28 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-30

காவடி தூக்குவது /எடுத்தல் என்பது ஆன்மீகத்தில் ஆத்ம விடுதலை வேண்டி என்று பொருள்படும்.

 சூரனையும் கொல்லாமல் அபயம் அளித்தவன் வேலன் .அதுபோலத்தான் இந்த காதலும் இரண்டு ஆத்மாக்களின் ஈடேற்றம் .

காதலில்  இருவரும் இணைதல் என்பது தூக்கி ஆடும் காவடியின் பாரமும் ,ஆடுபவரின் உடல்பலமும் ,ஆண்டவனின் கிருபபையும் ஒன்று சேர்ந்தால் தான்! எடுத்த கோவில் தொடக்கம் முடிக்கும் சன்னதி வரை தொடர்ந்து ஆடமுடியும்

காவடி ஆடும் போது சந்திகள், வீதிகள் ,தெருக்கள் ,என பல பக்கம் பார்த்து ஆடிச்செல்லவேண்டும் இடையில் பல இன்னல்கள் பல உருவில் வரும் மகுடிக்கு ஓடிவரும் நாகம் போல !

அதுபோலதான் காதலிலும் பெற்றோர்கள் ஊர் ,இனம். குலம் .என சமூகம் விதிக்கும் கட்டுப்பாடுகள் கடந்து திடங்கொண்டு இணைந்தே இருப்போம் என்று சபதம் கொண்டால் தான் சபையேறமுடியும் காதலில் கணவன் மனைவி என கரம் பற்ற .

இந்தகாதல் என்பது இன்றும் பலருக்கு முள்கிரீடம். எனக்கும் இந்த பாபு ,மிரூனா இருவரும் சூட்ட நினைப்பது எதை என் ஐயனே !

இன்னும் இரண்டுநாள் இருக்கு உன் வழியில் நானும் அடங்கி, ஒடுங்கி ,சரணாகதியாக .

அதுக்குள் நான் எடுக்கும் முடிவுகள் யாரையும் உருகவைக்கக்கூடாது.

 ஏற்கனவே என் நண்பனுக்கு உருகும் காதலியை பரிசாக்கியதில் என் பங்கையும் மறக்கமுடியாது செஞ்சோலை சிறார் படுகொலை போல  இந்த பாரிஸ் வாழ்வில்.


 எது எப்படியோ எல்லோரும் இந்த ஆன்மீக குழுவில் போகும் காலம் வரவேண்டும். அதுக்கு உன் தயவும், கருணையும் வேண்டும் என்று எண்ணிக்கொண்டே பாபுக்கு மீண்டும் கைபேசியில் தொடர்பை எடுத்தான் சேகர்!

 "மச்சான் நீ நாளைக்கு கொழும்பு போறாய் "உன் பாஸ்போட்டை மருதானையில் போதிராஜா மாவத்தையில் இருக்கும் என் பிரெண்டு காதர் பாயிடம் சேகர் கொடுக்கச் சொன்னான் என்று கொடு .அந்த பாய்க்கு நான் மிகவும் பரீட்சயமானவன் என்பதால் என்ன செய்ய வேண்டுமோ ?அதைச் செய்வார் உனக்கு.நிச்சயம்  நல்லது நடக்கும் உடனே போ.

 சாரிடா சேகர் நாளை நம்மூர்க்கோவில் தேர் வீதியுலா வருகின்றது .நான் கண்டிப்பாக இருக்கவேண்டும். ஒரு காலத்தில் நாம் எல்லாம் இந்த் பதுளையில்  இணைந்தே இருந்தோம்!

 நீ பதுளையை விட்டுப்போனதும் பின் வவுனியா என்றும், பண்டாரவளை என்றும் அலைந்து கடைசியில் உன் வாழ்க்கை எல்லாம் மாறிப்போச்சு.

 நீ இந்த ஊரைவிட்டுப்போனதில் எனக்கு நல்ல நட்பும் இல்லாமல் போச்சு .நீ இங்க இருந்தாள் நிச்சயம் மிரூனா இன்று பதுளை வந்து இருப்பாள்.

 போனவருசம் கூட என்னோடு சேர்ந்து வந்தாள் இந்த வருசம் அவள் என்கூட பேசவே வெறுக்கின்றாள் !

 மச்சான் எதையும் நினைச்சு கவலைப்படாத உன்னைப்புரிந்து கொள்ளாதவள் எப்படி உன்னைச்சரண் அடைந்தேன் என்று சுகராகம் மீட்ட முடியும் .

.பதுளையில் வருடாவருடம் வரும் தேர் வடிவாக இருக்கும் பார்த்து ரசிக்க !


ஆனால் நீ ரசிக்கும் நிலையில் இல்லையே பாபு துன்பங்கள் வந்தால் கைகோர்த்துக்கொண்டு வரும் என்பது போல படிச்சுப்படிச்சு சொன்னாலும் கேட்காமல் ,என்னையும் இந்த காதல்க்காவடி எடுக்கவைத்தாய் கடைசியில் இப்ப நானும் உங்ககுடும்பத்தில் தலைகுனிந்து நிற்கும் நிலையைத் தரப்போகின்றாயா ?

உன் தங்கை சங்கவி என்ன செய்யப்போகின்றாய்? தம்பி விமலன் நிலை எல்லாத்துக்கும் மேல் உன் அப்பா இழுத்த குடும்பம் என்ற தேர் தெருவில் நிற்கவைக்கப்போறீயா ?எனக்கு உனக்கும் ,மிரூனாவுக்கும் இடையில் உண்மையில் என்ன நடந்தது என்று தெரியாது ?

நான் இருப்பக்கமும் நிற்கும் ஒரு நடுவர் போலத்தான் ஆனால் தீர்ப்பு சொல்லவேண்டிய நிலையை நீயும் மிரூனாவும் உருவாக்கிய நிலையில் என் தனிப்பட்ட ஆன்மீகப்பயணம் நெருங்கும் நிலையில் உன்னிடம் நான் கேட்பது நீ பதுளையைவிட்டு வெளியில் வா .

கொழும்பைக்கடந்து கொஞ்சம் வெளிவட்டமும் பாரூ உன்னை யார் யார் உண்மையில் நேசிக்கின்றார்கள் என்று தெரிந்துகொள்ள கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை இழந்துவிடதே .

ஜனாதிபதி என்பது மக்கள் தேர்தலில்  தேர்ந்து எடுக்கும் நிலை என்றாலும் அந்த தகுதியை நாம் உருவாக்க வேண்டும் .அதுக்காக பின் கதவு வேண்டாம் கொஞ்சம் ஜோசி பாபு.

 நான் உன் நன்மைக்கு சொல்லும் தூய நண்பன் என்று எண்ணிணால் நீ நாளைக்காலையில் தேர் வெளிக்கிட்ட கையோடு ஊரைத்தாண்டிவா.

 இல்லையோ என்னையும் மறந்துவிடு நான் உங்கள் இருவருக்கும் தொலைபேசிக்கும் ,இணையத்துக்கும் செலவிடும் ஈரோப்பணமும் நேரமும்சரி இனி மிஞ்சும் .

எனக்கு நீங்கள் மட்டும் நண்பர்கள் இல்லை.

 என் ஆன்மீக வழிகளிலும் பலர் காத்து இருக்கின்றார்கள் புரிஞ்சுக்க! 

சாரிடா சேகர் எல்லாம் என்னால நீ கொஞ்சம் அமைதியாக இரு.

 உண்மையில் மிரூனா பாவம் நான் தான் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டன் என்றாலும் அவள் கோபம் நியாயம் இல்லை சேகர் அதை அவள் புரிஞ்சுக்கிட்டாள் போதும்.

 எப்போதும் உறவுகள் கடந்து நான் நேசிக்கும் நீ இத்தனை தூரம் சொல்லும் போது நான் உன்னோடு கைகோர்க்கின்றேன்.

 அதுக்கு முன் அவளிடம் பேசணும் மச்சான்.

 இனி நீ அவளுடன் பேச இப்ப நல்ல நேரம் இல்லை காலம்  வரும் போது நானே பேசுகின்றேன் .
உனக்கு நல்ல காலம் பிறக்குது இப்பத்தான் காதர் பாய் செய்தி அனுப்பி இருக்கின்றார் முகநூலில் நீ முதலில் கொழும்பு போ!

 முக்கியம் யாருக்கும் ஏதுவும் சொல்லாத கொழும்பில் வேலை என்று மட்டும் சொல்லு .நான் நாளைக்கு பேசுறன் என்று தொடர்பைத் துண்டித்தான் சேகர்!


தொடரும்....


1 comment :

Unknown said...

ஹூம்............எத்தனை பேருக்கு இப்படியொரு நட்புக் கிட்டும்?எவருக்கும் தெரியாமல்/சொல்லாமல் நாடு விட்டு நாடு.............தொடரட்டும்.........