16 July 2015

முகம் காண ஆசையுடன் -12

http://www.thanimaram.org/2015/05/10.html
http://www.thanimaram.org/2015/07/11.htm//
.....  இனி......





தேர்தல் என்றால் தேரடி வீதியும்
தேடப்படுவோர் வீதியும்
தேடிவரும் தேர்தல் நாயகர்கள்/ளிகள்
தேடாமல் போன தேசத்துக்காய்
தேடுவார் இல்லாத தலைவன் போல
தேங்கிய வதை/சிறை/ கைதிகள் என்று
தேசத்துக்காய் சிறையில் முகம் தொலைந்து
தேடிக்கொண்டு இருக்கும் உறவுகள்நிலை
தேர்தல்தல் வாக்குறுதியில் இன்னும்
தேற்ற வேண்டிய விடயம் எல்லாம் ஏன்?,,
தேவையில்லை என்று வாக்கு அரசியலில்
தேறாமல் போனார்கள்! இன்றைய
தேவடியாள் ஆட்சி என்று  அன்று மேடையில்
தேர்தல் பரப்புரை செய்த
தேர்ந்த வடகிழக்கிழக்கு
தேர்தெடுத்த   பண்டிதர்கள் எல்லாம்!
தேவை அரசின் கொடுப்பணவும்
தேறாத செலவு என்ற பாராளுமன்ற
தேர்வுநிலை கணக்கும் தான்!


தேறமாறமாட்டார்கள்  அரச கதிரையில்
தேயிலைத்தோட்ட அட்டை போல
தேறிய எந்த அரசியல்வாதியும்!


தேவை எனில் தன் கணவனையும் கொண்டவனை
தேடிப்போவாள் ஈழம்  என்ற கோஷம் போட்ட
தேர் போல இலங்கை பாராளுமன்றம் வண்டி ஓட்டிய
தேன் தமிழ் பேசியவன் பொண்டாட்டி!
தேடினாள் கூகிளில்அவள்
தேசிய அரசின்  கடந்த மகளீர்  அமைச்சர்!


தேடிப்பார்த்தாள் ஈழத்து  ஒரு   தமிழச்சியை
தேர்தலில் தோற்ற மகிந்த மாமாவுக்கு மருமகள் என்று
தேடியும் கிடைக்கல வடக்கில் இன்னும் இனியும்
தேவதை போல அசின் என்றும் ஷ்ரோயா என்றும்
தேர்தல் முடிந்தாள்  தெரியும் லீலை[[[[[[[[[[[[[[!


தேசம் கடந்து அவுஸ்ரேலியாவுக்கு
தேசம் இல்லாத தமிழனை
தேவை பல இலட்சம் என்று நட்டநடுக்கடலில்
தேடாமல் விட்ட வரலாறு  எல்லாம்
தோண்டும் காலம் விரைவில் வரும் !!!


தோற்றால் தேர்தலில்  என்று
தேர்ந்த பதிவர் போல தொடரவா ?,,


தேன் மொழி பேசும் வலைப்பதிவாளினி சுமா!
தேடிவந்த நடிகன் பதிவாளர்  அசுரன்
தேறாத பன்னாடை! இன்னும்
தேன் தமிழில் ஒரு பதிவு எழுத!
தேர்தல் காலம் போல என்னிடம்
தேற்ற வந்த விடயம் என்ன,,?,
,தேகத்தில் இல்லை வளு
தேடலில் நான் ஒரு அகதி!
தேடினாள் இல்லை முகநூலில்
தேற்ற ஒரு பாடல்!
தேடி வருவேன் ...
தேவதையை காண என்றும்
தேடுதல் போடுவேன் வெட்டிப்பயல்[[[[[[[[[[[[
..




தொடரும்.....


8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

அருமையான பாடல்...

தேடல் தொடரட்டும்...

balaamagi said...

வணக்கம் தனிமரம்,
இத்துனை தே வா,,,,,,,,,,,,,,
அருமை வாழ்த்துக்கள்,

ஊமைக்கனவுகள் said...

கவிதையின் வேதனை உணர்ந்தேன்.

தொடர்கிறேன்.

த ம 3

Muruganandan M.K. said...

அருமையான கவிதை

Unknown said...

தொடரட்டும் தொடர்வோம்!

Yarlpavanan said...

"தேர்ந்த வடகிழக்கிழக்கு
தேர்தெடுத்த பண்டிதர்கள் எல்லாம்!
தேவை அரசின் கொடுப்பணவும்
தேறாத செலவு என்ற பாராளுமன்ற
தேர்வுநிலை கணக்கும் தான்!" என
தேடியே தேர்தல் காலச் சூழலை
தேடிப் பாரென நன்றே உரைத்தீர்!

தனிமரம் said...

கருத்துரைத்த உறவுகளுக்கு நன்றிகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா

படத்துக்கு அமைவான கவிதை படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்