12 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்..-26

இரு இனங்கள் ,இரு மதங்கள், இருமொழிகள் ,பேசும் தேசங்களில் எல்லாம் இதயம் இடம் மாறி என் நெஞ்சில் தூங்கவா என்று!

 அமைதியாக சுதந்திர இனிய ராகம் அமைதியாக மீட்டும் போது இரு மொழிகள் பேசும் இந்த தேசம்!



 இன்று இடுகாடு போல் இப்படி இருக்க யார் காரணம் ?,

இருமொழிக்கொள்கைக்கு தீ வைத்தவர்களா?,


 இனவாதம் என்ற கோஷாமா?, இல்லை இதை வளர்த்து இலாபம் கண்ட இந்த தேசவாதிகளும், இன்னும் மகுடி ஊதிய இன்னொரு வல்லூருகளும் ,சர்வதேச சத்துருக்களா??

 சத்தியமாக மக்களுக்காக சேவை என்று இடதுசாரி கட்டியவர்களும், சந்தேகம் வேண்டாம் நல்லதே நடக்கும்  என்று சால்வை போர்த்த சந்தர்ப்பவாதிகளும் என்று சாப்பைக்கட்டு கட்டுவதில்!

 சத்தியசோதனை போல சத்தியம் இல்லை !!!!

சாமதானம் ,சந்ததி ,சுகவாழ்வு, சுபீட்சம், என்று சிந்திக்காத இந்த தேசத்து இனவாத மக்களும் தான் இந்த நிலைக்கு இன்றுவரையும் காரணம்!!!



 இந்த யுத்தம் வேண்டாம் என்று வீதியில் இறங்கி! இந்த நாடு நம் நாடு என்றும் சேர்ந்தே இருப்போம்!!

 என்று மனித சங்கிலியாக மக்கள் படையாக மலையகவீதி தொடங்கி. மாத்தளையில் இருந்து காலி தொடக்கம் .கண்டி என்றும்!

 எங்கும் மடைதிறந்த நதிபோல இலங்கையின் பாராளமன்ற கோட்டைநோக்கியோ!

 இல்லை இந்த நாட்டு முதல் குடிமகன்/ள் வாசலத்தளம் வரை வரவில்லையே?,




" வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிப்போனேன்" என்று பாடிய கவிஞன் போல யுத்தம் ,மனிதப்படுகொலை பற்றி வாடினேன் என்று ஒரு இலங்கைப் படைப்பாளியும்  எதிர் போர் முர்சு கொட்டினானா ??!


கவிஞன் என்றால் மெல்லிய இதயம் கொண்டவன் என்று மேடையில் பேசும் வேடதாரிகள் எல்லாம்!

 வாணம் பாடி முகாம் கவிஞர்கள் வதைமுகாம் இனச்சுத்திகரிப்பு எல்லாம் இன்று எழுத வேண்டும் என்று தொப்புள்கொடி தேசத்தவர்கள் மீது சிற்றிதலில் மூக்குச்சிந்துதலும், கல்லெறிதல் ,செய்யும் இலங்கைச்சிற்பிக்கள் எல்லாம் இந்த  அவலத்தை நினைத்து§

 முதலில்  ,கொழும்பில்.கண்டியில்.  கிழக்கில்,  யாழில், கம்பன் கழகத்தில்  என்று எல்லாம் என்ன செய்தார்கள் ??, 

இனி யுத்தம் நிறுத்தும்வரை நான் பாடமாட்டேன் என்று எந்த அறச்சீற்றமும் வந்து எந்த பாவிலும் பாடவில்லையே ? 

நூல் வெளியீட்டில் 1001 ரூபாய் அன்பளிப்பு செய்து பொன்னாடைகள் போர்க்கும் பன்னாடைகள் எல்லாம் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டு!

 இன்று பதவிக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதும் ஒரு பதவி வியாபாரம் அன்றி வேற இல்லை!!

 நல்லதை எழுத வேண்டியவர்கள் எல்லாம் நடிகையின் சலசலப்பை கிசுகுசு என்று கில்லாடி இலாபம் பார்த்துவிட்டு ;

இப்ப வன்முறைவாதம் தோற்றது என்று  கிழிக்கும் ஊடகவாதிகள் எல்லாம் நெஞ்சுக்கு நீதி என்று மேதகமை பேசுது நிஜாயமோ ??


மதத்தலைவர்கள் கூட்டமைப்புக்கள் ,பொதுச்சேவை மன்றங்கள், பல்கலைமாணவர் பேரமைப்பு ,தொழில்ச்சங்கங்கள், தொழிலாளர் அமைப்புக்கள், நிறுவாகசேவைகள் மன்றங்கள் நிறுவனங்கள் எல்லாம் நித்திரை கொண்டார்களா ???


எல்லாத்தையும் புலம்பெயர் தேசத்திடம் கையளித்துவிட்டு கையேந்தும்§


 இந்தநாட்டு மக்களும் என்றாவது சிந்திப்பார்களா??

 இந்த இனவாதம் ,மதவாதம், மொழிவாதம் நம் குடும்பத்திலும் குண்டு வைக்கும் என்று சொல்லுடா பரதா??


 என்ன பாவம் செய்தால் என் தங்கை ஒரு ஆமிக்காரணை மணந்தது தவறா?? 


இல்லை வேலைகிடைக்காத நிலையில் வருமானத்துக்கு தொழில் போல போலி  ஊடகப்பிரச்சாரத்தின் உண்மை புரியாமல் இராணுவத்துக்கு போன சந்திரா சோமவம்ஷ சிங்கள அடித்தட்டு வம்சத்தவன் நிலை தவறா ?? 

எது நீதி??

 ஒன்றும் அறியாது 4 மாத இல்லறத்தின் வாழ்வின் பயனாக ஒரு குழந்தையை கருவில் சுமக்கும் என் தங்கை வாழ்வுக்கு யார் பொறுப்புக் கூறுவார்கள்??

 இந்த நாடும் நாட்டு முதல்க்குடிமகனும் நாசமாகப் போகவேண்டும்!

 நம் சாபம் வெறும் கவிதைகள் அல்ல கண்ணீர் ! 

அமைதியாகு மச்சான்! உனக்கு ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தையில்லை!!

 இந்த  நாட்டின் ஈழம்  மற்றும் இலங்கை  இரண்டு பக்ததின் இழப்பையும் இரு கண்களின் ஊடே பார்த்தவன்!!

ஊமையாக அழுகின்றேன் இந்த நாட்டில் பிறந்த பூர்வீக குடிமகனாக!!!!



தொடர்ந்து தவிக்கின்றேன்...................! 

5 comments :

Anonymous said...

வணக்கம்

உண்மை நிலவரத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ஆறுதல் சொல்ல யாரிடமும் வார்த்தைகளில்லை...

தனிமரம் said...

வணக்கம்

உண்மை நிலவரத்தை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//நன்றி ரூபன் வருகைக்கும் கருத்துரைக்கும் முதல்வருகைக்கு ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ பரிசாக!

தனிமரம் said...

ஆறுதல் சொல்ல யாரிடமும் வார்த்தைகளில்லை...//ம்ம் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

வேதனை நிறைந்த வாழ்க்கை, கை கொடுக்க தெம்பில்லாமல் வலுவிழந்து நிற்கும் நாங்கள் !