24 August 2012

உருகும் பிரெஞ்சுக்காரி -07

"தான் ஆடவில்லையம்மா தசையாடுது அது தந்தை என்றும் மகன் என்றும் சதிராடுது "

என்று கவியரசர் பாட்டில் வரும் வார்த்தை எத்தனை துயரமானது என்று யார் பார்த்தோம்???

இன்றும் காணாமல் போன மகனை,மகளை,பேரனை,பேர்த்தியை தன் உறவைத் தேடி காவல் நிலையமும் ,மக்கள் குறை தீர்க்கும் குழுவிடமும்,மனித உரிமைக்குழு என்றும் அலையும் குடும்பங்கள் நம்நாட்டில் இரண்டு பக்கத்திலும் இருக்கின்றது .


இது எல்லாம் சின்னத்திரையில் அடுப்படியில் .பட்டுப்சாரியில் பல நகைபோட்டு வரும் பாத்திரம் போல இல்லை. இந்த மக்கள் முகம் அழது அழுது வீங்கிய கண்கள் ஆயிரம் கதை சொல்லும் !

.வெளிநாட்டில் ராஜவாழ்க்கை வாழ்கின்றாய் என்று முகநூலில் நெஞ்சில் குத்துவோருக்கு புரியாது கடல்கடந்தவர்கள் .காத்தாலை விமானம் ஏறி மாலையில் ஐரோப்பா வந்ததில்லை அரச தலைவர் போல.

அகதியாக அலைந்து வந்தவர்கள் .!

"நேற்றும் என் கனவில் வந்தான் ஐயா என்ற அம்மா என்று "

என் பிள்ளை என்று காவல்நிலையத்திலும் ,மனித உரிமை ஆணைக்குழுவிலும் அழும் கண்ணீர் நீலிக்கண்ணீர் இல்லை சின்னத்திரைபோல நிஜக் கண்ணீர்.!!

பெற்றபிள்ளைகள் பாசம் இனவாத போருக்குத் தெரியாது. இனவாதம் வாய்ப்பூட்டுப்போட்டகதைகள் பல .


இனவாதம் போராளிடம் அதிகமாக மனிதவழு இழப்பை சந்திக்கும் போது இராணுவக்கட்டுப்பாட்டு ஊடகங்கள் உண்மையான இழப்பைச் சொல்லாது !!


பெட்டியில் வந்த உயிர்கள் எத்தனை என்றால் ஆயிரம் என்றாலும் நூற்றில் சொல்லிய கதை வெளியில் பல ஊதுகுழல் ஊடகம் ஊதிச் சொல்லும் மோதலில் படையின் இழப்பு இத்தனையாம். என்றுவிட்டு இனவாதம் வென்றுவிடும் என்று வேதம் ஓதும் .


வந்த உடல்களை அனுராதபுரம்,மன்னார்,முன்னரங்கம் தாண்டிக்குளம் பகுதியில் இரவோடு இரவாக சாம்பல் ஆக்கிய கதையை வெளிநாட்டு ஊடகம் ஒன்றுக்கு நெஞ்சு பொறுக்காமல் சொன்ன காரணத்துக்கு துப்பாக்கி நீதி கிடைக்க காத்திருந்த போது!

கண்ணீல் கலர் வண்ணம் தலையில் முடிவண்ணம் மாற்றி முகம் மாற்றி வந்தவன் தான் நாமல் !

இவனை நான் மன்னாரில் விற்பனைப் பிரதிநிதியாக இருந்தபோது நேரில் பார்த்தேன். ஒரு அதிகாரியான ஒரு தரத்தில்.

அம்மையார் காலத்தில்!ம்ம் மகாசிவாரத்திரிக்கு கேதீஸ்வரம் போய் பாலாவியில் நீராடவும் தேவை இவரின் பாதுகாப்பு ஒப்புதல் அனுமதி.முதலில் அவர் அனுப்பும் பட்டியல் பின் தர அதிகாரி தீர்மானிப்பார் என்ற நிலை ஒருகாலத்தில் !ம்ம் .

காலம் மனங்களை யுத்தம் செதுக்கும் ஒருத்தனை என்பதா ?இல்லை இனவாதம் சிதைக்கும் என்பதா ?

பாலாவியில் என்னோடு தீர்த்தம் ஆடியவன் பிரெஞ்சுக்காதலியை சந்திக்கும் சூழல்வரும் என்று நான் கூட நினைக்கவில்லை .ஜீவனுடன் ஏற்பட்ட நட்புநிமித்தம் .

கலிகாலம் என்பதா ?ம்ம் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் கோபம் கடந்து கேட்கவேண்டும் .மரங்கள் செழிக்கும் போது இலை,கொப்பு என சேர்ந்து சிரிக்கும். உறவுகள் பட்டுப்போனால் !மரங்கள் காய்ந்த விறகு என வேர்களில் பச்சத்தண்ணீர் ஊற்றியவர்கள்விட வெண்நீர் ஊற்றியவர்கள் அதிகம் .


இது புரியாமல் வெளிநாடு போன நீ ஆணவம் பிடித்தவன் அடங்க மறுக்கின்றாய் என்றால் ?எப்படி ??
அன்று தாய்லாந்தில் நாமலை அடையாலம் கண்டுகொண்டாலும், உள்பயத்துடன் தான் எங்கலோடு பயணித்தான் . தாய்லாந்து நகரின் பாங்கொக் நட்சத்திரவிடுதியில் இருந்து தாய்லாந்தின் இன்னொரு நகரான ஹாட்சாய் போன அன்று இரவு ! .அந்த இரவில் தாய்லாந்து வாசிகூட இன்னொரு முகம் நம்மவர் முகம் முன்னர் பார்த்த முகம்! தொடரும்... கொப்பு - மரத்தின் கிழை/வாது!

12 comments :

தனிமரம் said...

உருகும் பிரெஞ்சுக்காதலி -07// என்று வரவேண்டும் தாழ்மையுடன் தனிமரம்!ம்ம்

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!ஒரே மூச்சில் இப்போது தான் முன்னைய ஆறு பாகங்களையும்(பக்கங்கள்)படித்தேன்!உணர்ச்சி மிகுதியானது.எழுத்தில் வடித்து ஆசுவாசப்படுத்துதல் எல்லோராலும் முடியாது,தொடருங்கள்!!!

Yoga.S. said...

இன்று பால் கோப்பி எனக்கு இல்லைப் போலும்?வேறு யாரோ ஒருவர் முதல் கருத்து இட்டிருக்கிறாரே?அவருக்குக் கொடுங்கள்,ஹ!ஹ!ஹா!!!!!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உள்ளம உருகும் வண்ணம் உள்ளது நண்பரே!எத்தனை சோகங்கள்! எத்தனை காயங்கள்! எத்தனை இழப்புகள்!எங்கள் வார்த்தைகள் சற்றேனும் ஆறுதல் அளிக்கட்டும்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

படிக்கும்போது மனம் கனக்குது நேசன்.

ரஜனியின் பாடலும் நல்ல பொருத்தமான பாடல்...

யோகா அண்ணனுக்கு வேண்டாமாம், அப்போ மங்கோ யூஸை எனக்குத் தாங்கோ..

K.s.s.Rajh said...

வாழ்க்கை போராட்டத்தின் கதை
அந்த பாடல் மிகவும் பொருத்தம் எத்தனை முறை கேட்டாலும் மனதை வருடும் பாடல்

விச்சு said...

வெளிநாட்டில் ராஜவாழ்க்கை வாழ்கின்றாய் என்று முகநூலில் நெஞ்சில் குத்துவோருக்கு புரியாது கடல்கடந்தவர்கள் படும்பாடு.. உண்மைதான் நேசன்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான பகிர்வு! நன்றி!

இன்று என் தளத்தில்
சித்துண்ணி கதை!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_25.html
பிறந்த குழந்தை பேசியது! பரவிய வதந்தி!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_1427.html

ஹேமா said...

பாட்டே போதும் நேசன்....இந்தப் பாட்டுக் கேக்கிற நேரமெல்லாம் அப்பிடியே உறைஞ்சுபோவன்..அப்பிடியொரு குரலும் வசனமும்......நான் செய்த தீங்கு என்ன....விடுகதை வேண்டாம்.மூச்சு விலக நேரம் வேணும்.காவியுடை தீர்மானிக்காது மனதின் அவலங்களையும் ஆசைகளையும் !

ஹேமா said...

வெளிநாட்டு வாழக்கையை அழகாக வர்ணிக்கிறார்கள்.வெளித்தோற்றத்தை மட்டுமே கண்டு....பாசம் மற்றும் தேசப்பற்றுள்ளவர்களிடம் மட்டும் கேட்கட்டும்...கதை சொல்வோம் எம் கண்ணீர் இரவுகளைக் குழைத்து !

ஹேமா said...

**காலம் மனங்களை யுத்தம் செதுக்கும் ஒருத்தனை என்பதா ?இல்லை இனவாதம் சிதைக்கும் என்பதா ?


சிரிப்புத்தான் வருது நேசன்....அழிஞ்சே போனம்.பிறகென்ன !

நெற்கொழுதாசன் said...

கொஞ்சம் ஓய்ந்திருந்த கணத்தில் நிறைய நடந்திடுத்து ,இருங்க மிச்சத்தையும் வாசிச்சுட்டு வாறன்