04 September 2012

உருகும் பிரெஞ்சுக்காதலி -12

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும் வெளியில் இருப்போரிடம் தொட்டலங்கா என்றால் கிராண்டபாஸ் பக்கம் ஒரு எண்ணம் மனதில் வரும். திருட்டும் விழிநிலை மக்களும் எல்லா சமுகச் சிக்கலும் சங்கமிக்கும் களனி ஆற்றின் மறுகரை (கறை). அதே போல வனத்தமுல்ல முல்லேரியா கொலன்னாவ என்று ஒவ்வொரு பக்கமும் கொழும்பு வாசிகள் ஆயிரம் கதை சொல்வார்கள் மக்கள் குழுவைப்பற்றி. அப்படித்தான் சாங்கலா கிராமம் ஒரு தூங்கா நகரம், மாலையில் தட்டிவான் சுமந்து சென்றது ஒரு நட்சத்திர விடுதிக்கு.

சாங்கலா கிராமம் மலேசியாவின் நூழைவாசலுக்கு அண்மையில் தாய்லாந்தின் எல்லையின் இறுதி முடிவு. பகலில் தூங்கும் இந்த நகரம் இரவில் இந்திரலோகம். கை வலி கால் வலிக்கு பிடிப்பு வைத்தியம் பார்க்கும் தாய்லாந்து வாசிகள் (massage) ஆட்டமா, தேரோட்டமா என்று இளமையில் ஆடிமகிழ களியாட்ட விடுதிகள் (dico). கிண்ணத்தில் தேன் சுமந்து தண்ணீர்த்தொட்டி தேடிவந்த கண்ணூக்குட்டி. சோமபானம் பருகியவன் பாடல் சுவை சேர்க்க விரும்பினால் இசைமீட்டலாம். சங்கீத குயிலோடு சேர்ந்து பாடும் இசைக்கலவை நிலையம் (karoki), காமம் என்பதுக்கும் மோகம் என்பதுக்கும் தேகம் றொம்ப முக்கியம் என்ற வைரமுத்து பாடல்போல என்னைத் தருவேன் உன்னிடம் விரும்பியது போல தாய்லாந்து நாணயம் கொடுத்தால் கட்டில் சுகம் தரும் நங்கைக்கள் என வீதி எங்கும் மடைபரப்பிய விடுதிகள்.

அரச அனுமதி இருக்கின்றது இந்த நாட்டில் என்பதே புதுமையான விடயம். இதுவரை தெரியவில்லை, இலங்கையில் இருக்கும் போது உலக அறிவு இப்படிச் சிலருக்கு எங்களோடு வந்தவர்களுக்கு. வார இறுதியில் அயல்நாட்டில் இருந்து வந்து அகம் மகிழும் அயல்நாட்டுவாசிகள் அதிகம் இருக்கும். இந்த ஊரில் குமாரின் வரவுக்கு காத்திருந்த ராஜா ஓட்டி எங்களை தனித்தனித்தீவாக பிரிக்கும் வேலையில் காத்திருந்தான். 
இனியும் பயணம் தொடரும் என்ற போது 18 பேரில் 10 பேருடன் குமார் மலேசிய போக தயாரன போது இது வரை சேர்ந்து வந்த ஜீவனையும் என்னையும் இருதுருவங்கள் ஆக்கிவிட்டார்கள்.

“மச்சான் என்னையும் கூட்டிப்போறார் குமார், எப்படியாவது போய்ச்சேர்ந்து விடுவம். நீ கலைப்படாத இங்க உன்னைப்பிரிய கவலையாக இருக்கு. ஒண்டா வேலையில் சேர்ந்து இருந்தோம் அதன் பரிசு 2 வருட சிறை வாழ்வு இந்த நகரம் வரை கூட வந்த நட்பு இடையில் போகுது என்றா? ”

வாழ்க்கையில் ஓடும் நதி போல இருக்கணும் நட்பு. வருவதும் போவதும் ஒரு கப்பல் போல கப்பல் தரைதட்டும் வரை தான் பயணிகள். அதன் பின் கப்பல் ஒரு காவிமட்டும்தான் கவலையைவிட்டு நீ போ, இடையில் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் நாட்டுக்கு போ சேகர் அண்ணா போல ஒழிந்து இருக்காத, உன்னை நம்பி வீட்டில் பொறுப்பு இருக்கு இந்தா குறிப்பில் இனி நீ தான் பயணம் அனுபவத்தைச் சொல்ல வேண்டும். உனக்கு பைத்தியம் ராகுல் போல எழுதிக்கொண்டு எலி தான் போகக்காணவில்லை விளக்குமாற்றைக் காவிக்கொண்டு போனதாம். 

ம்ம் போகும் வழியில் நீ பார்த்த காட்சிகள் மற்றவர்களுக்கு அனுபவமாக இருக்கும் ஜீவன். சந்தர்ப்பம் வரும் போது எழுதினால் பிற்காலத்தில் உனக்கு என்ன தெரியும் என்று யாராவது கேட்டால்! பதில் இதில் இருக்கு என்று சொல்ல முடியும் மச்சான். நீ எழுதிவை ராகுலிடம் கொடுத்தால் அவன் இன்னும் கற்பனை சேர்த்து கதையாக்குவான். போடா அவன் இப்ப அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் இனி எழுதுவது சாத்தியம் இல்லை சாலிக்காவை கரைச்சல் கொடுத்து சகோதர மொழியில் எல்லைக் கிராமக் கதை எழுதிக்கொண்டு போய் எரிக்கரையில் அவமானப்பட்டது மறந்து போச்சோ உனக்கு ரவி. 

முகம் முக்கியம் இல்லை, கருத்து முக்கியம் என்றால் யாராவது அவனுக்கு உதவுவார்கள் கவலயைவிடு ஜீவன். இப்ப அவன் தேர்வில் தேறி அறிவிப்பில் சேர்ந்து இருப்பான் என நானும் நம்புகின்றேன். நானும் தான் அவன் கனவு இலட்சியம் அதுதானே விற்பனைப் பிரதிநிதி எல்லாம் இரண்டாம் பட்சம் என்றுதானே வானொலி நிலையத்தோடு சுற்றிக்கொண்டு இருந்தான்! ம்ம் நண்பன் நல்லா இருந்தால் சந்தோஸம் தானே மச்சான். 

ஓம் ஓம் அன்று இரவு ஜீவனும் போய்விட்டான் மலேசியாவுக்கு. குமாரோடு நாங்கள் 8 பேர் எங்களில் நாமல் இன்னும் இருவர் அவர்களும் யாழ்வாசிகள். 4 பேர் ஒரு அறையிலும் இன்னும் ஒரு அறையில் 4 பேரும் ஆக 8 பேருக்கும் காவல் இருந்தார் ராஜா! அறையில் தொலைக்காட்சி இருக்கு படம் பார்க்கலாம் யாரும் வெளியில் போகக்கூடாது. உங்க கடவுச் சீட்டு எல்லாம் என்னிடம் தாங்க உங்களை மலேசியாவுக்கு கூட்டிக்கொண்டு போக ஏற்பாடு செய்யணும் வாங்கிக்கொண்டு போன ராஜா எங்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தான்.

ராஜா ஒரு சபலப் பேர்வழி. அவனோடு சேர்ந்து கொண்டான். நாமல்! தொடரும்.....

22 comments :

நெற்கொழுதாசன் said...

இன்னும் வாசிக்கவில்லை பால் கோப்பியோடு வாசிக்கலாம் என நினைக்கிறேன்

ஹேமா said...

வணக்கம் நேசன்...சுகம்தானே?முக்கு இப்போ எப்பிடி இருக்கு....சரி கனநாளாச்சு.ஒரு பால் விட்டோ பாலை விட்டோ ஒரு கோப்பி தாங்கோ.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன் !

அதுசரி...யோகா அப்பா என்ன ஒரேயடியா அமைதியாயிட்டார்.கதைச்சீங்களா?கலையின் வேலை மாற்றம்...பிறகு எனக்கு ஏதும் தெரியாமல் இருக்கிறது !

ஹேமா said...

ஒரே பொருளுக்குப் பார்வைகள் வித்தியாசப்படும்.அதேபோல ஒரே மனிதர்தான்.சிலருக்குப் பிடிக்கும்.சிலருக்குக் கண்ணிலயும் காட்டக்கூடாத ஆளாயிருப்பார்.இதுதான் மனித மனதின் செயற்பாடு.....அருமையாகச் சொல்லித் தொடங்கியிருக்கிறீங்கள் !

ஹேமா said...

தாய்லாந்து நாட்டின் அருமை பெருமைகளை அழகான பாடல்களைக் காட்டி சொல்லியிருக்கிறீர்கள்.அழகான வர்ணனைபோல இருக்கு !

பலகாலம் போனாலும் சில ஞாபகங்களை மீட்டெடுப்பதும் ஒரு சுகம்தான் !

Seeni said...

thodarunganl....

ஹேமா said...

எப்படியெல்லாம் அகதிவாழ்வு தொடங்கியிருக்கிறது எங்களுக்கு.இப்போ நினைத்தாலும் அந்த அவலங்கள் மனத்திரையில்.ஆரம்பகால அவலங்கள்....இறந்து,காணாமல் போனவர்கள்கூட.அதோடு பெண்களின் நிலைமை...சொல்லிப் பதிவு செய்யுங்கள் வருங்காலம் அறிய !

பாடல்...ரசனை...பிடித்தமான மனதை வருடும் பாடலும் படமும் !

நெற்கொழுதாசன் said...

வாழ்த்துக்கள்.நன்றாக இருக்கிறது கதையின் வேகம் ............
ஒரு பயணத்துக்கான விலைகள் எவ்வளவு என்பததை எல்லோரும் அறியவேண்டும்
எதையும் மறைக்காமல்,பலருடைய பயன அனுபவங்களையும் இணைத்து கதையை நகர்த்துங்கள்.நீங்கள் தீர்மானித்திருக்கும் கதைக்கு தவறான கருத்து என்றால் மன்னித்து விடுங்கள்
இது ஒரு வாசகனின் வேண்டுகோள் .
எப்பவோ ஒருநாள் முதலில் நான் தான் கருத்திடுவேன் என்று சொன்னதை நிறைவேற்றி விட்டேன்
எங்கே கோப்பி ?

திண்டுக்கல் தனபாலன் said...

/// முகம் முக்கியம் இல்லை, கருத்து முக்கியம் ///

அருமை... பிடித்த பாடல்... நன்றி...

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!என்ன சொல்ல?முன்பே சொல்லியிருக்கிறேன் அனுபவித்ததில்லை என்று!தொடருங்கள்,வலிகளை.

Anonymous said...

மிக நீண்ட நாளின் பின் சந்திக்கிறேன் அண்ணா எப்படி சுகம்?

இப்போதுதான் 1 முதல் 12 வரையாக பகுதிகளை படித்து விட்டு வந்தேன் சுவாரஸ்யமாக உள்ளது எழுதுங்கள் தொடர்கிறேன்......

ஆத்மா said...

தொடருங்கள்...
இம்முறை எழுத்துக்கள் ரொம்பச் சிறிது..

பாடல் என்றும் நெஞ்சில் நிற்பது..

தனிமரம் said...

இன்னும் வாசிக்கவில்லை பால் கோப்பியோடு வாசிக்கலாம் என நினைக்கிறேன்// வாங்க நெற்கொழுதாசன் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ முதலில் பின் வாசியுங்கோ!

தனிமரம் said...

வணக்கம் நேசன்...சுகம்தானே?முக்கு இப்போ எப்பிடி இருக்கு....சரி கனநாளாச்சு.ஒரு பால் விட்டோ பாலை விட்டோ ஒரு கோப்பி தாங்கோ.இப்பத்தான் வேலையால வந்திருக்கிறன் !

அதுசரி...யோகா அப்பா என்ன ஒரேயடியா அமைதியாயிட்டார்.கதைச்சீங்களா?கலையின் வேலை மாற்றம்...பிறகு எனக்கு ஏதும் தெரியாமல் இருக்கிறது !

4 September 2012 14:30 // வாங்க ஹேமா இப்ப கொஞ்சம் பருவாயில்லை மூக்கு!ம்ம் கலை வருவா விரைவில் கவலை வேண்டாம் யோகா ஐயா ஊர் போய் வந்த ஏக்கம்!ம்ம்

தனிமரம் said...

ஒரே பொருளுக்குப் பார்வைகள் வித்தியாசப்படும்.அதேபோல ஒரே மனிதர்தான்.சிலருக்குப் பிடிக்கும்.சிலருக்குக் கண்ணிலயும் காட்டக்கூடாத ஆளாயிருப்பார்.இதுதான் மனித மனதின் செயற்பாடு.....அருமையாகச் சொல்லித் தொடங்கியிருக்கிறீங்கள் !

4 September 2012 14:33 // நன்றி ஹேமா!

தனிமரம் said...

தாய்லாந்து நாட்டின் அருமை பெருமைகளை அழகான பாடல்களைக் காட்டி சொல்லியிருக்கிறீர்கள்.அழகான வர்ணனைபோல இருக்கு !

பலகாலம் போனாலும் சில ஞாபகங்களை மீட்டெடுப்பதும் ஒரு சுகம்தான் !

4 September 2012 14:36 /ம்ம் உண்மைதான் ஹேமா!

தனிமரம் said...

thodarunganl....// நன்றி சீனி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும்!

தனிமரம் said...

எப்படியெல்லாம் அகதிவாழ்வு தொடங்கியிருக்கிறது எங்களுக்கு.இப்போ நினைத்தாலும் அந்த அவலங்கள் மனத்திரையில்.ஆரம்பகால அவலங்கள்....இறந்து,காணாமல் போனவர்கள்கூட.அதோடு பெண்களின் நிலைமை...சொல்லிப் பதிவு செய்யுங்கள் வருங்காலம் அறிய !

பாடல்...ரசனை...பிடித்தமான மனதை வருடும் பாடலும் படமும் !

4 September 2012 14:40 //ம்ம் இன்னும் பல விடயம் பேசுவேன் ஹேமா!நன்றி ஊக்கிவிப்புக்கும் கருத்துக்கும் வருகைக்கும்!

தனிமரம் said...

வாழ்த்துக்கள்.நன்றாக இருக்கிறது கதையின் வேகம் ............
ஒரு பயணத்துக்கான விலைகள் எவ்வளவு என்பததை எல்லோரும் அறியவேண்டும்
எதையும் மறைக்காமல்,பலருடைய பயன அனுபவங்களையும் இணைத்து கதையை நகர்த்துங்கள்.நீங்கள் தீர்மானித்திருக்கும் கதைக்கு தவறான கருத்து என்றால் மன்னித்து விடுங்கள்
இது ஒரு வாசகனின் வேண்டுகோள் .
எப்பவோ ஒருநாள் முதலில் நான் தான் கருத்திடுவேன் என்று சொன்னதை நிறைவேற்றி விட்டேன்
எங்கே கோப்பி ?//ம்ம் நிச்சயம் பேசுவோம் நெற்கொழுதாசன்!ம்ம் பால்க்கோப்பி தயார் !

தனிமரம் said...

முகம் முக்கியம் இல்லை, கருத்து முக்கியம் ///

அருமை... பிடித்த பாடல்... நன்றி...

4 September 2012 20:29 //நன்றி தனபாலன் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!என்ன சொல்ல?முன்பே சொல்லியிருக்கிறேன் அனுபவித்ததில்லை என்று!தொடருங்கள்,வலிகளை.

4 September 2012 22:12//மாலை வணக்கம் யோகா ஐயா!ம்ம் தொடர்கின்றேன்!

தனிமரம் said...

மிக நீண்ட நாளின் பின் சந்திக்கிறேன் அண்ணா எப்படி சுகம்?

இப்போதுதான் 1 முதல் 12 வரையாக பகுதிகளை படித்து விட்டு வந்தேன் சுவாரஸ்யமாக உள்ளது எழுதுங்கள் தொடர்கிறேன்......// வாங்க் எஸ்தர்- நலமா எப்படி வசந்தகாலம் நுவரெலியா நல்லா பார்த்தீர்களா!ம்ம் நன்றி

தனிமரம் said...

தொடருங்கள்...
இம்முறை எழுத்துக்கள் ரொம்பச் சிறிது..

பாடல் என்றும் நெஞ்சில் நிற்பது..

5 September 2012 09:16 //ம்ம் நன்றி சிட்டுக்குருவி வருகைக்கும் கருத்துரைக்கும்.ம்ம்