28 October 2015

முகம் காண ஆசையுடன் -29

முகம் காண முன்னர்-http://www.thanimaram.org/2015/10/28.html.

இனி

...............
எப்போதும் பேரினவாத பெரும்பாண்மை ஈழத்தமிழர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளும் சரி. நம்பிக்கை உறுதிகளும் சரி நடுவீதியில் கிழித்த வரலாறு தொடர்கதை போல! இடையில் பெரியண்ணா சொல்லிய வடகிழக்கு மாகாண அமைப்புக்கு ஓப்புக்கு ஓம் என்றதும்! மாமியார் உதவி போய் மருமகள் வீடு வந்தது போல வேஷம் இட்டு தாலி அறுத்த வரலாறு எல்லாம் மறந்து போய்!

 இன்று போர்களத்தில்  பூ என்று விளம்பரம் செய்து வயிறு வளர்க்கும் கூட்டம் எல்லாம் அப்பாவிகள் விடுதலைக்கு மட்டும் சிறைப்பூட்டு போட வசதியாக சட்டமா அதிபர் என்ற ஒருவரை வம்பில் இழுத்துவிட்டு தன் நிறைவேற்று அதிகாரம் என்ற சட்டமுத்திரையை பதுக்கும் வேடதாரிகள் பற்றி பொதுவில் வெள்ளை வேட்டி நல்லின ஆட்சி என்ற தேருக்கு வேலிபோல இருக்கும் வெக்கம் கெட்ட கூட்டம் எல்லாம் வெள்ளாடு மேய்க்கும் தலைவன் இல்லாத நிலையில் இனி என்ன நடக்கும்! நம் இனத்துக்கு!!


 எல்லாம் காலமாற்றத்தில் விலைபோகும் என்பதை அன்றைய தந்தை செல்வா சொன்னது போல இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!

 ஆனால் இன்று கடவுள் சிலையைக்கூட வீதியில் விட்டு எறியும் பேரினவாத மமதைக்  கதைகள் இனித்தொடரும் !

எல்லாம் அதிகாரபீடத்தின் ஆசியுடன் நடக்கும் செயல் என்பது வெள்ளை யாணை போல இல்லை வேண்டும் என்றே நடக்கும் நாடகம்!


 இது எல்லாம் உனக்கு வேண்டாம் அசுரன்! நீ இங்கு வந்தது உன் தனிப்பட தேடல் கொண்டு தயவு செய்து அரசியல் பேசி என்னையும் வம்பில் மாட்டி விடாதே!

  இதை உன் முகநூல் நண்பனாக கேட்கவில்லை! உன்னால் வளர்க்கப்பட்ட ஒரு அறிவிப்பாளர் பாலன்  என்ற உரிமையுடன் கேட்கின்றேன்! நீயும், தனிமரம் என்று இன்று வலையில் வரும் வெட்டியும் தான் என்னை ஒரு அறிவிப்பாளர் தேர்வுக்கு விண்ணப்பிக்க  முந்தி தள்ளியவர்கள் 2003 இல் !மறக்கவில்லை வரலாறு முக்கியம் அமைச்சரே என்ற வடிவேல் கமடிபோல!


 ஆனால் இன்று உங்களுக்கு இடையில் புலம்பெயர்ந்த பின் புது வருகை வலைப்போட்டி உள்குத்து ,முகநூல் குழுவில் வெளிநடப்பு  என்று இருதுருவங்கள் ஆனாதும் !முகநூல் அக்கப் போர் எல்லாம் நானும் கவனித்துக்கொண்டுதான் இருக்கின்றேன் இலங்கையில் இருந்து.

 எனக்கு இருவரும் ஒருவர் தான் இலங்கைக்கு இந்தியா பாகிஸ்தான் போல !எனக்கு வலையுலகு தெரியாது !முகநூலில் பொழுது போக்கு மட்டுமே! ஆனால் அசுரனும்,. தனிமரமும் இருப்பது பாரிஸில் என்பது பொதுவிதி!

இப்ப இலங்கைக்கு நீ வந்து இருப்பது எனக்கு  தெரிந்தது போல தனிமரமும் அறிந்து இருப்பான்!

 அவனுக்கும் இங்கும் இன்னும் இணைந்த கைகள் படம் போல நட்பு இருப்பது நீயும் அறியாத நாளைய செய்தி அல்ல ! ஆனாலும் உன் தேடலுக்கு என் உதவி கிடைக்கும். .

எனக்கு உங்க காதல் கதை தெரியாது, அதைக் கேட்கும் சூழ்நிலையும் இப்ப இல்லை காரணம் வேலைப்பளு அதிகம் இப்ப இ்லங்கையில் முன்னர் இருந்த வானொலிக்கூடம் போல அல்ல


பின்னம் வந்த தனியார் பண்பலைகள் போலவும் அல்ல!!

 இப்ப   பல இணைய வானொலி வந்த பின் நம் நேயர் வட்டம் குறைந்துவிட்டது அதனால் புதிய புதிய நிகழ்ச்சி செய்ய வேண்டிய நிலையில் டிஜே நாங்கள் வருமானம் கூட்ட  வேண்டிய நிலையில் பொருளாதார தேடல் !

ஆனால்  இன்னும் உங்க  ஆத்ம தேடல் அந்த வானொலி நிலையம் என்பதையும் அறிவேன்!


  உங்க வாலிப  கோபம் எல்லை  தாண்டி பலரை வானொலிக்கு அறிவிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பு, விளம்பரசேவை என்ற ஊக்கிவிப்பு  பாதை போட்ட கதை என்முகநூலில் எழுத ஆசை அசுரன் !



ஆனால் எழுத்து எனக்கு வானம் வசம்படும் போல இல்லை! உங்க காதலியை நான் பார்த்ததில்லை தனிமரம் எழுதிய உருகும்பிரெஞ்சுக்காதலி போல



  ஆனால் என்னால் என்ன உதவி ஆகவேண்டுமோ ?, அதை இப்போதைய உங்க அவசர விடுமுறையில் இலங்கை வருகையில் என்னால் செய்வேன் தனிப்பட்ட நிலையில்! ஆனால்  உங்க முகநூலில் எதையும் பொழுது போக்கு இப்படி என்று பொதுவில் பகிர்ந்து என்னையும் விசாரணைக்கு அழைக்கும் நிலையை தந்து காக்க வைக்க வேண்டாம் !

நான் அப்பாவி சேர்!

நீங்கள் கேட்டதைச் செய்வேன் என்ற பாலனின் பேச்சைக்கேட்டு காதலியை பற்றி சிந்தித்தவாறு இருந்தான் அசுரன்!












அவசரத்துடன் சிறையில் தேடுவோம்!!!!!!

.....
 

9 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

தொடர்கிறேன் தோழர்...

கரூர்பூபகீதன் said...

காலமாற்றத்தில் எல்லாம் மாறும்போது கடவுளை மட்டும் விட்டுவைப்பார்களா? சகோ! தொடர்கிறேன்! நன்றி

Yarlpavanan said...

கதை
இலங்கைத் தீவுக்குள்ளேயா?
நன்றே நகருகிறது
தொடருங்கள்!

ராஜ நடராஜன் said...

நிறைய சொல்லி இருக்கீங்க போல இருக்குதே! 29ல வந்து சேருகிறேன். நேரம் கிடைக்கும் போது முதல் அத்தியாயம் முதல் பார்வையிடுகிறேன்.

”தளிர் சுரேஷ்” said...

தொடர்கிறேன்!

yathavan64@gmail.com said...

புதையுண்ட விடயங்கள்
பூவாய் மலர்கிறதோ?
தொடர்கிறேன்!
நன்றி த ம +
நட்புடன்,
புதுவை வேலு

ஊமைக்கனவுகள் said...

தங்கள் எழுத்துகளுடன் போட்டியிடும் படங்கள் ...!

எப்படித் தேர்கிறீர்களோ?!!

தொடர்கிறேன்.

நன்றி

KILLERGEE Devakottai said...


தொடர்கிறேன் நண்பா..
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu said...

சில நெஞ்சில் அறைகின்றன..ஆம் உண்மைகள் அப்படித்தானே இருக்கும் இல்லையா நண்பரே! தொடர்கின்றோம்...அதுசரி சினேகா படம் விடாது போல இருக்கே அஹ்ஹஹஹ