05 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-22

பிடிவாதங்களும், பிடிமானங்களும் சிலரை சில நேரத்தில் வெற்றியாளனாக்கி அவனை தன் நம்பிக்கையாளன் என்ற மகுடத்தைச் சூட்டுகின்றது.

 சிலரை தோல்வியடைச்செய்து வாழ்வின் விளிம்பு நிலை மனிதனாக்கி வீழ்ந்து கிடக்கச் செய்கின்றது.

. ஐயாவின் பிடிவாதம் என்பதா? இல்லை என் மீதானா கருசனை என்பதா? ஏதோ ஒரு புறவிசைத் தாக்கம் என்னையும் தனித்து இயங்க முடியாத சார்பு நிலையினால் நானும் இந்த கட்டுநாயக்கா ஊடாக நாடு கடந்து புலம் பெயர்ந்து சென்று 13 வருடங்கள் போன நிலையில் இன்று மீண்டும் வந்து இருக்கின்றேன் பாண்டவர் பூமி ராஜ்கிரன் போல!
                     

 13  வருடம் ஒருவனின் இயல்பு வாழ்க்கையில் இழக்கும் ஆசா பாசங்களை யார் அறிவார்?, வெளிநாட்டு வாழ்க்கை உல்லாசம் என்று நினைப்போர் எல்லாம் உண்மை முகம் தெரியும் போது ஏன் வந்தேன் இந்த நாட்டுக்கு என்று மருகும் நிலை எல்லாம் மானிடம் போற்றாது !


யுத்த மோகத்திலும்; திட்டமில்லாத பொருளாதார் கொள்கைச் சீர்குலைவும் ,போட்டி அரசியலும் ,புத்தனின் பெயரில் போலி மதவாதமும்; இந்த தேசத்ததை தோல்வியடைந்த பொருளாதார நாடாக்கிய நிலையை இன்னும் உணராத மக்கள் சேவையாளர்களும்.

 இன்னும் இன்னும் மக்களைச் சுரண்டிக்கொண்டு இருக்கும் நிலையில்!

 இந்த நாட்டின் மனித வளங்கள் எல்லாம் ஐரோப்பா, அரபுலகம் என்று விழலுக்கு இறைத்த நீர் போலத்தான்! 


!முன்னர் பார்த்த கட்டுநாயக்காவுக்கும் இன்றைய விமான நிலையத்துக்கும் ஏத்தனை மாற்றங்கள். பாதுகாப்பு வேலிகள் என்ற போர்வையில் முன்னர் எத்தனை துன்பங்கள்

. உள்நுழைய பணம் கொட்டினால் பாதுகாப்பு வேலிகள் கூட பாதை காட்டும் போய்ப்பார்க்க!

. கட்டுநாயக்காவில் இருந்து கண்டி போய் அங்கிருந்து பதுளை போவதுதான் விரைவாக போகும் வழிமுறை .


ஈசன் வீட்டில் என்னை நீண்ட காலத்தின் பின் நேரில் பார்க்கும் போது  சந்தோஸப்படுவார்கள் !

ஜீவனி முன்னல் போய் நிற்கும் அந்த தருணம் எப்படி இருக்கும்? 
                          
என் வீட்டாருக்கே நான் இலங்கை வந்து இருப்பது தெரியாது தேர்தல் நேரத்தில் மட்டும் சொந்த ஊர் வரும் உள்துறை அமைச்சர் போல ! 

எனக்கும் ஐயாவுக்கு இடையில் ஜீவனி எப்போதும் ஒரு ஆச்சரியக்குறிதான்..

வன்னியில் இருந்து எல்லா அவலங்களையும் அனுபவிச்சு   வெறுத்துப்  போய் இப்போது வடக்கில் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவுக்கு!

என் கலியாணம் ஒரு கடமை என்றாலும்!

  

   காத்திருக்கும் என் நிலையை !உணர்வுகளை புரிந்து கொள்ளமுடியாது.


 வெளிநாட்டு வாழ்க்கைமுறை பலதைச் சுயமாக முடிவு எடுக்கும் வலிமையைத் தந்து இருக்கு!// 

தொடரும். 

10 comments :

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

சொல்லிய செய்திகள் நெஞ்சத்தைச் சுட்டெரிக்க!
துள்ளி விழுந்தேன் துவண்டு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவு மட்டுமல்ல... எதையும் தாங்கும் இதயத்தையும்...

கரந்தை ஜெயக்குமார் said...

சுயமாக முடிவெடுக்கும் தன்மையே ஒருவரின் உயர்வுக்குக் காரணமாய் அமைபும்
உயர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே

Unknown said...

நன்றாகப் போகிறது.வெளி நாட்டு வாழ்க்கை..............ஹூம்....!

அம்பாளடியாள் said...

வாழ்த்துக்கள் சகோ .

தனிமரம் said...

வணக்கம்!

சொல்லிய செய்திகள் நெஞ்சத்தைச் சுட்டெரிக்க!
துள்ளி விழுந்தேன் துவண்டு!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
//நன்றி கவிவேந்தே முதல் வருகைக்கும் கவிபாராட்டுக்கும்!முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி அருந்தி ஆறுதல் பெறுக!

தனிமரம் said...

முடிவு மட்டுமல்ல... எதையும் தாங்கும் இதயத்தையும்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

சுயமாக முடிவெடுக்கும் தன்மையே ஒருவரின் உயர்வுக்குக் காரணமாய் அமைபும்
உயர்ந்து சிறக்க வாழ்த்துக்கள் நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றாகப் போகிறது.வெளி நாட்டு வாழ்க்கை..............ஹூம்....!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

வாழ்த்துக்கள் சகோ .//நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் வாழ்த்துக்கும்!