அடக்கம் என்று சொல்லியே அவசியத்தை மறந்து போகின்றோம்! மாதத்தில் மூன்று நாள் படுக்கணும் தனியாக என்று எழுதிய வைரமுத்துவின் பாடல் பார்வைக்கு விளக்கம் கொடுக்கும். விளம்பரங்கள் இன்று எல்லா ஊடகங்களிலும் சாதாரணமாக வந்து போகின்றது. அது தாங்க என்று கேட்டு வாங்கும் உறவுகள் (கோட்டெக்ஸ்) பொதுவெளியில் கூச்சமாக பெயர் சொல்ல மாட்டார்கள் (கோட்டெஸ், விஸ்பர்) மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ ? என்ற மனப்பிரம்மை பாட்டி, அம்மா காலத்துடன் போய்விட்டது. இன்றைய உலகில் மூன்றுநாள் வீட்டில் இருக்க முடியாது.....
இது அவசர உலகம் குதிரை வேகத்திற்கு ஒட வேண்டிய பொருளாதார தேவை நிறைந்த உலகம். நாம் இனியும் கூச்சம் தயக்கம் என்று குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் நிலையை போக்க வேண்டிய கல்விக்கூடம் காமக்கூடமாகவும், அரசியல் பீடமாகவும் சீரழிகின்றது. எத்தனை கல்விப்பீடம் பெண்களின் இயற்கை உபாதை வரும் நாட்களில் எத்தகைய செயல்பாடுகள் மூலம் சுகாதாரமாக இருக்க முடியும் என்று வளரிளம் பருவத்தில் சிந்திக்கும் சொற்பொழி விளக்கவுரை கொடுக்கின்றார்கள்?
இன்றும்கூட வளர்ச்சிகான கிராமங்களின் கல்விக்கூட நிலையைப் பற்றியோ வளரிளம் மாணவிகளின் அடிப்படை தேவைகள் பற்றியோ உரிய கவனம் செலுத்தும் ஆலோசகர்கள் இல்லை. ஆனால் பதவி வெறியில் அலையும் கூட்டம் எல்லா இடத்திலும் இருக்கின்றது. இப்படித்தான் அன்று சங்களா கிராமத்தின் ஊடாக மலேசியா போக தயாராக வந்த சங்கவியினால் பிரசாத் போல அவர்கள் முன் செல்லும் மற்றவர்கள் போல வேகமாக நடக்க முடியவில்லை.
அவளுக்கு அந்த மூன்று நாளில் இரண்டாம் நாள். என்ன ஜீவன் சார் எல்லாரும் உங்களைவிட வேகமாக போகினம். இவர்களின் வேகத்தைப் பார்த்தால் இன்றே ஐரோப்பாவிற்கு புகுந்து விடுவார்கள் போல? நீங்களே நல்லா வேகமாக காலில் சில்லுப்பூட்டிக் கொண்டு நடப்பீங்க. வழமையாக நான் சைக்கிளில் போகும் போது பார்த்து இருக்கின்றேன். ஆனால் இன்று இவ்வளவு மெதுவாக வாறீங்க. உங்களுக்கு வழித்துணையாக கூடவரச் சொல்லிவிட்டுத்தான் குமார் ஓட்டி முன்னால் மற்றவர்களுடன் போறார்! கொஞ்சம் வேகமாக நடக்கலாமே. முடியல ஜீவன் சார் பீரியட். நடக்கும் போது வலி அதிகமாக இருக்கிறது.
ஐந்து நாட்களில் ஐரோப்பா போய்விடலாம் என்று சொல்லித்தான் பயணமுகவர் ரிக்கட் போட்டார். யாழ்ப்பாணத்தைவிட்டு ஒரு இரவுக்குள் வன்னி வந்தது போல இந்தப்பயணமும் அவசரப் பயணம் என்பதால் என்னால் எல்லாத் தேவைகளையும் அதிகமாக காவிக்கொண்டு வரமுடியவில்லை. எடுத்து வந்த பயணப் பொதியையும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் தமிழ் என்ற காரணத்திற்காக கிண்டிக்கிளரியதில் முக்கியமாக நீங்க ஊரில் இருக்கும் போது கடைக்கு கொண்டுவரும் அந்த விஸ்கோத்து! தொலைஞ்சு போச்சு
என் தொழிலில் பெண்களுக்கான நவீன கோட்டெக்ஸ் எல்லாம் வியாபாரம் செய்யும் ஒரு விற்பனைப் பிரதிநிதி வேலை பல்தேசியக் கம்பனி என்பதால் பலதும் தயாரிக்கும் எங்கள் நிறுவனத்தின் இந்த கோட்டெக்ஸ் விற்பதில் ஒரு சாதனையே செய்து இருக்கின்றேன். எங்கள் நிறுவனத்தில் இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் நாடு பூராகவும் மும்மொழி தெரிந்த மும் மதத்வர்களில் எங்கள் தனியார் துறையில் 136 விற்பனைப் பிரதிநிதி நண்பர்கள் பணிபுரிந்தார்கள். அவர்களிடம் முதலில் பணியில் சேர்ந்த பரீட்சாத்தக் காலத்திலேயே அதிகமாக விற்பனை செய்து சந்தைப்படுத்தல் உயர் அதிகாரியிடம் இருந்து காசோலையை பரிசாக பெற்ற போது பலரின் புருவமும் உயர்ந்தது. இவன் எப்படி இந்தளவு தொகையை தொடர்ந்து 3 மாதம் விற்பனை செய்தான் என்று எல்லோரும் வியந்தார்கள்.
....
கம்பனியில் இருந்து ஆராய வந்தவர்களினாலும் புலனாய்வு செய்யும் மேல் அதிகாரியும் விற்பனையை வவுனியா வந்து உறுதி செய்து விட்டுப் போனாலும் அதிகமான விற்பனையை செய்த சூட்சுமம் உள்ளுக்குள் அவர்களுக்கும் பிடிபடவில்லை. யுத்தம் ஆயுத வியாபாரிகளையும் அரசியல் தரகரையும் மட்டும் வளர்க்கவில்லை. சாமானிய வியாபாரிகள் பலரையும் வளர்த்து இருக்கிறது. நான் யாரிடமும் களவு எடுக்கவில்லை. இராணுவத்தின் கட்டுப்பாடு இல்லாத பகுதிக்கு இனவாத அரசு காயப்பட்டவர்களுக்கு பஞ்சு அனுப்புவதில் கூட மனித நேயம் காட்டாத நிலையில் மாற்றுத் தீர்வாக இந்த கோட்டெக்ஸ் பஞ்சாக பயன்படுத்தும் செயல் இருந்த நிலையில் கட்டுப்பாடு இல்லாத பகுதியில் இருந்த வியாபாரி எனக்கும் உதவினார்.
..
அதிகளவு கொள்வனவு செய்து இது எல்லாம் என் விற்பனைத் தொழில்! அதை அசைபோட வைக்கின்றது சங்கவியின் கூற்று! சில வியாபார நிலையங்களில் பொதுவில் சொல்ல தயங்குவதால் சில கடைகளில் விஸ்கோத்து என்று குறிப்பால் உணர்த்துவார்கள். இது எல்லாம் என் கடந்தகாலம், என்ற ஜோசனையில் இருந்து விடுபட்ட தொடர்ந்தாள் சங்கவி.
இங்க வாங்கலாம் என்று பார்த்தால் இறங்கிய நேரத்தில் இருந்து ஒரே அம்பிளைகள். நான் மட்டும் தான் ஒருபெண். என்னோட வந்தவர்களின் பார்வையே ஒரு மாதிரி இருந்தது. பாங்ஹொக்கில் இருந்து இங்க வரை ஒரே தொடர் பயணம். தெரிஞ்சவங்கள் யாரும் இல்லை. 5 நாள் பயணம் என்று வநதேன். இங்கே மூன்று நாள் தொடர் தொடருந்துப் பயணம். டொலர் கூட மாத்தவில்லை. குமார் வாங்கித் தந்த சாப்பாட்டு மட்டும் தான். பஸ்சை விட்டு இறங்கவே இல்லை. எதிர் பாராமல் இங்கு கொண்டு வந்தார்கள். இங்கே வந்ததில் இருந்து 10 நாட்கள் வெளியே போகவிடவில்லை. பொலிஸ் திரிவார்கள் என்றும் பயணமுகவர்கள் காட்டிக்கொடுத்தால் இன்னும் காசு செலவாகும் என்றும் குமார் சொன்னவர்.
அறைக்கு வரும் துப்பரவு தொழிலாளியிடம் டொலர் கொடுத்து அதை (கோட்டெக்ஸ்) வாங்கியரச் சொன்னேன் அவள் ஒற்றை வாங்கியந்துவிட்டு டொலர் மாத்தவில்லை என்று காசையும் திருப்பித் தந்துவிட்டாள். பாவம் போல இருந்தது டொலரைக் கொடுத்து விட்டேன். காலையில் இன்னொன்று வாங்கியரச் சொல்லி அவள் இன்று வரவில்லை. அதுக்குள் குமார் வந்துவிட்டார். தங்கும் விடுதியில் இது எல்லாம் கிடையாது. கூட்டியந்த குமாரோடு தனியாக கதைக்க முடியவில்லை. அவர்பேசும் மொழி புரியவில்லை. மிகவும் கஸ்டமாக இருக்கு.
வழமையைவிட வயிறுற்றுவலி இன்று அதிகம். ஏன் தான் இந்த வெளிநாட்டுப் பயணமோ என்று சங்கவி மூச்சு விடாமல் பேசியதும் இல்லாமல் விழியில் விழுந்த நீர்த்துளி மனதில் சஞ்சலம் தந்தது. எல்லாரும் எல்லையைத் தாண்ட வேண்டும் என்ற அவசரத்தில் ஓடும் நிலையில் யாரிடம் போய் மனித நேய உதவியைப் பற்றி பேசமுடியும்? சங்கவி நீங்க படிச்ச பெண்தானே? எல்லா அம்பிளைகளும் காமப்பிசாசுகள் என்ற நினைப்போ? வாறதில் எல்லாம் ஒரே நாட்டுக் காரங்கள் ஒருத்தனிடம் அண்ணா இல்லை தம்பி இந்த (கோட்டேஸ்) வாங்கித் தாங்கோ என்று காசு கொடுத்தால் வாங்கித் தராமலா போய்விடுவாங்க?
..
இந்த ஏரியாவில் எத்தனை பார்மசி பல்பொருள் விற்பனை நிலையம் இருக்கிறது. கூச்சம் என்று ஏன் தான் இப்படி உங்கள் தைரியத்தையும் இழந்து விடுகின்றீங்க ? இருங்கோ வாறன் சங்கவி!
தொடரும்.....
22 comments :
ஆஆவ்வ்வ் பிரெஞ்சுக்காதலி 23 ஐத் தொட்டு விட்டது. புதுப் புது அனுபவங்களை கிழுகிழுப்பாக எழுதிக்கொண்டுவரும் விதம் அருமை. கீப் இட் அப்.
சகோதரா!
கண்கள் குளமானது-
அந்த சகோதரி "நிலையை"
படித்ததும்..
உண்மையான வலி சகோ..!
இந்த வேதனை உலகெங்கும் உள்ளது.
வாழ்த்துக்கள் தொடருங்கள் காத்திருக்கிறோம்
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இது பற்றி பல்வரி ஆலோசனைகளும் திட்டங்களும் செயல் படுத்தப் பட்டு வருகின்றன.இதில் உள்ள சங்கடங்க சமாளிக்கும் விதம் போன்றவற்றை மாணவிகளிடமிருந்து பெற்றோர்களும் ஒரு சில கிராமபகுதிகளில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி
இந்த பகுதியில் ஒரு விடயத்தை சிறப்பாக சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள் அண்ணா பாராட்டுக்கள் என்னதான் கல்விஅறிவு நாகரிக வளர்ச்சி என்று வந்தாலும் இன்னும் விஸ்பர் வாங்க கூச்சப்படும் பெண்களை காணத்தான் முடிகின்றது
அப்பறம் உங்கள் விற்பனை ஜடியா பிரமிக்கவைக்கின்றது சூப்பர்
நெஞ்சம் நெகிழ வாசித்தேன் மனம் கனத்தது!
வலிகளால் தொடர்கிறாள் பிரஞ்சுக் காதலி....
தொடருங்கள்
நெகிழ வைத்தது... தொடர்கிறேன்... tm3
நேசரே...நலமா?
நீண்ட நாள் ஆகிவிட்டது...கடமைகள் நிறைய இருந்ததால் தான்...
தங்கை உங்களிடம் வந்து விட்டார்களா?
விரைவில் பால் கோப்பி குடிக்க தயாராய் இருக்கிறேன்...
Interesting!
ஆஆவ்வ்வ் பிரெஞ்சுக்காதலி 23 ஐத் தொட்டு விட்டது. புதுப் புது அனுபவங்களை கிழுகிழுப்பாக எழுதிக்கொண்டுவரும் விதம் அருமை. கீப் இட் அப்.
17 October 2012 13:21 // வாங்க அதிரா நலமா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி பாராட்டுக்கு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
சகோதரா!
கண்கள் குளமானது-
அந்த சகோதரி "நிலையை"
படித்ததும்..
உண்மையான வலி சகோ..!//ம்ம்
இந்த வேதனை உலகெங்கும் உள்ளது./ம்ம் உண்மைதான்!ம்ம் நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.
17 October 2012 16:19
வாழ்த்துக்கள் தொடருங்கள் காத்திருக்கிறோம்//நன்றி நெற்கொழுதாசன் வருகைக்கும் கருத்துக்கும்.
தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இது பற்றி பல்வரி ஆலோசனைகளும் திட்டங்களும் செயல் படுத்தப் பட்டு வருகின்றன.இதில் உள்ள சங்கடங்க சமாளிக்கும் விதம் போன்றவற்றை மாணவிகளிடமிருந்து பெற்றோர்களும் ஒரு சில கிராமபகுதிகளில் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.// நன்றி முரளிதரன் சார் வருகைக்கும் காத்திரமான பின்னூட்டத்துக்கும்.
மிக அருமையான பதிவு
வணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியின் சிறப்பு தினமும் பதிவர் பேட்டி
தினபதிவு திரட்டி
17 October 2012 17:37 // நன்றி உறவே!
இந்த பகுதியில் ஒரு விடயத்தை சிறப்பாக சுட்டிக்காட்டி இருக்கின்றீர்கள் அண்ணா பாராட்டுக்கள் என்னதான் கல்விஅறிவு நாகரிக வளர்ச்சி என்று வந்தாலும் இன்னும் விஸ்பர் வாங்க கூச்சப்படும் பெண்களை காணத்தான் முடிகின்றது//ம்ம் நம் தாயகத்தில் நம்மவர் நிலை அப்படி!ம்ம்
அப்பறம் உங்கள் விற்பனை ஜடியா பிரமிக்கவைக்கின்றது சூப்பர்!! அது என் நண்பன் விற்பனை ஐடியா ராச் தனிமரம் இல்லை!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
17 October 2012 18:13
நெஞ்சம் நெகிழ வாசித்தேன் மனம் கனத்தது!// நன்றி புலவரே வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி தொடர்ந்து வாருங்கள் ஐயா!
வலிகளால் தொடர்கிறாள் பிரஞ்சுக் காதலி....
தொடருங்கள்// நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நெகிழ வைத்தது... தொடர்கிறேன்... tm3// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்கு இட்டமைக்கும்.
நேசரே...நலமா?
வாங்க் ரெவெரி நான் நலம் தாங்கள்.
நீண்ட நாள் ஆகிவிட்டது...கடமைகள் நிறைய இருந்ததால் தான்...// ம்ம்ம்
தங்கை உங்களிடம் வந்து விட்டார்களா? //இல்லை விரைவில் என் நினைக்கின்றேன்!ம்`ம்
விரைவில் பால் கோப்பி குடிக்க தயாராய் இருக்கிறேன்...//ம்ம் நானும் விரைவில் கடையை மூட வேண்டும் ஹீ ஆன்மீகம் இன்னொரு தொடர் எனக்கு இல்லையா ரெவெரி அண்ணா!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!
18 October 2012 06:06
Interesting!// நன்றி துரைடெனியல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
Post a Comment