26 October 2015

முகம் காண ஆசையுடன் -28

முன்னம் இங்கே நோக்கி-
http://www.thanimaram.org/2015/10/27.html
 பின்னம் பார்க்க.
 இனி.......
  


சர்வ கட்சி சந்திப்பும் சர்வ மத ஒன்றுகூடலும் சர்வதேச அரசியலுக்கு துணைபோகும் விளம்பரம் அன்றி வேறில்லை !ஆனால் சாமானிய சந்தேக பார்வையில் சிறையில் வாடுவோருக்கு விடுதலை பற்றி பேசவோ?, இல்லை இதுவரை போர் முடிந்து பின்னும் இன்னும் பாதுகாப்பு தடைச்சட்டம் நீக்கும் நினைப்பு நிறைவேற்று முதல் குடிமகனுக்கு நினைப்பில் இல்லை !



ஆனால் பாது்காப்பு நிதியினை மேலும் கூட்ட பாதுகாப்பு விமானம் வாங்க என்று மக்கள்  நிதியை மணல்கொள்ளை போல திருட வழிகாட்ட எந்த சட்டச்சிக்கலும் இல்லை!*




 அதனை பாராளமன்றத்தில்  பேச வேண்டிய அரசியல்வாதிகள் எல்லாம் இடதுசாரி ,மார்க்கிஷம் பேசுவோர் எல்லாம் இனவாத சேற்றினை மட்டும் விதைத்து இனிய நாட்டினை இன்னும் பாதாளம் நோக்கி மடைதிறப்பதில் இருக்கும் நோக்கம்!


 பொதுமன்னிபு வழங்கி எல்லா மக்களையும் இனிய தேசம் இனிது இனிது இந்த நல்லாட்சி என்று சொல்ல ஏனோ எந்த இனவாத தலைவருக்கும் சூரியதேவன்  போல திறந்த மனசு இல்லை !சிறுமி ஒருத்தியின் கடிதம் பார்த்து சிறையில் இருந்த பிணைக்கைதியை உடனே விடுதலை செய்த வரலாறு !




எல்லாம் இந்த இனவாத நல்லாட்சி அரச தலைவர்களும் அரச அதிகார மட்டங்கள் மட்டுமா அவர்களை  திரைமறைவில் வல்லரசு படம் போல வழிநடத்தும்,  பாதுகாப்பு ஆலோசனைக்குழுக்கள் மக்கள் சேவை திட்டக்குழுங்கள், மானிய நிதி கொடுக்கும்  ஊடக வியாபாரிகள் இன்னும் தேர்தல் நிதி என்று அள்ளி வீசி அப்பாவிகளின் மனதை அறிந்த சமூக சேவை அமைப்புக்கள் எல்லாம் ஏனோ இன்று வரை சிறையில் இருப்போர் விடுதலை வேண்டி ஆக்க பூர்வமான செயல்லைக் கொண்டிராமை சாமானிய மக்கள் கூட இன்னும் இனவாத சேற்றில் தவித்த  மீன் பிடிக்கும் அரசியல் செயல் போல வேறில்லை!






 ஆனாலும் சிறையில் இருப்போர் பற்றி துணிந்து எழுத ஏனோ ஊடக நட்புக்கள் முகநூலில் பம்மும் நிலை ஒரு பக்கம் என்றால் !

வலையில் அதுவும் ஈழம் பதிவர் என்ற வட்டமும்,  இலங்கை பதிவர்கள் என்ற தேசிய  அடையாளம் சொல்லும் யாரும் ஏனோ சிறையில் வாழும். வாடும் சின்னப்பறவைகள் பற்றி ஒரு பதிவையும் மனித நேயத்துடன் பகிர முன்வருவது இல்லை !

ஆனால் கூத்தாடியின் புலி இதோ வேதாளம் வருது என்று சுடச்சுட எழுத நேரம் இருக்கு!


 ஆனால் சாதார கைதியினை  இலங்கை ஆட்சி நிறுவாகத்தில் இருக்கும் இன்றைய நல்லாட்சி நாட்டில் கூட ஞாயிறு அல்லது அரச விடுமுறையான போய நாளில் பார்க்க சந்திக்க நேரம் கேட்டு சிறைச்சாலை அதிகாரிக்கு மனுப்போடலாம் என்பதைக் கூட சட்டம் அறிய ஆவல் இன்றி சமந்தா பாட்டி இந்த சேலை விளம்பரத்தில்  இன்னும் மின்னும் அழகின் ரகசியம் பற்றி ஆக்கு வேறு ஆணியாக எழுத தெரிந்த மூத்த வலைப்பதிவர்கள் எவரும் இந்த கைதி விடயம் பற்றி முகநூலில் பேசாது இருப்பதாலும் !\


அவர்களுடன் வாட்சப் முதல் ஸ்கைப் வரை இன்னும் இது பற்றி உங்க நிலை என்ன என்று கேட்டு நொந்து போன இதயம் எழுதிய தனிமரம் பதிவர் போல தான் அசுரன் பதிவரும் முகநூலினை மூடிவிட்டு இப்போது உன் முன்னே இலங்கை தலைநகரில் மீண்டும் நானே வருவேன் நீயா பட இச்சாதாரி பாம்பு  போல அதே அசுரன்!




  முன்னால் வானொலி திட்ட பணிப்பாளர் இப்போது உன் முன்னால் !ஆனால் இப்போது சாதாரண பிரெஞ்சு நாட்டு  சுற்றுலாவாசி போல இந்த நாட்டுக்கு வந்து இருப்பதன் நோக்கம் உனக்கு முகநூலில் சொல்ல மறந்த கதை போல என் காதலி விடயம் என்று சொல்லவில்லை!








 காரணம் இங்கு என் புலம்பெயர் பாரிஸ் வாழ்வு நாட்டு பணத்துக்கு கேட்ட போது அனுப்பும் போதும் நீ கடவுள் என்று முகநூல் தனிச்செய்தியில்  இருக்கும் மரியாதை கூட இதைச்செய் இலங்கையில் என்று கேட்டால் !ஏனோ தட்டிக்கழிக்கும் சோம்போரி நட்புகள் என் முகநூலில் ஆயிரம்! அதனால் தான் போடா இந்த உலகம் வெளிநாட்டு காசு மட்டும் சொர்க்கம் என்று ஒரு பக்கம்


! ஆனால் நண்பனின் காதல் கோட்டை கமலி போல காதலி ஒருத்தி என்ன நிலையில்! எங்கே எப்படி என்ன நிலையில் என்று  ?,,எவனும் தகவல் தரல! ஆனால் முகநூல் தோழி சுமா எல்லாம் தேடி தந்தந்து  அவளும் முன்னால் துரோகி தளபதி  போல வீட்டுக்காவலில் இருக்கும் செய்தி ஏனோ புலம் பெயர் உறவுகள் அறியாது !



இதுக்கு மொழி ஒரு தடை மச்சான் பாலன்! சிங்களம் உனக்கு இப்ப எப்படி நான் அதை மறந்து விட்டேன் முன்னால் வலைப் பதிவர் போல ஆமா நீ இப்ப டிஜே பாலன்!


 இல்ல நாங்கள் அறிவிப்பாளர் என்று நட்சத்திர அந்தஷ்தில் இருந்த காலம் போல இன்று டியே என்று சொல்லும் யாருகும் ரசிகர் பட்டாளம் இல்லை !இன்றைய சினிமா ஹீரோ போல ஒரு காலத்தில் இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள்/அறிவிப்பாளினிகளுக்கு குஸ்பூ போல கோயில் கட்டிய வரலாறு போல இலங்கை வானொலி அறிவிப்பாளர்களுக்கு கிடைத்த பட்டங்களும் ,பாராட்டுங்களும் அவசர உலகில் போட்டி பண்பலையில் பதவி தேடி கட்சி மாறிய அமைச்சர் போல  நீ  முந்தய காலம் மறந்தாலும் நான்  இன்னும் உன் வானொலி அறிவிப்பை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கேட்கின்றேன்!


 ஆனாலும் இப்ப பாரிசில் இருந்து இலங்கையில் வந்து இருப்பது உன் உதவி நாடி பாலன்!

நான் மீண்டும் இங்கே வந்து இருப்பது என் காதலியை தேடி உன் உதவி நாடி !ஆனால் உன் வானொலிக்கு விளம்பரம் தேடி மூத்த முன்னால் குரு என்று நிகழ்ச்சி செய்து சாமானிய என்னை வம்பிள் மாட்ட வேண்டாம் !


அசுரன்   என்ற இன்றைய பதிவர்  பாதை மாறிய பயணங்கள் போல  மீண்டும் இங்கே நம்முடன்  !பாதை தனிவழி என்பதை பாடல் தேர்வில் அறிந்து இருப்பாய்!


ஓம்  சேர்!




 இந்த சேர் பட்டம் வேண்டாம்! இயல்பாக பேசுவோம் !!ஆமா உன் நிகழ்ச்சிக்கு நேரம் ஆச்சு ரயிலுக்கு நேரமாச்சு படம் போல நீ நிகழ்ச்சி செய் நான் வெளியில் இருக்கின்றேன்!\\\\ வானொலி நேயர் போல[[அதே 80 போல இன்று நான் இல்லை ஆனாலும் நீ ஒலிக்க விடும் பாடல் கேட்கும் ஆசையில் ஒருவன்!





தொடரும் விரைந்து!
 

8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

பாடல் தேர்வில் கண்டிப்பாக அறிந்து இருப்பார்...!

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! உண்மைதான் கூத்தாடிகளை எழுத நேரம் இருக்கு!
அவர்களை விடுத்து மற்றவற்றை எழுத யாருக்கும் நேரமுமில்லை அதில் விருப்பமும் இல்லையோ என்னவோ!!!!!!

கரந்தை ஜெயக்குமார் said...

வருத்தத்திற்கு உரிய உண்மைதான் நண்பரே
தம +1

KILLERGEE Devakottai said...

வருத்தமானதே.... தொடர்கிறேன் நண்பரே....
தமிழ் மணம் 4

Thulasidharan V Thillaiakathu said...

உங்கள் ஒவ்வொரு பதிவும் மனதை வேதனிக்கின்றது. நிதர்சனங்களை அவிழ்ப்பதால்..

தொடர்கின்றோம்...

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
அண்ணா
உண்மையின் யதார்த்தம்.. மனதுக்கு வேதனையான விடயம் ..த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

”தளிர் சுரேஷ்” said...

உண்மையை உரத்து சொல்லும் பதிவு! தொடர்கிறேன்!

Yarlpavanan said...

சமகால நிகழ்வுகளை
அழகாக இளையோட விட்டு
தங்களது தனிப்பாணியில்
தொடர் நகருகிறது...
தொடருங்கள்