29 October 2015

முகம் காணும் ஆசையுடன் -30


தொடர் வாசிக்க தொடக்கம் இங்கே-http://www.thanimaram.org/2015/10/29.html
தொடர்வோருக்கு  இனி .....!

ஆட்சி மாற்றத்தின் பின் பேரினவாத அரசு பழிவாங்கல் வேலைத் திட்டத்தை சாமானிய மக்களின் வாக்கு அதிகரிப்புக்கு அடுக்கும்  நல்லாட்சி அரசு!

 முன்னால் ஆட்சியில் முகாமைச்சீர்கேடு. பதுங்கு குழியில் பாரிய உல்லாச அமைப்பு !


பகுதி நேர விழாவுக்கு  போன ஜனாதிபதி பார்வையிட்ட நேரத்தில் பாரிய நிதிமோசடி !

இலங்கையை பார்க்க வாருங்கள்  என்று பல்தேசத்தை இணைக்கும் பறக்க வைக்கும் விமானச்சேவையில் பாரிய ஊழல்!




 இன்னும் பட்டம் பெறதா வாரிசு பதவி உயர்வு பாதுகாப்பு அதிகாரி வேஷம் என்று ஆனாலும் பலரை சீர்ரழித்தவர் பத்திரமாக நாட்டைவிட்டு ஓடியதாக ஒருபுறம் சிங்கள போலி நடுநிலை  ஊடகம் கதை எழுத !



ஆனாலும் இன்றும்   சட்டக்கல்லூரி மாணவன் என்று சுதந்திரமாக முகநூலில்  முன்னால்  முதல்குடிமகன்  அடுத்த வாரிசு  சத்தியம் ஓதுவது  ஒரு புறம்  இருக்க!


 அவனின் தம்பி  கூட குற்றவாளி   என் அப்பன் நாட்டின் ஜனாதிபதி  அவர் மகனுக்கு எல்லாம் தெரியும் என்ற நாளைய தீர்ப்பு மன்சூர் அலிகான் நடிப்பு போல என்ற பாதுகாப்பு சட்டம் சட்டை பிடிக்கவில்லை இலங்கையில் நீதி கேட்டு  ஆனால் வீதியில் போனவர்கள் சந்தியில் நின்றவர்கள் எல்லாம் சந்தேக போர்வையில் சிறை பிடித்த சிங்கள ஆட்சிபீடத்துக்கு !



சுயமான அப்பாவிகள் மீது இன்றும் மனித நேயம் இல்லை என்பதை நம் மைந்தன் கொடுங்கோல் ஆட்சியில் கோட்டையில் நின்ற முன்னால் ஈழத்து சினிமா நாடு போற்ற வாழ்க நடித்த வீ. சீ. கனேஷன்  நடிகரின் வாரிசு இன்றைய மக்களின் இளைய தளபதி போல மக்கள் தொண்டன் மனக்குமுறல் இப்படி முகநூலில்!

//

28/10/15) <தமிழர்களின் சமகால வரலாறு நமக்கு வழிகாட்டினால் சரி> இந்த நொடியில் என் மனதில்……
".....பொது மன்னிப்பு அடிப்படையில் அனைத்து அரசியல் கைதிகளும் விடுதலையாக வேண்டும் என்பதுதான் என் நிலைப்பாடு. ஆனால், இது ஒரு கூட்டு கட்சி அரசாங்கம். பொது மன்னிப்பு மட்டுமல்ல, அதைவிட குறைந்த கரிசனையையும் கூட தமிழ் கைதிகளுக்கு காட்டப்படக்கூடாது என்ற நிலைப்பாட்டில் அரசாங்கத்துக்கு உள்ளேயே சிலர் பலமாக இருக்கின்றார்கள். இந்நிலையில் ஒரு நடுநிலை முதற்கட்ட தீர்வுதான், இந்த “பிணை” என்பதாகும். உண்ணாவிரதமிருந்த கைதிகளை போராட்டத்தை கைவிடும்படி கடுமையாக அன்று நான் வலியுறுத்தவில்லை. அதுபோல் இன்றும் இந்த தீர்வை ஏற்றுக்கொள்ளும்படியும் வலியுறுத்தவில்லை. தமிழர்களின் சமகால வரலாறு நமக்கு வழிகாட்டினால் சரி என்று மட்டும் நினைக்கின்றேன்...."

 
// உண்மையான  விடுதலைக்கு குரல் கொடுக்கும் இவர் போல இன்று எவர் வடகிழக்கு வாக்கு வங்கியில் சொகுசாக வாழும் பாராளமன்ற உறுப்பினர் உண்டு என்று காட்டுங்கள் என்று முகநூலில் அல்லது, வலையில் எழுதினால்!


 என்னையும் மலையக  பிரதேசவாத முத்திரை குத்தி முகநூல்/வலை என்று வெளிநடப்பு செய்ய வைத்த விடயம் நீ அறியமாட்டாய் பாலன்!



 காரணம் வெளிநாட்டில் இலங்கை  போல இணையச்சேவை மட்டுப்படுத்தும்  நிலை இல்லை அங்கு 24 மணிநேரமும் சுதந்திர நிலை பற்றி  !நீ அறியாய் !!ஏன் அயல் தேச  தமிழகத்தில்  கூட  இணைய சேவைச்சிக்கல் பற்றி புரிந்துகொள்ளாமல் அவரின் பதிவுக்கு பின்னூட்டம் இட்டார் !என்பதிவுக்கு பின்னூட்டம் போடவில்லை. இனி அவரின் தளம் போக மாட்டேன் என்று முகநூலில் தனி்ப்பெட்டிட்டியில் பொங்கும் வாக்கு , பின்னூட்ட விளம்பரப்பிரியர்கள் மனநிலை அறிந்து கொள்வது உனக்கு  கடினம் !




என்றாலும் நான் சாமானிய பாதைசாரி. உன்னிடம் நான் முற்று துறந்த முனி காஞ்சனா போல அல்ல ஆனாலும் என் காதலியை தேடி அவசர விடுமுறையில் வந்தவன் இங்கு!





இருக்கும் ஒவ்வொரு நொடியும் எனக்கு பெறுமதி மிக்க நாட்கள் !ஆனால் அதை புரிந்து கொள்ள ஈழத்தவன்/இலங்கை  குடிமகன் ஒவ்வொருத்தரும் அரபுலகம் அல்லாது  ஐரோப்பா, அமெரிக்கா. அவுஸ்ரேலியா என்று இடம்பெயர்ந்து. புலம்பெயர்ந்தால் தான் புரிந்து கொள்ள முடியும்.இலச்ச இலட்சமாய் பணம் வரப்போகுது என்று வெற்றிக்கொடி கட்டு  சேரன் படம் போல அல்ல நிஜம் என்பதைச்சொல்லி சார்லி பாத்திரம் போல
  உன்னை காயப்படுத்த விருப்பம் இல்லை.


 எப்போதும் போல என் சிரிப்பு உன்னை சாந்தப்படுத்த வேண்டும் என்று நினைத்த அசுரன் பாலனிடம் பேசத்தொடங்கினான் ! உன்னை பிரபல்யப்படுத்த நீ செய்யும் அலட்டல்  அறிவிப்புக்கு கொடுக்கும் முன் உரிமை உன் நிகழ்ச்சி பற்றி ஏனோ அதிகம் சிந்திப்பது இல்லை! அசுரன் எங்கே குட்டுகின்றான் என்பதை புரியாமல் திகைத்தான் பாலன் §


விரைந்து குட்டு விழும்[[[[[[
 

7 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

சுவாரஸ்யம்...

தொடர்கிறேன் தோழர்...

KILLERGEE Devakottai said...

காணொளி ரசித்தேன் தொடர்கிறேன் நண்பா...
தமிழ் மணம் 2

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! பல விடயங்கள் பறபற ரகம்! தொடர்கிறேன் சகோ!

வலிப்போக்கன் said...

தொடருகிறேன் நண்பரே...

Thulasidharan V Thillaiakathu said...

அட! இந்தப் பதிவில் சில தற்போதைய பதிவுகள் நிலை பற்றிய குட்டுகளும் உள்ளனவே சுவாரஸ்யமாய்...ம்ம்ம்ம் குட்டுகள் தொடரட்டும் நாங்களும் தொடர்கின்றோம்...

”தளிர் சுரேஷ்” said...

அவலங்கள் என்று மாறும்?! தொடர்கிறேன்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஆட்சி மாறினாலும் காட்சி மாறாதது வேதனை.