்சு. ராகுலும் நானும் நட்பாக இருப்பதே வெளியில் மட்டும் தான். இதுகூட ஒரு சிலருக்குத் தான் தெரியும். என்ன யோசனை ரவி. என் நண்பர்கள் கொழும்பில் இருந்து போவார்கள் அவர்கள் எல்லாம் செட்டிதெரு குருசாமியின் வழியில் போவார்கள். ஏன் பெருமாள் அண்ணே நீங்களும் சபரிமலை போறனீங்களோ ? ஆமா இந்த வருடம் முடியாது ஒரு அசம்பாவிதம் அதனால் தான் என்ன உன்னக்கு வழிகாட்ட இங்க அனுப்பி இருக்கின்றார் போல. 

நான் ஓட்டி வேலை செய்தாலும் யாரையும் ஏமாற்றியது இல்லை. என்னை ஏமாற்றிய உங்க நாட்டுக்காரங்கள் பலர் இப்போது ஐரோப்பாவின் பல நாடுகளில் செல்வந்தர்களாக இருக்கின்றார்கள். சரி அது எல்லாம் உனக்குத் தேவையில்லை. கொஞ்சம் பீர் சாப்பிடு இருவருமாக பீர் குடித்தோம். அன்று மாலையில் பெருமாளோடு வந்த நண்பர் வரதன் சகிதம் மூவருமாக சங்கலா எல்லைக் கிராமத்தின் தரைவழிப்பாதை ஊடாக மலேசியா நாட்டுக்குள் நுழைந்த போது புளியங்குளம் சோதனைச் சாவடி போல உடல் பரிசோதனையோ எங்கே போறாய் ? எங்கிருந்தாய் ? என்ன செய்கின்றாய் ? என்ற எந்த கேள்வியும் இல்லை.

சுதந்திரமான பகுதியாக இருநாட்டு எல்லை இருப்பது மனதில் சிலிர்ப்பும் சிந்தனையும் வந்தது. எப்போது நம் தேசம் இப்படி மாறும் என்ற எண்ணம் மனதில எழுந்தது. மலேசியாவிற்கு வந்ததும் தங்கிதிருந்த இடம் மஜீத் இந்தியா அங்கே ஒரு விடுதியில் என்னைத் தங்கவைத்த பெருமாள் 5வது நாள் என்னை ஓட்டி வரதனுடன் மலேசியாவில் இருந்து பாரிஸ் அனுப்பி வைத்தார். 

நான் 2001 மார்கழி 27இல் பாரிசில் கரைசேர்ந்தேன். நான்கு மாதப் பயணத்தில் படித்த அனுபவம் அதிகம் தான், என்றாலும் இன்று 2010இல் நானும் பெருமாளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதுதெல்லாம் ஆன்மீக யாத்திரையில் சந்திக்கின்றோம். இப்போது பெருமாள் ஓட்டிவேலையை விட்டுவிட்டு ஒரு வியாபார நிலையத்தை நடத்தும் சாதரனமானவர். ஆனால் என் வாழ்வில் இன்னொரு வழிக்காட்டி பாரிஸ்தேசத்தில் அடைக்கலம் நாடிய ஏதிலி வாழ்வில் அகதி வாழ்வைவிட அனுமதி வந்தவுடன் ஆண்டவன் அருளில் 2002 மாசி மாத இறுதியில் நண்பன் ஒருவன் வழிக்காட்டிய நிலையில் என் கதையைக் கேட்ட பிரெஞ்சு அரசு எனக்கு அரசியல் தஞ்சம் கொடுத்தது. 

விசா கிடைத்த நிலையில் இரண்டு வருடத்தில் வீடுவாங்கி தனியாக இருக்கின்றேன். இப்போது நண்பர்கள் சகிதம். என் தாய் தந்தைக்கு வெளிநாட்டில் உயிரோடு இருப்பது ஆறுதல் என்றாலும் நான் இப்படி ஆன்மீகம் என்றும், சாலிகாவின் நினைவிலும் இருந்து மீளவேண்டும் என்றும், கலியாணம் காட்சி என்று புலம்புவதே வேலையாகிவிட்டது. நண்பன் ஜீவன் என்ன உள்குத்துப் போட்டாலும் என் வழியில் தனித்துவமாக போகின்றேன்



. பார்க்கலாம் விழியில் யாராவது விழுந்து சாலியின் இடத்தை பிடிக்கின்றார்களா? என்று. இந்த நிலையில் அன்று என்னோடு பயணித்த நண்பன் ஜீவன் மலேசியாவில் என்னாச்சு இனி அவன் வழியில் என்ன நடந்து இருக்கும்?? ஜீவனின் நண்பனாக இருந்து நிசாவுக்கு நான் எப்படி வில்லன் ஆனேன்?




 முதல் நட்பு ரவி  முற்றும்!!!
தொடரும் ...............

13 comments :

Anonymous said...

ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ

Anonymous said...

மீ க்கு தான் முதல் பால் காப்பி ....

Anonymous said...

இர்பது போயிடுச்சி அண்ணா ...நடுவில வந்து குழப்படி பண்ண மாட்டிண்ணன் ...சாலிகா ஆஆ வா ....அனாமிகா நியபாம் தான் வருது ...இதுல உருகுறது நண்பர் ன்னு தன் என்கட்ட சொல்லுவிங்கோ ...உங்க அப்பா கவிதையினி எல்லாம் நம்புவாங்க ...

Anonymous said...

கவிதை !

என்ன சொல்ல தெரியல ...ரொம்ப கனப்படுத்துது ...

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பகிர்வு அறிய ஆவல்... தொடர்கிறேன்...

Yoga.S. said...

மாலை வணக்கம்,நேசன்!முதல் பாகம்,முற்றுமா?////ஆஹா!அருமைத் தங்கச்சி வந்திருக்கிறாக!பால் காப்பி கேக்குறாங்க!(புடிக்காதே?)ஹி!ஹி!ஹீ!!!

Anonymous said...

மாலை வணக்கம்,நேசன்!முதல் பாகம்,முற்றுமா?////ஆஹா!அருமைத் தங்கச்சி வந்திருக்கிறாக!பால் காப்பி கேக்குறாங்க!(புடிக்காதே?)ஹி!ஹி!ஹீ!!!////



மாலை வணக்கம் ஐயா (ரீ ரீ அண்ணா சார்பாக ).....இல்லை இன்னும் முடியவில்லை ..இந்த நண்பன் பாகம் முடிய அடுத்த நண்பன் தொடர்வார்....என் அருமை தங்கை பால் காப்பி வாங்கி அவவின் அண்ணிக்கு கொடுப்பாள் ...ஒருக்காலும் மாமாவின் மகளுக்கு கொடுப்பாள் எண்டு கனவு கானதிங்கோ ....

Yoga.S. said...

கலை said...
மாலை வணக்கம் ஐயா (ரீ ரீ அண்ணா சார்பாக ).....இல்லை இன்னும் முடியவில்லை ..இந்த நண்பன் பாகம் முடிய அடுத்த நண்பன் தொடர்வார்....என் அருமை தங்கை பால் காப்பி வாங்கி அவவின் அண்ணிக்கு கொடுப்பாள் ...ஒருக்காலும் மாமாவின் மகளுக்கு கொடுப்பாள் எண்டு கனவு கானதிங்கோ ///HA!HA!HAA!!!!

Angel said...

யோகா அண்ணா நலமா!!!
நேசன் ,மன்னிக்கணும் தாமத வருகைக்கு ...
இந்த பாகம் முடிவுற்றதா ?
அடுத்தது மற்றொரு நண்பர் பகுதி ..தொடர்கிறேன்
மவுனம் பேசியதே படப்பாடல் ..பிடிக்கும் ..

Angel said...

//எப்போது நம் தேசம் இப்படி மாறும் என்ற எண்ணம் மனதில எழுந்தது//

மனம் கனத்து போனது

Angel said...


மார்கழி மாதத்தில் ..குளிர் காலத்தில் ஜேசுதாஸ் பாடல்கள் ஒலிக்க
அதிகாலை பக்தர்கள் போவாங்க ...நிறைய பேர் பார்த்திருக்கேன்
கிறிஸ்மஸ் மற்றும் எல்லாம் ஒன்றாக வரும் மார்கழி பருவம் எவ்ளோ அழகு ....
ஒரு பாடல் இன்னமும் காதில் ஒலிக்குது //பொய்யின்றி மெய்யோடு நெய் கொண்டு போனால் //
ஜேசுதாஸ் குரல் ..........ஆஹா உண்மையில் உள்ளம் உருகும்

மாலதி said...

அடுத்த பகிர்வு அறிய ஆவல்.

வெற்றிவேல் said...

அடுத்த பதிவு எப்போ வரும், தொடரட்டும்...