வெளிநாட்டில் சம்மந்தம், சீதனம் இல்லாமல் மாப்பிள்ளை பெண் கேட்டதில் உவளும் ஓம் என்று தன்ர மோளுக்கு வரம் பார்த்திட்டாள். பெட்டையும் அழகுதான். அதிஷ்டம் எப்படி வந்து இருக்கு. பஞ்சத்தில் பிறந்தது எல்லாம் இப்ப வெளிநாட்டில் கட்டிக்கொடுக்குதுகள்.
இனி ஹலோ என்றாள் வெளிநாட்டுக்காசு கிலோவில் வரும். எங்கட காலம் இப்படி சந்தையில் வியாபாரம் செய்துகொண்டு சீரழிய வேண்டி இருக்கு. செல்லம்மா இனி உவள் கமலம் சந்தையில் பலசரக்கு வியாபாரமும் செய்யமாட்டாள். நாகரிகமாக கையில் செல்போனும் ஏறினால் ஆட்டோ இறங்கினால் ஆட்டோ என்று திரியப் போறாள்.
உவளின் புருசன் குருமன் காட்டில் வைத்திருக்கும் பலசரக்கு கடையில் இப்ப எல்லாம் கனக்க எழுதிய செக் எல்லாம் திரும்புகின்றதாம். உந்த விற்பனைப் பிரதிநிதி என்ற பேரில் வேலை செய்யும் எடுபட்ட பயல்கள் எல்லாம் அவன் கடையில் இந்தப் பெட்டை பார்வதி எப்போதும் இருக்கும் என்ற நினைப்பில் எல்லாம் கடனுக்கு பலசரக்கு சாமன்கள் கொடுத்துவிட்டு நிக்கின்றாங்க!
இனி பெட்டை வெளிநாடு போனால் இவன் கடையை மூடிவிட்டு வன்னிக்கு போய்விடுவான். சரியான கள்ளக் கூட்டம் செல்லம்மா. என்று ஊர் வம்பு பேசும் தேவி வவுனியா நகரசபைக்கு சொந்தமான வவுனியா மார்க்கட் சுற்றுவட்டத்தில் இருக்கும் பல்பொருட் சந்தையில் வியாபாரம் செய்வோரில் ஒரு வியாபார பெண்மணி.
சந்தையில் வியாபாரத்திற்கு இடையிலும் விடுப்பு பேசும் பலரில் தேவி அக்காளுக்கு ஒருவர். ஆனாலும் நானும் தேவி அக்காளுக்கு பலசரக்கு சாமான்கள் கொடுத்து வியாபாரம் செய்தவன். நம்பிக்கையில் தேவி அக்காள் ஒரு சீமாட்டி. காசு சொன்ன நேரத்துக்கு தருவா. இப்படி பார்வதி வெளிநாடு போனபோது தேவி விடுப்பு பேசிக் கேட்ட நினைவு வருகின்றது. நானும் அப்போது கடைக்கு சாமன்கள் கொடுக்கும் போது பார்வதியைப் பார்த்து ஜொல்லு விட்டவன்தான்.
அந்த பார்வதியின் தங்கை இந்த சங்கவியை பார்க்கும் போது அன்று சங்கவியின் அக்காள் பார்வதி வெளிநாடு போன நிலையை நினைத்து இப்போது எப்படி தேவி அக்காள் வம்பு பேசுவா? நினைத்துப் பார்த்தால் சிரிப்பு வரும் என்றாலும் சிரிக்கும் நிலையில் நான் இல்லை!
தூரத்தில் மெதுவாக நடந்து வரும் சங்கவியை, சில சமயங்களில் கடையில் தந்தையின் வியாபாரத்தில் உதவும் நேரங்களில் பார்த்திருக்கின்றேன். அழகில் அவள் ஒரு சொல்லாமலே கெளசல்யா போல கொஞ்சம் உயரம் வவுனியா நகரில் பிரபல்யமான பெண்கள் கல்லூரியில் அப்போது உயர்தரம் படித்துக்கொண்டு இருந்தாள். என்னோடு இருக்கும் சில நண்பர்களின் தங்கைகளும் அங்கே படிப்பதால் நன்றாக தெரியும். அதனால் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவளுடன் கதைத்தும் இருக்கின்றேன்.
ஆனால் அவள் இப்போது இங்கே ? எப்படி ? என ஜோசித்துக் கொண்டு இருக்கும் போதே பிரசாத் சொன்னான்! இந்தப் பிள்ளைக்கு வெளிநாட்டில் சம்மந்தம் சரிவந்து இருக்கு. அதுதான் மேல் படிப்பை நிறுத்திவிட்டு பயணமுகவர் மூலம் ஐரோப்பா போறா. அந்த மாப்பிள்ளையே இவளுக்கு எல்லாம் செலவழிச்சு கூப்பிடுவதாக ஒரு கதை ஊரில் கேள்விப்பட்டனான். இன்று தான் இங்கு நானே பார்க்கின்றேன் ஜீவன்!
நல்ல வடிவான பிள்ளை எங்களை எல்லாம் தெரியும். ஆனால் இன்னும் திமிர் பிடித்தவள் போல தெரியாத மாதிரி வாராள் பாருங்க. நான் முன்னால் போறன் இந்த வழியை எப்படி நடந்து கடப்பது என குமாரிடம் அறிந்து கொள்ள வேண்டும். என்று எட்டி முன்னேறினான் பிரசாத்.
சிந்தனை நிழல்போல தொடர எங்களுடன் ஒன்றாக வந்தவர்களில் 5 பேர் மட்டும் தான். மற்றவர்ளை குமார் முன்னரே சங்களாவில் வேற வேற இட விடுதிகளில் நிறுத்திவிட்டார். அங்கு முன்னர் இருந்தவர்கள் எல்லாம் இப்ப எங்களோடு வருகின்றார்கள். இது புதுமையாக இருக்கிறது. தாய்லாந்து ஊடாக மலேசியா போகும் எல்லையில் நிற்கின்றோம்.
உயிலாங்குளம் வீதிபோல இந்தப் பாதை இருக்கிறது. ஆனால் பாதசாரிகள் குறைவாக இருக்கிறார்கள். கண்ணுக்குத் தெரியும் அளவுக்கு ஆமிக்காரன் இல்லை. கடவுளே! எப்படியாவது மலேசியா போய்விட வேணும். அங்கிருந்து ஐரோப்பா போய்விட வேண்டும். எந்த சூழ்நிலையிலும் நாட்டுக்கு திரும்பிப் போகக்கூடாது.
போனால் திருப்பியும் சிறை வாழ்க்கையால் ஐயாவும் அம்மாவும் தங்கைகளும் அதிகம் கஸ்ரப்படுவினம். என்னால் அவர்களுக்கு எத்தனை கஸ்ரம். படிப்பு முடித்து வியாபார தொழிலில் போய் கடைசியில் இந்தக் காட்டில் நிற்க வேண்டிய நிலை. என்ன ஜீவன் சார் கடும் ஜோசனை போல?
அருகில் சங்கவி வந்ததையும் கவனிக்காத நிலையில் நான்!
தொடரும்!!!ம்ம்ம்
16 comments :
ஆஆஆஆஆஆஆஅ இம்முறை நானேதான்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ
நேசன்... பிஸ்பன்னும் பிளேன் ரீயும் தாங்கோ... 2வதும் மீதேன்ன்ன்ன்:))
//இனி ஹலோ என்றாள் வெளிநாட்டுக்காசு கிலோவில் வரும்.//
ஹா..ஹா...ஹா.. சூப்பர் ரசி...த்தேன்.. க்கிறேன்..
என்னது? குருமன்காட்டில கடையோ? எனக்குத் தெரியாமல் போகாதே...
அழகான பாடல்.. அருமையாகப் போகுது தொடர்...
தொடர் அருமை நேசன். கொமண்ட் போடாட்டிலும் வாசிச்சுக் கொண்டுதான் இருக்கிறன். :)
வணக்கம் அண்ணா
இப்போது எல்லாம் பதிவுலகில் முன்பு மாதிரி இயங்கமுடியவில்லை.அனால் கமண்ட் போடாவிட்டாலும் இந்த தொடரை படித்துக்கொண்டுதான் இருக்குகின்றேன்.தொடருங்கள்
தொடர்கிறேன்...
தொடருங்கள் சகோ
ஆஆஆஆஆஆஆஅ இம்முறை நானேதான்ன் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊ/ வாங்க அதிரா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!
நேசன்... பிஸ்பன்னும் பிளேன் ரீயும் தாங்கோ... 2வதும் மீதேன்ன்ன்ன்:))ஆஹா மாலுப்பான் இப்ப தரமுடியாது!ஹீ அதிராவுக்கும் நம்ம பிரியமான உணவு பிடிக்கும் போல!
//இனி ஹலோ என்றாள் வெளிநாட்டுக்காசு கிலோவில் வரும்.//
ஹா..ஹா...ஹா.. சூப்பர் ரசி...த்தேன்.. க்கிறேன்..
12 October 2012 15:22 //நன்றி அதிரா ரசிப்பது/ஹீ!
என்னது? குருமன்காட்டில கடையோ? எனக்குத் தெரியாமல் போகாதே...
//ஹீ காளி கோயில் பக்கம் தான் குருமன் காட்டில்!ஹீ
அழகான பாடல்.. அருமையாகப் போகுது தொடர்... நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.
12 October 2012 15:24 //
தொடர் அருமை நேசன். கொமண்ட் போடாட்டிலும் வாசிச்சுக் கொண்டுதான் இருக்கிறன். :// நன்றி இமா அக்காள் வருகைக்கும் கருத்துரைக்கும் ஊக்கிவிப்புக்கும்.
வணக்கம் அண்ணா
இப்போது எல்லாம் பதிவுலகில் முன்பு மாதிரி இயங்கமுடியவில்லை.அனால் கமண்ட் போடாவிட்டாலும் /
வணக்கம் ராச் எல்லாருக்கும் எல்லா நேரமும் சாத்தியம் இல்லை பதிவுலகில்!ம்ம்
இந்த தொடரை படித்துக்கொண்டுதான் இருக்குகின்றேன்.தொடருங்கள்// நன்றி ராச் வருகைக்கும்,கருத்துரைக்கும்.
12 October 2012 20:41
தொடர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.
தொடருங்கள் சகோ
13 October 2012 00:58 // நன்றி சகோ சிட்டு வருகைக்கும் கருத்துக்கும்.
Post a Comment