29 October 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -28

"எண்ணங்களாலே இறைவன் தானே வண்ணங்களாலே வசந்தம் தானே
எழில் கொஞ்சும் மலையகமே " என்ற முத்தழகு பாடல் ஒரு காலத்தில் அதிகம் பிரபலயம் தாய் வானொலியான இலங்கை ஒலிப்பரப்புக்கூட்டுத் தாபனத்தில்.

முத்தழகு அவர்கள் பல பாடல்கள் பாடியிருந்தாலும் இறுவட்டாக ஒன்றையும் வெளியீடு செய்யும் அளவுக்கு பொருளாதாரம் கைகூடியதா அவரிடம் ??இன்றும் தன் பாடலில் 25 பாடல்கள்தான் கைவசமாக இருக்கின்றது .

".தேவை என்றால் நீங்கள் விரும்பினால் முன் வந்து ஈழத்து மெல்லிசையில் முத்தழகின் முகம் என்று இசைத்தட்டாக வெளியீடு செய்யுங்கள் என்று ஒரு மாழைப்பொழுதில் ராகுலுடன் சேர்ந்து முத்தழகை கொழும்பில் சந்தித்த போது கூட இருந்த நண்பன் தான் லசந்தன்.

இந்த லசந்தனை மலேசியாவில் தோசைக்கடையில் சந்திப்பேன் என்று நானும் எதிர்பார்க்கவில்லை.

முன்னர் கொழும்பில் பல்தேசியக்கம்பனியின் ஏகவினியோகஸ்தரிடம் பணியாளாக இருந்த மலையக உறவு அவன் ...

"மச்சான் ஜீவன் நீ எப்படிடா ??என்ன மலேசியாவுக்கு சுற்றுலா வந்தியா ?உனக்கு நல்ல ஒரு கம்பனி
கிடைச்சு இருக்கு. டார்க்கட் அடித்தால் நல்லா கையில் காசு கிடைக்கும். பிறகு என்ன சோக் பண்ண வேண்டியது தானே ?"

அப்புறம் சொல்லு என்ன சாப்பிடுகின்றாய்?

என்ன மச்சான் தெரியும் தானே உனக்கு காலையில் கொழும்பு வந்தால் முதலில் தெம்பிளி.

இரவு வந்தால் நமக்கு என்ன ஆட்கள் செட்டாகினால் ஜிந்துப்பிட்டி ரேணுகா பார் சொர்க்கம் ஒரு காலத்தில். உனக்குத் தெரியாதா லசந்தன்.?

ஓடா மச்சான் !

நீ கம்பனியில் உழைச்சகாசு எல்லாம் உன் நண்பர்கள் கூட சேர்ந்து கும்மாளம் போடுவாய் எனக்குத் தெரியும் !

"ஜீவன் மகே மாத்தயா என்று யார் வந்தாலும் ஒரு பியர் கூட வரும் "

அப்படி எல்லாம் என்னால் முடியாது .

நான் உங்க பொஸ்சிடம் ஒரு வேலைக்காரன் தானே?

" நீங்கள் வியாபாரிகள் நாங்கள் தேயிலைச் சாயம் தானே புழிஞ்சு போட்டு வீசிவிடுவீங்க" உங்களின் குணமே அப்படித்தானே ??

"வேற வேற கம்பனியில் வேலை வந்தால் ஓடிப்போய் சேர்ந்து விடுவீங்க .நீங்கள் ரவிசார் ,ராகுல் ,எல்லாம் இப்படித்தானே கொழும்பில் செய்தீங்க .எனக்கு நல்லாத் தெரியும் உங்க புத்தி.

கடைசியாக 1999 இல் என் அறையில் இரண்டு யாழ்ப்பாணப் பொடியங்களை சேர்த்துவிட்டுப் போனீங்க .

அவங்கள் என்னை மலையகத்தவன் தானே என்று நினைச்சு கடைசி மாத வாடகைகூட கட்டாமல் வெளிநாடு போட்டாங்கள்.

நல்ல காலம் ராகுல் தான் எனக்கு கடைசியில் உதவி செய்தான் அந்த காசு கொடுக்க .பின் (ராகுல்)அவனையும் நான் காணவில்லை.

சிங்களவன் வீட்டில் அறையை நம்பித்தான் தந்தான் .அந்த நம்பிக்கையை நான் கெடுக்கவில்லை.

உங்கள் நம்பிக்கையை நீங்கள் கெடுத்துவிட்டீங்க ."நீங்களும் ஒரு யாழ்ப்பாணத்தான் என்று "

சரி அது எல்லாம் கடந்தகாலம் ஆமா என்னாச்சு 1999 பின் கொழும்பில் பார்க்கவில்லை உங்களையும் ,ரவியையும் ஒரு அழைப்புக் கூட எடுக்கவில்லை ?

இந்த ராகுலையும் பின் நான் பார்க்கவில்லை ஜீவன் சார்.

என்னாச்சு ?
அது கொஞ்சம் கஸ்ரகாலம் அதைவிடு.

மச்சான் நீ எப்ப வந்தாய் மலேசியா ?உங்களுத்தான் தெரியுமே ஐயாவும் அவரின் பேரன்களும் ஓட்டு வாங்க மட்டும் பாசமாக வருவார்கள் .

எங்க எங்கள் மக்கள் மீது சமூக முன்னேற்றம் காட்டினார்கள் ??வேலையில்லை, பொருளாதார நெருக்கடி அதுதான் இங்க வேலை விசாவில் வந்து இருக்கின்றேன்.

" (அட்டசியாக் தெனவா ) 800 வெள்ளி)லங்காவ வடா மே ரட்டவள் ஒந்தட்டம சலக்கனவா . அப்பே ரட்ட சேரம வினாச.ம்ம்ம்

முதலாளிக்கு புரியாத சிங்கள மொழியில் என்னோடு பேசியது அவனுக்கு ஆறுதல் வேலையை காப்பாற்ற இதுவும் ஒரு தந்திரம்.

நாம கிளம்பலாமா ஜீவன் சரிடா பில் தா !

"இங்க ஒரு விடயமாக வந்தேன் எப்படியும் ஹட்டன் வரும் போது உன் வீட்டுக்கு கண்டிப்பாக வாரன். சாவகசமாக பேசலாம் ஒரு நாள் .

எந்த தப்பு அபிப்பிராயமும் வைச்சுக்காத "

எல்லா நேரத்திலும் எல்லாம் எல்லாருக்கும் சொல்ல முடியாது. ராகுல் சொல்லுவானே தில் தோ பாஹல் ஹைய் .

நீங்களும் மறக்கவில்லையா? அந்த படத்தையும் ,ராகுலையும் ??

ஹீஹீ அவன் என் பிரெண்டுடா லசந்தன் .

சரி கிளம்பலாம் சிவதாஸ் அண்ணா!

அவரின் பின்னே நானும் போகின்றேன் மனதில் ஒவ்வொருத்தரும் வெளிநாடு போக வெளிக்கிட்டதில் இருந்து சந்திக்கும் நட்புக்கள் முகம் தான் எத்தனை பார்வை எத்தனை கோணம்!
கடவுளே வழியில் வரும் மரங்கள் எல்லாம் !அழகாய் இருக்கு நம் வாழ்வு ஈழத்தில் பிறந்த பாவம் இப்படியா?

----/


தொடரும்---

அட்டசியாக் தெனவா ) 800 வெள்ளி)லங்காவ வடா மே ரட்டவள் ஒந்தட்டம சலக்கனவா . அப்பே ரட்ட சேரம வினாச.ம்ம்ம்//
//இலங்கை ரூபாயில்  800  ரூபாய்   இலங்கையைவிட மலேசியா போன்ற நாடு நம்மை நன்கு கவனிக்கின்றது சம்பளத்தில் . எங்க நாடு எல்லாம் நாசம் - என்று அவன் சொன்னான் சகோதரமொழியில்!
1 -மலேசிய -வெள்ளி 58 ரூபாய் இலங்கையில்  கதை நகரும் காலப்பகுதியில் !!

//தெம்பிளி -இளநீர்.
டார்க்கட்-விற்பனை அளவு!
சோக்- ஊதாரித்தனம்
மகே மாத்தயா- என்னுடைய சார் -

6 comments :

குரும்பையூர் மூர்த்தி said...

உரையாடல் அவ்வளாவாக பிடிப்டவில்லை.என்ன சொல்ல வாறிங்க தனிமரம்?

ஆனால் "எண்ணங்களாலே இறைவன் தானே வண்ணங்களாலே வசந்தம் தானே
எழில் கொஞ்சும் மலையகமே "
வரிகள் என்னை எங்கோ நான் தொலைத்த காலங்களுக்கு கொண்டுசென்றது.

சுதா SJ said...

அவங்கள் என்னை மலையகத்தவன் தானே என்று நினைச்சு கடைசி மாத வாடகைகூட கட்டாமல் வெளிநாடு போட்டாங்கள்.///

நண்பர்கள் என்றாலே இப்படித்தான் போல் இருக்கு.... ஹா ஹா lol

சுதா SJ said...

/தெம்பிளி -இளநீர்.
டார்க்கட்-விற்பனை அளவு!
சோக்- ஊதாரித்தனம்
மகே மாத்தயா- என்னுடைய சார் //

நீங்க வாத்தியார் ஆகிட்டீங்க நேசன் அண்ணா :)))
நாங்களும் படிக்கிறோம் இல்ல.... ஆசிரியர் நம்ம நேசன் அண்ணா lol

Seeni said...

mmm....

anupavangalai pakirungal....

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்ந்து வருகிறேன்...

நன்றி...
tm3

K.s.s.Rajh said...

////என்ன மச்சான் தெரியும் தானே உனக்கு காலையில் கொழும்பு வந்தால் முதலில் தெம்பிளி.

இரவு வந்தால் நமக்கு என்ன ஆட்கள் செட்டாகினால் ஜிந்துப்பிட்டி ரேணுகா பார் சொர்க்கம் ஒரு காலத்தில். உனக்குத் தெரியாதா லசந்தன்.////

ஹி.ஹி.ஹி.ஹி...............