19 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-29

எதிர்பாராத நேரத்தில் முன் தோன்றி என் நண்பன் இவன் என்று அவன்தோளில்  கைபோடும்போது நட்புக்குள் வரும் சந்தோஸமும், சங்கடமும் வார்த்தைகளினால் விபரிக்கமுடியாத உணர்ச்சிப்பெருக்கு புன்னகைதேசம் தருன் போல ! 

என்ன ஒரு திடீர்திருப்பம் பரதன்? உன்னை இங்கு எதிர்பார்க்கவில்லை!
 ஒரு வார்த்தையும்  தொலைபேசி/ ஸ்கைப்பில்  ஏதும் பேசலையே ?,

நண்பா வா வா முதலில் வீட்டுக்குள் என்று ஈசன் அழைகவும்!

, அவன் தாய் செல்லம்மா என் கண்களை நம்பமுடியுது இல்லை! என்ன தம்பி ?இப்படியா திடீர் என்று ?ஒரு கடதாசியோ ,ஒரு அழைப்பிலோ ஒரு வார்த்தை வருவதாக் சொல்லி இருந்தால் உங்களை வரவேற்க விமான நிலையம் வந்து இருப்போம் நாம்.

 சொல்லாமல் வருவதுதானே உண்மையான உறவுக்கு அழகு அம்மா !இருந்து பேசுங்க ஒரு தேனீர் போடுகின்றேன் என்று அடுப்படிப்பக்கம் செல்லமா உள்நுழைய.

 அம்மா ஒரு கோப்பை தேனீரும் ஒரு கூடைத்தேசமும் போலவா ??இன்னும் கவிதை படிக்கின்றீயோ பரதா ?

நீ விட்டுப்போன கவிதைத்தொகுதி இன்னும் என்னிடம் இருக்கு
! ம்ம்!!

 அப்புறம் சொல்லு பரதா என்னடா ஒரு விசயமும் சொல்லாமல் கொள்லாமல் இப்படி குசேலன் பட ரஜனிபோல வந்து இருக்கின்றாய்? 

இல்லை ஈசன் 10 நாளில் தாய்நாட்டை மீண்டும்  பார்த்துப் போவம் என்ற ஆசைதான். அது புலம்பெய்ர்ந்த  ஈழ்த்து பிறப்பு  பலருக்கு இருக்கும் தீராத ஆசை அல்லது ஏக்கம் இது  எல்லாருக்கும் கிடைக்காத வரம்  அது தனிக்க்தை மச்சான் அது எழுதியோ! சொல்லியோ!! புரியாது பலருக்கு அயல்நாட்டு வெளியுறவுக்கொள்கை போல

!ம்ம் ஆனாலும் விதிவிலக்காக எனக்கு இங்கு வர சந்தர்ப்பம்  கிடைச்சு இருக்கு!



 . ஆமா எங்க அப்பா?

 அப்பா  கொழும்பு போய் இருக்கின்றார் ஒரு வேலையாக

 ! இந்தாங்க தம்பி இதையும் சாப்பிட்டுப்பாருங்க .

 எனக்கு தொதல் இன்னும் பிடிக்கும் என்று எப்படி அம்மா தெரிஞ்சு வைத்திருக்கின்றீங்க ?

 அதுதான் பாரிசில் இருந்து ஸ்கைப்பில் பேசும் போதெல்லாம் ஞாபகப்படுத்துவீங்களே!

 . ஆமா பரதா உன் அப்பா அம்மா எப்படி இருக்கின்றாங்க? 
நல்லா இருக்கின்றாங்க ஊரில்.

 ஏன் அவங்களை கூட்டியரல ?
 இல்லை நான் இங்க வந்துவிட்டு இனித்தான் ஊர் போவதாக திட்டம் அம்மா .

 முதலில் ஈசனைப் பார்த்துட்டுப்போக ஆசையாக இருந்திச்சு.

 என் இனிய நண்பன் அவன் தானே ! 

அவன் என்னை மறந்தாலும் நான் மறக்கமாட்டேன் ! 

எம்புள்ளை ஈசன் உங்க புராணம் தான் இங்க எப்போதும் சாப்பிடும் போதும்கூட உங்க பள்ளி பிரென்ஸ் யார் வந்தாலும் விகடகவி போல் கதையளக்கும் .

நீ பாரிசில் இருப்பது பற்றி. அதுசரி .

ஏனோ சிலவிடயத்தை மறைச்சிட்டான் ! 



ஓ உங்க நட்புக்குள் சமாதான தூதுவர் போல நான் வரல.

 இருங்க தம்பி சாப்பாடு தயார் செய்கின்றேன் . 

ஆமா எங்க தங்கி இருக்கின்றீங்க ?

உங்க உறவுக்காரங்க எல்லாம் இங்க இருந்த கடைகள் மூடிப்போய் மிச்ச வருசமாகுதே? 

ஆமா காலமாற்றத்துக்கு ஏற்ப தங்களை புதுப்பிக்க முடியாதவங்க ஒரு காலத்தில் பிரபல்யமான சினிமா ஹீரோ போலத்தான்! தங்களின் காலம் முடிய இடத்தைக்காலி செய்ய வேண்டியநிலை.

நான் இங்க வாடிவீட்டுல் தங்கி இருக்கின்றேன் அம்மா .

என் பாரிஸ் நண்பன் இங்கு சுற்றுலா வருவான் அதுனால் முன்னாடியே நான் இங்கு உதவியாக தங்குமிட வசதி செய்து தருவதாக பாரிசில்  ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. சமயத்தின்போது பொய் சொல்வதும் தப்பில்லை என்று வள்ளுவரே சொல்லியிருக்கின்றார் .

என்று மனதில் நினைத்துக்கொண்டான் பரதன்.

.அப்புறன் ஈசன் வா வெளிய போய்ட்டு வருவோம். இப்பவா ?,

அதுதான் தம்பி பரதன் கூப்பிடுகின்றானே? நீ என்ன கங்காணிவேலையா பார்க்கின்றாய் ?,

சத்த வெளிய போய்ட்டுவா என்று ஈசனை அம்மா விரட்டியது பரதனுக்கு தனிமையில் பேச சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது என்று சந்தோஷப் பாட்டாலும்! ஈசனுக்கு இவனின் உள் நோக்கம் அறியாமல் அம்மா என் தலையை அல்லவா நுழைக்கின்றா தேரதலில் தோற்ற கட்சித்தலைவர் நிலையில்.

 என் இப்போதைய  நிலையில் வெளியில் செல்ல முடியாது. ஊடகவியலாளர் கேள்விபோல அல்லவா!

 இவன் இன்று கேள்வி கேட்கப்போறான்! எப்படியும் ஜீவனியை பற்றி விசாரிக்கப்போறான்!

 கடவுளே நீதான் எனக்கும் துணைவரவேண்டும் !
இவன் மீண்டும் ஜீவனி  நீதானே என் பொன் வசந்தமே  என்று பாடாமல் விடணும்!




தொடரும்.....

//கங்காணி- மேற்பார்வை தொழில் .விளக்கம் பரதேசி படம்!
தொதல்- அரிசிமாவுடன் சேர்த்து  தேங்காய்பாலில்  செய்யும் ஒரு பலகாரம்
சத்த-கொஞ்சம் 

9 comments :

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
தங்களின் தொடர்பதிவு நன்றாக உள்ளது... தொடருங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களுடன் அசத்தல்... தொடர வாழ்த்துக்கள்...

Unknown said...

நன்றாக நகர்ந்து செல்கிறது,தொடரட்டும் தொடர்வேன்.(கொஞ்சம் வேலை......முன் போல் தொடர முடிவதில்லை.)

KILLERGEE Devakottai said...

தங்களின் பதிவு நன்றாக இருக்கிறது..

Killergee
www.killergee.blogspot.com

தனிமரம் said...

வணக்கம்
தங்களின் தொடர்பதிவு நன்றாக உள்ளது... தொடருங்கள்...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-//வாங்க ரூபன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதல் பரிசாக! நன்றி முதல் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

படங்களுடன் அசத்தல்... தொடர வாழ்த்துக்கள்//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நன்றாக நகர்ந்து செல்கிறது,தொடரட்டும் தொடர்வேன்.(கொஞ்சம் வேலை......முன் போல் தொடர முடிவதில்லை.)//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தங்களின் பதிவு நன்றாக இருக்கிறது//நன்றி கில்லாடி ரங்கா ஐயா முதல் தனிமரம் வலைக்கு வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...
This comment has been removed by the author.