27 August 2013

என் உயிரே என்னுள் இருந்து விலகும் நொடி-29

ஒரு இரவில் நடக்கும் சந்திப்புக்களும் ,ஆலோசனைக் கூட்டங்களும் .திடீர் மாற்றங்களை சிலரின் வாழ்வில் மாற்றிவிடும் என்பது சோழப்பேர் அரசன் குடந்தையூர் அரண்மனையில் நடந்த ஆதித்தசோழனின் மரணம் வரலாறாக இருப்பது போலத்தான் ! 

நாமலை  அறிமுகம் செய்துவைத்த ராகுல் அவனுடன் தாய்லாந்து போக வைத்தது. அவன் சகோதரன் என்ற பெயரில் அதுவும் அவனிடமே கடவுச்சீட்டை கொடுத்து ஓட்டியாக குடியகழ்வைவிட்டு வெளியேறி .

இலங்கையில் இருந்து தாய்லாந்து அனுப்பியதும் அதன் பின் அங்கிருந்து இன்னொரு ஐரோப்பியநாட்டுக்கு அகதியாகப்போவதுக்கு அவன் செய்த உதவி என்றும் மறவாது கல்வெட்டுப்போல 

. அன்று ராகுல் அப்படி எல்லாம் என் வாழ்க்கையை மாற்றி இருக்காவிட்டால் என் வாழ்க்கையும் நீதிமன்றமும் ,பாதுகாப்பு விசாரிப்பு , சிறைவைப்பு , என்று சீரழிந்து இருக்கும் . ஏதோ கெட்டதிலும் நல்லது போல நானும் பிரெஞ்சு நாட்டில் வந்த பின் அகதி அந்தஸ்த்து கிடைத்த பின் தான் மீண்டும் போரில் தோல்வி கண்ட போர் வீரன் மறுபடியும் போரில் வெற்றிவாகை சூடியது போல பாபுவுடனும் ,மிரூனாவுடனும் தொடர்பை எற்படுத்தியது.


. நான் காதலிக்கின்றேனா ?இல்லையா ?என்பதைக்கூட அறிந்துகொள்ளமுடியாத துரதிஸ்ரவசம் ஐராங்கனிக்கு .

நிர்வாக மேற்பார்வையாளர் என்ற வேலை பதவிகிடைத்து அவள் அரபுலகம் போனபின் நான் சிறையில் விசாரணை என்ற பெயரில் தொலைந்தேனா ?இல்லை இருக்கின்றேனா ?என சிலகாலம் நினைத்து இருப்பாள் ! 


ஐராங்கனிக்கு நல்ல எதிர்காலம் கிடைக்கவேண்டும் என்றால் நீ ஒரு தொடர்பையும் இனிப்பேனாத சேகர் என்ற ராகுலின் வார்த்தையை தட்டமுடியாது. எனக்காக அவன் செலவு செய்த பணம் அதிகம் .அதுதான் அவளின் நட்பை துறந்தது இல்லை இன்றுவரை .


 ஐராங்கனி எனக்கு பலரைப்போல ஒரு நண்பி என்பதில் மாற்றுக்கருத்தை இன்றுவரை என் மனமும் சரி .மூளையும் சரி மறுதலிக்கவில்லை! 


ராகுல் மரம்போல வந்து எனக்கு நிழல்தந்தவன் .



நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்பது போல அவனின் நல்ல நட்பு ,மச்சான் என்ற உறவு எல்லாம் என்னையும் திருத்தி இருக்கு . இன்னும் நான் திருந்த வேண்டும் அதுக்குள் இந்த மிரூனாவின் வாழ்வில் ஒரு நிலைமாற்றம் வரவேண்டும் .அதனால் தான் ஐராங்கனி மீண்டும் தாயகம் வந்து மேலும் சிலகாலம் தன் ஒப்பந்தத்தை அதிகரித்து சென்ற நிலையில் நம்பிக்கையான தோழி மிரூனா அவளிடம் என் புலம்பெயர் நிலைபற்றி ஒன்றும் இன்றுவரை பேசியதில்லை .


 அண்ணா என்ற உறவா ?நண்பி என்ற நிலையா ?என இருதலைக்கொல்லி நிலை மிரூனாக்கு என்பது நான் அறியாதது அல்ல .என்று மிரூனா நம் முதல் சந்திப்பு நினைவிருக்கா அண்ணா என்ற கேள்விக்கு சத்ரியன் படத்தில் நினைவு திரும்பிய ஹீரோயினி போல சேகரும் நிஜ உலகிற்கு வந்தான்! 


சரி மிரூனா கடந்தகாலம் இருக்கட்டும் இப்ப உன் கோபத்துக்கு என்ன காரணம் சொல்லு ?
 அவர் முன்னர் போல இல்லை அண்ணா !

அதிகம் கோபப்படுகின்றார் .செய்யும் வேலையில் ஒழுங்கில்லையாம் .அவரின் நிலைமாற்றம் பற்றி பாபுவின் நண்பர்களே என்னிடம் சொல்லுகின்றார்கள் .

 இந்த வாரம் வத்தளையில் ஒரு பார்ட்டிக்கு போய் இருந்தோம் பார்ட்டி முடிந்து வெளியில் வரும்போது ரொம்ப மோசமான வார்த்தைகள் பேசிட்டார் என் நண்பியிடம் சரியான அவமானமாகிப்போச்சு எனக்கு.

 நாம் ஒன்று சேர்ந்து வாழ்ந்து கஸ்ர்ப்படுவதைவிட தனிப்பாதையாக பிரிந்தே போய்விடலாம் ஒரு வழிப்பாதை போல சேகர் அண்ணா .

எனக்கு என் தாதித்தொழில் போதும் என்னால் காலம் பூராகவும் சேவை செய்து கொண்டே எங்க அப்பா ,பாட்டியோடு மலையக மண்ணுக்கு ஒளிகொடுத்துக்கொண்டே வாழ்ந்துவிடுவேன்.! எனக்கு மனதைரியத்தை இந்த கொழும்பு நகரப்படிப்பும் ,உங்களின் பாசமும், கடமை என்ற குடும்ப ஆலமரத்துக்கு முன்னால் காதல் ஒரு வாழை மரம் என்று எப்போதும் உங்களைப்போல உதவிக்கு வரும் இன்னொரு ராகுல் அண்ணாவின் அன்பும் எனக்கு போதும் அண்ணா?

 சும்மா சும்மா கைபேசி அழைப்பு எடுத்து கஸ்ரம் கொடுத்து மனதில் வன்மத்தை வரவைக்கவேண்டாம் என்று பாபுவிடம் சொல்லிவிடுங்க .

 என்னைப் பொறுத்தவரை இனி பாபு ஒரு கலங்கரை விளக்கமாக இருக்க முடியாது நங்கூரம் இழந்த படகுதான் அவர் அண்ணா!

 மிரூனா கோபத்தில் வார்த்தைகளை ஆற்றில் தவறிவிழும் ஆபரணம் போல ஆக்கிவிடாத வாத்தையின் பெறுமதி அதிகம் புரிஞ்சுக்க. 

பாபு நிச்சயம் ஏதோ மன உளைச்சலில் இருக்கின்றான் என்றுமட்டும் புரிகின்றது. அவன் என்னிடம் செத்திடலாம் என்று சொல்லும் அளவுக்கு குழம்பிய குட்டை போல இருப்பதுக்கு காரணம் காதல் என்றால் ?

அந்த குட்டையில் பாபுவை தள்ளிவிட்ட நானே அவனை அந்த ஆற்றில் இருந்து அகற்றிவிடுவேன் . 

அதன் பின் "என்னோடு வா என்று சொல்லமாட்டேன் உன்னைவிட்டு வேறு எங்கும் போகமாட்டேன் என்று நீயே சொல்லவைக்காத "


 சேகருக்கு கோபம் வந்தாள் காதலுக்கு சாமரமும் வீசுவேன் ,சாட்டையும் வீசுவேன் இப்ப நான் அடுத்த வேலைக்கு போகணும் அப்புறம் பேசுறன் மிரூனா... 


தொடரும்!


10 comments :

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

உண்மையே நேசன்..
மலையாகவும் சிறு மடுவாகவும்
இருந்து நம்மை ஏற்றிவிடும் உறவுகள் ஏராளம்..
சுயம் என்பது யாருக்குத்தான் இல்லை...
அதீத சுயம் கொண்ட சிலரை விட்டுத்தள்ளுவோம்..
ஏற்றிவிடும் ஏணிகளை என்றும்
மனதில் கொள்ளுவோம்...

K said...

இந்த தொடரின் தொடக்க அத்தியாயஙளைப் படிக்க வேண்டும் நேசன் அண்ணா டைம் கெடைக்கும் போது படிக்கிறேன் அண்ணா!

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் ஐயா

Unknown said...

என்னத்தச் சொல்ல ?காதல்.............பட்ட அனுபவங்கள்.........தொடரட்டும்!

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்ன் அழகிய தொடருக்கேற்ற பாடல்..

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...

உண்மையே நேசன்..
மலையாகவும் சிறு மடுவாகவும்
இருந்து நம்மை ஏற்றிவிடும் உறவுகள் ஏராளம்..
சுயம் என்பது யாருக்குத்தான் இல்லை...
அதீத சுயம் கொண்ட சிலரை விட்டுத்தள்ளுவோம்..
ஏற்றிவிடும் ஏணிகளை என்றும்
மனதில் கொள்ளுவோம்...//வாங்க மகி அண்ணாச்சி முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் வருகைக்கும் நிறைவான கருத்துரைக்கும் நன்றி.

தனிமரம் said...

இந்த தொடரின் தொடக்க அத்தியாயஙளைப் படிக்க வேண்டும் நேசன் அண்ணா டைம் கெடைக்கும் போது படிக்கிறேன் அண்ணா!//நேரம் கிடைக்கும் போது படியுங்கோ ரஜீவன் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடர்கிறேன் ஐயா

27 August 2013 20:24 Delete//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

என்னத்தச் சொல்ல ?காதல்.............பட்ட அனுபவங்கள்.........தொடரட்டும்!

27 August 2013 23:06 Delete//ஏன்ன்ன்.. இப்படி யோகா ஐயா!ஹீ நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஐயா.

தனிமரம் said...

என்னோடு வாவா என்று சொல்லமாட்டேன்ன் அழகிய தொடருக்கேற்ற பாடல்..

28 August 2013 02:36 Delete//நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.