02 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -2

பாரிசில்  இருந்து உறவுகள் எல்லாரும் நாளை  சிங்கப்பூர் வருவினம்


நீ முன்னால் போய் அங்கே( சிங்கப்பூர்  )பாலன் வருவான் .அவனோடு எல்லா ஒழுங்கும் செய்.

தேவை என்றால் கோல் பண்ணு. மறந்திடாத கலியாண எழுத்துக்கொப்பி முக்கியம் எங்கட சம்பிராதாயத்தை விட சட்டப்பதிவு முக்கியம் பிரெஞ்சுக்காரனுக்கு..

மச்சாள் அழகில் மயங்கி எடுக்க வேண்டிய தஸ்தாவேஸ்களை மறந்திடாத. போடா நான் மயங்க நினைச்சா நம்ம விற்பனைப்பிரதிநிதி தொழிலில் எத்தனை பேரைப்பார்த்தோம். . பழைசை எல்லாம் கிளறாத வவுனியா ,கொழும்பு, மலையக வாழ்வு ,சிறையில் சில மாதங்கள் எல்லாம் பார்த்துத் தானே இனவாத பேய்களால் .நானும் நீயும் பாரிஸ்  வந்தோம்! சரிடா நான் போட்டுவாரன். .ஜீவன் போகும் எமிரேட்ஸ் விமானத்தின் உள்நுழைவு வரவேற்கின்றது பயணிகளை ..
இன்று போகும் ஜீவன் யார்? இவனுக்கும் ராகுலுக்கும் எப்படி தொடர்பு ? இல்ல அவனை அனுப்பி விட்டு காத்திருக்கும் நான் யார் ? நினைச்சுப்பார்த்தால் இந்த 31 வயதுக்குள் தான் ஈழத்தில் பிறந்த பாவத்துக்கு எத்தனை அனுபவத்தையும் யாசிப்பையும் இந்த மாயக்கண்ணன் ஊதிச் செல்கின்றான் ஒரு கீதைப் பாதையாக.!
இது எல்லாம் அகதியான மக்களுக்கு அமைதியான நாடு கேட்பேன் எழுதிய கவிஞன் எல்லாம் அறியாத ஒன்று. என்னடா ரவி போவம்` ஜீவன் தான் போயிட்டானே . ஒரு பியர் வாங்கு சதீஸ் . ரவி வட்டிக்கார முருகேசர் கள்ளுக்குடித்தாலும் வெளியில் தெரியாது. வெற்றிலை போட்டு மறைத்துவிடுவார் பேரன் பியர் டின் கையில். இதைப்பார்த்தா யாருடா உனக்கு பெண்கொடுப்பாங்க.? அது எல்லாம் ஊரில் சொல்லும் கதை இங்க விசாக்கார மாப்பிள்ளை என்றால் தாயகத்தில் இப்ப எந்தப்பெரிய கடைக்காரணும் ஓடி வருவாங்க நாடு இருக்கும் நிலையைப் பார்த்து. பார்த்தாய் தானே ஜீவனுக்கு எத்தனை டிமாண்ட் .உதவாக்கரை என்று திட்டிய மாமா முதல் உறவு வேண்டாம் என்று போன மாமா அதுமட்டுமா அவன் வேலை செய்த தனியார் துறை முதலாளி வரை. யாழிலில் மட்டும் இல்ல மச்சான் கொழும்பில் கூட அந்த முதலாளி மகராசன் பெரிய புள்ளி . அவர் தான் எங்களுக்கு முகவரியே பல்தேசிய கம்பனியில் விற்பனைப்பிரதி நிதி வேலைக்கு சேர உந்து சக்தி.. அவரே தன் அக்காள் மகளை கட்டு என்று கேட்டும் அவன் வேலை செய்த முதலாளி வீட்டில் மருமகன் ஆக மாட்டன் என்று விட்டு என் மச்சாளை கட்டுவது போல எனக்கும் ஒரு மச்சாள் இருக்கின்றாள் கவலைப்படாத நீ.
இப்ப என்ன? குடிக்கின்ற நான் என்ன குறைஞ்சா போயிட்டேன்?. வேலைக்களைப்புக்கு ஒரு பியர் குடிக்கின்றேன். நான் குடிச்சுப்போட்டு என்ன ரோட்டிலா கிடக்கின்றன்? பாரு பிரெஞ்சுக்காரன் எல்லாம் சாப்பிடும் போது ஒரு கப் வைன் எடுக்கின்றான். அதுசரி உன்னோட் கதைச்சு வெல்ல முடியாது . உன்கூட சேர்ந்து ஜீவனும் கெட்டான் நீ தான் நிசாவோடு அவனை சேர விடாமல் அவனுக்கு மூலச்சலவை செய்தது. அடப்போடா நான் என்ன செய்தன் வாழ்க்கையில் கலியாணம் காலா காலாத்தில் கட்டணும்` .
பார்க்கின்றாய் தானே ஊரைவிட்டு ஓடிவந்து குளிருக்குள்ளும் வெயிலிலும் வாடுறம் . 20மணித்தியாளம் நெருப்பில் உடன் பிறந்த கடனோட வந்தம் .எல்லாரையும் பொறுப்பு முடிச்சு திரும்பிப் பார்த்தால் கையில் பணமும் இல்லை தலையில் முடியும் இல்லை . இதோ இருப்பது இந்த தொப்பை வண்டிதான் . அதுசரி நீ பீரா வயித்துக்கு இறைச்சா பின்ன வண்டி வராமல் என்ன வரும். எனக்கு பின்னேரம் வேலை ரவி நான் போறன்.! நீ வீட்டை போ கடிதம் வந்தால் பார்த்து வை! ஜீவன் வர ஒரு மாதம் ஆகும் . . சதீஸ் வேலைக்கு போகும் போது அப்படியே சிவாக்கு ஒரு 100 ஈரோ கொடு நான் இரவு தாரன். !! ஜீவன் க/கில் சேர் சரி !தொடரும்

24 comments :

Seeni said...

mmm.....

நெற்கொழுதாசன் said...

நல்ல சாட்டு பீர் குடிக்க நிறைய பேர் உதைதான் சொல்லுகினம்
யதார்த்தங்களுடன் நகர்கிறது கதை,காத்திருக்கிறேன் ...........

திண்டுக்கல் தனபாலன் said...

தொடருங்கள்...

பகிர்வுக்கு நன்றி...
(த.ம.2)

sathishsangkavi.blogspot.com said...

//வேலைக்களைப்புக்கு ஒரு பியர் குடிக்கின்றேன்.//

இப்படி உண்மைய சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டிங்கறாங்கப்பு...

தனிமரம் said...

mmm...../// நன்றி சீனி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நல்ல சாட்டு பீர் குடிக்க நிறைய பேர் உதைதான் சொல்லுகினம்
யதார்த்தங்களுடன் நகர்கிறது கதை,காத்திருக்கிறேன் ...........

2 August 2012 17:50 // நன்றி நெற்கொழுவான் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

தொடருங்கள்...

பகிர்வுக்கு நன்றி...
(த.ம.2)// நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

//வேலைக்களைப்புக்கு ஒரு பியர் குடிக்கின்றேன்.//

இப்படி உண்மைய சொன்னா யாரும் ஒத்துக்க மாட்டிங்கறாங்கப்பு...

2 August 2012 23:03 //நன்றி சங்கவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

கவி அழகன் said...

Thodarunkal beers alla kathaiyai

ஆத்மா said...

எல்லாரையும் பொறுப்பு முடிச்சு திரும்பிப் பார்த்தால் கையில் பணமும் இல்லை தலையில் முடியும் இல்லை . இதோ இருப்பது இந்த தொப்பை வண்டிதான்
//////////////
பல பொறுப்ப்புகளை சுமந்தவனுக்கு சொத்தாக அமைவது தொப்பை மட்டும்தானே......
தொடருங்கள்

Angel said...

நேசன் நலமா ..கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் .
கதை அருமையாய் பயணிக்கிறது தொடருங்கள் நானும் தொடர்கிறேன்.

யார் அந்த தேவதை பாடல் அருமை

ஹேமா said...

நேற்றே போட்டாச்சா...அடுத்தடுத்து வருமெண்டு நினைக்கேல்ல.

படங்கள் இந்தமுறை கலக்கல்.அருமையான தேர்வு.

பாட்டும் ரசனை ரசனை நேசன் !

ஹேமா said...

எங்கட ஆக்களுக்கு குடிக்கிறதென்கிறது பெரிய விஷயம் இல்லாட்டிக் கூடாத விஷயம் மாதிரி.ஏன் அப்பிடி?அளவோட குடிச்சால் அது ஒரு விருப்பம்தானே.கோப்பி குடிக்கிறமாதிரி.குடிக்கிறதுக்காக வாழாமல் வாழ்றதுக்காக குடியுங்கோ வெள்ளைக்காரன்போல.அதுதான் அழகு.குடிச்சால்தான் தைரியம்வரும் எங்கட ஆக்களுக்கு !

Anonymous said...

படிச்சிட்டேன் அண்ணா எல்லாரும் ஒரே குடிகாரப் பயலுகளா இருக்காங்க ...ஹேமா அக்காள் வேற ரப்போர்ட் ...இருந்ஹோ மகளே மாமா வரட்டும் மாட்டி கொடுக்ன் ... ..

இன்டைக்கு பதிவு இல்லையோ ..நாளை காக பிஸி யா இருப்பீங்கன்னு நம்புறேன் ....துஷி அண்ணா குழுமம் எங்கு இருக்கு அண்ணா ..அது முக நூலா ...இல்லை வேறு எதேனுமா ...

தனிமரம் said...

Thodarunkal beers alla kathaiyai

3 August 2012 04:02// நன்றி கவிக்கிழவன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எல்லாரையும் பொறுப்பு முடிச்சு திரும்பிப் பார்த்தால் கையில் பணமும் இல்லை தலையில் முடியும் இல்லை . இதோ இருப்பது இந்த தொப்பை வண்டிதான்
//////////////
பல பொறுப்ப்புகளை சுமந்தவனுக்கு சொத்தாக அமைவது தொப்பை மட்டும்தானே......
தொடருங்கள்// ம்ம் உண்மைதான் சிட்டுக்குருவி. நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேசன் நலமா ..கொஞ்சம் லேட்டா வந்திட்டேன் .
கதை அருமையாய் பயணிக்கிறது தொடருங்கள் நானும் தொடர்கிறேன்.

யார் அந்த தேவதை பாடல் அருமை

3 August 2012 06:54 // நன்றி அஞ்சலின் அக்காள்வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

நேற்றே போட்டாச்சா...அடுத்தடுத்து வருமெண்டு நினைக்கேல்ல.

படங்கள் இந்தமுறை கலக்கல்.அருமையான தேர்வு.

பாட்டும் ரசனை ரசனை நேசன் !

3 August 2012 14:45 // நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

எங்கட ஆக்களுக்கு குடிக்கிறதென்கிறது பெரிய விஷயம் இல்லாட்டிக் கூடாத விஷயம் மாதிரி.ஏன் அப்பிடி?அளவோட குடிச்சால் அது ஒரு விருப்பம்தானே.கோப்பி குடிக்கிறமாதிரி.குடிக்கிறதுக்காக வாழாமல் வாழ்றதுக்காக குடியுங்கோ வெள்ளைக்காரன்போல.அதுதான் அழகு.குடிச்சால்தான் தைரியம்வரும் எங்கட ஆக்களுக்கு !//ம்ம் உண்மைதான் ஹேமா.

தனிமரம் said...

படிச்சிட்டேன் அண்ணா எல்லாரும் ஒரே குடிகாரப் பயலுகளா இருக்காங்க ...ஹேமா அக்காள் வேற ரப்போர்ட் ...இருந்ஹோ மகளே மாமா வரட்டும் மாட்டி கொடுக்ன் .//
ஆஹா! .. ..

இன்டைக்கு பதிவு இல்லையோ ..நாளை காக பிஸி யா இருப்பீங்கன்னு நம்புறேன் ....துஷி அண்ணா குழுமம் எங்கு இருக்கு அண்ணா ..அது முக நூலா ...இல்லை வேறு எதேனுமா .// துசியின் முகநூல் குழுமம்.! நன்றி கலை வருகைக்கும் கருத்துரைக்கும்..

4 August 2012 10:22

Athisaya said...

வணக்கம் சொந்தமே!இங்கு சந்திப்பத மகிழ்ச்சி.!!!தொடருங்க தொடருங்க..ரசித்துப்படிக்க்காத்திருக்றேன் தொடர்ந்தும்.வாழ்த்துக்கள்.

மில்லியனெயார் ஆகும் அதிரா:) said...

ஓ ஃபிரெஞ்சுக் காதலி அழகாகப் போகுதே... பிரெஞ்சுக் காதலி எனச் சொல்லிப்போட்டு சிங்கப்பூர் பயணமானால் எப்பூடி?:).

லா ஷபேலும், ரெயினும் அழகு..

போனபாடல் கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிரம்மா சூப்பர்... இப்பாடலும் அழகு.

தனிமரம் said...

Athisaya said...
வணக்கம் சொந்தமே!இங்கு சந்திப்பத மகிழ்ச்சி.!!!தொடருங்க தொடருங்க..ரசித்துப்படிக்க்காத்திருக்றேன் தொடர்ந்தும்.வாழ்த்துக்கள்.
5 August 2012 10:17 //நன்றி அதிசயா வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஓ ஃபிரெஞ்சுக் காதலி அழகாகப் போகுதே... பிரெஞ்சுக் காதலி எனச் சொல்லிப்போட்டு சிங்கப்பூர் பயணமானால் எப்பூடி?:).

லா ஷபேலும், ரெயினும் அழகு..

போனபாடல் கல்யாணம் ஆயிரங்காலத்துப் பயிரம்மா சூப்பர்... இப்பாடலும் அழகு.

5 August 2012 14:31 // ம்ம் நன்றி அதிரா வருகைக்கும் கருத்துரைக்கும்.