01 November 2011

நொந்து போகும் ஓர் இதயம்-14

இந்தப் பகுதியில் அரசியல் பார்வை தவிர்த்து சாதாரண குடிமகனாக எண்ணிப்பாருங்கள் என் பதிவின் ஆதங்கம் புரியும். கருத்து உடன் பாடு இல்லை எனில் விவாதிக்கத் தயார்!//

------//://////////://
குடும்பத்தில் தலைமகன் நல்ல தேர் ஓட்டியாக இருக்காமல் போனால் குடும்பம் என்ற தேர் சந்தி சிரிக்கும்.

 இடப்பெயர்வும்,யுத்தமும் நம் தேசத்தில் ஆண்களை காவு கொண்டது. ஒரு புறம் என்றால்!

 வீட்டில் இருந்து கொண்டு பாதுகாப்புப் படையினை குறை சொல்லிக் கொண்டு உழைக்காத தறுதலை குடும்பத்தலைவன்கள் பலர்!

 சோம்போறிகளாக இருக்கும் இன்னொரு முகத்தினை ஈழம் முகாம்















என்ற போர்வையில் வழங்கிக் கொண்டு இதுக்கின்றது.

 1994 சந்திரிக்கா ஆட்சியின் சமாதான காலகட்டத்தில்.






















 தாயகத்தில் சாந்தியும் சமாதானமும் கிடைக்கும் என்ற ஆவலில் மண்டபம் முகாமில் இருந்த பலர்.

 குடும்பம் சகிதமாக  வவுனியாவிற்கு வந்த போது அரசு அவர்களை குடியேற்றிய முகாம்தான் சிதம்பரபுரம் முகாம்.


இந்தமுகாமில் தாயகத்தின் பல பகுதி மக்களும் இருந்தார்கள்.

 அருகில் விவசாயபூமி செழித்து இருந்த போதும் உடல் உழைப்பை விரும்பாமல் அரசு கொடுத்த நிவாரண உலர் உணவின் பெரும்பகுதியை நகரில் விற்றுவிட்டு தம் சுயதேவையை போக்கீனார்கள்.

 தன் குடும்பத்தை முன்னேற்ற சிலர் வெளியேறினார்கள்.


 சோம்போறிகள் சிலர் அரசினைக் குறை கூறிக்கொண்டு  அருகில் இருக்கும் மினிசினிமாவில் ஸ்கிலா படம் பார்த்துக் கொண்டும் ,
கசிப்புக் குடித்துக் கொண்டும், காட்ஸ் விளையாடிக்கொண்டும், இருந்த மன்னர்கள் மீது எனக்கு எப்போதும் நக்கீரன் பார்வைதான்.

 அரசு திட்டமிட்டே இவர்களை  சுதந்திர உணர்ச்சி அற்றவர்களாக இருக்க வேண்டும்!

 என்ற ஆவலில் அதிகமான கில்மா படங்களை தம் கைக்கூலிகள் மூலம் மினிசினிமாவில்  தங்கு தடையின்றி  ஒலி/ஒளி  காட்சிகளாக்கினார்கள்.

 முகாம் அருகில் தேனீர்க்கடை இருக்காது மூன்று மினிசினிமா ஹவுஸ்புல் காட்சியாக இருக்கும் .

 அருகில் இராணுவம் இவர்களுக்கு பாதுகாப்பு அரண்  அமைத்திருக்கும்.

 இந்த முகாம் வாழ்க்கையின் சீரலிவை வைத்து  என்னால்
பலபதிவுகள் போடமுடியும்!

 ஆனால் கலாச்சார நடுநிலையாளர்கள் என்னையும் ராஜபக்ஸயின் அன்னக்காவடி என்பார்கள்!

 இங்கு இருப்பதிலும் பார்க்க அவர்கள் அரசகட்டுப் பாடு இல்லாத பகுதியில் போய் இருந்தால் திருந்தி இருப்பார்கள் என்று என் நினைவுகள் !

.நண்பன் ஓட்டை வடை ஒரு நண்பனின் பின்னூட்டத்திற்கு  மறுமொழி போட்ட போது!
 அவர்கள் அப்படித்தான் அரசினையும் குறை சொல்வார்கள். மறுதரப்பினர்களையும் குறை சொல்லிக் கொண்டே ஓசியில் உடம்பு வளர்ப்பார் என்று உண்மையை போட்டு உடைத்தார்


.அது நிஜம் !

இவர்கள் தம் குடும்பம் சீரலிய அவர்கள் பராதம் போல் சீட்டு ஆடுவார்கள்!

" ஏய்யா வேலைக்குப் போகவில்லை என்றால் "

நான் மன்னர்குடி மைனர் மகன்  என்பார்கள்.

 கேட்பவர் கேணயன் என்ற தொனியில்!

.தங்கள் பிள்ளைகள் மனைவி எவ்வளவு துயர் கொள்கிறார்கள் என்று எண்ணமாட்டார்கள்!

 இவர்கள் வீட்டுப் பத்தினிகள் எல்லாம் பாமரமக்கள் என்பது இன்னொரு துயரம்.

 மனுசன் ஓடிப்போய் விடுவான் என்று இன்னொரு வம்சத்தை மட்டும் எந்தக் கூச்சமும் இல்லாமல் பெத்துப் போடுவார்கள். பூனை குட்டிபோட்டது போல்!

 ஒரு நிமிடம் ஜோசியுங்கள் !

மூத்தமகள் மணம் முடிக்கும் வயதில் இவர்கள் இன்னொரு வாரிசைத் தொட்டிலில் ஆடவிடுவார்கள் .

எத்தனை காமுகன் அருகில்! தங்கள் வாரிசுகள் நிம்மதியாக நித்திரை கொண்டார்களா?
 போதிய மனச்சந்தோஸத்துடன் இருக்கிறார்களா?

 அவர்கள் ஆசை. பாசம் என்ன என்று எண்ணாத இந்த மக்கள் மீது எனக்கு எப்போதும் .

மேட்டுக்குடி ஊடகம் போல் பாராமுகம் போல் இருக்க முடியாமல்  வவுனியாவிற்கு வந்து இவர்கள் கையேந்தும் நிலை பொறுக்காமல நாம்
சிலர் குழுவாக பாடசாலை செல்லும் வசதி செய்து கொடுத்தும் மறுநாள் இவர்கள் கையேந்திய நிலை கண்டு கைவிரல் கன்னத்தில் வைத்தவன்.

 தன்பிள்ளையை தான் தான் அனுப்பினேன் அவன்(ள்) தான் எங்களுக்கு வருமானம் ஈட்டும்  மூலதனம் என்ற போது மகாநதி படம் எல்லாம் ஒரு தூசு!

 இந்த முகாமில் இருந்து குலமாதுகள் விலைமாதுகள் ஆகி எந்த விடுதிகளில் எந்த அறையில் இருந்தார்கள் என்று என் குழுவுக்குத் தெரியும்!

 இது ஒன்றும் காணாமல் போனோரைக் கண்டுபிடிக்கும் ஆணைக்குழு அல்ல!

 இதை இப்படிச் சொல்லக்கூடாது என் பிரதேசத்தின் உண்மையை ஹிட்சிக்கா வியாபாரம் ஆக்காதே! என்று முகம் தெரியாமல் தனிமெயிலில் வரும் நண்பனுடன் மோத தனிமரம் என்றும் தயார்!

 நானும் இந்தமண்ணில் வாழ்ந்த மைந்தன். நானும் வன்னியான் தான்!

.ஆனாலும் என் கோபம் தீராதநதி!

 .இந்த
முகாமிற்கு போவதே எனக்கு நாசி முகாமிற்குப் போகும் உணர்வு என்பதால் வியாபார
நிமித்தம் பணி முடிந்து திரும்பும் போது தான் ரவியையும் பார்த்திமா இருவரையும் அந்தக் காட்சியில் நான் இக்கரையில் கண்டேன்!

நல்ல பதிவுகளை ஊக்கிவித்து பின்னூட்டம் போட்டும், வாக்குப் போட்டு ஊக்கி விக்காத கும்மிப் பதிவாளர் போல்!  மறு கரையில் இந்தமுகாமுக்கு வியாபாரம் செய்ய போனபோதுதான் அக்ரம் அவர்களை அந்த காட்சியில் கண்டது .

பிரபல்ய கம்பனிகள் கைவிட்ட வியாபாரம் இங்கு இருப்பது நம் சில நண்பர்களுக்குத் தான் தெரியும்!

அக்ரம் கண்களில் கோபத் தீ! தன் மதினி செயல் இப்படி என்று எண்ணும் போது நல்ல ஒரு மருமகனுக்கு வரும் கோபம் இயல்பானதே!
/////////:

////////:

ராகதேவனின் ஜோடிப்புறா அம்மா ஜீவா  அவர்களின் பிரிவு வேதனையில் வாடும் குடும்ப உறவுகளிக்கு  ஒரு   ரசிகனின் கண்ணீர் அஞ்சலிகள்!

















13 comments :

K.s.s.Rajh said...

வணக்கம் அண்ணே வழமையான இந்தத்தொடரின்.....திசை இந்தப்பதிவில் மாறியுள்ளது போல ஓரு உணர்வு.....

அண்மைக்காலமாக பதிவுலகில் என்ன நடக்கின்றது என்று எனக்குப்புரியவில்லை.....

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?

அகதி முகாம் அவலங்களைச் சுமந்த வாறு தொடர் நகர்கிறது.

யார் பாஸ் அந்த கும்மி பதிவர்?

ஹி.....ஹி...

தனிமரம் said...

வணக்கம் ராச்
ஒரு பால்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

கோழி பிடிக்கும் காட்சியில் ஹீரோவை மட்டும் பார்ப்பவன் சாதாரன ரசிகன் அதன் பின் புலத்தில் என்ன காட்சிகள் காட்டப்படுகின்றது என்பதை ரசிப்பவனே ரசனையாளன் என்பது என்கருத்து 
கதைபயணிக்கும் போது பின் புலம் எப்படி இருந்தது என்பதைத்தான் இப்பகுதியில் கூறியிருக்கின்றேன்  திசை மாறவில்லை என்பதை வரும் தொடர் அறுதியிட்டும் கூறும் ராச்!

தனிமரம் said...

அண்மைக்கால பதிவுலகைப்பற்றி நோக் கொமெண்ஸ் தனிமரத்தை விட்டுங்க சகோ!விரைவில் தொடர் முடிக்கனும்!

தனிமரம் said...

இனிய காலைவணக்கம் நிரூ!
முருகன் அருளாலும் புத்தன் ஆசியாலும் நலமே!
நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஏய்யா குறும்பு கும்மியில் இருப்பவர்களை தனிமரத்துடன் மோதவிடும் நிணைப்போ??? மரமே ஒரு கும்மிதானே !

MANO நாஞ்சில் மனோ said...

உங்கள் வேதனையும் குமுறலும் கோபமும் புரிகிறது மக்கா, உங்கள் வேதனையில் நானும் பங்கு கொள்கிறேன்....

MANO நாஞ்சில் மனோ said...

ராகதேவனின் ஜோடிக்கிளிக்கு எனது அஞ்சலிகள்....

MANO நாஞ்சில் மனோ said...

இதுலையுமே இணைக்காமல் விட்டுட்டீங்களே என்னாச்சு...???

Yoga.S. said...

வேண்டாம் நேசன்,பொறுமை!ராகதேவனின் ஜோடிக்கிளிக்கு எனது அஞ்சலி.

Anonymous said...

அகதி முகாம் ...சமாதான காலம்...ஓட்டை வடை...
திசை மாறி தொடர் நகர்கிறது....

விரைவில் தொடர் முடிக்கனும்//

-:)

ஹேமா said...

இளையராஜா அவர்களின் துணைவியாரின் மறைவுக்கு என் அஞ்சலிகள் !

உங்கள் பதிவில் உவமைகள்தான் உச்சம் நேசன் !