முன்னம் சுவாசிக்க இங்கே-http://www.thanimaram.org/2016/03/4.html
இனி....
என் தேடல் எதுவென்று
என்னைச்செதுக்கி
என்னைச்சிதைத்து
என்னையும் குருவென்று
ஏற்றிய என் காதலே!
( யாதவன் நாட்குறிப்பில் )
யாரோ ?அது யாரோ ??,பாடி அழைத்தேன் உன்னை , அழைத்தது யாரோ நீதானே என்பது போல அல்ல! பூப்பூக்கும் ஓசை அதைக்கேட்கத்தான் ஆசை என்றும் இல்லை ஏன் இதயம் உடைத்தாய் என்ற பாடல் போலவும் அல்ல யாழிலினியின் கைபேசியின் உள்ளழைப்பு ரிங்டோன்! அது சினேஹாவின் சிறுபிள்ளைத்தன பல்லாங்குழியின் விட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் பாடல் போல இருக்கும் அழைப்பு ஓசை அது.
இந்த பாடல் ஏன் அவளுக்கு பிடிக்கும் என்று சிந்திப்பதுக்கு முன்னரே பாட்டி செல்லம்மா புரிந்துகொண்டாள் யாழினியின் கைபேசிக்கு அழைத்தது யாழினியுன் தாய் லட்சுமி என்பது தன் மூத்தமகள் குணம் அறிந்தவள்!
யாழினியின் ஒற்றை வார்த்தை பதில்கள் மூலம் அறிந்து கொண்டான் யாதவனும். தாய்யின் கைபேசி அழைப்பை.
தாய்க்கும் மகளுக்கும் இடையில் நான் ஏன் மூக்கை நுழைப்பான் என்று ஒதுங்கிய செல்லம்மா பாட்டி நீண்ட பெருமூச்சை விட்டவாரே தூரத்தில் தெரியும் தொடருந்தினை நோட்டமிட்டாள் அழகாய் ஓடும் ரயில் அலுங்காமல் ,குலுங்காமல்.
தாய்க்கும் மகளுக்கும் இடையில் எப்போது கருத்துப் போராட்டம் தொடங்குது ?சிந்தித்தாள் சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயக்காந்தனின் நாவலின் வீரியும் புரியும் .
ஆனாலும் இந்த அதிகாரம் என்ற மகுடம் இலங்கை ஜனாதிபதி பதவி போலத்தான் குவிந்து கிடக்கின்றது தாய் என்ற நிலையில். பதின்ம வயதில் தன் மகள்களுடன் முரண்படுகின்றாள் ஒரு தாய்யானவள் .அதைச்செய்யாதே, இதை பழகு ,இன்னாருடன் இப்படிப்படி நட அடுத்தவரிடம் எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் சிறுபிள்ளைக்கு ஒப்பிவிக்கும் நிலை போல!
எந்தப்பாதை எங்கே பயணம் என்ற பாடல் போல அதுவும் பிரெஞ்சில் சுதந்திர தேசத்து சுந்தர நங்கை யாழினி பேரிளம் பெண் .
நீ என்ன சொல்வது! நான்
படித்தவள் எல்லாம் அறிவேன் என்ற எண்ணம் நெஞ்சில் தங்கினால் ! அங்கே வார்த்தைகள் சிறைப்பாவையாகிவிடும்.
என் சொல்லைக் கேட்பதில்லை என்று முறைப்பாடு பொதுவெளியில் தோன்ற பின் கெளரவம் பாடல் போலத்தான் நீயும் நானுமா என்று ஒருவீடு இருவாசல் போல உள்ளங்களும் தனியே தன்னம் தனியே என்று துள்ளிக்குதிக்கும் அக்கப்போராக.
தலைவன் நிலையோ தாரமா ?தன் பிள்ளையா ?எந்தப்பக்கம் என் பாசம் என்று அன்புள்ள அப்பா போல தவிக்கும் !
இது எல்லாம் இன்றைய வாழ்வின் நிதர்சனம் இந்த போராட்டம் பற்றி எனக்கும் கொஞ்சம் தெரியும் ஏன் என்றாள் எல்லோருக்கும் பொதுவானவன் யாதவன் .
என்ன கேட்டா அம்மா?
கோயிலுக்கு யார்கூட போறாய் என்ற ?அவளின் ஒற்றை வார்த்தையின் பதில் மேலே ஏதுவும் கேட்க வேண்டாம் என்பது போல !
ஆனாலும் கார்கால ஆன்மீக சாமிக்குள்ளும் இதயம் துடிக்கும் சொல்லத்துடிக்குது மனசு போல ஏன் உன் அம்மாவிடம் சொல்லி இருக்கலாம் யாதவன் கூடப்போறேன் என்ற கற்பனைக் குதிரை கடந்த கால பூந்தோட்டம் படப்பாடல் மீட்டாத ஒரு வீணை போல உன்னை நினைத்தாலும் இந்த தனிமரம் வெட்டிப்பயல் எங்கே இந்த ரயிலில் வந்துவிடுவானோ என்ற கலக்கமும் சேர்தது . அவன் வந்தால் பாட்டாளே கொல்வான் அவன் பாட்டு இதுவோ???
அவனை தொடர்பு கொள்ள மனம் நினைத்தாலும் யாழினி பார்க்கவே பிடிக்காதவன் அவன்! என் நட்பு என்ற வட்டம் அறிந்தவன் ஆனால் இவளோ !
தொடரும்

8 comments :
பல திரைப்படப்பாடல்களை நினைவில் வைத்து அதனூடே கதையை நகர்த்திச் செல்லுகின்றீர்கள். நன்றாக இருக்கின்றது எப்படி இப்படி திரைப்பட பாடல்களுடன் சரியான இடத்தில் வைத்து எழுதுகின்றீர்கள் தனிமரம் நேசன்!! தொடர்ங்கின்றோம்...
நல்லதொரு பகிர்வு நண்பரே சார்லி சாப்லின் தத்துவத்தை ரசித்தேன்
ஆனாலும் இந்த அதிகாரம் என்ற மகுடம் இலங்கை ஜனாதிபதி பதவி போலத்தான் குவிந்து கிடக்கின்றது //
அதானேப் பார்த்தேன் என்னடா அந்தப்பக்கம் இன்னும் டச் பண்ணலையேன்னு ஹா ஹா ஹா ஹா...
சார்லி சாப்ளின் தத்துவம் அருமை....
பதிவு அருமை நண்பரே
தொடருங்கள்...
கலைஞர் சோனியா ...கேடாய் முடிந்த நட்பு மீண்டும் துளிர் விடலாமா :)
பாடல்களுடன் கதையை நகர்த்துவது என்பது உங்களுக்கேயுரிய தனிச்சிறப்பு.......எதிர்பார்த்தேன் இளங்கிளியை காணவில்லையே.....
அருமை....
தவிர்க்க இயலாத காரணத்தால், கடந்த ஒரு வார காலமாக, வலையின் பக்கமே வர இயலாத நிலை. அதனால் தங்களின் சில பதிவுகளைப் பார்க்காமல் விட்டிருப்பேன் இனி தொடர்வேன் நண்பரே
Post a Comment