17 September 2015

தயங்காதே பாரதி !!



 தமிழன் என்று பேர் கொண்டு
தரணி  எங்கும் போர்மீட்டி
தடம் பத்தித்த பல  தலைவன்கள்
தன் சந்ததிக்கு கட்டிய மாளிகைகள்,
தமிழ் வளர்த்த மாடங்கள், எல்லாம்
தனியார் வருகை என்ற வெளிநாட்டு பதவிக்கு
தன்கீழ்ப் படிந்த ஒருவன் காட்டிக் கொடுத்த பலர்!
தயவு வேண்டி தன் இனத்தை
தன்சுயநலத்தால் அழித்தது போல!நெறி
தமிழன் என்ற இனமும்
தன்பண்பாடு என்ற
தன்முகத்தை  தமிழ்மொழி துறந்து!
தன் மதம் பிறழ்ந்து தன் வசதிக்காய்
தளை களைப் போற்றி !
தனித்துவம் தொலைத்து
தானே வேந்தன் என்று
தாய் நிலத்தை தவிக்க விட்டு
தாசியிடம் போன வரலாறு
தாண்டியும் நீதியுண்டு. நெறியுண்டு தமிழில்!
தானே மா என்றவன்
தாழ்ந்து போனான்
தன்மதம் பிச்சை ஏந்தி வாழ
தன் நீதி பிழைத்த ஒருவன்
தந்த அட்சயபாத்திரம் ஏந்தும் தேச வேந்தன்!

தமிழர் மீது போர் கொண்டு
தமிழர் தேசத்தில்
தயவு இலாது எறிந்த எரிவாயு
தமிழ் இனம் ,பண்பாடு. எல்லாம்
தவறியும் பிழைக்காது!
தானே எரியும்  பிலிக்ஸ் பறவை   போல
தமிழன்  என்ற உண்மை அறியாது
தப்புக் கணக்கு   போட!
தன் தேவைக் காய் உதவிய
தாவார வியாபாரிகள்   எல்லாம்!
தனலில் இருந்து தன் உயிர் கொண்டு
தப்பி வந்த தமிழரின் பண்பாடாய்
தமிழக எலிக்கறி போல எங்க கறி
தமிழலால் விற்கப்பட்டாலும்!
தமிழிலில்  இணையம் எங்கும்
தனியாக தான்தோன்றிஸ்வரர் போல
தமிழர் வாழும் தரணி எங்கும்
தமிழர் பண்பாடு வேதம் போல
தயக்கம் இன்றி  இனியும்
தனியொருவன் போல
தமிழில்  ஓதும்!
தயங்காதே பாரதி !!!
தமிழனுக்கு காணி நிலம் வேண்டும்
தனித்துவமாக பண்பாடு கொண்டு
தனியே வாழ!



-------------------------
 அரும்பத விளக்கம்
மா- அரசன்
தாவார- திண்ணை

///////////// வலைப்பதிவர் திருவிழா -2015
                     மற்றும்
 தமிழ் இணையக் கல்விக்கழகம்
                       நடத்தும் !

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே எழுதிய புதுக்கவிதை இது இதுக்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது தனிமரத்தின் சுய கற்பனை ! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்!

போட்டி விதிமுறைக்கு உட்பட்டவன்
தனிமரம் வலைப்பதிவாளர்
பாரி்ஸ்.


---






18 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

நன்றி தோழர்...

வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் தோழர்
தம +1

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ!!வாழ்த்துக்கள்!!! ""த ""
அருமை!!

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே.
படைப்பின் கீழ், “மா- அரசன்“ மற்றும் “தாவார- திண்ணை“ என்றும் கூடுதலாக உள்ளதன் பொருள் புரியவில்லையே? சற்றே விளக்க வேண்டுகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.
படைப்பாளர் நீங்கள்தானே? நீங்கள் “தனிமரம் நேசன்“ அல்லவா?

KILLERGEE Devakottai said...


மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள் நண்பரே வெற்றி உமதே..
தமிழ் மணம் 4

இளமதி said...

ஆமாம் சகோதரரே!

தயக்கமேன்?.. தாமதமேன்?..
வெற்றி பெற்றீர்கள் என அவர்கள் உங்களுக்குச் சொல்வதற்கு..!

மிகவும் ரசித்தேன் சகோ!.. வெற்றியுமதே!
வாழ்த்துக்கள்!

தனிமரம் said...

நன்றியும் வாழ்த்துகளும் நண்பரே.
படைப்பின் கீழ், “மா- அரசன்“ மற்றும் “தாவார- திண்ணை“ என்றும் கூடுதலாக உள்ளதன் பொருள் புரியவில்லையே? சற்றே விளக்க வேண்டுகிறேன். தவறாக எண்ண வேண்டாம்.
படைப்பாளர் நீங்கள்தானே? நீங்கள் “தனிமரம் நேசன்“ அல்லவா?// அரும்பத விளக்கம் ஐயா தவறினை திருத்திவிட்டேன் ஐயா! நன்றி பதிவை இணைத்தமைக்கும், வருகைக்கும், பாராட்டுக்கும்.

சென்னை பித்தன் said...

பரிசு பெற வாழ்த்துகள்

சசிகலா said...

வாழ்த்துக்கள் தோழரே.

மகிழ்நிறை said...

வாழ்த்துக்கள் சகோ!

Geetha said...

வெற்றி பெற வாழ்த்துகள் சகோ...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா.

அற்புதமாக வரிவடிவம் கொடுத்துள்ளீர்கள் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள். அண்ணா த.ம 6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Yarlpavanan said...

"தமிழர் வாழும் தரணி எங்கும்
தமிழர் பண்பாடு வேதம் போல
தயக்கம் இன்றி இனியும்
தனியொருவன் போல
தமிழில் ஓதும்!
தயங்காதே பாரதி!!!" என்ற
கருத்தையே நானும் விரும்புகிறேன்!

போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்!!

தனிமரம் said...

கருத்துரைத்து ,வாழ்த்திய வலையுறவுகள் எல்லோருக்கும் சாமானியன் தனிமரத்தின் நன்றிகள்!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஆஹா!
வெற்றிபெற வாழ்த்துகள் சகோ!

அம்பாளடியாள் said...

அருமையான படைப்பு பாராட்டுக்கள் வெற்றி பெற வாழ்த்துக்களும் சகோதரா .

மணிச்சுடர் said...

தனிமரம் தகர வரிசையில் வழங்கியுள்ள தாளிதக் கவிதை நன்று. வெல்க போட்டியி்ல்

அப்பாதுரை said...

நன்று.
உழைப்பு வெளிப்படையாகத் தெரிகிறது. வாழ்த்துக்கள்.