30 September 2012

அந்த நாள் ஞாபகம் -2

வணக்கம் உறவுகளே!
சினிமா திரையரங்கு நினைவுகளோடு வரும் அந்த நாள் ஞாபகம் ஊடாக இரண்டாவது பதிவு இது.


ஒருவனின் தனிப்பட்ட வாழ்வில் வசந்தகாலம்,வரட்சிக்காலம் இலையுதிர்காலம்,இருண்டகாலம் எல்லாம் வரமுடியுமா ?வந்தால் எப்படி இருக்கும் என்பதை எனக்கு அனுபவரீதியாக கற்றுத்தந்த மண் வவுனியா

.இந்த ஊரில் நான்கு திரையரங்கு இருக்கு அவை ரோயல்,நியூ இந்திரா,சிரிமுருகன்,வசந்தி என அவை எல்லாவற்றிலும் படம் பார்த்தேன்:))) தனித்தனியாக இந்த திரைகள் வரும் .இனிமேல்!


வசந்தி-வவுனியா!

இங்கே விற்பனைப்பிரதிநிதியாக வேலை மாற்றம் கிடைத்த போது என்னோடு குடும்பம் யாரும் வரவில்லை. அவர்கள் ஒருகரை நான் ஒரு கரை நாட்டின் இனவாத யுத்தம் காரணமாக.

என்னோடு விற்பனைப்பிரதிநிதி வேலையில் நண்பர்கள் ஆக சேர்ந்து இருந்தவர்கள்21 பேர் இவர்களில் சிங்களம்,இஸ்லாமிய நண்பர்களும் அடக்கம் .இன்று சிலர் தொடர்பில் இருக்கின்றார்கள்.

எல்லாரும் தங்கி இருந்தது ஒரே ஒரு அடுக்குமாடித் தொடரில்

.அது மன்னார் வீதிக்கு போகும் வழியில் இருந்தது ஒரு காலத்தில் இந்த வீடு அரசியலிலும் பெயர் பொறிக்கப்பட்டது .என்பதை இப்போதுநான் வாசித்த ஈழப்போராட்டதில் எனது சாட்சியம் நூல் சொல்லிய பின் தான் நானே பிரமிப்போடு நோக்குகின்றேன்.

இதனை இன்னொருவர் பொறுப்பாக கண்கானிப்பதால் அவரிடம் தான் நாம் அன்று வாடகை செலுத்துவோம்.

எந்த நேரத்திலும் இந்த வாடகை அறையில் நண்பர்களின் அலட்டல்,புலம்பல் சீட்டாட்டம்,புகைத்தல்,சோமபாணம் என பரவிக்கிடக்கும் விரும்பினால் குடி ,புகை உன் விருப்பம் என்று மட்டும் சொல்லும் நட்புக்கள் யார் மீதும் எதையும் தினித்தது இல்லை .

இங்கே இருந்த ஒரு நண்பனிடம் தான் நான் சகோதரமொழியை (சிங்களம்)அதிகம் மேலதிகமாக கற்றது பேச,எழுது இவர்களுடன் சுற்றிய இடங்கள் அதிகம் மதவாச்சி,திருகோணமலை ,கண்டி என்று நட்பில் ஒருவரிடமும் பேதம் இருந்தது இல்லை என்பதே சிறப்பான விடயம்.

இந்த நட்புக்களின் வீட்டில் என் நினைவுகள் வாழ்கின்றது இன்றுவரை என்பதே எனக்கு அதிகம் பொக்கிசமான சொத்து.

இந்த நட்புக்களின் நண்பிகள் .நண்பிகளின் நண்பர்கள் என எப்போதும் வாரநாட்கள் ஜாலியாக நகரும் .அடிக்கடி இராணுவத்தின் சுற்றிவலைப்புக்கள் ,சோதனைகள் எம்மை சூழ்ந்தாலும் ஆபத்தில் பாஸ் கொண்டுவராத நாட்களில் பாஸ் இருக்கும் வாடகை அறையில் இருந்து கொண்டு வந்து எங்கள் நண்பர்களை மீட்டது என சிங்கள ,இஸ்லாமிய நட்புக்களின் நல்ல இதயங்களை மறக்க முடியாது வெறுக்க முடியாது புதியவர்கள் சிலருக்காக.!

இன்றும் இந்த முகம் தெரிந்த நட்புக்கள் எனக்கு மேலானது. .

இதை பொதுவில் சொல்வதில் எனக்கு எந்த சங்கடமும் இல்லை .நட்பில் இன,மதம் மொழி இடையில் வருவதை தவறு என்றால் நான் யாரையும் விட்டுப் போவேன் எனக்கு இருக்கும் பல நல்ல இதயங்கள் உறவே எனக்கு போதுமானது .

அந்த நட்பு பிரதானம் இந்த வலையில் ,முகநூலில் என என எங்கும் என் தெளிந்த கருத்தினைச் நாகரிகமாக சொல்லும் உரிமை எனக்கு இருக்கு.

இந்த வசந்தியில் நாம் இந்தப்படம் பார்த்தபோது. எங்கள் நண்பர்களோடு இருந்து படம்பார்த்த ஜோடிகள் சிலர் அப்போது இல்லறத்தில் இணையவில்லை.

.பின் ஒருகாலம் இரு இனங்கள் இணைந்த போது அவர்கள் வீட்டில் தங்கியிருந்த நாட்கள் இன்னும் பசுமையான நாட்கள். (தனியாக பதிவு போடுவேன் நேரம் வரும் போது.:))))) )

காலத்தின் கோலம் இதே திரையரங்கில் என் நண்பன் ரவியும் ,சாலிக்காவும் சேர்ந்து படம் பார்த்த போது !


அப்போதும் அருகில் இருந்தவன்.தனிமரம்.

விதி பலரைப்பிரித்து இருக்கின்றது யுத்தம் மூலம்
.அந்த உணர்வை கொச்சைப்படுத்துவது அழகு இல்லை .ஆனாலும் ரவியின் சாலிக்கா அவர்கள் நட்பு எனக்கும் ஒரு சுகமான நாட்கள்!

இந்தப் படம் நம்மவர் இசையில் வந்த படம் உதயா இசையமைப்பு.

இவரின் இசையில் நிரோசா விராஜினி பின்நாட்களில் வேற ஒரு படத்தில் பாடல் பாடியிருந்தார் என்பதும் நினைவில் கொள்ள வேண்டியது.

முதல்நாள் படம் பார்த்துவிட்டு வந்த மறுநாள் 2000 ஆண்டு ஒக்டோபரில் இந்த திரையரங்கில் குண்டு இருந்தது என்று திரையரங்கை 2 மாதம் முடக்கிய செய்தி ஏனோ ??தமிழ் பத்திரிக்கை சொல்லவில்லை.

சிங்களநாடேடு தீவிரவாதிகள் குண்டுவைத்து இருந்தார்கள் இராணுவம் மீட்டது என்று லங்காதீப செய்தி சென்னதையும் மறந்துவிடவில்லை. அனுபவம் ,வாசிப்பு மாறுபடும், ஆனால் நடுநிலை என்பது??? நாகரிகம் முக்கியம் ஊடகத்துக்கு விசமாக இனவாதத்தை தினிக்ககூடாது .!!



12 comments :

ஆத்மா said...

அழகான நினைவுகள்....
பாஸ் கொண்டு செல்லும் நடைமுறைபருவத்தில் கொழும்புக்கு செல்வதையே தவிர்த்துவந்த உறவுகளும் எம்மில் இருக்கின்றனர்....

யார் எது சொன்னாலும் முகம் தெரிந்த நட்புகளை வெறுப்பது தவறான செயல்தான்.....

ஆத்மா said...

திரட்டிகளில் இணைக்கவில்லை ஏனோ..

Yoga.S. said...

காலை வணக்கம்,நேசன்!அருமையான நினைவுப் பகிர்வு.

K.s.s.Rajh said...

வசந்தி தியேட்டர் மாத்திரமே இப்போது இருக்கின்றது

ஹேமா said...

நட்பின் நினைவலைகளை அலசும்போது வயதும் தள்ளும்.கவிதை மனதைத் தொடுகிறது நேசன் !

Angel said...

லேட்டா வந்திட்டேனா .நான் லேட்டா வந்ததால் யோகா அண்ணாவுக்கு சுக்கா ரொட்டி ஈ ஈ
.

கவிதை மனதை என்னமோ செய்கிறது நேசன் குறிப்பா //மனிதன் என்ற வரிகள் //

தனிமரம் said...

அழகான நினைவுகள்....
பாஸ் கொண்டு செல்லும் நடைமுறைபருவத்தில் கொழும்புக்கு செல்வதையே தவிர்த்துவந்த உறவுகளும் எம்மில் இருக்கின்றனர்....

யார் எது சொன்னாலும் முகம் தெரிந்த நட்புகளை வெறுப்பது தவறான செயல்தான்.....

30 September 2012 18:10 // வாங்க சிட்டு ஒரு பால்க்கோப்பி முதலில் குடியுங்கோ!ம்ம்ம்ம் நன்றி ஆலோசனைக்கு சகோ!ம்ம்

தனிமரம் said...

திரட்டிகளில் இணைக்கவில்லை ஏனோ..

30 September 2012 18:10 //``ம்ம் முடியவில்லை! சகோ!சாந்தி மனதில் இல்லை!ம்ம்

தனிமரம் said...

காலை வணக்கம்,நேசன்!அருமையான நினைவுப் பகிர்வு.

30 September 2012 22:37 //வாங்க யோகா ஐயா நன்றி கருத்துரைக்கும் வருகைக்கும்!ம்ம்

தனிமரம் said...

வசந்தி தியேட்டர் மாத்திரமே இப்போது இருக்கின்றது//நன்றி தகவலுக்கு ராஜ் !ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்!ம்ம்

தனிமரம் said...

நட்பின் நினைவலைகளை அலசும்போது வயதும் தள்ளும்.கவிதை மனதைத் தொடுகிறது நேசன் !

1 October 2012 09:43 ///``ம் நன்றி ஹேமா வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

லேட்டா வந்திட்டேனா .நான் லேட்டா வந்ததால் யோகா அண்ணாவுக்கு சுக்கா ரொட்டி ஈ ஈ
.

கவிதை மனதை என்னமோ செய்கிறது நேசன் குறிப்பா //மனிதன் என்ற வரிகள் //
//``ம்ம் நன்றி அஞ்சலின் வருகைக்கும் கருத்துரைக்கும்!ம்ம்ப்