ஈழத்தவர்கள் பலர் பொருளாதாத்தைப் பெருக்கத்தான் அகதி என்ற பெயரில் அடைக்கலம் கொடுக்கும் வெளி நாடுகளுக்கு ஓடிப்போகின்றார்கள் என்று சொல்லும் இலங்கை ஆட்சியாளர்களின் கீழ் இருப்போர் !
சுதந்திரமில்லாத ஊடக தணிக்கையின் பின் இருக்கும் நிஜத்தைத் தெரிந்து கொள்ளாத நிலையை நினைத்து என்ன சொல்வது??
ஊடகம் உண்மையில் நடுநிலமை பேணுகின்றதா ???
எல்லா மொழி ஊடகங்களும் இன ஐக்கியம் பேனாமல் ,இனவாதச் சேற்றை வாரியிறைக்கின்றது சாமானிய மக்கள் மீது திணிக்கின்றது .
"இப்படித்தான் கரனும் சொன்னான் என்னிடம் அன்று மலேசியாவில் வைத்து "
.நானும் தொழில் நிமித்தம் அவர்கள் கடையில் மதுபானத்தை மொத்தமாக வாங்கும் ஒரு வியாபாரிதான். .!
கரன் வவுனியாவில் பிரபல்யமான வியாபாரியின் மகன் .அவன் தந்தை ஒரு கோடிஸ்வரர் அரச அனுமதி பெற்ற மதுபானக் கடையை நடுத்துவதுடன் பல மதுபானக்கடைகளுக்கு மதுபான ஏகவினியோகஸ்தர். அத்துடன் பல கடைகள் ,வயல் நிலங்கள் ,என சொத்தில் ஒரு பெரும்புள்ளி.
அவருக்கு மூன்று மகன்கள் இரண்டாவது கரன் கொஞ்சம் ஜாலியான பேர்வழி. கட்டுப்பாடு இல்லாதவன்.
அவன் தந்தை அரசியல் பக்கம் கால்வைக்க நினைத்த போதுதான் .இனவாத இராணுவம் கப்பம் கோரல் என்ற பிரச்சாரத்தை அவர் மீது தொடங்கியது.
கரனை சிறைப்பிடித்தவர்கள் கேட்ட தொகையை கைமாற்றியதில் அவன் உயிருடன் வெளியில் வந்தான்.
இப்படி உயிரோடு வராதவர்கள் பொல்கொட வாவியிலும், நாட்டின் பிறபாகங்களிலும் அடையாளம் தெரியாத பிணங்களாக வந்த செய்திகள் ஊடகங்களில் ஒரு மூலையில் வந்தாலும் யாரும் அசட்டை செய்வது இல்லை.
மனித உரிமைவாதிகளும், ஜனநாயக பேச்சாளர்களும் குளிர்சாத அறையில் குளிக்கால கூட்டத்தொடரில் குந்தியிருந்து நித்திரை கொள்வதுடன் போய்விடும் நாட்கள் விடியல் இன்றி.
இது ஒன்றும் புதுமையல்ல தமிழர்களுக்கு இனவாத சிந்தனை உயர் ஆலோசகர் மட்டத்தில் பஞ்சசீலக்கொள்கை என்று 1956 இல் இருந்து வரும் செயல் .அதன் உச்சம் 1983 தொடங்கிய இனவெறியின் தாக்கம் இன்னும் தொடர்கின்றது.
அதன் பின் வந்தவர்கள் எல்லாம் சிறுபான்மை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட செய்திகள் அதிகம் வெளியில் சொல்ல முடியாத வண்ணம் வாய்ப்பூட்டு, செவிப்பூட்டு ,ஆட்கடத்தல் என அரகேறும் நாடகம் இன்னும் முடிவுக்கு வரவில்லை .என்பதை எத்தனை மக்கள் சிந்திப்பார்கள்.??
"சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் மூழ்கிக்கிடப்பது தானே இன்பமயம்" என்று இருக்குதுகள் என்றவாறே கரன் !
"நீங்கள் எப்படி இங்காலப்பக்கம் ஜீவன்" உள்ளே இருக்கின்றீங்கள் என்று கேள்விப்பட்டேன் .இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன் .
உயிரோடு இருக்கின்றேன் அதுமட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும் .
இனி எண்ணவோ கரன் ???
ஆமா நீ ஏன் இங்க???
" அப்பாவிடம் என்னைவைத்து இராணுவம் காசு வாங்கியது. ஒரு புறம் என்றாள் எங்கள் ஊரில் இருக்கும் துணைக்குழுக்கள் பலரில், இவர்கள் தலைவர்கள் வேற முன்னால் பலரையும் போட்டும் தள்ளிய சகோதரபடுகொலைகள் பற்றி வாய் பேசாத நவீன ஜனநாயக அரசியல் தலைவர்கள். வேடதாரிகள் அவர்களின் வழிவந்த அருவருடிகள் பலரில் ஒரு துணைக்குழு என்னையும் விடவில்லை வவுனியாவில் இருக்க.
பணம் ஏதோ எங்கப்பா அச்சடிக்கும் மத்திய வங்கி போல நினைக்கின்றாங்க போல .அவரின் உழைப்பும், உதிரமும் தியாகமும் எங்க இவங்களுக்குப் புரியப்போகுது??
" வியாபாரிகள் என்றால் கொள்ளை அடிக்கும் கும்பல் என்ற சிந்தாந்தம் பேசும் மார்க்கீசம் பேசும் இவர்கள் எல்லாம் வயலில் உழுது பார்த்து இருப்பாங்களா ?இல்லை வியாபாரநிலையத்தில் வந்து காடையர்கள் செய்யும் அட்டுழியத்தை எதிர்த்து இருப்பாங்களா ??
தங்களை வளர்க்க பொது என்னத்தில் தூய பாதையில் போனவர்களை திசை மாற்றிய அருவருடிகளினால் தான் இந்த நிலை நம் நாட்டில்.
அதனால் தான் "நானும் சொந்த வியாபாரத்தை விட்டுட்டு அகதியாக ஐரோப்பாவில் சரி போய் நிம்மதியாக இருக்கலாம் என்று இவரிடம் வந்து இருக்கின்றேன்வந்து ஒரு 10 நாள் தான்."
எப்படி உங்களோடு சங்கவி சேர்ந்தாள்?
ஓ அதுவா எல்லாம் இடையில் சந்திச்சோம் .
குமார் அண்ணா தான் இனி வழிகாட்டி.
ஜீவன் உன்னக்கு எப்போதும் துணையிருப்பேன் நான் .!
இப்ப சிஸ்ரரும் கரனும் இன்னொரு இடத்துக்கு போறாங்க .
"உங்களை நம்ம பிரெண்டு கூட்டிக்கொண்டு போவார் என்ன சாப்பாடு ?கோழிக்காலும், கோலாவும் எடுக்கவா ?
"வேண்டாம் குமார் வெளியில் ஏதாவது நம்மூர்சாப்பாடு கிடைக்குமா ?
ஓ தாராளமாக தோசைக்கடை பக்கத்தில் இருக்கு.
நீயும் பிரெண்டு கூட போய் சாப்பிடுங்க. நல்ல பீர் இருக்கும். சாப்பிட்ட பின் அவன் வீட்டில் தங்கலாம். இந்த வாரம் உங்களை ரூட் கிளியராக இருந்தால் ஐரோப்பாவில் இறக்கிவிடுவேன் .
உங்க ஆளு இன்னும் பாக்கி முடிக்கவில்லை அவரை இன்று போனில் கூப்பிடுகின்றேன். அவர் உங்களைக் கூப்பிடுவார் இந்த நம்பரில்.
மலேசியாவில் சுதந்திரமாக இருக்கலாம் ஜீவன் .நேரம் ஆகுது நாம் கிளம்புறம் என்று குமார் போய்விட்டார்.
கரன் சங்கவியையும் அழைத்துக்கொண்டு .சிவகாசியைப் பற்றி யாரும் பேசவில்லை என்ற நினைப்பு குமார் போன பின் வந்து போனது.
அருகில் இருந்த இந்தியன் தோசைக்கடைக்குள் குமாரின் நண்பர் சிவதாஸ் சகிதம் உள்நுழைந்தேன்.அங்கே!
...
தொடரும் ....
//
பீர் சாப்பிடுங்க -இலங்கையில் மதுபாணம் குடிப்போமா என்று கேட்பதைப்போல
ரூட்கிளியர் -பயண வழிகள் இசைவாக இருந்தால் என்று பொருள்கொள்க.
--
கூப்பிடுகின்றேன் - தொலைபேசியில் அழைக்கின்றேன் என்பதை மலேசியாவில் நடைமுறையில் சொல்லும் செயல்!

10 comments :
தொடர்களுக்கு இடையே நல்ல நல்ல கருத்தை உங்கள் கோபம் சந்தோஷங்களை பரவ விட்டு போகிறீர்கள்.. வெல்டன் நேசன் அண்ணா.. சூப்பர்வ்வ்வ்
எந்தக்காலத்தில்
எந்த நாட்டில் ஊடகங்கள் நடு நிலமையோடு இருந்து இருக்கு... :(
payanam.......
thodarungal...
/// சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் மூழ்கிக்கிடப்பது தானே இன்பமயம் ///
பல உண்மை வரிகள்...
தொடர்கிறேன்...
நன்றி...
tm2
தொடர்களுக்கு இடையே நல்ல நல்ல கருத்தை உங்கள் கோபம் சந்தோஷங்களை பரவ விட்டு போகிறீர்கள்.. வெல்டன் நேசன் அண்ணா.. சூப்பர்வ்வ்வ்
26 October 2012 12:57// வாங்க துசி நலமா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! நன்றி கருத்துரைக்கும் பாராட்டுக்கும்
எந்தக்காலத்தில்
எந்த நாட்டில் ஊடகங்கள் நடு நிலமையோடு இருந்து இருக்கு... :(
26 October 2012 12:59 //ம்ம்ம் என்றாலும் நம்நாட்டு ஊடகம் இப்படியா விசம் கக்க வேண்டும் அதுதான் கவலை!!
payanam.......
thodarungal.//நன்றி சீனி அண்ணா வருகைக்கும், கருத்துரைக்கும்
சின்னத்திரையிலும், பெரிய திரையிலும் மூழ்கிக்கிடப்பது தானே இன்பமயம் ///
பல உண்மை வரிகள்...
தொடர்கிறேன்...
நன்றி...
tm2// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்
திரும்பிப் பார்ப்பதுக்குள் பதிவுகள் வந்துவிடுகிறதே.... தொடர்... எக்ஸ்பிரசாகப் போகுது... அதே நேரம் அழகாகப் போகுது.. தொடருங்கோ.
"உங்களை நம்ம பிரெண்டு கூட்டிக்கொண்டு போவார் என்ன சாப்பாடு ?கோழிக்காலும், கோலாவும் எடுக்கவா ?
"வேண்டாம் குமார் வெளியில் ஏதாவது நம்மூர்சாப்பாடு கிடைக்குமா ?///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஏன் கோழிக்காலும் கொக்கோகோலாவும் நல்லதுதானே?:))
Post a Comment