07 August 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -3

நம்மவர்களை எங்களின் உணர்வுகளோடு சந்திக்க வேண்டும் என்றால் எல்லாரையும் ஆரியகுளம் சந்தியில் டியூசனுக்கு போனவர்கள் போல கியூவில் சந்திக்கும் இடம் தான் லாச்சப்பல் .

இங்கே நம்மவர்களின் அடுப்படி முதல் ஊரில் யார் வெள்ளைவான் கடத்திவிட்டது வரை கதையளக்கும் ஒரு பகுதி என்றால் .

இன்னொரு குழு டாக்குத்தர் படத்துக்கு பீரா ?பால் ?ஊத்துவது வரை அறிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீர்க்கோப்பையுடன் .

வாழ்க்கையில் ஒரு காலத்தில் சந்தியில் நின்றால் .உதவாக்கரை என்று திட்டினாலும் இங்கே இந்தச் சந்தியில் நின்றால் தான் ஏதாவது வேலை கிடைக்க வழி பிறக்கும் ,.

இல்லை தன்னைபோல ஒத்தசாயல் உள்ள விசா நபரைச்சரி சந்திக்கலாம்.

ஊரில் எப்படி சுதந்திரமாக இருந்திருப்பம் இஞ்ச வந்து சமரிக்கு காசு கொடுக்கவே இன்னொருத்தர் தயவில் வாழும் நிலை என நொந்து போகும் படலம் .ஒரு புறம் சிலர் என்றால்.

இன்னும் பல கதை இங்கு இருக்கும் ஹீரோவுக்கு பஞ்சு டயலாக் எழுதியும் ,வெளிநாட்டுப்படத்தைச் சுட்டுக்கதை தயாரிக்கும் இயக்குனர்களுக்கு எல்லாம் அங்காடித் தெரு போல ஆயிரம் கதை இங்கு இருக்கு. என்ன எல்லாம் அதிகம் புலம்பல் என்பதால் தீராநதிபோல இந்த கதைகள் எல்லாம் பலருக்கு பிடிக்காது .

நடிகையின் சதையையை மட்டும் நம்பி விசில் ஊதும் கூட்டத்துக்கு.

ஆனாலும் எங்களுக்கும் ஒரு காலம் வரும் நிச்சயம் நானும் குழுவாக ஒரு முழுநீளப்படம் செய்வேன் .அதற்கு முன்னோடியாக ஒரு குறும்படம் செய்வேன்.

அதுக்கு முதலில் விசா கிடைக்க வேண்டும் என்ற சிந்தனையில் இருந்தான் சிவா.

என்ன மச்சான் சிவா விசில் படதின் விளம்பரத்தையே பார்த்துக்கொண்டு இருக்கின்றாய்?

போன வேலை என்னாச்சி ?
இந்தா காசு ரவி கொடுக்கச் சொன்னான்.

மெர்சி .

பிறகு தாரன் சதீஸ் அண்ணா அது ஜீவனோடு பார்த்துக்க .

ஐயோ அந்த சாமிகூட என்னால் இம்சைதாங்க முடியாது .

ஒரே அறிவுரையில் தொடங்கி
ஒரு வழிபண்ணிவிடுவார் குடும்பம் குடும்பம் என்று

.நான் உங்களிடம் வேண்டியது போல அசட்டிக்காசு வரத்தாரன்.

அதுசரி அவனிடம் கோல் பண்ணி யாழிலில் இருந்து மச்சான் மச்சான் காசு தா என்று இரவில் ஒப்பாரி வைக்கும் போது தெரியாது போல சாமி ஒரு இம்சை என்று.

ஊரில் இருந்து வெளிநாட்டுக்கு எடுத்துவிடு எடுத்துவிடு ஆமி பிரச்சனை/மாற்றுக்குழு பிரச்சனை என்று ஆளுக்கு ஆள் அவனை தூங்க விடாம விடாது துரத்தியது எல்லாம் எனக்கும் தெரியும் .

அவன் வீட்டில் தானே நானும் இப்ப இரண்டு வருடம் சமரிக்கு இருக்கின்றேன்.

உனக்கு அவனோட இருக்கத்தெரியல .

நீ எல்லாம் நாலு ஊரில் அடிபட்டு சாப்பாடு இல்லாம கொழும்பில் பாணும் பருப்பும் சாப்பிட்டால் தெரிஞ்சு இருக்கும்!

ம்ம்!  ஆன்மீகம் ஒரு தெளிவான பார்வை இருக்கணும் .

சும்மா வாய்க்கு வந்தமாதிரி பேச , எழுத இது ஒன்றும் அரசியல் இல்லை உணரணும் கடவுள் என்றால் என்ன என்று.

ஐயோ சதிஸ் அண்ணா ஜீவன் மச்சானோடு சேர்ந்து நீங்களும் ஆன்மீக அறுவல் கோஸ்டிசியில் சேர்ந்திட்டீர்கள் போல.

எனக்கு கடவுள் நம்பிக்கையில்லை வாழவேண்டிய காலத்தில் விரதம் ,யாத்திரை ,சாமி என்று உங்களையே ஏமாத்திக்கொண்டு . வயசு போனவர்கள் செய்த இந்த பித்தலாட்டம் இப்ப ஜீவனோடு சேர்ந்து உங்களுக்கும் தொற்றிவிட்டது. வடிவான பிரெஞ்சுக்காரியை விட்டுவிட்டு இப்ப ஊரில் கட்டப் போறார் ஒரு நாள் உருகும் போது தெரியும் வலி!
"நீங்கள் சரி தனியாக வீடு எடுத்து இருக்கப்பாருங்க. "அவரைவிட்டு . அது எனக்குத் தெரியும் தம்பி சிவா. உன்னை மாதிரி உதவி செய்து எடுத்தவன் கூட இருக்க முடியாமல் . நல்லா பொடியங்கள் கூடச் சேர்ந்து ஊர் சுற்றவும், அதிகம் இரைச்சலோடு பாட்டுப் போட்டு பக்கத்து வீட்டுக்காரனோடு சண்டை போட இது என்ன ஊரில் பத்துப்பரப்பில் தனிவீடா ? தொடர் மாடி வாழ்க்கை இங்கு அடுத்த வீட்டில் கொலைவிழுந்தாலும் சத்தம் வராமல் இருக்கணும் .
ஆனால் நீ சத்தம் போட்டு பாட்டுக்கேட்பதும் ,குடித்து கும்மாளம் போட்டால் கீழ்வீட்டுக்காரன் பொலிஸ் கூப்பிடுவான் மேல் மாடியில் இருப்பவர்களால் நாம் நிம்மதியாக நித்திரைகொள்ளமுடியாது என்று . பொலிஸ்வந்தால் முதல்க்கேள்வி விசா பார்க்கணும் ?என்று தானே. விசா இல்லாத பொடியங்களை வீட்டில் வைத்திருப்பது. நண்பர்கள், தெரிந்தவர்கள் என்பதால் இது எல்லாம் உனக்கு எங்க தெரியப் போகுது . உன் சுதந்திரம் முக்கியம் என்று ஜோசிக்கும் உன்னோட என்னத்தை பேசிப்பயன். அவன் காதல் உனக்கு ஒழுங்காத் தெரியாமல் எஸ்.பொன்னத்துரையை இருட்டடைப்பு செய்த யாழ் மேட்குக்குடி பேராசிரியர்கள் போல இப்படி பேசாத. குடும்பம் முக்கியம் காதலைவிட. ஜீவன் என்னை வெளிநாட்டுக்கு எடுத்துவிட்டான் என்றதிற்காக நான் ஜால்ரா அடிக்கவில்லை . அவன் நிலை உனக்குப் புரியாது கடவுள் சித்தம் எதுவோ அதுதான் நடக்கும். நான் வேலைக்கு இறங்கும் நேரம் ஆச்சு ஏதாவது அவசியம் என்றால் அழைப்பு எடு . சிவா!   தொடரும்........ /// மெர்சி- நன்றி சமரி - வாடகைக்கு இருப்பது பலருடன்/தனியாக  ! !

19 comments :

MANO நாஞ்சில் மனோ said...

முதல் சுக்கு காப்பி எனக்கே...!

MANO நாஞ்சில் மனோ said...

இது என்ன ஊரில் பத்துப்பரப்பில் தனிவீடா ? தொடர் மாடி வாழ்க்கை இங்கு அடுத்த வீட்டில் கொலைவிழுந்தாலும் சத்தம் வராமல் இருக்கணும் .//

வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவும் ஒரு ரோதனை.....கொஞ்சம் சத்தம் வந்தால் பாகத்து வீட்டுக்காரன் வந்து என்னான்னு கேக்குறான், ஆனால் உடம்புக்கு முடியலன்னா ஒரு பயலுக வரமாட்டாணுக...!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் பத்து"ல இணைப்பு குடுய்யா.

திண்டுக்கல் தனபாலன் said...

கடவுள் சித்தம் எதுவோ அது போல் நடக்கட்டும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...
(TM 2)

K.s.s.Rajh said...

////இன்னொரு குழு டாக்குத்தர் படத்துக்கு பீரா ?பால் ?ஊத்துவது வரை அறிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீர்க்கோப்பையுடன் ////

சைக்கிள் கேப்பில் டாகுத்தரை இழுத்தீங்க பாருங்க பிரமாதம் அது என்னமோ தெரியலை இந்த பகுதியில் பல நல்ல வசனங்கள் இருந்தும் இதுதான் என்னைக் வெகுவாக கவர்ந்தது ஹி.ஹி.ஹி.ஹி..........

ஹேமா said...

கதை கடவுள்,ஆன்மீகம் எண்டு போகுது.சூடு பிடிக்கட்டும்....!

பென்னாம் பெரிய வீடுகளைக் கட்டி ஆமிக்காரன்களை இருத்திப்போட்டு நாங்கள் இங்க ஒற்றை அறைக்கு 800 சுவிஸ் ஃபிராங் குடுத்தெல்லோ இருக்கிறம்.செத்துக்கிடந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்தும் பாக்கமாட்டான்....தலைவிதிதான் வேறென்ன சொல்ல முடியும் நேசன் !

Anonymous said...

வணக்கம் அனான நலமா ..

என்னா அண்ணா ஆளைக காணும் வேலையோ மலையகத்தில் முகம் நூலுக்கான வேலை நினைக்கிறன் அண்ணா ...

இப்போ வே நிறைய அண்ணாக்கள் வந்துடுறாங்க ,,,பெயர் குலம்புது எனக்கு இன்னும் ரெண்டொரு பகுதியில தெளிவாகிடுவேன் அண்ணா ...அவ்வவ்

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள்
உன் சுதந்திரம் முக்கியம் என்று ஜோசிக்கும் உன்னோட என்னத்தை பேசிப்பயன்.
அனேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் _யாதர்த்தம் சொல்கிறது இந்த பகுதி

Seeni said...

mmmm...

ஆத்மா said...

மெர்சி- நன்றி சமரி - வாடகைக்கு இருப்பது பலருடன்/தனியாக ! !////////
என்னடா என்று குழபிப் போயிருந்தேன் ...தெளிவு

தொடருங்கள்

தனிமரம் said...

முதல் சுக்கு காப்பி எனக்கே...!// வாங்க மணோ அண்ணாச்சி முதல் பால்க்கோப்பி உங்களுத்தான்!

தனிமரம் said...

இது என்ன ஊரில் பத்துப்பரப்பில் தனிவீடா ? தொடர் மாடி வாழ்க்கை இங்கு அடுத்த வீட்டில் கொலைவிழுந்தாலும் சத்தம் வராமல் இருக்கணும் .//

வெளிநாட்டு வாழ்க்கையில் இதுவும் ஒரு ரோதனை.....கொஞ்சம் சத்தம் வந்தால் பாகத்து வீட்டுக்காரன் வந்து என்னான்னு கேக்குறான், ஆனால் உடம்புக்கு முடியலன்னா ஒரு பயலுக வரமாட்டாணுக...!//ம்ம் உண்மைதான் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

கடவுள் சித்தம் எதுவோ அது போல் நடக்கட்டும்...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...// நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

d...
////இன்னொரு குழு டாக்குத்தர் படத்துக்கு பீரா ?பால் ?ஊத்துவது வரை அறிந்து கொள்ளமுடியும். ஒரு தேனீர்க்கோப்பையுடன் ////

சைக்கிள் கேப்பில் டாகுத்தரை இழுத்தீங்க பாருங்க பிரமாதம் அது என்னமோ தெரியலை இந்த பகுதியில் பல நல்ல வசனங்கள் இருந்தும் இதுதான் என்னைக் வெகுவாக கவர்ந்தது ஹி.ஹி.ஹி.ஹி..........

7 Augu//ம்ம் ஹீ நன்றி ராச் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

கதை கடவுள்,ஆன்மீகம் எண்டு போகுது.சூடு பிடிக்கட்டும்....!

பென்னாம் பெரிய வீடுகளைக் கட்டி ஆமிக்காரன்களை இருத்திப்போட்டு நாங்கள் இங்க ஒற்றை அறைக்கு 800 சுவிஸ் ஃபிராங் குடுத்தெல்லோ இருக்கிறம்.செத்துக்கிடந்தாலும் பக்கத்து வீட்டுக்காரன் வந்தும் பாக்கமாட்டான்....தலைவிதிதான் வேறென்ன சொல்ல முடியும் நேசன் !

8 August 2012 07:01 //ம்ம் உண்மைதான் ஹேமா! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

வணக்கம் அனான நலமா ..

என்னா அண்ணா ஆளைக காணும் வேலையோ மலையகத்தில் முகம் நூலுக்கான வேலை நினைக்கிறன் அண்ணா ...

இப்போ வே நிறைய அண்ணாக்கள் வந்துடுறாங்க ,,,பெயர் குலம்புது எனக்கு இன்னும் ரெண்டொரு பகுதியில தெளிவாகிடுவேன் அண்ணா ...அவ்வவ்

8 August 2012 13:22 // வாங்க கலை நலம்தானே!ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வாழ்த்துக்கள்
உன் சுதந்திரம் முக்கியம் என்று ஜோசிக்கும் உன்னோட என்னத்தை பேசிப்பயன்.
அனேகமாக எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் _யாதர்த்தம் சொல்கிறது இந்த பகுதி

9 August 2012 05:34 // நன்றி நெற்கொழுவான் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

mmmm...//ம்ம் நன்றி சகோ வருகைக்கும் கருத்துரைக்கும்

தனிமரம் said...

மெர்சி- நன்றி சமரி - வாடகைக்கு இருப்பது பலருடன்/தனியாக ! !////////
என்னடா என்று குழபிப் போயிருந்தேன் ...தெளிவு

தொடருங்கள்// நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.