18 September 2015

தயங்காதே பாடு!!

தனியான இனப் பரம்பல்
தனித்துவமான தன்னிறைவு!
தடுக்கி விழுந்தால் தமிழ்மொழி,
தம்பிரான் ,எம்பிரான் ,தர்கா,
தன்பூர்வ பூமி என்று இருந்தோம்!
தனிச்சிங்களம் சட்டம் வரமுன்!
தடியடி ,தன்னாதிக்கம்,
தனிச்சிறை  என்று
தண்ணீர்க்குண்டு போல  தமிழர்மீது

தரைப்படை, விமானப்படை,
தாணியங்கி கடற்படை, என்று
தாய்நில ஆக்கிரமிப்பு; சிங்களம் வீச!
தவிச்சோடி, தன் வாழ்வு  அகதியாக !
தமிழகம்,தவிர்த்து ஐரோப்பா , கனடா,
தடைகள் தாண்டி!
தவிப்புடன் உயிர்கொண்டு
தனிக்குளிரிலும்!
தவளை போல  தனிப் பண்பாட்டில்
தளைக்கின்றோம் தீராத நதி போல!


தமிழர் நாம் தாயகம் விட்டு பண்பாடு
தாய்ப்பால் போல
தாய் மொழியும் .ஐரோப்பிய மொழியும்,
தவழ்ந்து கனடா, அவுஸ்ரேலியா,
தாய் மாமான் உறவு என்று
தற்போது உடலால்  பிரிந்தாலும்!
தாய் சேய் உணர்வாக
 தம் கலாச்சாராம்
தரணி எங்கும் தமிழர் பாண்பாட்டில் !
 தலை நிமிர்ந்து!!


தனையனே ! நீயும் பிரெஞ்சில் இருந்து
தமிழில் கவி பாடு!! அது நம் பண்பாடு!
தந்தை   தாலாட்டுக்கின்றேன்
தாய் தேசம் பிரிந்த சோகம்
தமிழருக்கு இனியும் எக்காலமும்  வேண்டாம்.



தயக்கம் வேண்டாம் பண்பாடு நீ!
தமிழில் பண்  என்றால் இசை!
தயங்காதே பாடு !மகனே!! என்
தந்தையும் தாயும்
தமிழர் பண்பாடு நான் ?,,,,?,
தமிழில் பாரதி பற்றி பேசப்போறேன்
தற்போது !
தட்டுங்கள் கரகோஷம்
தமிழ்வானொலி அலைகள் ஊடாக
தமிழக புதுக்கோட்டை பதிவர் விழாவில் இருந்து!


தனித்தனியாக. இருப்பவர் பற்றி
தனபாலன் இதோ இணைய வானொலிக்கு
தனியாக தரும் பேட்டிக்காக காத்து இருக்கின்றோம்!!
தமிழக இணைய வசதி சீர் செய்த பின்
தனியாக வலையில்  இணைவோம்!
தனிக்கை காரணமாக பாடல் இல்லை!
தடங்களுக்கு வருந்துகின்றோம்!

--------------------

/ வலைப்பதிவர் திருவிழா -2015
                     மற்றும்
 தமிழ் இணையக் கல்விக்கழகம்
                       நடத்தும் !

மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே எழுதிய புதுக்கவிதை இது இதுக்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது தனிமரத்தின் சுய கற்பனை ! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெங்கும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்!

போட்டி விதிமுறைக்கு உட்பட்டவன்
தனிமரம் வலைப்பதிவாளர்
பாரி்ஸ்.




11 comments :

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! உள்ளத்தால் பிரிந்தாலும் தமிழால் இணைந்த வரிகள் அருமை!! வெற்றி நிச்சயம் வாழ்த்துக்கள்!

KILLERGEE Devakottai said...


அருமை நண்பரே வெற்றி பெற வாழ்த்துகள்
தமிழ் மணம் 2

வலிப்போக்கன் said...

அருமை.... வாழ்த்துகள்!!

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

Yarlpavanan said...

"தரணி எங்கும் தமிழர் பாண்பாட்டில்!
தலை நிமிர்ந்து!!
தனையனே! நீயும் பிரெஞ்சில் இருந்து
தமிழில் கவி பாடு!! அது நம் பண்பாடு!" என்ற
வரிகளை விரும்பும் நான்
தாங்கள்
போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துகள்!!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே
தம +1

மகிழ்நிறை said...

பண்பாடு பண்பாடு என அழகாய் பண்பாடிவிட்டீர்கள் சகோ!! வாழ்த்துக்கள்!

putthan said...

வெற்றி பெற வாழ்த்துகள்

சசிகலா said...

வெற்றி பெற வாழ்த்துகள் தோழா.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை சகோ
வாழ்த்துகள்! அட்லாண்டாவிலிருந்தும் கரகோஷம் உங்களுக்கு!

மணிச்சுடர் said...

தமிழினம் தாய்மண்ணில் பட்ட தனலின் சூடு தகிக்கிறது கவிதையில்