10 September 2015

முகம் காண ஆசையுடன் --20

 முதல் முகம் காண இங்கே-http://www.thanimaram.org/2015/09/19.html


/// இனி//

இனவாத  அரசியல் மேடையில் காட்சி மாறும் கதை நாயகர்களின் தேவைக்கு ஏற்ப !ஆனால் கதைக்களம் என்றும் இனவாத போக்கின் நிலை இதுவரை  மாறியதாக வரலாறு இல்லை.

 இந்த பாராளுமன்ற ஆட்சிப்போட்டியில் கூட ஜெயித்தவர்களும். தோற்றவர்களும் தம் பொருளாதார   தேடலில் வேண்டிய பதவியை பெறுவதும் ,வேசம் போடுவதும் இன்னும் தொடரும் !

ஆனால் இந்த பிரதமர் இந்தியாவுக்கு போக முன்!

 இவரை அரசியல் படுகொலை குற்றம்சாட்டி  வீதியில் அழைத்த பட்டலாந்த வதைமுகாம் விசாரணைக்குழு என்ன ஆச்சு?, இன்னும் பதில் இல்லை !

இந்த சோற்றினை வீசிய செந்தாமரை இயக்க தலைவியின் செம்பனி கொலை வழக்கு எப்படி மறந்தார்கள் ?,


எல்லாம் அரசியல் போதையில் இவரின் ருத்தர தாண்டவம் இன்னும் சர்வதேச ஏடுகளிலில் வருமா ?,




என்று சிந்திப்பதைக்கூட இந்த வேடதாரிகளின் வேசம் இன்னும் சாமானிய மக்களை குழப்பத்தில் கும்மியடிக்க வைக்கும் !

மக்களின் பிரச்சனை பேசாமல். இன்னும் தேசத்துக்காக சிறையில் வதைமுகாமில் இருப்போர் பற்றி வாய் திறக்காத கேப்பமாரிகள் பற்றி என்றாவது ஒருநாள் எவரேனும் சிறையில் இருந்து மீண்டுவந்தால் எதிர்காலத்தில்  எழுதலாம் இன்னும் பல வரலாற்று ஈனஅரசியல் வஞ்சகம் பற்றி!

எத்தனை ஆணைக்குழு ?,எத்தனை விசாரணைக்கமிசன்?, என்று எல்லாம் அரசியல் பித்தலாட்டத்துக்கு பொதுமக்கள் பணத்தில் !

பொழுது விடிஞ்சா  தேத்தண்ணியும், வட்ட பிஸ்கட்டும் திண்டவன் எல்லாம், பீசாவும் சாப்பிட்டு ;ஓசி டியும் குடித்து விட்டு  கோட்டு சூட்டுடன் !என்ன விசாரணைக்கு போக வாகனவசதி சரியாக இருக்கா?,பாரு என்று ஏய்ப்பதும்!

 ஊடகவியாளர்களுக்கு அனுமதி கொடுக்க வேண்டாம்! இப்ப காலைநேர உணவு நேரம் என்றுவிட்டு  காலாட்டி தின்பது அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் என்பதை! எந்த ஓய்வு பெற்ற பண்டிதர்கள் எப்போது ஜோசிக்கப்போறார்கள்?, இவர்களுக்கு கருட புராணத்தில் என்ன தண்டனை கொடுக்கலாம்?, புத்தனே நீயே வாய் பேசு! .

அது ஏன் எந்த அரசும் ஒரு விடயத்தை விசாரிக்க நினைக்கும் போது ?,ஓய்வு பெற்றவர்களை விசாரணைக்குழுவுக்கு தலைவர் என்று அழைப்பது?,

 நீங்கதான் எதிர்கால தமிழ்நாட்டு  முதல்வர் என்று சும்மா இருக்கும் நடிகரை அழைப்பது போல   ஏன் சாகாயம் போல துடிப்பு மிக்க ஆயுத எழுத்து இளைஞர்கள் / கிரேன் பேடி போல யுவதிகள்  இவர்கள் கண்களுக்கு தெரியாத மனுநீதியா?,

இல்லை  மக்கள் நலன் எல்லாம் இப்படி தூக்கத்தில் போக வேண்டியா ?,

பாவம் அப்பாவிகளுக்கு யார் பேசப்போறார்கள் ?,இன்னும் மன்னார் கிணறு போல தோண்டாமல் போகும் நம்மவர் வரலாறு அதிகம் !

ஆனாலும் இன்னும் கடைசிப்போரில் அரசிடம்  சரண் புகுந்தவர்கள் , சந்தேகத்தில் சிறையில் இருப்போர்,வெள்ளைவான் கடத்திய கிறீஸ் மனிதர்கள்,  கப்பம் கோரி கடத்திய வியாபாரிகள், காமத்துக்காக கொன்ற விளையாட்டு வீரர் போல பலரின் அந்தரங்கம் எல்லாம்!

 ஏன் மூடிய கதவுக்குள் பேசி ஒரு விலைவைக்கப்படுகின்றது !என்பதை நாம் ஏன் சிந்திப்பது இல்லை?,

 நமக்கு ஆயிரம் சோலி ,ஆயிரம் நாடகம் இருக்கு மீனாட்சிக்கு எவன் கணவன் என்று முகநூலில் ஸ்டேச் போடுவது   போலத்தான்?,

 செய்தி ஒன்றுகிடைத்தால் அது பற்றி விவாதிக்க , நேரம் இல்லை பதிவுலக வலைச்சரம் வா என்றால்  வராத பலர் போல ஆனால் செய்தியை வெளிநாட்டுக்கு ஊடகத்துக்கு  விற்றால் பொருளாதாரம் இலாபகாக அதிகம் கிடைக்கும்! காசுமேல காசு வந்து பாடல் போல !

ஆனால் நாளைய செய்திக்காக உயிர்விட்ட முன்னால் ஊடகவாதிகளின் அர்ப்பணிப்பு எல்லாம் என்றாவது பொதுவில்  பகிரனும் என்ற ஆசையில்தான் நானும் சில பிரெஞ்சு ஊடக நட்புக்களை தேடிச் செல்கின்றேன் மச்சான்!

 இரவுநேர களியாட்டம் போல அதுக்காக என் செய்தியை விக்க அல்ல ! களியாட்ட விடுதியில் இருப்போர் எல்லாம் விபச்சாரிகளும் அல்ல மச்சான் அகிலன்!

உனக்கு சொல்லாத ஒரு உண்மை சுமா அனுப்பின செய்தியில் `மறைந்து இருக்கு!

அது!!!



தொடரும்......

அரும்பத விளக்கம்-

தேத்தண்ணி- டீ
வட்டர்பிஸ்கட்- பட்டர் பிரெட் தமிழகத்தில்

8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

தொடர்கிறேன் நண்பரே
தம +1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களது எண்ண வெளிப்பாடுகளைப் பகிர்ந்துகொள்ளும் விதம் நன்று.

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ!!! தங்கள் எண்ண வரிகள் அருமை!!!தொடர்கிறேன் சகோ! நன்றி!!!

KILLERGEE Devakottai said...


தங்களின் மன ஓட்டம் வெளிப்படுகிறது அருமை நண்பரே
தமிழ் மணம் 4

Yarlpavanan said...

சிறந்த எண்ணங்கள் மின்னுகின்றன
தொடருங்கள்

http://www.ypvnpubs.com/

சென்னை பித்தன் said...

எண்ணஅலைகள்!
தொடர்வேன்

Thulasidharan V Thillaiakathu said...

தங்களது எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகின்றது நண்பரே! தொடர்கின்றோம்.....ஒரு மின் அஞ்சல் சப்ஸ்க்ரிப்ஷன் கேட்கெட் உங்க தளத்துல சேருங்க பாஸ்....அதுல எங்க மின் அஞ்சல் முகவரி கொடுத்தா எங்க பெட்டிக்கே வந்துரும் உங்க பதிவு வெளியாகும் போது.....

Unknown said...

புதைந்து கிடக்கும் எண்ண அலைகளின் வெளிப்பாடு தொடர்வேன் தம்பி...