19 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-24


மலைமகளுக்கு அழகு தன் கூந்தல் நீளம் எத்தனை வசிகரம்மிக்கது என்பதை அரசிளங்குமாரியின் ஜரிகைபோல அழகுமெருகூட்டுவது .

அப்படித்தான் பண்டாரவளையின் நகர அமைப்பும் இயற்கையின் எழில் கொஞ்சும் அப்புத்தளையை வடக்கே ஒரு எல்லையாகவும் ,மறுபுறம் தெற்கே பதுளையும் ,கிழக்காக இன்னொரு புறம் நமுணுக்கொல்லையும் ,மேற்கரையில் வெலிமடவும்  மையம் கொண்ட பூமி இந்த ஊர் .

மூவின மக்கள் சேர்ந்தே இருக்கும் வியாபார பூமி தென்றுதொட்டே தோட்டத்தொழிளார்களின் உழைப்பு இந்த ஊருக்கு அடிமைசாசனம் போல இருந்தாலும், அவர்களின் விவசாயப்பொருட்களை இங்கு விற்பனைசெய்யும் சந்தை வசதியும் ஒருங்கே அமைந்தபடியாள் ,மற்ற நகரங்களைவிட பண்டாரவளை பொருளாதார முன்னேற்றம் கண்ட இடம் .

அத்துடன் உயர்தரக்கல்லூரிகள் ,செல்வந்தர்கள் என எப்போதும் செழிப்புக்கும் பஞ்சம் இல்லாத ஊரில் கொழும்பில் இருந்து இடமாற்றல் ஆகிப்போன சேகரை வரவேற்றாள் ஐராங்கனி .

ஆடம்பர கணனி மையத்தில் முக்கிய பொறுப்பாளர் அந்தஸ்த்தில் இங்கே வந்து சேர்ந்தாளும் அருகில் இருக்கும்.பிந்துனுவெவயில் இருந்து தினமும் வருபவள் .

காதலுடன் ,கடமையும் என பாபு கொழும்பில் தன் இயல்பு வாழ்க்கையில் ஒன்றிய நிலையில் !

 சேகர் இந்த பண்டாரவளை வந்து ஒரு வருடத்தை அண்மிக்கும் வரையில் வவுனியாவுக்கு மீண்டும் போவோம் என்ற கனவில் அக்கினிச்சுவாலைபோல அதிகாரிகள் தங்களின் விற்பனை அதிகரித்து இருப்பதால் இடம்மாற்றம் கிடைக்காத நிலையில் ,

பண்டாரவளையில் விற்பனைப்பிரதிநிதியாகவே தொடர்ந்தான் சேகர்.

எப்போதும் விற்பனைப்பிர்திநிதி என்றால் ஒரே கட்சியில் இருந்தாலும் அடுத்த தலைவர் யார் என்ற  போட்டியும் ,பொறமையும் கட்சியில் இருக்கும் முக்கிய இரண்டாம் மட்ட தலைவர்களிடம் இருப்பது போலவே அடுத்த வட்டார அதிகாரிப் போட்டி பலமாக இருக்கும் .

நீண்டகால அனுபவமும் ,அதிக விற்பனை உயர்ச்சி சாதனையும் ,ஒரு துணைக்காரணி என்றாலும் இன்னும் பல நிறுவாக தில்லுமுள்ளுத்தான் அடுத்த வட்டார அதிகாரியாக வலம் வர முடியும் காரில் பலரை கட்டுப்படுத்தும் அதிகார தரத்தில் .

இது எல்லாம் இன்று விற்பனைப்பிரதிநிதி என்று வருபவர்களுக்கு  முன் அனுபவம் இல்லை , என்றும் இன்னும் வட்டார  அதிகாரியாக சேவை செய்ய வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் ,உட்கட்சி ஜனநாயகம் இல்லாமல் பொதுத்தேர்தலில் போட்டியிடும் தேசிக்கட்சி வேட்பாளர் போலத்தான் இந்த வட்டார அதிகாரி என்ற தோரணை (Area MANAGARE)  !

 இந்த தோரணையில் குஞ்சம் கட்ட ஆசைப்பட்டு அடுத்த மந்திரியாக இன்னொரு கட்சியில்  இருந்து கட்சி மாறும்  உறுப்பினர் போல வேற கம்பனி மாறியோரின் கதைகள் எழுத வெளிக்கிட்டால் இந்த பண்டாரவளையில் பயண சரிதம் அதிகம் இருக்கு. 

மூவினத்தவர்களுக்களும் இருக்கும் விற்பனைப்பிரதிநிதி  என்ற வேலையில் முக்கிய பல கம்பனிக்கு இப்படி முயன்றவர்கள்தான் அதிகம். 

ஏன் சேகர் நீங்க புதிதாக இங்க வர இருக்கும் இன்னொரு பல்தேசிக் கம்பனிக்கு வட்டார அதிகாரி ஆகலாமே ?

அதுக்கான தகமை உங்களுக்கு இருக்கு .என் அண்ணாவும் அதைப்பற்றி உன்னுடன் பேசச் சொன்னார்.!

 ஐராங்கனி.


இது நமக்கு ஆகாது .கட்டுப்பாடு ,சுதந்திரம் எல்லாம் எனக்கு ஒத்துவராது!






 தொடரும்!

8 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்
நலமா?

மகேந்திரன் said...

பண்டாரவிளை..
ஊரின் அழகும் தன்மையும்
உங்கள் எழுத்துக்களால் விளங்குகிறது..
எங்க ஊர்ப் பக்கமும் இந்த பெயர்கொண்ட ஊர் இருக்கிறது..
அழகும் பசுமையும் நிறைந்த ஊர்..
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ளதால்...

திண்டுக்கல் தனபாலன் said...

பண்டாரவளையைப் பற்றி அறிய முடிந்தது... தொடர்கிறேன்...

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்
நலமா?//வணக்கம் மகி அண்ணா. நலம் தாங்களும் அவ்வண்ணமே!ம்ம் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ நீண்ட காலத்தின் பின்.

தனிமரம் said...

பண்டாரவிளை..
ஊரின் அழகும் தன்மையும்
உங்கள் எழுத்துக்களால் விளங்குகிறது..
எங்க ஊர்ப் பக்கமும் இந்த பெயர்கொண்ட ஊர் இருக்கிறது..
அழகும் பசுமையும் நிறைந்த ஊர்..
தாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ளதால்...

19 August 2013 16:32 Delete// ஆஹா நானும் இப்போது அறிந்து கொண்டேன் நன்றி மகி அண்ணாச்சி தகவலுக்கு! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

பண்டாரவளையைப் பற்றி அறிய முடிந்தது... தொடர்கிறேன்...

19 August 2013 18:46 Delete**// நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.தனபாலன் சார்!

Unknown said...

இந்த தோரணையில் குஞ்சம் கட்ட ஆசைப்பட்டு அடுத்த மந்திரியாக இன்னொரு கட்சியில் இருந்து கட்சி மாறும் உறுப்பினர் போல....///ஹ!ஹ!!ஹா!!!(வலையில மாட்டல)தொடர்கிறேன்...........!

தனிமரம் said...

இந்த தோரணையில் குஞ்சம் கட்ட ஆசைப்பட்டு அடுத்த மந்திரியாக இன்னொரு கட்சியில் இருந்து கட்சி மாறும் உறுப்பினர் போல....///ஹ!ஹ!!ஹா!!!(வலையில மாட்டல)தொடர்கிறேன்...........!

20 August 2013 09:18//ஆஹா அப்படியா யோகா ஐயா.ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.