02 February 2014

அசலும் நகலும் தொடர்-1

இசைக்கு மட்டும் தான் இனம், மதம், மொழிகடந்து  எல்லோரையும் ஈர்க்கும் சக்தி இருக்கின்றது என்றால் இருபேச்சுக்கு இடம்மில்லை .

ஒரு மொழியில் பிடித்த இசையை இன்னொருவர் மொழிக்கு ஊடுகடத்தும் போது அது காப்பி /பிரதி /நகல்  விமர்சிக்கப்பாட்டாலும்  இந்த இசை இந்த மொழியில் அசலும் நகலும் என இனம் காட்டும் போது இரு மொழிப்பாடலும் இசை விரும்பிகளினால் ரசிக்கப்படுகின்றன  பலநேரத்தில்.

 மூல இசையை விட பிரதி இசை முணுமுணுப்பில்  உச்சம் காணும் நிலையை 80 /90 இல் இசைஞானியின் இசைகள் எவ்வளவு மற்ற மொழிகளில் தாக்கம் செலுத்தியது என்று எழுத வெளிக்கிட்டால் ஒரு நீண்ட தொடர் எழுத முடியும்.


 .ராஜாவின் இசை மற்ற மொழி ரசிகர்களிடம் !எந்தளவு விரவி இருந்தது என்பதுக்கு இலங்கையின் சிங்கள  இசைப்பிரியர்களிடம் இன்னும் சில இசைத்தொகுப்புக்கள் இன்றும் உயிர்வாழ்கின்றது .


இலங்கையின் சிங்கள் இசைப்பரப்பில்  90 ஆரம்பத்தில் பட்டி தொட்டி எங்கும் பிரபலயமான ஒரு  பெயர் நிரோஷா விராஜினி  . 90 இன் காலத்தில்  ஒவ்வொரு  இசைக்குழுவின் இசைமேடைகளிலும் ஒவ்வொரு பாடகர் ,பாடகிகள் முன்னனியில் இருப்பார்கள் .இந்த  80/90 இல் மேடைக்கலைஞர்களின் !தோற்றமும் மறைவும் இன்று சின்னத்திரையின் வரவினால் முகம் தொலைந்தாலும்!


இன்னும் பலர் ஞாபகத்தில் இசைப்பேழைகளில் இவர்களின் குரல் மூலம் உயிர்வாழ்கின்றது .

அந்த வகையில் நிரோஷா விராஜினியின் குரல் இலங்கை இசைமேடை  எங்கும் சந்திரிக்கா அம்மையாரின் அரசியல் வரவில் (  துள்ளிச்சிறகடிக்கும் வெண்புறாவே  )பாடலின் மூலம் மும்மொழியிலும்  இசை ரசிகர்களிடம் பட்டிதொட்டி எங்கும் பிரபலயம் ஆனவர் .

நிரோஷா விராஜினி பல ஒலிப்பேழைகளையும் வெளீடு செய்து வரும் ஒரு பாடகி .

இசைப்பயணம் என்ற படத்தில் உதயா இசையில் உன்னிகிருஸ்னனுடன் சேர்ந்து பாடிய தமிழ்  பாடல் இலங்கை பண்பலை வானொலியில் சக்கை போடு போட்டது.இவரின் கவி ஆளுமையும் ,மொழியறிவும் பல ரசிகர்களையும் இவர்பால் திரும்ப வைத்தது இன்னொரு சிறப்பம்சம்

 மெல்லத்திறந்த கதவு படத்தில் இடம்பெற்ற அசல் பாடல் இது .


இதன் நகல்  சிங்களத்தில் 93 இன் பிற்காலத்தில் (ஹித்த ஹாண்ட-இதயம் அழுகின்றது)

ஒலிப்பேழையாக நிரோஷாவின் புகைப்படத்தோடு வெளியாகி இருந்தது .


சகோதரமொழிப்பாடல்கள்  விருப்பத்தேர்வில் எனக்கு அதிகம் பிடித்தது இந்தப்பாடல் .இனவாத யுத்ததில்  இந்த ஒலிப்பேழை என் கையில் இருந்து தொலைந்து விட்டது  என்றாலும். இன்று மீள்கலவையாக ஒலி/ஒளியாக  யூட்டியூப் தளத்தில் மீண்டும் ரசிக்கும் போது நிரோஷா விராஜினி ஆண்டி ஹான்சிகா போல இருப்பது என்ன சொல்ல!))))))))))))))))

நகல் இதோ.

22 comments :

S.டினேஷ்சாந்த் said...

இரவு வேளைகளில் ராஜாவின் பாடல்கள் தரும் சுகத்தை வேறெதுவும் தரமுடியாது.பதிவில் சில இடங்களில் அமைப்புப் பிழைகள் காணப்படுகின்றன.நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.அவற்றை ஒருமுறை சரி பார்த்து திருத்திக் கொண்டால் பதிவு இன்னும் சிறப்பாக இருக்கும்.

Seeni said...

Neenda idaivelikku pin paartha santhosm ...!
Vaanga Sako

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

நீங்கள் சொல்வது உண்மைதான்... இப்படியான பாடல்கள் இரவில் தூங்கவைக்கும் பாடல்கள் சிறப்பாக பகிர்ந்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
த.ம 2வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெற்றிவேல் said...

நீண்ட நாள்களுக்கு பின் தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா...

இசை மட்டுமே இனம், மொழி கடந்து ஊடுருவும் ஆற்றல் வாய்ந்தது என்பதை கூறும் நல்ல பதிவு...

வாய்ப்பு கிடைக்கும் போது நிரோஷா அவர்கள் பாடிய பாடலை கேட்டு விட வேணும்...

தொடருங்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமையான பாடல்...

அசல், நகல் - காணொளி களுக்கு நன்றி...

MANO நாஞ்சில் மனோ said...

திரையுலக பாடல்களை இரண்டாக பிரித்தால் இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்கு பின் என்றுதான் பிரிக்கவேண்டும், அம்புட்டு உயிர்ப்பு அவர் இசையில்...!

Unknown said...

அசலும் நகலும் நன்று!அந்தக் காலத்தில்,இல்லை இல்லை,இந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும்,ராஜா வின் பாடல்களுக்கு இணையாக எதுவும் வந்து விடாது!மொழி என்ன மொழி?

அம்பாளடியாள் said...

சிறப்பான பாடற் பகிர்வு .வாழ்த்துக்கள் சகோதரா .

மகிழ்நிறை said...

ராஜா ராஜா தான் !
நிரோஷா அட்டகாசமான voice.
ஆனால் ஆல்பம் ஸ்டைலில் அவர்கள் நடித்திருப்பது !??@@@@@@@@@
வேறென்ன சொல்ல !!
இனிமையா பதிவோடு மீண்டும் வருகை நலம் சேர்க்கட்டும் சகோ!

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் பதிவு...
இசையின் மகத்துவம் கூறும் முகப்புடன்
இன்முகம் காட்டி வரவேற்கிறது...
இன்சுரங்கள் ஒலிக்கட்டும் உங்கள் பதிவில்..
வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

இரவு வேளைகளில் ராஜாவின் பாடல்கள் தரும் சுகத்தை வேறெதுவும் தரமுடியாது.பதிவில் சில இடங்களில் அமைப்புப் பிழைகள் காணப்படுகின்றன.நீங்கள் சரியாக கவனிக்கவில்லை என்று நினைக்கிறேன்.அவற்றை ஒருமுறை சரி பார்த்து திருத்திக் கொண்டால் பதிவு இன்னும் சிறப்பாக இருக்கும்.//வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி டினேஸ்சாந்த்.

தனிமரம் said...

Neenda idaivelikku pin paartha santhosm ...!
Vaanga Sako//நன்றி அன்பான வரவேற்ப்புக்கு சீனி !

தனிமரம் said...

நீங்கள் சொல்வது உண்மைதான்... இப்படியான பாடல்கள் இரவில் தூங்கவைக்கும் பாடல்கள் சிறப்பாக பகிர்ந்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும் வாக்குக்கும்

தனிமரம் said...

நீண்ட நாள்களுக்கு பின் தங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அண்ணா...

இசை மட்டுமே இனம், மொழி கடந்து ஊடுருவும் ஆற்றல் வாய்ந்தது என்பதை கூறும் நல்ல பதிவு...

வாய்ப்பு கிடைக்கும் போது நிரோஷா அவர்கள் பாடிய பாடலை கேட்டு விட வேணும்...

தொடருங்கள்...//நன்றி வெற்றிவேல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இனிமையான பாடல்...

அசல், நகல் - காணொளி களுக்கு நன்றி...

2 February 2014 18:13//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

திரையுலக பாடல்களை இரண்டாக பிரித்தால் இளையராஜாவுக்கு முன் இளையராஜாவுக்கு பின் என்றுதான் பிரிக்கவேண்டும், அம்புட்டு உயிர்ப்பு அவர் இசையில்...!//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

அசலும் நகலும் நன்று!அந்தக் காலத்தில்,இல்லை இல்லை,இந்தக் காலத்திலும் எந்தக் காலத்திலும்,ராஜா வின் பாடல்களுக்கு இணையாக எதுவும் வந்து விடாது!மொழி என்ன மொழி?

3 February 2014 03:30//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

சிறப்பான பாடற் பகிர்வு .வாழ்த்துக்கள் சகோதரா .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ராஜா ராஜா தான் !
நிரோஷா அட்டகாசமான voice.
ஆனால் ஆல்பம் ஸ்டைலில் அவர்கள் நடித்திருப்பது !??@@@@@@@@@
வேறென்ன சொல்ல !!
இனிமையா பதிவோடு மீண்டும் வருகை நலம் சேர்க்கட்டும் சகோ!

3 February 2014 16:58//நன்றி மைதிலி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

ராஜா ராஜா தான் !
நிரோஷா அட்டகாசமான voice.
ஆனால் ஆல்பம் ஸ்டைலில் அவர்கள் நடித்திருப்பது !??@@@@@@@@@
வேறென்ன சொல்ல !!
இனிமையா பதிவோடு மீண்டும் வருகை நலம் சேர்க்கட்டும் சகோ!

3 February 2014 16:58//நன்றி மைதிலி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

இனிய வணக்கம் சகோதரர் நேசன்...
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் பதிவு...
இசையின் மகத்துவம் கூறும் முகப்புடன்
இன்முகம் காட்டி வரவேற்கிறது...
இன்சுரங்கள் ஒலிக்கட்டும் உங்கள் பதிவில்..
வாழ்த்துக்கள்...//நல்ல சுகம் மகி அண்ணா !நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும்.