வணக்கம் உறவுகளே!
அந்த நாள் ஞாபகம் ஊடாக திரையரங்குகள் நினைவுகளோடு உங்களுடன் தனிமரம்.
அயன்..-மன்னார்!
இந்த ஊருக்கு ஆன்மீகத்தில் சிறப்பு உண்டு .சமயக்குரவர் தேவாரம் பாடிய திருக்கேதீஸ்வரம் அமைந்திருக்கும் ஊர் .
அந்த ஆலயத்தைப் பார்த்த பலரில் நானும் ஒருவன் என்பதே எனக்குப் பெருமை தனிமையில்.
அதே போல இந்த ஊரில் என் தனிப்பட்ட வாழ்வில் என்னைப்பற்றிய பார்வையை ஒரு தோழிக்கு மாற்றிக் கொடுத்த ஊர் என்பதால் இந்த ஊரும் அதிகம் பிடிக்கும் .
இந்த ஊரில் இருந்து எங்கள் ஊருக்கு இடம்பெயர்ந்து நானும் இருந்த ஊரில் என்னைப்போலவே உயர் தரம் படிக்க வந்த ஒரு தோழிக்கும். என் நண்பனுக்கும் இடையில் பருவத்தே வரும் ஈர்ப்பு நிலை அது காதல் அல்ல என்பதை முன் உணர்ந்து வேண்டாம் என்ற போது இருவரும் என்னை நட்பு வட்டத்தில் இருந்து வில்லன் வட்டத்தில் சேர்த்து இருந்தார்கள் என்னை.!
இரண்டு வருட உயர்தரப்படிப்பில் 5 நாட்கள் மட்டும் தான் இந்த தோழியோடு கதைத்து இருந்தேன் நிஜம் கதையல்ல .:)))!
அதுவும் "இந்த காதல் வேண்டாம் படித்து நல்ல நிலையில் இருக்கும் போது ஜோசிக்க வேண்டிய விடயத்தை இப்படி படிக்கும் காலத்தில் ஏன் மனதை அலைய விடுவது என்று சொன்னதன் பின் நட்பு பிரிந்தது"
.அதன் பின் நானும் தொழில் நிமித்தம் கம்பளை,திருகோணமலை என்று திரிந்த பின் மன்னாருக்கு இடம் மாற்றம்.
எதிர் பாராத நேரத்தில். எதிர் பாராத முகங்கங்களை கடவுள் ஏனோ மீண்டும் சந்திக்க வைக்கின்றார்.
பின் சிந்திக்க வேண்டியவர்கள் நிலையில் என்னையும் கடவுள் தீட்டியிருக்கின்றார். ?
வழமையாக புது ஊருக்கு போனால் அந்த ஊரில் இருக்கும் எல்லா வியாபார நிலையங்கள் மீதும் முதல் விஜயம் செய்வது நம் தொழில் நடை முறை .இல்லை என்றால் மேல் அதிகாரியிடம் சிண்டு முடிந்துவிடுவார்கள் .அவர் சீட்டைக்கிழித்து வீட்டை அனுப்புவார் முதல் விஜயத்திலே பலதைப் படிக்கலாம் செக் கொடுத்து செக்குமாடு போல சுத்தவிடுவாரா இல்லையா என்று!:))) !
அனுபவம் போல ஆசான் யார்?? அந்த நேரத்தில் .இந்ததோழியின் தந்தை நடத்தும் கடைக்கு உள்ளே நான் நுழைந்த போது!
எதிர்பாராத அதிர்ட்ச்சி அங்கே என் தோழி தந்தையோடு இருந்தால் .
தந்தைக்கு என்னைத் தெரியாது .இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் அவர் வரவில்லை. முதலில் தோழியும் ,தாயும் தான் வந்து இருந்தார்கள் அப்போது.
தந்தையோடு இருந்தால் எனக்கு என்ன வந்த வேலையைப்பார்ப்பம் என்றுவிட்டு அவள் தந்தைக்கு நான் பணிபுரியும் நிறுவனத்தின் பெயரையும் ,புதிதாக வந்து இருப்பவன் என்றும் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே!
தோழி தந்தைக்கு சொன்னால் இவனை எனக்கு தெரியும் நம்மகூட படிச்சான் நீண்டகாலமாக கானவில்லை இப்பத்தான் மீண்டும் பார்க்கின்றேன் என்று .என்னோடு மீண்டும் நட்பு வட்டத்தில் வந்து இணைந்து கொண்டாள்.
.இடைப்பட்ட காலத்தில் நண்பனுக்கும் தோழிக்கும் கருத்து வேறுபாடு ஈர்ப்பு விலகியபின் குடும்பத்தின் நிஜம் புரிந்ததில் இரு பாதையில் பயணமானர்கள் அவர்கள் இருவரும் ஈர்ப்பு தெளிந்ததில் பிரிந்ததை எண்ணி எனக்கும் சந்தோஸம் தான்.
அதன் பின் தான் நான் மன்னாரில் அவளை சந்தித்தது.
இந்த மன்னாரில் தங்குவதற்கு வாடகைக்கு அறை தேடிய போது அவளின் சிற்றன்னை வீட்டில் தான் என் குடியிருப்பு என்றாகிவிட்டது பின் நாட்களில் .
சிறப்பான நாட்களில் ஒன்றாக இருந்து உணவு சாப்பிட்டாள் விருந்தாக சமையல் இருக்கும் அவர்கள் வீடு .
தோழியின் தங்கையும் அதிகம் புத்தகம் வாசிப்பாள். என்பதால் எனக்கும் நேரம் போக்க நூலகம் போகும் தேவை வந்தது இல்லை.விரும்பிய புத்தகங்கள் கொண்டுவந்து தருவாள் .ஓய்வான பொழுதில் வாசிக்க.
அவர்கள் வீட்டார்கள் எல்லாரும் விடுமுறை நாளில் திரையரங்கு போகின்றபோது என்னையும் அழைப்பார்கள் .அவளுடன் பிறந்தவர்கள் எல்லாம் தங்கைகள் தான் ஆண்வாரிசு இல்லை ."என்னை மகனா தான் கருதுவதாக தோழியின் தாய் அதிகம் சாப்பாடு பரிமாறும் .போது சொல்லுவா மனதுக்குள் சங்கடமாக இருக்கும்"
.ஒரு ஆண்பிள்ளை வாரிசாக அவர்கள் குடும்பத்துக்கு உதவிக்கு இல்லையே என்று.!
இந்த ஊரில் தொடர்ந்து இருக்க முடியாது மீண்டும் கண்டிப்பாக மாற்றம் தருவார் உயர் அதிகாரி என்பது நிச்சயம்.
என் மேல் அவருக்கு எப்போதும் அதிக நம்பிக்கை. அதை நானும் கெடுத்தது இல்லை இன்றுவரை .!
2001 இல் பார்த்தது இந்தப்படம் .இன்றும் அவள் நல்ல தோழியாக என் முகநூலில் இருக்கின்றாள் .2 வருட வில்லன் போய் இப்ப நல்ல சகோதரனாக உன்னைப்பார்க்கின்றேன் என்பாள் தனிமையில் சாட் பண்ணும் போது .
.இல்லறத்தில் இணைந்து சந்தோஸமாக இன்று வேற ஊரில் வாழ்கின்றாள்.காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.
இன்றும் என் நண்பனை நான் சந்திக்கவில்லை இனியும்??இவர்களின் ஈர்ப்பு எனக்கும் உதவி இருக்கு நல்ல வழியில் போக வேண்டும் என்று.
.அவர்களை திசைதிருப்ப காதல் வேண்டாம் என்ற போது வில்லனாக என்னைப்பார்த்த அந்த நிலையில் இருந்த அவர்கள் எண்ணியகாலம் போய்விட்டது .
தொழில் மாற்றத்தினால் மன்னார் போனதால் நல்ல ஒரு குடும்ப உறவு எனக்கு கிடைத்து இருக்கின்றது.இன்றும் தொடரும் உறவு நிலையில் நீடிப்பதும் எனக்கு அதிகமகிழ்ச்சியைத் தருகின்றது. எப்போதும் ஒரே பாதையில் நான் போகின்றேன் பார்வைகள் தான் வேறுபடுகின்றதா நான் அறியேன்!

19 comments :
//திருகோணமலை என்று திரிந்த பின் // எப்போ!! எங்கே இருந்தீங்கள் நேசன்!!
//காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.// உண்மைதான்.
ம்.. தொடரிடுகையோ!! பூஸும் இப்பிடித்தானே என்னவோ சொல்லி இருந்துது!!!
ஹை! நான்தான் முதலாவதா! :)
உங்கள் மலரும் நினைவுகள் அழகு நேசன்.
தனிமரம்....
நாம் நேர்பாதையில் சென்றால் மற்றவர்களின் பார்வை நம் கண்களுக்குத் தெரியாது... என்ற அருமையான தத்துவத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள்.
பதிவு உண்மையோ... கற்பனையோ... அருமையாக உள்ளது.
நன்றி.
வாழ்க்கைதான்
எவ்வளவு புதிர்களை போடுகிறது....
நல்ல
பகிர்வு...
காலை வணக்கம்,நேசன்!மன்னாரும் அருமையான,அழகான வெயில் கொளுத்தும் ஊர் தான்!///பள்ளிப் பருவக் காதல் படிப்பையும் வீணாக்கி,எதிர் காலத்தையே புரட்டிப் போட்டு விடும்.
/திருகோணமலை என்று திரிந்த பின் // எப்போ!! எங்கே இருந்தீங்கள் நேசன்!!
// வாங்க இமா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ! 2000 ஆண்டு திருகோணமலை செல்வநாயகபுரத்தில் இருந்தேன்.
//காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.// உண்மைதான்.
ம்.. தொடரிடுகையோ!! பூஸும் இப்பிடித்தானே என்னவோ சொல்லி இருந்துது!!!// நினைவுகள் தொடரும்.
10 October 2012 13:10
ஹை! நான்தான் முதலாவதா! :)
10 October 2012 13:11 //ஓம் இமா அக்காள். நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.
உங்கள் மலரும் நினைவுகள் அழகு நேசன்//நன்றி முகுந்தன் வருகைக்கும் கருத்துரைக்கும்.
தனிமரம்....
நாம் நேர்பாதையில் சென்றால் மற்றவர்களின் பார்வை நம் கண்களுக்குத் தெரியாது... என்ற அருமையான தத்துவத்தை எங்களுக்கு உணர்த்தியுள்ளீர்கள்.
பதிவு உண்மையோ... கற்பனையோ... அருமையாக உள்ளது.// உண்மையான விடயம் இது அருணா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
நன்றி.
வாழ்க்கைதான்
எவ்வளவு புதிர்களை போடுகிறது....
நல்ல
பகிர்வு...//நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.
காலை வணக்கம்,நேசன்!மன்னாரும் அருமையான,அழகான வெயில் கொளுத்தும் ஊர் தான்!///பள்ளிப் பருவக் காதல் படிப்பையும் வீணாக்கி,எதிர் காலத்தையே புரட்டிப் போட்டு விடும்.// மாலை வணக்கம் ஐயா! உன்மைதான் மன்னார் நல்ல வெய்யில் ஊர்! ஈர்ப்பு கூடாது பள்ளிக்காலத்தில்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
பின்னேர வணக்கம் நேசன்.... இன்று போட்டிக்கு ஹேமாவும் இல்லை கலையும் இல்லை.. போதாததுக்கு அஞ்சுவும் இல்லை, எனவே பயப்பிடாமல் நிறைய சீனியும் போட்டு பாலும் விட்டு நல்ல ஒரு ஸ்ரோங் ரீ குடிக்கலாம் என இருக்கிறேன்:).
அருமையான பழைய நினைவுகள். ஒருநாளில் வில்லனாகத் தெரிந்தவர்.. இப்போ மிகவும் நல்லவராகத் தெரிகிறார்... இதுக்குத்தான் சொல்வது எடுத்தோம் கவித்தோம் என ஒருவரை எடை போட்டிடக்கூடாது... அது தெரியுது ஆனாலும் எல்லோரும் மனிதர்கள்தானே... மனம் போன போக்கிலே போய்விடுகிறோம்.
இமா said...
//திருகோணமலை என்று திரிந்த பின் // எப்போ!! எங்கே இருந்தீங்கள் நேசன்!!
//காலம் தான் பலருக்கு புரிதலைக் கொடுக்கின்றது.// உண்மைதான்.
ம்.. தொடரிடுகையோ!! பூஸும் இப்பிடித்தானே என்னவோ சொல்லி இருந்துது!!!//
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).
அழகான பாடல்..
மலரும் நினைவுகள் நல்லா இருக்குங்க...
நன்றி...
நினைவுகளில் உறவுகளை மீட்டியது அழகு...
எதிர்பாராதவிதமாயும் இப்படியான சந்தர்ப்பங்களிலும் அமையும் உறவுகள் எம் வாழ்வின் ஒரு அத்தியாயம்தான்
காலை வணக்கம்,அதிரா!///athira said...
பின்னேர வணக்கம் நேசன்.... இன்று போட்டிக்கு ஹேமாவும் இல்லை கலையும் இல்லை.. போதாததுக்கு அஞ்சுவும் இல்லை, எனவே பயப்பிடாமல் நிறைய சீனியும் போட்டு பாலும் விட்டு நல்ல ஒரு ஸ்ரோங் ரீ குடிக்கலாம் என இருக்கிறேன்:).////உங்கட வீட்டில;நீங்கள் ரீ போட்டுக் குடிக்க ஆர் தடையா இருக்கப் போகீனம்?ஹ!ஹ!ஹா!!!!!
Post a Comment