24 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-27

மனித உரிமை ஆணைக்குழுக்களும் ,காணாமல்போவோர் கண்காணிப்புக்குழுக்களும் கண்டுபிடிக்காமல் போன் உயிர்கள் அதிகம் கொண்டதேசம் இந்த இனவாத நாடு! 

சித்திரவதைகள் ,விசாரணை என்றபெயரில் வெளியிடாமல் வீணாக மாண்டோரின் விடுதலை எல்லாம் எழுத வேண்டிய நாலாவது தூணாம் ஊடகம் என்ற துணையும் §

பயங்கரவாததுக்கு துணைபோகும் கைக்கூலிகள் என்றும் அரச விளம்பரம் கிடைக்காது என்ற விளம்பர மிரட்டல் மூலமும் ,மீறினால் இனம்தெரியாதோர் தாக்குதல் என்று குண்டர்படையை கூப்பிட்டும் குழப்பம் தரும் ஆட்சியின் மகிமையில் ஊடக ஆசையே வேண்டாமென்று ஓடியோர் உலகு எங்கும் அடைக்கலம்கோரி  வாழ்பவர்களையும் அழைத்து வாருங்கள் என்று சட்டம் கேட்கும் இன்றைய அரசின் நிலையை என்ன சொல்வது !

விட்டில் பூச்சி விளக்கைத் தேடுமாம் மரணத்துக்கு வழிகாட்ட !படித்தவர்கள் எல்லாம் சில நேரத்தில் புத்தி மாறுவார்கள் தம் நிலை கடந்து பாசத்தில் அது போல நீ முட்டாள் உன்னையார் விடுப்புபார்க்க பிந்துணுவெவ போகச்சொன்னது? அதுவும் விடியலக்காலைநேரம் விறபனைப்பிரதிநிதி வேலை தொடங்குவது 9 மணிக்கு!

 அந்த நேரத்திலும் கோப்பி குடித்து கழுத்துப்பட்டியை சரி செய்து முகத்தை அலங்கரித்த பின் தான் முதல்க்கடைக்கு முழுசுவளம் நல்லதாக இருக்க வேண்டிக்கொண்டு முதல் பில் போட வேண்டும் .அப்பத்தான் மாதமுடிவில் விற்பனை விகிதம் உயர்த்திக்காட்டமுடியும் !சுறா படம் ஹிட்சு இத்தனைகோடி என்று !

இது எல்லாம் தெரியாத நீ இந்த விற்பனை தொழிலுக்கே படிக்காதவன் ,லாய்க்கு இல்லாதவன் நீயடா! 

உன்னை இப்படிச்சிறையில் 7 மாதங்கள் கடந்து பலசிறையில் தேடி  அலுத்து கடைசியில் போகம்பரையில் சந்திக்க வைத்தது என் பாட்டி பங்கஜம் இன்னொரு பேரனுக்கு நீ தான் ஆலமரமாக உதவணும் என்ற பாசப்போராட்டமும் .

உன்னையே விரும்பி ,உனக்கு என்ன நடந்தது என்று தவிக்கும் ஐராங்கனியும் தான் என்னை இங்கு அனுப்பியது .

 என்று பார்வையாளர் என்ற பேரில் பார்க்க வந்த சேகரிடம் சொல்லி முடித்தான் ராகுல்! சந்தேகச்சிறையில் இலங்கையில் புலிகள் என்று சிறையில் இருப்போர் பட்டியல் ஊடகத்தில் எழுதவெளிக்கிட்டாள் உன்னால் முடியாது மச்சான் சேகர். 

ஊடகம் என்பது பலரை சந்தோஸப்படுத்த வேண்டும் அது ஒரே திசையில் பயணிக்க இது பென்னியின் செல்வன் நாவல் இல்லை .

உன்னால் உன் வழியில் போக முடியுமா ?இல்லை அந்த பண்டாரசார் ,அவரது தங்கை ஐராங்கனி ,இல்லை பாபு ,இல்லை மிரூனா என பலரை பற்றி சிந்திக்கவேண்டும் . 

இப்போது உன் பக்கம் இருக்கும் ஒரே தேர்வு நீ ஒரு சுயநலவாதி யாரும் அறியாவண்ணம் இந்த நாட்டுச்சட்டத்தில் இருந்து வெளியில் வரவேண்டும் .அது கைதி தப்பி ஓட்டம் என்ற பெயரில் !வேண்டிய செயல் எல்லாம் பண்டாரசார் செய்து விட்டார் . நீ நீதிமன்றம் வா உனக்கு எல்லாம் புரியும் எல்லா சிங்களனும் இனவாதி அல்ல !புரிந்து கொள் ! 


இப்போது ஐராங்கனி அரபுலகம் போய் ஒரு மாதம் .அவளை அனுப்பியதும் நான் தான் . எப்போதும் காதலுக்கு ராகுல் வில்லனாகவே ராகுல் இருந்து போகட்டுமே நாளை மறுநாள் கண்டி நீதிமன்றத்தில் சட்டதரணியுடன் சந்திக்கின்றேன். என்று விடைபெற்றான் உயிர் நண்பன் சேகர் அறிந்தாலும் பதுளை நண்பர்கள் வெறுத்த ராகுல் !


உலகம் சுற்றுவதுபோல உணர்ந்தான் சேகர்! 






தொடரும்!!!



9 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
வலிகள் நிறைந்த வரிகளை
மனச்சுமையோடு வரலாறு தெரிந்துகொள்ளும்
நோக்குடன் படித்துக்கொண்டே வருகையில்..
இடையில்... இலக்கியப் பார்வையும் உங்களில் இருந்து
தவறவில்லை..
/////////ஊடகம் என்பது பலரை சந்தோஸப்படுத்த வேண்டும் அது ஒரே திசையில் பயணிக்க இது பென்னியின் செல்வன் நாவல் இல்லை .//////
சரியான உவமை..ஊடகங்களின் பண்புக்கு...

திண்டுக்கல் தனபாலன் said...

வலிகளை புரிந்து கொள்ள முடிகிறது...


தொடர்கிறேன்....

K said...

எல்லாச் சிங்களவர்களும் இனவாதிகள் அல்ல என்பதை நாமும், எல்லா தமிழர்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை அவர்களும் உணர்ந்திட்டால், பிரச்சனை இல்லைத்தான்!!!

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
வலிகள் நிறைந்த வரிகளை
மனச்சுமையோடு வரலாறு தெரிந்துகொள்ளும்
நோக்குடன் படித்துக்கொண்டே வருகையில்..
இடையில்... இலக்கியப் பார்வையும் உங்களில் இருந்து
தவறவில்லை..
/////////ஊடகம் என்பது பலரை சந்தோஸப்படுத்த வேண்டும் அது ஒரே திசையில் பயணிக்க இது பென்னியின் செல்வன் நாவல் இல்லை .//////
சரியான உவமை..ஊடகங்களின் பண்புக்கு...

24 August 2013 17:05 Delete//வணக்கம் மகி அண்ணா முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ.நன்றி அன்பான உற்சாகமூட்டும் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வலிகளை புரிந்து கொள்ள முடிகிறது...


தொடர்கிறேன்....//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ல்லாச் சிங்களவர்களும் இனவாதிகள் அல்ல என்பதை நாமும், எல்லா தமிழர்களும் கெட்டவர்கள் இல்லை என்பதை அவர்களும் உணர்ந்திட்டால், பிரச்சனை இல்லைத்தான்!!!

24 August 2013 22:54 Delete//நிஜம் தான் மாத்தியோசி ஜீவன்.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

Unknown said...

இலங்கையில்,சொகுசான வாழ்வுக்கு உதவுவது இனவாதமே!அதிலும்,புடம்போட்ட இனவாதிகள் அண்மைக் காலங்களிலேயே புதிதாக உருவாகியிருக்கிறார்கள்.இணக்கம் என்பது இனி எக்காலத்திலும் வராது,இனவாதிகளின் வண்டவாளம் பெரும்பான்மையின சகோதரர்களுக்கு உறைக்கும் வரை!!!

தனிமரம் said...

இலங்கையில்,சொகுசான வாழ்வுக்கு உதவுவது இனவாதமே!அதிலும்,புடம்போட்ட இனவாதிகள் அண்மைக் காலங்களிலேயே புதிதாக உருவாகியிருக்கிறார்கள்.இணக்கம் என்பது இனி எக்காலத்திலும் வராது,இனவாதிகளின் வண்டவாளம் பெரும்பான்மையின சகோதரர்களுக்கு உறைக்கும் வரை!!!

25 August 2013 10:54 Delete//ம்ம் எப்படியும் சாமானிய மக்களுக்கு உறைக்காது என்பது நிஜம் இலவசம் மற்றும் ஓட்டுப்போடும் கூட்டம் தான்!ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்0.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-7.html) சென்று பார்க்கவும்... நன்றி...