25 May 2014

கிறுக்கலும் கீதமும் -5

நகத்தின் பூவில் வருடிய வலியை
விட பூவின் வலி
அதிகம் இல்லை!
 நீ பிரெஞ்சு ரோஜா கரம் தந்த வலி
 இன்னும் நெஞ்சில் .
ஆனாலும் 
இன்னும் சிரிக்கின்றேன் !!
காதலி்ல்  ரோஜா அழகுதான் 
உன்னைபோல தூர  ரசிப்பதில்!
  
----------------------------------------------

  புறாவும் புல்வெளியும்
   புடைசூழ்ந்த நிலையில்
   புது ரோஜா போல
   பூத்த நட்பு  இன்று
   புது அரசியலில் புலனாய்வு
   போர்வையில். பிரிந்தாலும்
   புதுக்கடைச்சிறையில் 

   
    
   இன்றும் வாழும் உன் நினைவு.

-----------------------------------
 வடலியில் வெட்டிய குருத்து  போல இல்லை
 என் காதல் மரத்தில் வெட்டிய கதியாள் போல
 இன்னும் வாழுகின்றது.
 நீயோ பறவையாக எந்தக்கூடில்
என் நேசம் இன்னும் மரத்தில்!
 நீயும் பறவையோ??


------------------------------------

என் இதயக்கூட்டில் நீ ஒரு பறவையாக 
என் வாசல் வெளியில் நீ பறந்துவரும்
 காலத்துக்காக பூவோடு காத்து இருக்கின்றேன் 
காதல் வானில் பறவையாக  ஜோடியாக பறக்க!

----------------------------------
ரோஜாவைத்தேடும் காதலன் போல
 நானும் உன்னை வண்டு போல 
சுற்றி வருவது காதலில்  .
நீயும் ஒருகாதல்  பறவையோ?,
 என்றும் பூவுடன் ஒரு மரம்!
 ///           
முன்னம் கீதம்   ரசிக்க -http://www.thanimaram.org/2014/05/4.html-

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

/// என் நேசம் இன்னும் மரத்தில்...
நீயும் பறவையோ...? ///

ரசித்தேன்...

கரந்தை ஜெயக்குமார் said...

ரசித்தேன் நண்பரே

கரந்தை ஜெயக்குமார் said...

தம +1

Unknown said...

நல்ல காதல் கவி வரிகள்.நன்று நேசன்,வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

என் நேசம் இன்னும் மரத்தில்...
நீயும் பறவையோ...? ///

ரசித்தேன்...// வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ கவிதை ரசித்துக்கு பரிசாக! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ரசித்தேன் நண்பரே//நன்றி கரந்தை ஐயா வருகைக்கும் வாக்குக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல காதல் கவி வரிகள்.நன்று நேசன்,வாழ்த்துக்கள்!//நன்றி யோகா ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

Muruganandan M.K. said...

இதயத்தைத் தொடும்
நேச வரிகள்