13 October 2015

முகம் காண ஆசையுடன்....-25.

முன்னம் இங்கே முகம் காண http://www.thanimaram.org/2015/10/24.html.

இனி ...

 சர்வதேச நாடுகளை கூட இனப்படுக்கொலைவிடயத்தில் வெற்றிகொள்ளும் பாண்டியத்தியம் இனவாத ஆட்சியாளரிடம் நன்கு இருப்பதைக்கூட இன்னும் புரிந்துகொள்ளாத இந்த மேட்டுக்குடி பண்டிதர்கள்தான் !

மேடையில் இனவாத கோஷம் போட்டு ,இனத்தீயை வளர்த்த  அரசியல் வேடதாரிகள் தான் என்பதை/ 80/ அறியாத அடுத்த தலைமுறை அப்பாவிகள் பலர் இன்று சிறையில் இருப்பதுக்கு காரணம்!


 ஆனால் ஆட்சிக்கு வரமுன்னர் ஒரு பேச்சு அமைச்சர் ஆனபின் இன்னொரு உலரல், எல்லாம் இங்கு சகஜம்!

 எத்தனை தரம் ,எத்தனை சிறைகளில் ?,எத்தனை போராட்டம் நடத்தியும் ?,இன்றுவரை எதுவும் நடக்கவில்லை தமிழ் கைதிகள் விடயத்தில் !

ஆனால் மேல்தட்டு என்றால் சட்டமா அதிபரும், சிறைச்சாலை அதிகாரியும், நீதி அமைச்சரும், தன்பதவி என்ன என்று பொதுவில் பேசமாட்டார்கள்!

ஆனால் தமிழ்கைதிகள் விடயம் என்ற போது இனவாத நோக்கில்  சிறைச்சாலை சீரமைப்பு அமைச்சுதான் அதில் கருத்தினை  சொல்லாகாசு அமைச்சரிடம் கேட்க வேண்டும் விடுதலை பற்றி என்று இனவாத போதையில் உளரும் கூட்டத்துக்கு !


உடக்கடிக்க இவர் போல சட்டம்பிள்ளைகள் இருக்கும் வரை சத்திவான் சாவித்திரி போல நெருப்பிள் எரிவது போல சிறையிலும் , சில சிறப்பு தடுப்பு முகாம்களில் சித்திரவதையுடன் சீரழிவது தான் வாழ்க்கையாக போய்விட்டத்து நம் இனத்துக்கு!




 இது பற்றி பொதுவெளியில் எழுத வேண்டிய ஊடகம் எல்லாம் இப்ப பாலியல் வல்லுறவு பாடசாலை மாணவன் கைது ,பக்கத்தில் கணனி அதில் பாலான படங்கள் என்று பட்டியல் இட்டு தம் வயிறு வளர்க்கும் கூட்டம் எல்லாம் பல வழிகள் இருந்தும் சிறைக்கைதிகள் விடுதலை பற்றி இன்றும் நடுநிலையில் இதயசுத்தியுடன்  பேசாது நாட்டில் நடக்கும் போராட்டத்தை மறைக்கும் காரியங்களில் நாமும் சிங்களைத்தை வெல்லுவோம் என்ற ரீதியில் சில துஸ்பிரயோகத்தை பொங்கி எழவைப்பதன் பின்னால் மறைக்கப்படும் பல வரலாறு தனி ஒருவன் போல ஆயிரம் இருக்கு மச்சான் !ஈழத்தில் ஒருபக்கம் இலங்கையில் மறுபக்கம்!நடக்கும் வாழ்வாதார போராட்டம்!



 ஆனால் நடிகன் தளத்தில் அதை பகிர்வது என் நோக்கம் அல்ல !ஆனால் என் தேவதையும்  எங்கேயாவது இன்னும் உனக்காகவே வாழ்கின்றேன் படம் போல  போதிமர சிறையில்  இருக்கலாம் என்ற நம்பிக்கைக்கு தாய்மொழி படம்போல நம்பிக்கை தந்த அன்பு சுமா !கோகுலம் பட பானுபரியா போலத்தான் !

ஆனால் அதையும் தவறாக  புரிந்த! நிவேதா உண்மையில் கைதிகள் பற்றி அக்கரை கொண்டு இருந்தால் முகநூலில் பலதை பகிர்ந்து இருக்கலாம்!

 ஆனால் அவளும் சாதாரண பொழுது போக்கு டைம்பாஸ் முகநூல் போராளிதான்! இன்று சிரியா மோதல் பற்றி பிரெஞ்சில் கும்மும் பிரெஞ்சு நட்புபோல அதே பிரெஞ்சு சர்வதேச அமைப்பு மூதூரில் கொலை செய்த விடயம் அறியாத அடுத்த தலைமுறை நடிகர் சங்க தேர்தல் போலத்தான்!


 ஆனாலும்  முகம் அறியாத சுமா என்னை வலைப்பதிவு ஊடாக நட்பு யாசித்து! நான் யாரையோ தேடுகின்றேன் என்பதை நன்கு புரிந்து தன் பத்திரிக்கை ஊழியர் தொழில் போட்டியையும் கடந்து தன்  சுய தேடலில் என்னிடம் அனுப்பிய செய்திகள்!

 இனவாத சிங்கள  ஆட்சியின் இன்னொரு கோரத்தாண்டவம் இது சணல்-4 போல பல நானும் அல்ஜெசிராவிடம்  விக்கலாம்  ஈரோவில் ! ஆனாலும் நடுவீதியில் ஏதிலியாக  நின்றாலும் பண ஆசைக்கு அடி பணியேன் அன்புக்கு அன்றி என்பதை எப்படி உணர்ந்தாள் முகம் காணாது இன்று வரை வலையில் என்று இன்றும் சிந்திக்கின்றேன்


! ஆனால் இப்ப சுமா இனவாத புலனாய்வு படையின் வீட்டுக் காவலில் இருப்பது கூட முகநூலில் பகிரமுடியாத சூழ்நிலைக்கைதியாக இருப்பது பற்றி யாரிடம் சொல்ல மச்சான் அகிலன்!!


எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்றால் ஒரே தீர்வு பொதுமன்னிப்பு




! போடா லூசா தமிழர் வாக்கில் பதவிக்கு  வந்த புத்தன் விசுசுவாசி முதல் குடிமகன்  தானும் அடிப்படை விவசாயிக் கூட என்று முகநூலில், டுவீட்டரில்  ,பகட்டு காட்டும் கூட்டம் போல   இன்னும் சிறைக்கைதிகள் விடயம் மறந்தும் போசாமல் இருப்பது இனவாத சேற்றில் எப்படி அடுத்த சால் போல ஆட்சி அமைக்கலாம் என்று அன்றி உண்மையான நல்லாட்சி வேண்டியல்ல!




 ஆனால் நான் நாட்டுக்கு போக்கப்போறன் பாரிசில்  இருக்கும் பொது மன்னிப்பு சட்டத்தின் ஊடாக! ஏண்டா ??நயந்தாரா இல்லை என்றால் தரிசா போல சினேஹா போனால்  காஜல் அஹர்வால்; அதுவும் இல்லையா ?,ஆம்பிள்ளை குரலில் சுருதிஹாசன் அதுவும் வேண்டாம் அடுத்த மேகா பட நாயகி போல உனக்கு காதல் போதை தலைக்கு ஏறிவிட்டதா அசுரன்?,



 முதலில் நடிகன் பதிவர் வலையை நிறுத்து! உன் முகநூல் செயல்ப்பாட்டை தடு! நான் ஒரு நண்பனாக சொல்லுகின்றேன் நீ இலங்கை நோக்கி போகாத!


தொடரும்!

7 comments :

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! தம் வயிறு வளர்க்கும் கூட்டம் எல்லாம் பல வழிகள் இருந்தும் சிறைக்கைதிகள் விடுதலை//எப்படி யோசிக்க மானமில்லாதவர்களுக்கு மனசு வரும்!

கரூர்பூபகீதன் said...

பதிவர் நிகழ்ச்சி நேரடி காட்சியை பார்த்தீர்களா? சகோ! மிகப் பிரமான்டம்
எல்லாவகையிலும்! நல்ல அனுபவம்!
வலைக்கும் நிஜ வாழ்க்கைக்கும் ஏகப்பட்ட மாறுதல் உண்டுபோல
நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் சகோ!

கரூர்பூபகீதன் said...

நான் பட்டதாரிதான் சகோ! அதனுடன் பட்டறிவும் உண்டு! நான் எழுதிய பதிவு என்னை நானே சுயமதிப்பீடு செய்வதற்கே! இது ஆரம்பகால ஆசிரியர் கற்றுத்தந்தது! ஒரு விசயத்தை 100%முயற்சி செய்து
அதி தோற்குமானால் எதில் தவறு என்பதை உடனடியாக நாம் தெரிந்து கொள்ளைவில்லையானால் மறுபடியும் அதே தவறை செய்யமாட்டமா?? நன்றி

கரூர்பூபகீதன் said...

ஒருவனுக்கு வழி காட்டுவதைவிட அவன் குறைகளை சொன்னால் அவனே தேர்ந்தெடுப்பான்? எந்த வழி நல்ல வழி என்று!!

என்னைவிட நீங்கள் வயதில் அதிகமிருக்கலாம் சகோ! நான் கூறியதில் ஏதும் தவறுஇருப்பின் மன்னிக்கவும் சகோ! நன்றி

Thulasidharan V Thillaiakathu said...

மேடையில் இனவாத கோஷம் போட்டு ,இனத்தீயை வளர்த்த அரசியல் வேடதாரிகள் தான் என்பதை/ 80/ அறியாத அடுத்த தலைமுறை அப்பாவிகள் பலர் இன்று சிறையில் இருப்பதுக்கு காரணம்!// ம்ம்ம் நல்ல வரிகள் சகோ...தொடர்கின்றோம்...

வலிப்போக்கன் said...

ஆனால் ஆட்சிக்கு வரமுன்னர் ஒரு பேச்சு அமைச்சர் ஆனபின் இன்னொரு உலரல், எல்லாம் இங்கு சகஜம்!----எல்லா நாட்டிலும் இதுதான் நடக்கிறது நண்பரே.........

Thulasidharan V Thillaiakathu said...

மட்டுமல்ல அந்த வரிகள் மரணம் வரை மனிதன் என்று கூறவில்லை....பளேர் என்று அறைந்தது போல இருக்கு சகோ....