19 July 2015

முகம் காண ஆசையுடன் -13


முகம் காண முன்னர் இங்கே -http://www.thanimaram.org/2015/07/12.html

இனி...
----------------------
புரியாத புதிர் இனவாத இலங்கை
புலனாய்வுப் படையும்,
புடை சூழ்ந்த இராணுவமும் ,காவல்துறையும்
புனையும்  சதிவலை எல்லாம்
புலிப்பட்டம் கட்டி
புகழ் சிறைபோல பூட்டிய வரலாறு!



புண்பட்ட நெஞ்சமும்
புரட்டிக் கொடுத்த காசும்
புண்ணிய பூமியை அவசரமாக  விட்டு
புறமுதுகிட்ட போர் வீரன் போல அல்ல
புதிய பேரில் கடவுச்சீட்டு வாங்கி
புலம்பெயர் தேசம் வந்த கதை
புணை பெயரில் எழுதலாம்!
புதியபாதை புதிய தொடர் என்று!!
புரட்சியின் பாதையில்
புகழ் பெற்ற வடுக்கள்  எல்லாம்
புதினம் போல  எழுதவேன்.


புதிர் போடாமல்
 புடம் போட்ட தங்கம் போல
புட்டுப்புட்டு வையுங்க தொடர் எழுத
புதுக்கவிதை போல
புரிஞ்சுக்க இலகுவான விடயத்தை!
புதுப்பொண்ணே சுமா!


புகழ்ச்சி அல்ல
புறம்போக்கை  புடைசூழ கலியாணத்துக்கு
புதுப்பத்திரிக்கை அழைப்பு  வைக்காமல்
புதுக்குடித்தனம்  போகும்
புதிய செய்தியும் அறிவேன்! சுமா
புதுமனிதன் போல!
புன்சிரிப்பு அறியாதவன்.
புத்தன் தேச பூசா சிறையில்
புன்னகை சிந்தியவன் .

புதியமுகம் பாரிசில்
புழுகுமூட்டை வியாபாரம்
புண்ணாக்கு விற்பவன் விரைவில்
புதிய முகாம் பூந்தோட்டம்
புணர்வாழ்வின்  புதிய அவலம்
புதுவயல் போல உழவா
புன்முறுவலுடன் !


புதிராவன் நீ நான் அறிவேன் அசுரன்
புகழ்ச்சியல்ல புனைய வேண்டும்
புண்பட்டவர் வரலாறு!

கொஞ்சம்  இருங்க  அழைப்பிள் வருகின்றேன் என்று இடையில் சுமா தொடர்பை துண்டித்தாள் !!

ஏன் என்று புரியாமல் அடுத்த பாடலுக்கு காத்திருந்தான் இணைய   வானொலியில்!

தொடரும்......

பூசா- இலங்கையின் பிரபல்ய சிறைக்கூடம்!

6 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் தோழர்...

Thulasidharan V Thillaiakathu said...

நாங்களும் காத்திருக்கின்றோம்....தொடர்கின்றோம்...நண்பரே!

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்! அந்த காலத்து பாடல்களை எப்படி தேடிப்பிடிக்கிறீர்களோ? வாழ்த்துக்கள்!

சென்னை பித்தன் said...

இடையிடையே பாடல்களுடன்1
காத்திருக்கிறேன்

Athisaya said...

புண்பட்ட நெஞ்சமும்
புரட்டிக் கொடுத்த காசும்
புண்ணிய பூமியை அவசரமாக விட்டு
புறமுதுகிட்ட போர் வீரன் போல அல்ல
புதிய பேரில் கடவுச்சீட்டு வாங்கி
புலம்பெயர் தேசம் வந்த கதை
புணை பெயரில் எழுதலாம்!
புதியபாதை புதிய தொடர் என்று!!
புரட்சியின் பாதையில்
புகழ் பெற்ற வடுக்கள் எல்லாம்
புதினம் போல எழுதவேன்

எழுதுங்கோ நேசன் அண்ணா. காத்திருக்கிறோம்

தனிமரம் said...

பின்னூட்டம் இட்ட பெருந்தகைகளுக்கு பேரண்பு மிக்க நன்றிகள் தனிமரத்தின்.