25 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-28

இனவாத நாட்டில் சட்டங்களும் ,சட்டசபைகளும் தமிழ்விடயத்தில் தீர்ப்புச் சொல்வது என்றாள் பாதுகாப்பு என்ற கொள்ளிட மலையைக்கடாக்காதவர்கள் தமிழர்  என்பது எந்த ஒரு படிக்காத பாமரனும் அறிந்த செயல் !

சட்டத்தின் பெரிய துறையில் இருக்கும் போதெல்லாம் தமிழர் என்ற நிலையை மறந்தவர்கள் .அந்திம காலத்தில் மக்களுக்கு சேவை ,என்றும் நாட்டில் இன்னும் சட்டம் சீர்குழைந்துவிட்டது என்று வெள்ளவேட்டி கட்டி சிம்மாசனம் தேடும் கூட்டம் எல்லாம் சிந்திக்க மறந்தது .


சிறையில் வாடும் அப்பாவிகளின் வாழ்விற்கு விரைந்து தீர்வு சொல்லாமை. 


என்ன சொல்லியும் இந்த நாட்டில் சந்தேகமும் ,இராணுவ தலையீடல்களும் .இன்னும் எத்தனையோ அப்பாவித்தமிழர்களை சுதந்திரமாக நடமாடவிடாமல் சிறைக்கதவுகளின் பின்னே விழியில் வலியைச் சுமக்கின்றகதைகள் எல்லாம் வரலாறக எழுத்தில் வடிக்கவேண்டும் .

இது எல்லாம் உன் நாட்குறிப்பில் எழுதிவை மச்சான் சேகர் .என்று பிணையில் விடுதலையான நண்பனை கொழும்புக்கு அழைத்துச்சென்று கொண்டு இருந்த போது ராகுல் சொல்லிய விடயம் .

இந்த 7 மாதம் வெளியுலகை பார்த்து ரசிக்கவில்லை பல திரைப்படம், நல்ல நாவல் ,முக்கியமாக நல்ல இசை எதுவும் ரசிக்கவில்லை சேகர் !
.

அவன் விழிகள் பிந்துணுவெவ  சம்பவம் பற்றி சஞ்சிகையில் வராமல் பலர் மறந்த விடயம் போல அகிவிட்டது. பிரபல்யமான சினிமா நடிகை திருமணம் முடித்தவுடன் சினிமா வாழ்வு தொலைவது போல !


இனி விற்பனைப்பிரதிநிதி வேலை எப்படி இருக்கும்? பண்டார சேர் என்ன செய்வார்? யாரிடம் போகலாம் !இப்ப  நம் விதியை குருமாற்றம் மாற்றிவிட்டதே!

எவ்வளவு காசு செலவழிச்சான் என்று இன்னும் ராகுல் சொல்லவில்லை. ஐராங்கனி என்னையும் சந்தேகித்து இருப்பாளோ?

 என்ன இருந்தாலும் இந்த இனவாத உணர்வு ஒரு வைக்கோல் பற்றையில் ஒருதுளி நெருப்பு வைப்பது  போல விரைவில் பற்றிவிடும் சுடர் ஒளியாக எது எப்படியோ !

வெளியில் பிணையில் விட்டுவிட்டார்கள் உயிருடன் என் கண்முன்னே நீ புலிதானே ?என்று அந்த புலனாய்வு அதிகாரி அடித்த அடியில் உயிர்போன அந்த சக கைதியின் முகம் இன்னும் ஞாபகம் இருக்கு மனதில்.

என்ன மச்சான் ராகுல் நீ கொழும்பு போறாய் என்றாய் இப்ப நாம் வரும் வான் கட்டுநாயக்கா நெருங்குகின்றது!  எங்க போறம் ராகுல்? ஏன்டா உனக்கு என்ன தெரியும்? நீ நாட்டைப்படிக்காதவன் முதலில் இனவாத நாட்டைப்பற்றி தெரிந்து கொள்ளு .

 வெளியில் வந்த உடன் காற்று அழகாய் வீசிச்சா? அதுதான் என் நண்பன் மூலம் உன்னை தாய்லாந்து அனுப்புகின்றேன் .கொஞ்சம் மசாஜ் கிடைக்கட்டும் என்று! ஆமிக்காரன் கொடுத்த ஒத்தடம் கொஞ்சம் வலி குறையட்டும் என்று ! உன்னோடு வருவது எல்லாம் சகோதரமொழி நண்பர்கள் .என்  பல்தேசிய கம்பனி சுற்றுலாக்குழு அவர்களுடன் ஒன்றாகப் போகும்  நீ சிங்களமொழியே பேசு .

தாய்லாந்து போனபின் அங்க ஒரு பார்ட்டி வரும் அப்புறம் பேசுகின்றேன் .எல்லாம் தெளிவாக சரியா! சேகர் .

 இந்தா கடவுச்சீட்டு சரி மச்சான் மீண்டும் சந்திப்போம் .

அந்தா நிற்கின்றான் நாமல் அவனிடம் எதுவும் பேசாத கேட்டாள்  உன் பெயர் ஜீவன் என்று சொல்லு! 

ஏன்டா ராகுல் நீ இப்படி திடீர் திடீர் என்று முடிவு எடுக்கின்றாய் !
நானா போடா சேகர் எங்காவது   போய் உயிரோடு இருக்கும் வழியைப்பாரு.இது நம் கஸ்ரகாலத்தின் இன்னொரு தொடக்கமாகவும் இருக்கலாம். ஒரு கப்பல் பயணம் போல யாரு கரை சேர்வார்கள் எல்லாம் சமுத்திராஜன் கையில்!



தொடரும்.....

8 comments :

முற்றும் அறிந்த அதிரா said...

மின்னல் வேகத்தில் தொடர்கிறது தொடர்... அழகாக நகர்த்துறீங்க.. தொடருங்கோ.

MANO நாஞ்சில் மனோ said...

சிறையில் வாடும் அப்பாவிகளின் வாழ்விற்கு விரைந்து தீர்வு சொல்லாமை.//

இந்த சாபம் எல்லா நாட்டுலேயும் இருக்கதான் செய்யுது நேசன்....!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
படிக்க படிக்க
கல்மரத்திலும் ஊடுருவும் ஆணி போல
பதிகிறது சம்பவங்களும் .. நிகழ்வுகளும்..
//////இனவாத உணர்வு ஒரு வைக்கோல் பற்றையில் ஒருதுளி நெருப்பு வைப்பது போல விரைவில் பற்றிவிடும் சுடர் ஒளியாக/////
உண்மையான உண்மை..
சிறுதணல் கண்ட காட்டுமரம் தான்
இந்த இனவாதம்..

Anonymous said...

எந்த இனமாய் இருந்தாலும் அதிகார வர்க்கம் ஆளுமை செலுத்தி தம் வாழ்வை உறுதி செய்து கொள்ளும், அப்பாவி வர்க்கம் இருப்பதையும் இழந்து வாழ்ந்தும், செத்தும் பேசாப் பொருளாய் மறைந்து விடும். எந்த இனத்திலும் அதிகார வர்க்கங்கள் ஆளுமை செய்ய எத்தனிக்கும் போட்டிகளில் அவ் இனத்தின் அப்பாவி வர்க்கம் சின்னா பின்னமாய் போவும். அதிகார வர்க்கம் ஒவ்வொரு தருணங்களில் ஒவ்வொரு விதமாய் நாவைச் சுழற்றி மாற்றிப் பேசும், அனால் அவர் கற்பித்த கொள்கைகளை இறுகிப் பற்றி முட்டி மோதி முடமாகிப் போவது அப்பாவிகள். ஒரு அதிகார வர்க்கம் இன்னொரு அதிகார வர்க்கத்தை விழுங்கும் போது, தோற்றவர் பக்கம் இருந்த அப்பாவி வர்க்கம் நிர்மூலமாக்கப்படும், அப்போது கூட தோற்ற அதிகார வர்க்கம் தம் சுயத்தை மட்டும் காத்துக் கொள்ளுமே தவிர, தனக்காய் ஒட்டுண்ணியாய் கிடந்த அப்பாவி வர்க்கத்தை நட்டாற்றில் விட்டு மறையும். தப்பித்தோர் வாழ இடம் தேடி அலைவர், வக்கற்றோர் அல்லல்ப்பட்டு வாழ்ந்து மடிவர். :(((

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்..
படிக்க படிக்க
கல்மரத்திலும் ஊடுருவும் ஆணி போல
பதிகிறது சம்பவங்களும் .. நிகழ்வுகளும்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...! தொடர்கிறேன்...

செங்கோவி said...

//பிரபல்யமான சினிமா நடிகை திருமணம் முடித்தவுடன் சினிமா வாழ்வு தொலைவது போல !//

சோகத்திலும் ஒரு குறும்பு!!

Unknown said...

திருப்பங்களுடனும்,வேதனை கலந்தும் .......................தொடருங்கள்!