19 October 2012

உருகும் பிரெஞ்க்சுக்காதலி- இருபத்து ஐந்து


தென் ஆசியாவில் நிதானமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று எனலாம். மூவின மக்களும் சுதந்திரமாக ஒன்றினைந்த தேசமாக வாழும் மலேசியா நாடு தனித்துவம் மிக்கது. இந்த நாட்டின் ஆரம்பல கால முன்னேற்றத்தில் இலங்கையரின் பங்கு வரலாற்றில் இருட்டடைப்பு செய்ய முடியாத ஒன்று.!


இந்த நாட்டுக்கும் என் குடும்பத்திற்கும் 1983 கலவரம் வர முன்னர் தொடர்பு இருந்ததாக அடிக்கடி ராகுலின் பாட்டி பங்கஜம் பாட்டி சொல்லுவார். தன் இளைய சகோதரி சின்னவயதில் சிறிய தந்தையோடு புலம்பெயர்ந்து அந்த நாட்டில் அரச தொழில் கருமத்தில் இணைத்துக்கொண்டார் என்றும் அங்கேயே திருமணம் முடித்து வாழத் தலைப்பட்டு விட்டதினால் வீட்டில் யாரும் தொடர்பை கொண்டு இருக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார். தன் ஒரு மகன்தான் அவர்களுடன் தொடர்பில் இருந்தான் என்றும் அந்த மகனும் மலையகத்தில் மாண்டு போனதன் பின் யாருக்கும் தொடர்பு இல்லை என்று சின்னவயதில் எங்களுக்கு 1991 ஊரில் இருந்து இடம்பெயர்ந்த போது சொன்னது ஞாபகம் வந்தது. 


என்னையும் மலேசியா வரவேற்கும் என்று நானும் நினைக்கவில்லை. விதி முன்னர் எழுதியது கணக்கினை யார் அறிவார் என்று எண்ணிக்கொண்டு வரும் போதே, சங்கவி சொன்னாள் ஜீவன் இப்ப மலேசியாவில் எங்க தங்கப் போறம் ஹோட்டலிலா? அவருக்கு ஐரோப்பாவுக்கு கோல் பண்ண வேண்டும் 3 நாட்களாக கதைக்கவில்லை. ஓ அப்படியா ? கோலாம்பூரில் இறங்கியதும் பேசலாம். எப்படியும் வெளிநாட்ட்டுக்கு அழைக்கும் தொலைபேசி மையம் இருக்கும். என்றாலும் நாம் அவதானமாக இருக்க வேண்டும். எங்களுக்கு குடிவரவு விசா இல்லாமல் அத்துமீறித்தான் வருகின்றோம்.

ஒரு காலத்தில் எங்க ஊர்களில் மலையக மக்களை கள்ளத்தோனி என்று நக்கல் பண்ணிவர்கள். பலர் கடைசியில் அவர்கள் வாரிசுகள் கூட தப்பி இருக்க உதவியது அந்த கள்ளத்தோனி என்று திட்டிய மக்கள் தான் சங்கவி அதை நேரில் ஒரு ஊடக பேட்டிக்கு ராகுல் பேட்டி கண்டபோது நேரடியாக அருகில் இருந்து கேள்விப்பட்டேன். கடையில் நாமும் இப்ப இந்த நாட்டுக்குள் கள்ளத்தோனியாக வந்து இருக்கின்றோம். எப்படியாவது ஐரோப்பா போனால் போதும். நீண்ட நேரம் ஒடிய வாகனம் வந்து சேர்ந்த இடம் கோலாம்பூரின் மஜீத் இந்திய சுற்றுவட்டம். சார் இங்கதான் உங்களை சித்தப்பா இறங்கச் சொன்னவர்! என்ற நடத்துனர் குரல் கேட்ட போதுதான் தூக்கம் கலைந்து.








முளித்துப் பார்த்த போது, அசதியில் நித்திரையாகி விட்டேன் என்ற நினைப்பு வந்தது என்னோடு வந்தவர்களுமா நித்திரையாகி விட்டார்கள்? இனி மேல் பயணங்களில் நித்திரை கொள்ளக்கூடாது. குமார் நடத்துனரிடம் தான் சித்தப்பா என்று சொல்லியிருக்க வேண்டும். அதுதான் நடத்துனர் இப்படி சொல்லுகின்றார் என்ற எண்ணம் வந்தது. சங்கவியும் ஆழ்ந்து உறங்கிவிட்டாள் என்பதைச் சொல்லியது விழிமூடிய சலனம் இல்லாத முகம். யுத்தம் எப்படி எல்லாம் வாழ்க்கைப் பாதையை மாற்றுகின்றது. நித்திரை கொள்ளும் போது தட்டி எழுப்பக்கூடாது கோழிச் செட்டையின் சிறகின் துணையோடு தூரிகை தீட்டும் ஓவியம் போல எழுப்ப வேண்டும் என்று சாலிகா ரவிக்குச் சொன்னது ஞாபகம் வந்து செல்கின்றது.


சங்கவியின் உறக்கத்தை வெடிகுண்டு போட்ட சூப்பர் சொனிக் போல திடுக்கிட வைக்க விருப்பம் இல்லை. ஆனாலும் எப்படியும் எழுப்பவேண்டும். இறங்க வேண்டும். என்ற போதே அவளும் கனவுகண்டு விழித்தவள் போல எழுப்பினாள். சிவகாசியை தட்டியதில் அவனும் சோதனைக்கு வந்த ஆமிக்காரன் காலில் தட்டியது போல நினைத்து திடுக்கிட்டு எழுந்ததும் மூவரும் கீழே இறங்கினோம். மலேசியா தலைநகரம் கோலம்பூர் உங்களை அன்போடு வரவேற்கின்றது என்பது போல இருந்திருந்தால் சந்தோசம். ஆனால் ஊர் தெரியாத புதுமுகங்கள் எங்களுக்கு எல்லாம் ஒரு அவசர சந்தேக நிலையைத் தந்தது. நாம் யார் எங்கே போறம் ஏது துணிவு இரு ஆண்கள் ஒரு பெண் மற்றவர்கள் பார்வையில் நாம் என்ன நோக்கம் கொள்வோம் என்ற சிந்தனை ஒரு புறம். குமார் தந்த கைபேசியில் குறித்த நண்பருக்கு அழைப்பை எடுத்த போது அருகில் ஒரு அம்மன் கோவில் இருக்கு அங்கே நில்லுங்கள் நான் வந்து விடுகின்றேன் என்றார். எதிர் முனையில் பேசிய சிவதாஸ்!


என்னவாம் ஜீவன் பக்கத்தில் ஒரு அம்மன் கோவில் இருக்காம் அங்கே நிக்கட்டாம் என்ற போது சங்கவியின் முகபாவம் தன் நிலை உங்களுக்கு தெரியும் தனே என்பதைக் காட்டியதை உணர்த்தியது. சிவகாசியை கோவில் உள்ளே இருக்கும் படி சொல்லியதில் நமக்குள் தொடங்கியது மல்யுத்தம். எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. நான் கோயிலுக்குள் போனதில்லை. இந்த பன்னாடைக்கு ஊரில் எங்களின் தராதரம் தெரியாது போல. காசு கொடுத்துத் தானே போறம் இறைச்சிக்கடைக்கு ஏற்றும் மாடுகள் போல இந்த ஓட்ட பஸ்சில் ஏற்றியதும் இல்லாமல் இந்த ஊரில் கோயிலில் அதுவும் அதிகாலையில் போய் நிக்கட்டாமோ வருட்டும் அந்த வே.....மகன் அவனின் வார்த்தைகள் அருவியில் கொட்டும் கஞ்சல் போல நாகரிகம் இல்லாமல் வந்து விழுந்தது. 


அருகில் ஒரு பெண் இருக்கின்றாள். எம் நாட்டைச் சேர்ந்தவள் என்பதையுமா மறந்து இப்படி தரம்கெட்ட! மூன்றாம் தர வார்த்தை பேசுவது இதுவே வவுனியாவின் தமிழன் என்றாலும் அல்லது வனத்த முல்லையில் சிங்களவன் என்றாலும் இப்படி பேசி இருந்தால் முதலில் முன் பள்ளு மோதிரவிரல் முந்தியிருக்கும். அப்படித்தான் எங்கள் நட்பு வட்டம் அடிதடி என்றால் நாங்க கழுத்துப் பட்டியை கழற்றிவிட்டால் (tie) காவலிகள் தான். சில இடத்தில் ரவியோ, ராகுலோ நானோ சிங்கள நண்பர்களுடன் சேர்ந்து அடிபட்டதில் வாழைத்தோட்ட காவல் நிலையத்தில் எல்லாரும் கம்பி எண்ணி எங்கள் மேல் அதிகாரி வந்து பிணையில் எடுத்த பின்தான் நாகரிகமாக நாமும் மாறியிருக்கின்றோம். சந்தைப்படுத்தல் தொழிலில் பலர் முன் நாகரிகம் முக்கியம் கோபம் அல்ல என்று பலருக்குச் சொல்லிய காலத்தை நினைவு மீட்டியது.

சிவகாசியின் வார்த்தை சிலருக்கு சனியன் நாக்கில் இருப்பான் என்பார்கள் புதிய நாட்டுக்கு வந்து இருக்கின்றோம். அனுசரித்துப் போகவேண்டும் என்ற அடிப்படை நினைப்பைக்கூட நம் தேசத்து யுத்தம் பலருக்கு படிப்பிக்கவில்லை. பட்டதாரி முதல் பாமரன் வரை எல்லா இடத்திலும் வன்முறைதான் தீர்வு என்றால் காந்தி ஏன் திலீபன் ஏன் அன்னை பூபதி ஏன் என நினைக்கும் நேரத்தில் சிவகாசி எதிர்ப்பக்கம் இருக்கும் சாப்பாட்டுக்கடை நோக்கிப் போனான். அப்போது எதிரே இரு குழுக்கல் இடையே கைகலப்பு நடந்து கொண்டு இருந்ததை தூரத்தில் பார்த்து விட்டு நானும் சங்கவியும் அருகில் இருந்த ஹோட்டலில் நுழைந்த நிலையில் மலேசிய பொலிஸ் வந்துவிட்டது!




22 comments :

Angel said...

// நானும் சங்கவியும் அருகில் இருந்த ஹோட்டலில் நுழைந்த நிலையில் மலேசிய பொலிஸ் வந்துவிட்டது!//


அச்சச்சோ :(( அப்புறம் என்னாகும்னு தெரிய அடுத்த பதிவு வரை காத்திருக்க வச்சிட்டீங்களே நேசன் ....

Angel said...

நேசன் நீங்க யோகா அண்ணா எல்லாரும் நலமா .
யோகா அண்ணாவை விசாரித்ததாக கூறுங்கள்

Angel said...

பாடல் நல்லா இருக்கு ..இசைதான் இதில் ரொம்ப டாப்

Seeni said...

viru viruppu...

MANO நாஞ்சில் மனோ said...

மலேசியாவின் பொருளாதாரம் சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது...!

திண்டுக்கல் தனபாலன் said...

அடுத்த பகிர்வை அறிய ஆவல்...

நன்றி...
tm2

தனிமரம் said...

நானும் சங்கவியும் அருகில் இருந்த ஹோட்டலில் நுழைந்த நிலையில் மலேசிய பொலிஸ் வந்துவிட்டது!//


அச்சச்சோ :(( அப்புறம் என்னாகும்னு தெரிய அடுத்த பதிவு வரை காத்திருக்க வச்சிட்டீங்களே நேசன் ....//வாங்க அஞ்சலின் அக்காள் ஓரு பால்க்கோப்பி குடியுங்கோ !விரைவில் வரும்.

தனிமரம் said...

நேசன் நீங்க யோகா அண்ணா எல்லாரும் நலமா .
யோகா அண்ணாவை விசாரித்ததாக கூறுங்கள்

19 October 2012 14:01 //நான் நலம் அஞ்சலின் அக்காள் யோகா ஐயாவும் நலமாக இருக்க வேண்டும் என்பதே என் பிரார்த்தனையும்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பாடல் நல்லா இருக்கு ..இசைதான் இதில் ரொம்ப டாப்

19 October 2012 14:04 //நன்றி அஞ்சலின் அக்காள் கருத்துக்கு.

தனிமரம் said...

viru viruppu...// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

மலேசியாவின் பொருளாதாரம் சற்று ஆச்சர்யமாகவே இருக்கிறது...!

19 October 2012 18:43 //ம்ம் உண்மைதான் மனோ அண்ணாச்சி! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அடுத்த பகிர்வை அறிய ஆவல்..// நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

K.s.s.Rajh said...

தொடருங்கள் பாஸ் விரிவான விமர்சனம் தொடரின் முடிவில் தருகின்றேன்

ஆத்மா said...

வெள்ளியங்கம் கானும் காதலிக்கு வாழ்த்துக்கள்
தொடர்ந்தும் பதிவிடுங்கள்
அசைவுகளை அசைபோட ஆசையாய் இருக்கிறோம்

தனிமரம் said...

தொடருங்கள் பாஸ் விரிவான விமர்சனம் தொடரின் முடிவில் தருகின்றேன் //நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வெள்ளியங்கம் கானும் காதலிக்கு வாழ்த்துக்கள் 
தொடர்ந்தும் பதிவிடுங்கள்
அசைவுகளை அசைபோட ஆசையாய் இருக்கிறோம் 
//நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஃபிரெஞ்சுக் காதலி உருகி உருகி 25 ஐத் தொட்டுவிட்டார்ர்.. டும்..டும்..டும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

மலேசியாவையும் கலக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறீங்கபோல... வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பாடமும்.. ஒவ்வொரு அனுபவத்தை எமக்குக் கற்றுத் தருகிறது.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

நானும் அஞ்சுவைப்போல யோசிக்கிறேன்ன்.. யோகா அண்ணனை எங்கேயும் காணவில்லையே? நலம்தானே அவர்?

தனிமரம் said...

பிரெஞ்சுக் காதலி உருகி உருகி 25 ஐத் தொட்டுவிட்டார்ர்.. டும்..டும்..டும்.// வாங்க அதிரா நலமா வாழ்த்துக்கு நன்றி!

தனிமரம் said...

மலேசியாவையும் கலக்கிக் கொண்டுதான் வந்திருக்கிறீங்கபோல... வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் ஒவ்வொரு பாடமும்.. ஒவ்வொரு அனுபவத்தை எமக்குக் கற்றுத் தருகிறது.

21 October 2012 13:31 //ம்ம் உண்மைதான் அதிரா மலேசியாவை நான் தனியாக பார்த்தேன்!ஹீ தொடரில் இல்லை அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

தனிமரம் said...

நானும் அஞ்சுவைப்போல யோசிக்கிறேன்ன்.. யோகா அண்ணனை எங்கேயும் காணவில்லையே? நலம்தானே அவர்?// ம்ம் யோகா ஐயா நலம் அவர் உறவில் ஒரு துன்பியல் நிகழ்வு அதுதான் விடுமுறை இணையத்துக்கு விரைவில் வருவார் என நம்பலாம்! நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.