30 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -10

தூதுக்குழு அனுப்புகின்றோம்,விசாரணை செய்கின்றோம்,ஆராய்கின்றோம் என்று அறிக்கை சமர்ப்பிக்கும் அடுத்த கட்சியில் இருந்து வந்தவரும் !

உண்ணாவிரதம் இருக்கின்றேன் என்று உலகிற்கு படம் காட்டும் தலைவர்.அவரினதும் ,அவர் குடும்பத்து தொலைக்காட்சியும் காட்டாத கதைகள் பல இருக்கு ஈழத்தவன் வாழ்வில் நிஜமுகம் காட்ட.

அது எல்லாம் நித்தியானந்தா போல வசூல் ஆகாது .

அதுதான் அகதிகள் கப்பல் உண்ணாவிரதம் எல்லாம் காட்சிப்படுத்த மாட்டார்கள் .தமிழர்களுக்கு.

அகதி என்றால் ?அ--உயிர்!

கதி என்றால் _நிற்கதி =உயிர் நிற்கதி என்று எங்கோ படித்த ஞாபகம் .

நித்தியானந்தா ஆச்சிரமத்தில் இல்லை.

இது எல்லாம் வியாபார உலகம் என்று ஒத்து ஊதுவோருக்கு உண்மை தெரிய வேண்டும் .

ஈழத்தவன் வரலாறு இனியும் இருட்டடைப்பு செய்யும் காலம் இல்லை .நவீன இலத்திரணியல் பரவிக்கிடக்கும் பூமி.

நித்தியானந்தாவை ஆபாசமாக நள்ளிரவில் காட்சிப்படுத்த முடியும் என்றால்.

ஏன் தாய்லாந்து என்றால் முகம் சுழிக்க வேண்டும் ?

சேகரும் தாய்லாந்து வாசி மங்கையுடன் தான் சல்லாபிக்கவில்லை சம்சாரியாக வாழ்கின்றான்.

அன்று என்னோடு பேச்சுக்கொடுத்தான்.

ரவி வெளிநாட்டுக்கு வெளிக்கிட்டன் .ஊரில் எப்படி கடவுச்சீட்டு எடுப்பது என்றே கொழும்பு வந்த பின் தான் தெரியும். அந்தளவுக்கு எங்கள் நாட்டுக்கல்வித்திட்டம் தெளிவான விடயங்கள் இல்லாத அரசகருமங்கள். காசு கொடுத்து பாஸ்போட் எடுத்து தாய்லாந்துக்கு உல்லாசவிசாவில் வந்தேன்.!

ஓட்டியாக வந்தவன் என் பையில் ஓட்டி வைத்த பொருட்கள் எனக்குத் தெரியாது.

நானும் வெளிநாட்டு ஆசையில் உயிர் தப்பினால் போதும் என்று வந்துவிட்டேன் .உள்ளே இறங்கிய பின் தான் தெரிஞ்சது என் பையில் போதைப்பொருள் வைத்தவிடயம்.

பிறகு என்ன தாய்லாந்து சிறைவாழ்க்கை என்னையும் ,இவனையும் (சுவா)சேர்த்துவிட்டது.

அண்ணவைப் பார்க்க வந்த இவன் (சுவா ) தங்கை தாய்லாந்துவாசி .இரக்கப்பட்டாள் என் மீது.

இப்ப ஒரு மகன் எங்களுக்கு.

இந்த ஓட்டி வேலையும் ஒரு வியாபாரம் தான் .தாய்லாந்து மொழி தெரிந்தால் அதிகம் சம்பாதிக்க முடியும்.

காசு கொடுத்தால் சிறையில் இருந்து கூட சில்மிசம் செய்ய்யலாம் .

இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கொண்டு போன போது. சுவா காசு கொடுத்து என்னை இங்கேயே தங்கவைத்துவிட்டான்.

இங்க காசு வீசி எறிந்தால் தருணம் பார்த்து தப்பிவிடலாம்.

என்றாலும் எனக்கு உயிர்பாதுகாப்புக் கொடுத்த நாடு தாய்லாந்து. அதுதான் !நான் இங்கேயே செட்டில் ஆகிவிட்டேன்.


என்னைப் பார்த்தவிடயம் யாரிடமும் சொல்ல வேண்டாம் ரவி.

நிச்சயம் சொல்லமாட்டன் சேகர் அண்ணா.

இப்ப நாங்கள் எங்க போறம் ?எப்ப போய்ச்சேருவம் ஐரோப்பா?

எனக்கு வேலை உங்களை எல்லாம் ஹாட்சாயில் சேர்ப்பது மட்டும் தான் .

அதன் பிறகு மற்ற ஓட்டிபொறுப்பு .

ஓ அப்படியா?

ஹாட்சாய் எங்க இருக்கு ?hat-yai

அது மலேசியாவுக்கு அருகில் இருக்கும் நகரம் .

இரண்டு நாட்டுக்கும் இடையில் எல்லைப்பாதைக்கு அன்மித்த நகரம்.

அப்ப இனி நீங்க கூட வரமாட்டீங்களா ?

இல்லை உனக்கு மட்டும் என் கைபேசி எண் தருகின்றேன் .ஏதாவது அவசரம் என்றால். கதை .

எப்ப போய்ச் சேருவோம் ?

நாளை மாலையில் ஹாட்சாயில் இருப்போம் .

பஸ் தொடர்ந்து ஓடும் ஜோசிக்கத் தேவையில்லை ரவி.

நித்திரை வந்தால் நித்திரைகொள்.

இல்லை சேகர் அண்ணா .

இப்ப எல்லாம் நித்திரை நேரம் கெட்டுப்போச்சு .

ஏன் ?

அது எல்லாம் விதி இரண்டு வருட இருட்டறை வாழ்க்கையில் நித்திரை சிதறிப்போச்சு !
ம்ம் எனக்கும் ,ஜீவனுக்கும் .

!ம்ம் எங்க நாட்டில் யுத்தம் வந்தபின் எத்தனைகதைகள் பலரின் வாழ்வில்.


நடக்கும் விதியின் வழியில் போவோம்.

அதுவும் சரிதான் சேகர் அண்ணா.

நான் நித்திரை கொள்ளமாட்டன் முன்னால் மச்சான் கூட கதைக்கப்போறன் .சரி அண்ணா.

இரவின் ஒளியில் தாய்லாந்து வீதிகள் மனதில் சூரியன் வானொலியில் நேற்றைய காற்று நிகழ்ச்சி போல சுகம் தரும்.

டேய் ஜீவன் நித்திரை பிறகும் கொள்ளமுடியும்.

இந்த வீதிகளைப்பாருடா !

யாழ்ப்பாணத்தில் இப்படி இருந்தால் ,வவுனியாவில் இருந்தால் ,எப்படி இருக்கும் வேலை செய்ய .

கிரவல் ரோட்டில் ஓடியே முதுகுவலி வந்துவிடும் அவஸ்த்தை .

டேய் நித்திரைகொள்பவனை எழுப்பி ஏண்டா உயிர் வாங்குகின்றாய் ?

இனவாதம் இருக்கும் வரை ரோட்டும் போடமாட்டாங்க ,மனுசர்களை நிம்மதியா இருக்கவும் விடமாட்டாங்க .

விசர் கனவு காணாமல் இப்படியே பார்த்து ஏக்கம் கொண்டு இரு.

எனக்கு எதுவும் தேவையில்லை இப்ப நித்திரை கொள்ளவிடு

.சரி நீ படு நான் இந்த வீதிகளில் சாலிக்காவோடு கனவில் டூயட் பாடப்போறன்!
தொடரும்.

26 comments :

Angel said...


///ஓட்டியாக வந்தவன் என் பையில் ஓட்டி வைத்த பொருட்கள் எனக்குத் தெரியாது.///


படிக்கும்போது பயங்கரமா இருக்கு .. இந்த கஷ்டம் எல்லாம் படிக்கும் போது ...யாரைத்தான் நம்புவது ?? தான் வாழ பிறரை குழியில் தள்ள தயங்கா மனிதப்பிறவிகள் ..
பதிவிக்கு பொருத்தமான பாடல் ..

ஒருவரை துன்பபடுத்துவது அவரை அதிகம் நேசிக்கும் நபர்தான் ..ஆங்கில சப் டைட்டில்ஸ் பாடலை விளக்கி சொல்லிச்சி !!

தனிமரம் said...

வாங்க அஞ்சலின் நலமா ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில்!ம்ம்

தனிமரம் said...

/ஓட்டியாக வந்தவன் என் பையில் ஓட்டி வைத்த பொருட்கள் எனக்குத் தெரியாது.///


படிக்கும்போது பயங்கரமா இருக்கு .. இந்த கஷ்டம் எல்லாம் படிக்கும் போது ...யாரைத்தான் நம்புவது ?? தான் வாழ பிறரை குழியில் தள்ள தயங்கா மனிதப்பிறவிகள் ..
பதிவிக்கு பொருத்தமான பாடல் ..

ஒருவரை துன்பபடுத்துவது அவரை அதிகம் நேசிக்கும் நபர்தான் ..ஆங்கில சப் டைட்டில்ஸ் பாடலை விளக்கி சொல்லிச்சி !!//ம்ம் நம்புவதும் பின் சீரழிவதும் தானே நம் வாழ்க்கை!ம்ம் நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஒருவரை துன்பபடுத்துவது அவரை அதிகம் நேசிக்கும் நபர்தான் ..ஆங்கில சப் டைட்டில்ஸ் பாடலை விளக்கி சொல்லிச்சி !!//ம்ம் பிரெஞ்சுக்காரிக்கு புரிந்தாள் நண்பன் சந்தோஸப்படுவான்!ஹீ !!

Angel said...

காப்பிக்கு நன்றி நேசன் ..
மகளுக்கு பள்ளி துவங்கப்போது ..லீவ் ரொம்ப சீக்கிரம் முடிந்தார்போலிருக்கு ..அதான் யூனிபார்ம் எல்லாம் லேபில் செய்து கொண்டிருக்கேன் ..அவ்வப்போ நண்பர்கள் வலைபூவையும் எட்டி பார்த்துக்கொண்டே .....

Angel said...

எப்போதும்போல கடமை அழைக்குது சப்பாத்தி சுடும் கடமை .இன்னிக்கு கொஞ்சம் லேட்:)) வருகிறேன் நாளை மீண்டும்

Yoga.S. said...

இரவு வணக்கம்,நேசன்!வலி தொடர்கிறது!அனுபவித்ததில்லை இதையெல்லாம்,படிக்கவே.........................கனக்கிறது.சுமந்தவர்களுக்கே தெரியும் சுமையின் வலி!

Yoga.S. said...

இரவு வணக்கம்,அஞ்சலின்!////angelin said...
எப்போதும்போல கடமை அழைக்குது சப்பாத்தி சுடும் கடமை .இன்னிக்கு கொஞ்சம் லேட்:))////சலிக்கவில்லை????ஹ!ஹ!ஹா!!!!

தனிமரம் said...

காப்பிக்கு நன்றி நேசன் ..
மகளுக்கு பள்ளி துவங்கப்போது ..லீவ் ரொம்ப சீக்கிரம் முடிந்தார்போலிருக்கு ..அதான் யூனிபார்ம் எல்லாம் லேபில் செய்து கொண்டிருக்கேன் ..அவ்வப்போ நண்பர்கள் வலைபூவையும் எட்டி பார்த்துக்கொண்டே!ம்ம்ம் நன்றி அஞ்சலின் தனிமரத்திற்கும் அக்காள் உறவு இருக்கு அஞ்சலின் போல!ம்ம்

தனிமரம் said...

எப்போதும்போல கடமை அழைக்குது சப்பாத்தி சுடும் கடமை .இன்னிக்கு கொஞ்சம் லேட்:)) வருகிறேன் நாளை மீண்டும்//ம்ம் முடிந்தால் பலரோடு சந்திபோம்!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

இரவு வணக்கம்,நேசன்!வலி தொடர்கிறது!அனுபவித்ததில்லை இதையெல்லாம்,படிக்கவே.........................கனக்கிறது.சுமந்தவர்களுக்கே தெரியும் சுமையின் வலி!//இரவு வணக்கம் யோகா ஐயா!வலியை தொட்டால் வலிதானே!ம்ம் சுமந்தவர்கள் பலர் நம் தேசத்தில்!!ம்ம்

தனிமரம் said...

இரவு வணக்கம்,அஞ்சலின்!////angelin said...
எப்போதும்போல கடமை அழைக்குது சப்பாத்தி சுடும் கடமை .இன்னிக்கு கொஞ்சம் லேட்:))////சலிக்கவில்லை????ஹ!ஹ!ஹா!!!!

30 August 2012 12:34 //ஹீ கடமையா சப்பாத்தியா யோகா ஐயா சலிக்கவில்லை இல்லை கல் அரிசியில் சலிப்பது அதுவா!ஹீ ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ!

ஹேமா said...

**அகதி என்றால் ?அ--உயிர்!

கதி என்றால் _நிற்கதி =உயிர் நிற்கதி என்று எங்கோ படித்த ஞாபகம் .**

அருமையான விளக்கம் நேசன்.உண்மையில் அகதி எனும் வலியைவிட அ+கதி நிறையவே வலிக்கிறது !

ஹேமா said...

வெளிநாடு போகத் தொடங்கிய காலங்களைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.தாய்லாந்துப் போதைப்பொருள் கடத்தல்...இதில் நம்மவர்கள் நிரையப்பேர் சிக்கியதாக அறிந்திருக்கிறேன் !

ஹேமா said...

இசைக்கு மொழி வேண்டாம்.அழகான இதமான பாடல்.ஏதாவது தமிழ் பாடலின் சாயல் இருக்கா
இந்தப்பாட்டில் ?

Seeni said...

mmmmmmm.....

திண்டுக்கல் தனபாலன் said...

நடக்கும் விதியின் வழியில் போவோம். - வரிகளின் வலியை உணர்கிறேன்...

சரி.. ரீ... கனவில் டூயட் நல்ல படியாக முடிந்ததா...?!

நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (3)

ஆத்மா said...

இங்கயும் நித்தியா.>:0

இன்னுமொரு முறை மொத்தமாக படிக்க ஆசைப்படுகிறேன்...
10 காதலியையும் மொத்தமாக படித்தாத்தான் என் கண்ணுக்குள்ள பிரஞ்சுக் காதலி நிப்பாவு

செங்கோவி said...

Good...Following..

தனிமரம் said...

**அகதி என்றால் ?அ--உயிர்!

கதி என்றால் _நிற்கதி =உயிர் நிற்கதி என்று எங்கோ படித்த ஞாபகம் .**

அருமையான விளக்கம் நேசன்.உண்மையில் அகதி எனும் வலியைவிட அ+கதி நிறையவே வலிக்கிறது !

30 August 2012 16:10 
//வாங்க ஹேமா வலி அதிகம் தானே!ம்ம்

தனிமரம் said...

வெளிநாடு போகத் தொடங்கிய காலங்களைக் கண்முன் கொண்டு வந்திருக்கிறீர்கள்.தாய்லாந்துப் போதைப்பொருள் கடத்தல்...இதில் நம்மவர்கள் நிரையப்பேர் சிக்கியதாக அறிந்திருக்கிறேன் !

30 August 2012 16:14 
/ம்ம் பார்த்து இருக்கின்றேன்!ம்ம்ம்

தனிமரம் said...

இசைக்கு மொழி வேண்டாம்.அழகான இதமான பாடல்.ஏதாவது தமிழ் பாடலின் சாயல் இருக்கா 
இந்தப்பாட்டில் ?

30 August 2012 16:19 
//ம்ம் தமிழில் இருக்கு நான் ரசித்தவரையில்!

தனிமரம் said...

நன்றி சீனி அண்ணா வருகைக்கு!

தனிமரம் said...

நடக்கும் விதியின் வழியில் போவோம். - வரிகளின் வலியை உணர்கிறேன்...//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

சரி.. ரீ... கனவில் டூயட் நல்ல படியாக முடிந்ததா...?! ம்ம்???

நன்றி... தொடர வாழ்த்துக்கள்... (3)

30 August 2012 19:02 
நன்றி தொடர்வருகைக்கு தனபாலன் சார்!

தனிமரம் said...

இங்கயும் நித்தியா.>:0

இன்னுமொரு முறை மொத்தமாக படிக்க ஆசைப்படுகிறேன்...
10 காதலியையும் மொத்தமாக படித்தாத்தான் என் கண்ணுக்குள்ள பிரஞ்சுக் காதலி நிப்பாவு

30 August 2012 22:44 
//நல்லா படியுங்க சிட்டுக்குருவி!:))) நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

Good...Following.. 
//நன்றி செங்கோவி ஐயா வருகைக்கும் கருத்துரைக்கும் எல்லாம் உங்க ஆசீர்வாதம்!ம்ம்