05 October 2015

முகம் காண ஆசையுடன்...24

 முன்னம் இங்கே-http://www.thanimaram.org/2015/10/23.html...

இனி ...

சர்வதேசத்தின் நிதி உதவி எப்போதும் தேவை உள்கட்டுமான முன்னேற்றத்துக்கும். பாரிய சமூக மேம்பாட்டுக்கும் என்று கையேந்துவதும் .சுனாமி நிதி கோரிக்கை என்று கரம் கூப்பி  வரும் நிதியை தனியான கணக்கு என்று கொல்லையடிக்கும் தலைவர்கள் எல்லாம்! சர்வதேச விசாரணை என்ற கோஷம் வரும்போதுதான் இறையாண்மை பற்றியும்! இனவாத வேஷமும் போட்டு இலங்கையின் கீர்த்தி என்ற மாயையில் வாழும் கூட்டங்கள் எல்லாம் உண்மையில் இனவாத தீயை வளர்த்தவர்கள் என்றால் மிகையில்லை !!


அதுக்கு துணை போன அதிகாரிகள். அமைச்சர்களின்  பொதுச் செயலாளர்கள்  என்ற மகா பண்டிதர்கள்!.  மக்கள் பிரதிநிதிகள் தனிச் செயலாளர் முதல்  மாவட்ட அதிகாரியின் மாமா முதல் மாமியார் சேலை தோய்த்த மானமுள்ள அரச அதிகாரிகள் எல்லாமும் சேர்தே ஏற வேண்டும் இனவாத செயலுக்கு மின்சார நாற்காளியில் !


ஆனால் எல்லாம் தலைவர் தலையை மட்டும் காவு கொடுத்துவிட்டு !!அரச அதிகாரிகள் தப்பி ஓடும் காலம் இனியும் வரக்கூடாது!!! அரச அதிகாரிகளும் விசாரணை செய்தால் தான் இன்னும் இனவாதம் பேச இந்த ஆட்சியில் இடம் இல்லை என்பதை இவரும் செய்ய வேண்டும் !!


ஆனால் எங்கே செய்வார்?, இவரின் வாரிசுகளும் ஓசியில் ஐநா வரை ஏசியில் இருப்பதை முகநூலில் கிண்டல் பண்ணும்!

 யாரும் இன்னும் சிறையில் வாடும் இனப்போரில் கைதானவர்கள் பற்றி இறையாண்மை தேசத்தில் இருந்து  எந்த ஆட்சியின் மைந்தர்களும் செல்பிக்கு கொடுக்கும் மரியாதை தானும் கொடுக்காமல் இருப்பது எல்லாம் வேதனை தான் மச்சான் அகிலன்!

 ஆனால் யார் எப்போது வாய் திறப்பார்கள்?, இன்னொருத்தர் மனைவியுடன் இவர் உல்லாசம் என்று பொங்கும் கூட்டம் எல்லாம் இதுவரை எல்லைக்கிராமங்களில் என்ன நடந்தது என்பதை ஏனோ மூடி மறைப்பது !ஒரு புறம் என்றால் !


எப்போதும் இனவாதம் ஊறுகாய் போல பாவிக்கும் இவர்கள் நிலை என்ன சொல்வது!

எல்லாம் தம்சந்ததி பற்றி சிந்திக்கும் யாரும் சாமானிய அப்பாவிகளின் சிறை வாழ்க்கை என்ன ஊறுகாய் போலவா?, தம் சுயநலம் காப்பாற்றும் யாருமே பொதுநலம் நோக்கி நம் உறவுக்ளை விடுவிக்க இன்னும் என்ன செய்கின்றார்கள் வயலில் இறங்கும் இவரின் வருகையை முற்றுகை இட்டு முகம் பார்த்து கேட்களாமே ?,


ஏய்யா எங்க மைந்தர்கள் நிலை என்ன?,,, ஏன் உங்க பொதுமன்னிப்பு ஏதும்மில்லையா??

 எங்க ஓட்டுமட்டும் உங்களை கமல் வாங்காத ஆஸ்கார் போல ஐநா வரை பேச வைக்குது !


ஆனால் அப்பாவி நாம் இன்னும் முகம் காண ஆசையுடன் சிறையில் ; சில சிறப்பு வதைமுகாமில். சிக்கி இன்னும் பொதுவெளிக்கு வராத  நிலை பற்றி யார்  பொதுவெளியில் விதைக்கப்போறம் ஐயா?,

 இப்படி வாடிய பயிர் போல இதையும் நோக்க ஆசையில்லை அசுரன் அரசியல் உலகு உனக்கு புரியாது!

ஆமா பதிவுலக அரசியலே படிக்காதவன் தான் அசுரன் ஆனாலும் என் நேசம் எப்போதும் திறந்த வாசல்தான்  அகிலன்!


தொடரும்.

10 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

இன்னும் முகம் காண ஆசையுடன் சிறையில் ; சில சிறப்பு வதைமுகாமில். சிக்கி இன்னும் பொதுவெளிக்கு வராத நிலை பற்றி யார் பொதுவெளியில் விதைக்கப்போறம்

உண்மை
வேதனைதான் மிஞ்சுகிறது நண்பரே
தம +1

yathavan64@gmail.com said...

வேதனையை வெளிப் படுத்திய உன்னத பதிவு நண்பரே!
முற்றிலும் உண்மை உணர்வுகளால் உயரந்த எழுத்துக்களால்
வடித்துள்ளீர்கள்!
விடியல் வர வேண்டும்!!!!
த ம +
நட்புடன்,
புதுவை வேலு

கரூர்பூபகீதன் said...

படிக்க படிக்க வேதனைதான் வருகிறது! சகோ!

தொடர்கின்றேன்!

Yarlpavanan said...

"யாரும் இன்னும் சிறையில் வாடும் இனப்போரில் கைதானவர்கள் பற்றி இறையாண்மை தேசத்தில் இருந்து எந்த ஆட்சியின் மைந்தர்களும் செல்பிக்கு கொடுக்கும் மரியாதை தானும் கொடுக்காமல் இருப்பது எல்லாம் வேதனை தான் மச்சான் அகிலன்!" என்ற உண்மையை யாரிடம் சொல்லியழ...

http://www.ypvnpubs.com/

KILLERGEE Devakottai said...


மனம் கணக்கிறது நண்பரே...
தமிழ் மணம் 3

”தளிர் சுரேஷ்” said...

வேதனை நிகழ்வுகள் வதைக்கிறது! தொடர்கிறேன்!

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...
This comment has been removed by the author.
Thulasidharan V Thillaiakathu said...

மிகுந்த வேதனை நிறைந்தவை அல்லவா....ம்ம் தொடர்கின்றோம்..

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் எத்தனை பேர் சிறையில் வாடி வந்தங்கி இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனரோ தெரியவில்லை...அவர்கள் முகம் காண /?

சென்னை பித்தன் said...

வேதனை சுமந்த வரிகள்