01 October 2015

முகம் காண ஆசையுடன் --- ..23

முன்னம் முகம் காண இங்கே-http://www.thanimaram.org/2015/09/22.html


இனி...

உலக காவல்காரர் என்ற நாட்டாமை நம்மை ஏமாற்றியது என்று புலம்பும் தலைவர்கள் எல்லாம்! தாம் செய்த தனிப்பட்ட இரகசிய ஒப்பந்தம் எல்லாம் ஏனோ மறந்தும் பொதுவெளியில் பேசமாட்டார்கள்?, போராளிகள் சரணடைவும், சர்வதேச சதிவலையும் புரியாது வெள்ளைக்கொடி ஏந்திப்போய் வேட்டையாடிவர்கள்  போக. மீதமானவர்கள் புனர்வாழ்வு என்ற பெயரில் புலிகள் மீது ஆடும் இனவாத  ஆட்சியின் அக்கிரம செயல்கள் எதையும் கண்டு பொங்காத கூட்டம் §

வாலை. தோரணம் கட்டி அடுத்த தலைவரைத் தேடுகின்றது வீதியில் இருட்டின் நிலவில்!

 இதுதான் இன்றைய நிலை என்பதை அன்றே அறிந்து இருந்தால் அவர் குடும்பம் இன்று இவர் போல சொகுசாக வாழ்ந்து இருக்கும்!


 என் தூர நோக்கு என்பதை இனவாத அரசு அறிந்த நோக்கம் கூட நம்தமிழர் அறியவில்லையே!

 அதனால் தான் உசுப்பியே இப்படி ஊதாரிகளை உண்டியல் குலுக்க வைக்கின்றனர்!

 ஆனால் எவரும் உண்டியல் குலுக்கிச்சரி இப்போதும் பயங்கரவாத தடைச்சட்டம் என்ற போர்வையில் இருக்கும் கைதிகள் விடுதலை பற்றி பேச மறுக்கின்றார்கள்.

 கதிரையில் இருந்த காலத்தில் கைதிகளை  நேரிடையாக பார்வையிடச் சென்றவேளையில் தாக்குதல் வாங்கியதை இன்று அமைச்சர் பதவி தனக்கு இல்லை என்பதை  நினைக்காமல்! அன்று  மாற்று அரசியல் செய்தவர்கூட இன்று விடுதலைக்கு குரல் கொடுக்கும் போது!!

 போர் முடிந்து  6 வருடங்கள் போட்ட வெளிவேஷங்கள் மறந்தவர்கள் இன்னும் வாய் திறக்கவில்லை! 

ஆனால் பதவி சுகத்துக்கு ஆலவட்டம் பிடித்து அடிக்கும் கூத்தாடிகள்  இந்த துரோகிகளைவிட இனவாத ஆட்சியில் ஒட்டியிருக்கும் ஒட்டுக்குழுக்கள் பருவாயில்லை பலரை விடுதலை என்ற போர்வையில் தாய்நாட்டை விட்டு புலம்பெயர உதவியவர்கள்.

.அதனால்தான் `மறைக்கப்பட்ட வரலாற்றுக்கதை எல்லாம் மாவிலாறு அணைக்கட்டு திறப்பு போல இனவாதம் மூடினாலும்.இன்னும் புலம்பெயர் தேசங்கள் ஊடாக கையேந்த வைக்கின்றது கருணை வேண்டி!

 இனவாத படைக்கு மனித நேயம் என்னவென்று தெரியாது கையேந்தி வருபவரையும் காமுகன் போல வேட்டையாடும்  கூட்டத்துக்கு வேலை வேண்டுமாம் ஐநா படையில் என்று கையேந்தும்  இன்றைய புத்தன் தேச முதல்வனும்!


 அன்று பாதுக்காப்பு அமைச்சராக இருந்த போதுதான் நம் உடன்பிறப்புக்கள் சரண் அடைவு என்ற போர்வையில் வேட்டையாடு விளையாடு போல துடித்த கதை எல்லாம் என்றாவது பொதுவெளியில் பேச வேண்டும் என்று சுமா அன்று சொல்லியது!

 வெறும் அரசியல் கோமாளி போல அல்ல மச்சான் பதவியில் இருக்கும் போது போகாத ஊருக்கு எல்லாம் இன்று பயணிக்கும் முன்னால் துணைவர் போல  இலங்கை ஊடகவாதியாக முன்னர் இருந்தும் இன்றும் இருந்தாலும் இலங்கையில் எழுத முடியல பலவிடயம் என்ற ஆதங்கம் தான் மச்சான் அவளை இன்றைய வெளிவிவகார அமைச்சர்  அரசியலில் இருந்து வெகுவிரைவில் ஓய்வு நாடிப்போக நினைப்பது போல அவளும் இல்லறம் என்ற போர்வையில் எல்லாத்தையும் முகநூல்/வலை/தனிமெயில் எல்லாவற்றையும் முடக்கி வனவாசம் போகப்போறாள் 


. ஆனாலும் சுமா அனுப்பிய செய்திகள் ஒவ்வொன்றும் அவளின் ஆத்ம தேடல் மச்சான்!அது மட்டுமா!! அசுரன்  ஏன் முகநூல்/வலை என்று அலைகின்றேன் என்று அடிக்கடி கேட்பாயே?? உனக்கு ஒரு காதலி இருக்கின்றாள் அவள் யார் என்று அடிக்கடி கேட்பாயே ?,,,ஏன் இந்த சினேஹாவை ரசிக்கும்  உன் வலை  நட்பு தனிமரம் போல அசுரன் பதிவாளரும்  முகம் காட்டாத அந்த  தேவதை பற்றி ஏன் இன்னும் பேசவில்லை?,

  என்று !


அவள் பற்றியும் ஒரு குறிப்பை சுமா அனுப்பிய பின் தான் மச்சான் இனவாத புலனாய்வுப்படை அவள் கணனி முதல் கடமையாற்றும் காரியாலயம் வரை அடித்து நொறுக்கி அவளையும் இனவாத கண்கானிப்பு என்ற வலையில் சிறை இருத்திய நிலையில் ! இனி அவள் வரமாட்டாள் முகநூல்/வலை/தனிமெயில் என்று !!

வரும் மாதம் அவளுக்கு கலியாணம் அதையும் சொல்லித்தான் அவள் என்னோட தொடர்பை துண்டித்தால்! அதுக்காக அசுரன் என்ற வெட்டியான் முகநூலில் வருந்த மாட்டேன் என்பதை புரிந்தவள் சுமா!



ஏன்னா  எல்லா முகநூல் நட்பும் போலி இல்லை மச்சான் !அன்பில் தேடும் உறவுகளை!நேசிக்கும் யாசிக்கும் வாழ்த்தும்! அதில் நான் எப்போதும் தனிவழி என்னைவிட்டு போகாதே என்று இன்று வரை யாரையும் தடுக்கல என் தேடல் !என் பாதை எல்லாவறையும் கடந்தது!விரைவில் நீயும் அறிவாய் !






தொடர்ந்து விரைந்து முகம் காண ஆசையுடன்!!!!!!

6 comments :

Thulasidharan V Thillaiakathu said...

இனவாத படைக்கு மனித நேயம் என்னவென்று தெரியாது கையேந்தி வருபவரையும் காமுகன் போல வேட்டையாடும் கூட்டத்துக்கு வேலை வேண்டுமாம் ஐநா படையில் என்று கையேந்தும் இன்றைய புத்தன் தேச முதல்வனும்!// செம வரிகள்!

அதானே ஏன் இன்னும் அவளைப் பற்றிச் சொல்ல வில்லை? எதிர்ப்பார்க்கின்றோம் ...தொடர்கின்றோம்...

KILLERGEE Devakottai said...


சில இடங்கள் மனதை உலுக்கியது தொடர்கிறேன்
தமிழ் மணம் 2

விச்சு said...

ஒவ்வொருவரும் அவர்களுடைய வசதிக்காக ஏதேதோ சொல்கிறார்கள். பாமர மக்கள்தான் பாவம்.

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! வெறும் அரசியல் கோமாளி போல அல்ல மச்சான் பதவியில் இருக்கும் போது போகாத ஊருக்கு எல்லாம் இன்று பயணிக்கும் முன்னால் துணைவர் போல "/அனைத்துமே சாட்டையடி சரவெடி /சில இடங்கள் மனம் உழுக்கிறது!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

//எல்லா முகநூல் நட்பும் போலி இல்லை மச்சான் !//
உண்மைதான் சில் நல்ல நட்புகளும் கிடைக்கத் தான் செய்கின்றன

Yarlpavanan said...


எளிமையாக இளையோடும் செய்திகள்
அருமையான தொடர்
தொடருங்கள்