20 May 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன்...-30

நல்ல நட்புக்குள் வரும் புரிந்துணர்வு என்பது அதியமான் .ஒளவையார் நெல்லிக்கனி போல் அதுபோல யாரைக்காணமுடியும் இன்றைய நவீன உலகில்!

 ஒவ்வொரு நட்புக்குள்ளும் ஏதோ ஒரு எதிர்ப்பார்பு சேர்ந்தே நட்பு என்ற உறவு பயணிகின்றது. என்ன ஈசன் அமைதியாக இருக்கின்றாய்?? இல்லையே!

 காலமாற்றம் உன் முகத்திலும்; நட்பிலும் பல மாறுதல்களைத்தந்து இருக்கு போல!

 பரதன் நீ எதை மனசில் வைத்து பேசுகின்றாய் என்று ஊகிக்க முடிகின்றது.

 ஆமா ஏன் இப்ப ஜீவனியைப்பார்க்கணும் என்ற நினைப்பு உனக்கு இங்கு இருந்து போய் 13 வருடத்தில் ஏன் இப்ப வந்தது??!

 உன்னில் எத்தனை மாற்றம் வந்து இருக்கும் வெளிநாட்டின் வாழ்க்கையில்.

நீ  அன்று பள்ளியில் பார்த்த ஜீவனியின் வாழ்வில் எத்தனை மாற்றம் இன்று 2012 இல்  வந்து இருக்கும் என்று ஏன்  சிந்திக்கவில்லை பரதன்?

 நீ வெளிநாட்டில் வாழ்வதால் இன்று பொருளாதார் ரீதியில் பல சமூகசேவை அமைப்புக்கு சுயதம்பட்டம் கருதி நன்கொடை ,அன்பளிப்பு ,என்று பணத்தை கொடுக்கலாம்.


வாங்குவோர் நீ ஒரு பெரும்புள்ளி விளம்பரப்ப அரசியல்வாதி போல என்று பொதுவாழ்வில் பலர் போல  தப்பாக் நினைக்கலாம்.


 ஆனால் நீ வெளிநாட்டில் படும் கஸ்ரம் சிந்திப்பது இல்லை. ஊழல் பணம் என்று ராசா போல நினைப்பார்கள்.

 உன்னை மட்டுமல்ல உன் போன்ற சமூகநலன் விரும்பிகள் வெளிநாட்டில் இருந்து  அனுப்பும் காசு எல்லாம் தீயவழியில் சேர்த்த பணத்தை தாய் நாட்டுக்கு சமூக உதவி என்று  அனுப்புவுவதும் ஒரு அரசியல் மூதலீடு போல சுவீஸ் வங்கி போல!

 இருக்கும் நாட்டில் மூதலீடு செய்யாமல். பிறநாட்டு நோக்கி  அனுப்பும் பணம்  மக்களுக்கு சேவை என்று    வாழும் நாட்டு அரசுக்கு நிதிபாதீடுட்டு  அறிக்கை போல வருமான வரி கட்டும்முறையில் இருந்து அரசை ஏய்க்கும் வழிமுறை என்று உன் போல பலரிடம் நிதி வாங்கும் அமைப்புக்கள் நினைக்கும் !


ஆனால் உண்மையான் சமூக சேவை அமைப்புக்கு இது தெரிந்து இருந்தாலும்! சுயவிமர்சனம் குறித்த நபர் மீது  தேவையும் இல்லை .

இதுதான் நிஜம் மை பிரென்டு !

 இன்று நீ புலம் பெயர்ந்த பின் முகநூல்,  தனிமடல். இன்னும் டுவீட்டர் என்று சமூகத்தளத்திலும் இயங்கினாலும் .இந்த ஊரில் இன்னும் அடக்குமுறையும், கட்டுப்பாடும் பற்றியும் அறியமாட்டாய்!

 ஒரு பக்கம் எப்படி அவலத்தில் கொத்துக்குண்டில்  உயிர்பிரிந்தது என்று நிதர்சன இயல்பு இங்கு தெரியாத நிலை !

கிரீக்கட் விளையாட்டு போல இல்லை! கிரீக்கட்டும் .தொடர்நாடகமும் ஒருபக்க மக்களை போதைபோல சுயசிந்தனைக்கு மீளாதாவண்ணம் இருக்கும் செயலை கச்சிதமாக ஊடகமும் அரச வால்பிடி ஜால்ரா  அமைப்புக்களும் செய்வது புலம் பெயர்ந்த பின்  நீ நன்கு அறிந்து இருப்பாய்!  


ஆனால் ஜீவனி வாழ்க்கைவிடயம் உனக்கு சொல்லாததுக்கு பலகாரணம் இருக்கு

! முதலில் நீ ஏன் கலியாணம் கட்டவில்லை 32 வயது வந்தும் சொல்லு?? ஏன் ஆன்மீகம் என்று சபரிமலை யாத்திரை உன் நட்புக்களுடன்  போறாய் உருகும் பிரெஞ்சுக்காதலி  உன் நண்பன் வெட்டிப்பயல் உனக்கு முக்கியமா?, இல்லை நான் முக்கியமா??

உங்க ஊரில் உனக்கு கோடியில் சீதனம் ;கொழும்பில் வீடு; யாழில் கடை என்று வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு விலைபேசும் நிலையில் இருந்து நீ ஏன் ஒதுங்கினாய்! செய்வாயா?,  செய்வாயா?, என்று கேட்க இது என்ன தேர்தல் நேரமா மச்சான்?,
!

இன்று உனக்கு உலகத்தில் பலர் முகம் தெரியாமல் நீ பதுளை வந்து இருப்பதும் அறியாமல்; முகநூலில் நிலைத்தகவல் மற்றும் ;கும்மி அடிக்கலாம் மச்சான்!

 ஆனால் என் நண்பன் அமைதியாக நல்லாக வாழவேண்டி நினைப்பது என் மனசு!

அதுதான் ஜீவனி பற்றி இன்று பேசவில்லை இது முகநூல் போல இல்லை எதுவும் பேசலாம் விருப்பு வாக்கு வாங்கலாம் என்பது போல இல்லை .


ஜீவனியும் அவங்க அப்பாவும் முரண்பட்ட நிலை உனக்கு நான் சொல்லவில்லை ஒரு நண்பனாக !

ஆனால் உங்க அப்பா உனக்கு  இன்றுவரை சொன்னாரா ??
இல்லையா என்று நான் அறியேன் நண்பா  அதுதான் பொறுப்பு; எதிர்பார்ப்பு; பாசம் இது உனக்கு புரியுமா??

! நண்பா இப்ப சொல்லு ஒரு வாழவெட்டி ஜீவனிக்கு நீ வாழ்வு கொடுக்க நீ என்ன அவள் வருவாளா அஜீத்தா மச்சான்?,

ஈழத்து  புதுநாவல்   படித்திருப்பாய் சிலநேரம்   ஒரு நாவல் சொல்லும் செத்தவன் பொண்டாட்டியை கட்டினாலும் விட்டவன் பொண்டாட்டியை கட்டுவது தொல்லை என்று இதுதான் ஆணாதிக்கம்!!!


\


இன்னும் தவிக்கின்றேன்......

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

எதிலும் (அதிக) எதிர்ப்பார்ப்பு இருந்தால் சிரமம் தான்...

Unknown said...

ஹூம்.............என்ன செய்ய?போர்(?!)கொடுத்த பரிசு...........சிலருக்கு!

MANO நாஞ்சில் மனோ said...



வலிகளில் வாழ கற்று கொள்ள வேண்டும் நண்பா வேற எண்ணத்தை சொல்ல !

தனிமரம் said...

எதிலும் (அதிக) எதிர்ப்பார்ப்பு இருந்தால் சிரமம் தான்...//வாங்க தனபாலன்சார் முதலில் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் தனபாலன் சார்!

தனிமரம் said...

ஹூம்.............என்ன செய்ய?போர்(?!)கொடுத்த பரிசு...........சிலருக்கு!//ம்ம் நன்றி யோகா ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வலிகளில் வாழ கற்று கொள்ள வேண்டும் நண்பா வேற எண்ணத்தை சொல்ல !//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்!