17 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -05

நாவுக்கரசர் சிறையில் இருந்து தேவாரம் பாடினார்!

ஆனால் நம்ம ஈழத்து யுத்தம். எத்தனை அப்பாவிகளை போராட்டத்துக்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தில் சம்மந்தம் இல்லாமல் சிறையில் வாடுகின்றார்கள்

.சிறைநிறைப்புப் போராட்டம் என்றும் சிறை எனக்கு ஓய்வு அறை என்று அறிக்கைவிடும் தமிழ்த் தலைவர் என்று சொல்லும் குறளோவியம் தீட்டியவர் அறிவாரா ?

நம் தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் பயங்கரவாதம் என்ற போலியான குற்றச்சாட்டில் வாழ்வையும் ,வாலிபத்தையும் தொலைத்து விட்டு விழி மூடியளுவதை .
அடிக்கடி அடுத்த நாடுகளுக்கு அறிக்கைவிட்டும் அன்னக்காவடி எடுக்கும் எம் சாக்கடை விற்பனர்கள் .
இன்னும் பாராளமன்ற கதிரையில் ஒட்டியிருக்கும் பூச்சி மூட்டைகள் இன்னும் எத்தனை நாள் அப்பாவிகளை வெற்று வாக்குறுதி கொடுத்து விடியலைநோக்கிய திசையை காட்டாமல் போவார்கள்,? சிறையில் உண்ணாவிரதம் ,சிறையில் கைகலப்பு ,என்று செய்தி தரும் ஊடகங்கள் இந்தச் சிறைகளில் வாடும் சந்தேகத்தின் பெயரில் பிடிப்பட்டு சிறைகளில் இருக்கும் சந்ததி பற்றி பேசமறுக்கின்றது . ஊடக சுதந்திரம் இல்லை என்று சொல்லிக்கொண்டு நடிகையின் முந்தானையில் குளிர்காயும் நிலை ஒரு புறம் என்றால். இலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டியவர்கள், ஈழத்துத்து இலக்கியத்தை செளுமை செய்ய வேண்டியவர்கள் .வாசகர்கள் சரியில்லை என்று இன்னும் வருந்துவதை என்ன சொல்லுவது. சிறையில் வாடும் பலரிடம் பல கதை இருக்கும் .அப்பாவி மலையக மாந்தர்கள் எல்லாம் தமிழனாக பிறந்த பாவத்துக்கு அநியாயமாக சந்தேகம் மற்றும் உடந்தையாக இருந்தார்கள் என்று வாடும் நிலை பேசமறுக்கும் புலம்பெயர்குழுக்கள் அறிக்கைப்போர் செய்கின்றார்கள். வடகிழக்கில் சந்தேகம் தந்த பரிசு சகோதரமொழி தெரியாமலும் ,பொருளாதார வசதி இல்லாமலும் சிறையில் சீரழியும் கதையை பேசமறுக்கின்றோம் புலம்பெயர் புதிய தலைமுறையிடம் . ஆனால் அவனை சிறையில் போடணும் இவனை சிறைப்பிடிக்கணும் என்று அவலக்குரல் கொடுப்பவர்கள் எல்லாம் முதலில் இந்த பாதுகாப்பு குந்தகம் என்று பொய்க்குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்களை மீட்டு எடுக்கும் வழி காட்ட வேண்டும்.
இரண்டு வருட சிறை வாழ்க்கையை வெளியில் சொன்னால் வெட்கம் என்று நான் நினைக்க மாட்டன் .கோடியில் சீதனம் வாங்கும் சமுகத்தில் வந்த மகனாக. தன் மகன் சிறையில் இருக்கின்றான் என்று ஏங்கும் பல குடும்பத்தின் துயரம் தெரிய வேண்டும் பலருக்கு. சொல்ல வேண்டியவர்கள் மெளனம் காப்பது இனியும் கூடாது . எனக்கு இனவெறியில்லை இல்லை தனிநபர் பொருளாதாரம் விடுதலை காணவேண்டித்தான் தனியார் துறையில் வேலைக்குச் சேர்ந்தேன். வாலிபமும் சுதந்திரமும் ஜாலியான சினேகமும் என்னையும் சாலிக்காவுடன் சிங்களத்து சின்னக்குயிலே வசந்த ராகம் பாடவா என்று எல்லைக்கிராமம் மதவாச்சியில் சிந்து பாடிய காலம் எல்லாம் நானும் ஒரு சாமானியன் ..
ராஜபக்ச குடும்பத்தில் ஒரு தமிழன் மருமகன் ஆகும் போது ஏன் ?!நான் எல்லைப்படையில் இருந்தவள் கூட காதல் போர்களம் காணக்கூடாது . எல்லையில் இருப்பவளுக்கும் இதயம் துடிக்கும் காதல் மொழி பேசினால் ! என் துரதிஸ்ரம் அவள் குண்டு வெடிப்பில் உயிர் துறந்தாள். அன்பளிப்பு என்றுகாசுகேட்டு கொடுக்காத நிலையில் பொலிஸ் உதவியோடு இராணுவம் குண்டு இருந்தது வானில் என்று சோடித்த கரங்களில் இருந்து. இனியும் இந்த நாட்டில் நீதிமன்றம் நிலையான விடுதலை தருமா ?என்ற நிலையில் பிணையில் வந்த என்னை இன்னொரு நாட்டுக்கு அனுப்ப உதவியர் ஒரு சகோதரமொழி அதிகாரி . அன்று நானும், ஜீவனும் கட்டுநாயக்கா விமானநிலையம் ஊடாக தாய் விமானத்தில் எறிய பின்னிரவை மறக்க முடியாது.
அன்று தான் பின்லாடனை தேடி அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் முதல் போர் தொடுத்த இரவு .எங்கள் நட்பிலும் போர் வந்தது பின்கதவு வழியால் நாட்டைவிட்டு போவதால். .யாருக்கும் சொல்ல முடியாது உயிர் வாழவேண்டும். சகோதரிகளுடன் பிறந்தவன் ,மூத்தவன் உழைத்து சேர்ந்த காசு எல்லாம் நீதிமன்ற செலவுக்கு கரைந்து போன வலி புரியாது . வெளிநாட்டுக்குப் போனதில் சிரித்துக்கொண்டு படத்தில் இருக்கின்றான் என்பவர்கள் இன்று . அன்று எல்லாம் ஒரு நாள்கூட வந்து சிறையில் பார்க்கவில்லை. எதிர்பார்த்து இருந்த நேரத்தில் . ஆபத்துக்கு என் தாய்க்கு உதவிக்கரம் நீட்டவில்லை உறவுகள். எங்கோ பிறந்த சாலிக்காவின் அப்பா தான் எங்களுக்கு உதவியாக இருந்தார். அவள் தம்பிதான் எனக்கும் ஜீவனுக்கும் சாப்பாடு கொண்டுவருவான் சிறப்பு நாளில் சிறைக்கு. அதனால் தான் சிங்களவனை வெட்டணும் ,கொத்தணும் என்று சொல்லுபவர்கள் மீது கோபம் வருகின்றது . இனவாதிகளை எதுவும் செய்யுங்கோ சாதாரன அப்பாவிகளும் ,விடுதலைக்கு ஆதரவுக்குரல் கொடுப்போரையும் சிங்களவன் என்ற வட்டத்துக்கு மட்டும் வருவதை நாம் பிரித்து அறியத் தெரிந்து கொள்ள எல்லா வெளிநாட்டு வாசிகளாலும் முடியாது. எல்லா இனத்திலும் இனவாதிகள் இருக்கின்றார்கள். வெளிப்படையாக சில அரசியல்வாதிகள் காட்டுகின்றார்கள் பலர் ஆதரிக்கின்றார்கள் வாய் மூடி. அதுதான் அரசியல் இந்த அரசியல் .எனக்கு வேண்டாம் என்றுதான் நானும் எங்கள் நிறுவனத்தை விட்டு ஓடிவந்தது. எனக்கு உதவியதுக்கு சாலிக்காவின் தம்பி அடைந்த துயர் பலருக்குத் தெரியாது. .வன்னி மண் இரட்டைப்பெரியகுளம் கடந்து மதவாச்சி வரை ஊர்ந்து வரும் வாகனத்தில் பயணித்தால் வரும் நுனா ,வாகை மரங்களின் முதுகில் பல கதையிருக்கும். சகோதரமொழி நங்கைகளின் ஏக்கம் காதல் என நீளும் மரங்கள் எழுதிய கதைகள் எல்லாம் ஏரிக்கரை ஊடகம் தூக்கி வீசினாலும். சமதர்மம் என்று சொல்லிவிட்டு இனவாதம் பேசும் நிலையில் யாராவது வழிப்போக்கர்கள் எழுதுவார்கள் நம் கதையை எதிர்காலத்தில் .என்னடா மச்சான் ரவி என்ன எழுதுகின்றாய் .நீயும் ராகுலுடன் சேர்ந்து நாட்குறிப்பு தொடங்கிவிட்டாய் போல? ம் சிறையில் இருந்தகாலத்தில் எதுவும் எழுதவில்லையே ஜீவன் !ம்ம் விமானம் டேக் ஓவர் ஆகின்றது. கொஞ்சம் நித்திரை கொள்வம் தாய்லாந்து போய் யோசிப்போம் !

27 comments :

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,முதலில் இருந்தே படிக்க வேண்டும்........................ஓரிரு நாட்களில்......

தனிமரம் said...

இரவு வணக்கம் யோகா ஐயா முதலில் பால்க்கோப்பி குடியுங்கோ!

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,முதலில் இருந்தே படிக்க வேண்டும்........................ஓரிரு நாட்களில்......//ம்ம் மெதுவா படியுங்கோ முதலில் உடல்நிலையை கவனியுங்கள் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.

MANO நாஞ்சில் மனோ said...

பயங்கரமான வலியா இருக்கே மக்கா....? மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு ராத்திரி....!

Athisaya said...

வணக்கம் சொந்தமே!வாழ்த்துக்கள்.ஈனால் முழுதும் படித்துவிட்டு மேற்கொண்ட கருத்திடுகிறேன் உறவே!

தனிமரம் said...

பயங்கரமான வலியா இருக்கே மக்கா....? மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கு ராத்திரி..//ம்ம் வலி எல்லாம் கடந்து போகும் அண்ணாச்சி நல்ல தூக்கம் வந்தால்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம் சொந்தமே!வாழ்த்துக்கள்.ஈனால் முழுதும் படித்துவிட்டு மேற்கொண்ட கருத்திடுகிறேன் உறவே!//ம்ம் நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

எனக்கும் ஒரு கப் ஸ்ரோங் ரீ தாங்கோ...

இம்முறை பதிவு மனதை கொஞ்சம் கவலையாக்குகிறது...

Angel said...



இன்று கொஞ்சம் வேலையாதலால் வர தாமத ஆகி விட்டது நேசன் ..
பதிவு மனம் கனக்க வைத்தது அதற்கேற்ற பாடலும் ...

Angel said...

யோகா அண்ணா ..take care of your health .

ஹேமா said...

இங்கும் ராகுல் வாறார்.பதிவு ஆரம்பமே இப்பிடியிருந்தால்....கஸ்டம்தான்.ஆனாலும் பழகின ஒண்டு போலவும் இருக்கு நேசன்..தொடருங்கோ !

நெற்கொழுதாசன் said...

ஒவ்வொரு ஈழதமிழனுக்குள்ளும் வலிகள் மட்டும் குறைவில்லாமல் .....................
ஒரு இடத்தில் மட்டும் முரண்பட தோணுது நண்பா,தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் ???
என்ன காரணத்தால் விட்டில் பூச்சிகளை ஒப்புவிக்கிரின்கள் என்று விளங்கவில்லை !
பிரன்சுக்காரி 5 _ஆரம்பம் சாட்டை
இறுதி _சாமரம்
வாழ்த்துக்கள்.இன்னும் மலையகத்தில் முகம் தொலைத்தவன் வாசிக்கவில்லை நேரம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கு வாசிப்பேன் எப்படியும் ...........

Yoga.S. said...

angelin said...

யோகா அண்ணா ..take care of your health ./////காலை வணக்கம் சகோதரி அஞ்சலின்!உடலுக்கு ஒன்றுமில்லை.மனசு தான்...............ஊரைப் போய்ப் பார்த்த போது...........................இங்கேயே இருந்திருக்கலாமோ?

Yoga.S. said...

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!மன்னிக்கவும்,முதலில் இருந்தே படிக்க வேண்டும்........................ஓரிரு நாட்களில்......//ம்ம் மெதுவா படியுங்கோ முதலில் உடல்நிலையை கவனியுங்கள் ஐயா! நன்றி வருகைக்கும் கருத்துக்கும்.////நன்றி,நேசன்!உடலுக்கு என்ன?அதெல்லாம் ஒன்றுமில்லை.சீ என்று ஆகி விட்டது.ஆற்ற முடியாத ரணம் சுமந்து வந்திருக்கிறேன்.போயிருக்க வேண்டாமோ????????????????

திண்டுக்கல் தனபாலன் said...

வேதனை தரும் பகிர்வு...

கவி அழகன் said...

Valikkirathu

தனிமரம் said...

எனக்கும் ஒரு கப் ஸ்ரோங் ரீ தாங்கோ...

இம்முறை பதிவு மனதை கொஞ்சம் கவலையாக்குகிறது...

17 August 2012 13:51 //ம்ம் பால்க்கோப்பிதான் அதிரா!ஹீஈஈஈஈஈஈஈ
ஈ ம்ம் கதைகள் அப்படி !ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

இன்று கொஞ்சம் வேலையாதலால் வர தாமத ஆகி விட்டது நேசன் ..
பதிவு மனம் கனக்க வைத்தது அதற்கேற்ற பாடலும் ...

17 August 2012 14:01 //ம்ம் நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

யோகா அண்ணா ..take care of your health .

17 August 2012 14:04 //ம்ம் அதுதான் என் விருப்பமும்!

தனிமரம் said...

இங்கும் ராகுல் வாறார்.பதிவு ஆரம்பமே இப்பிடியிருந்தால்....கஸ்டம்தான்.ஆனாலும் பழகின ஒண்டு போலவும் இருக்கு நேசன்..தொடருங்கோ !

17 August 2012 15:36 //ம்ம் நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஒவ்வொரு ஈழதமிழனுக்குள்ளும் வலிகள் மட்டும் குறைவில்லாமல் .....................
ஒரு இடத்தில் மட்டும் முரண்பட தோணுது நண்பா,தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் ???
என்ன காரணத்தால் விட்டில் பூச்சிகளை ஒப்புவிக்கிரின்கள் என்று விளங்கவில்லை !//ம்ம்

இன்னும் பலர் சிறையில் விடுதலையில்லாமல் வாழும் நிலை அப்படிச் சொன்ன்னேன்! நெற்கொழுவான்!ம்ம்

தனிமரம் said...

ஒவ்வொரு ஈழதமிழனுக்குள்ளும் வலிகள் மட்டும் குறைவில்லாமல் .....................
ஒரு இடத்தில் மட்டும் முரண்பட தோணுது நண்பா,தேசத்தில் எத்தனை விட்டில் பூச்சிகள் ???
என்ன காரணத்தால் விட்டில் பூச்சிகளை ஒப்புவிக்கிரின்கள் என்று விளங்கவில்லை !
பிரன்சுக்காரி 5 _ஆரம்பம் சாட்டை
இறுதி _சாமரம்
வாழ்த்துக்கள்.இன்னும் மலையகத்தில் முகம் தொலைத்தவன் வாசிக்கவில்லை நேரம் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கு வாசிப்பேன் எப்படியும் ...........

17 August 2012 18:28 // நன்றி வருகைக்கும் கருத்துரைகும்.

தனிமரம் said...

வேதனை தரும் பகிர்வு...

18 August 2012 00:35 //ம்ம் நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

Valikkirathu//ம்ம் நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துரைக்கும்!

மாலதி said...

மனதை கவலையாக்குகிறது..

விச்சு said...

பதிவு மனதினூடே மிகவும் நெருக்கமாகவே செல்லுகிறது. ஆனால் வலியும் சேர்ந்துதான். முதல் பதிவுக்கு அப்புறம் இன்றுதான் சேர்ந்தாற்போல் படித்தேன்.

ஆத்மா said...

காதலியை இன்னும் உருக்கமாக்குங்காள்.....
அந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது