பள்ளிக் கூட வகுப்பறை மெனிங் மார்கட் சந்தை போல எப்போதும் கலகலப்பாக இருக்கும் .
அதுவும் குறித்த பாட வேளைக்கு வாத்தியாரோ, ஆசிரியையோ ,வராவிட்டால் அடுத்த திட்டம் இலங்கை கிரீட்கட் குழுவில் இடம் கிடைக்கும் என்ற சூப்பர் ஸ்டார் கனவில் கிரிட்க்கட் விளையாட ,தேர்தல் கூட்டணிபோல பேச்சுவார்த்தை முதலில் தொடங்கிவிடும்.
வா மச்சான் கிரீட்கட் ஆடப்போவோம் என்று வெளிக்கிட்டு விடுவார்கள். அதுக்கு உத்தரவு வாங்க அதிபரிடம் போவது என்றால் தான் அதிகம் அர்சியல்வாதி போல பேசாமல் அண்ணன் மாதிரி சிரித்து இனிமையாக பேசுக்கூடியவன் யார் என்று தேடுவார்கள் !
நண்பர்களில் .ஈசனும் அப்படித்தான் சிரித்து சிரித்து செயலை .முடிப்பான் !
.வர்த்தகப்பிரிவில் படிக்கும் பையன்கள் எல்லாம் அதிகம் தீராத விளையாட்டுப்பிள்ளை போல எப்போதும் ஜாலியாக திரிவார்கள் என்பது கணிதப்பிரிவும் ,விஞ்ஞானப்பிரிவும் ,படிக்கும் மாணவர்களிடையே பாதுக்காப்பு ஊழல் போல உறிப்போன ஒரு விடயம்.
சமயங்களில் மாணவத்தலைவர் பொறுப்பு இந்தப்பள்ளியில் அதிகம் வர்த்தகப் பிரிவில்தான் காரங்கிரஸின் குடும்ப ஆட்சி போல !
முகங்கள் மாறலாம் கொள்கை எப்போதும் வர்த்தப்பிரிவு இடம் தான் .எதிர்காலத்தில் மாற்றம் வருவது என்பது ரணிலின் ஜானாதிபதி கனவு போலத்தான் .
"வா மச்சான் பரதன் விளையாட"
இல்லை மச்சான் !நீ போடா எனக்கு விளையாடும் எண்ணம் இல்லை !
ஓ ஏன் வைரமுத்து எழுதியது போல கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையில் ஒரு உருண்டை உருளுதோ மன்மதராசாவுக்கு ?
போடா போரடிக்காத நான் தான் அடுத்த பிரதமர் என்பது போல இருக்கு உன் பேச்சு !
சரி உன் இஸ்டம்.
மாணவர்கள் வெளியேறினால் மாணவிகளும் நேரம் போக்குது அடுத்த கட்டிடத்தில் இருக்கும் நூலகத்துக்கு நுழைவதும் ,மற்றத் தோழிகளின் கலைப்பிரிவு மாணவிகளுடன் கலந்து பேசுவதும் இயல்பான நிலை .
இந்த நேரத்தில் தான் விரும்பியவர்களுடன் தனிமையாக பேசும் சூழல் அமையும் கிறிஸ்த்தவ தேவாலயத்தின் அமைதி போல இப்படி ஒரு சந்தர்பம் ஜீவனியுடன் பேசும் சூழல் அமையுமா ?,திடீர் பிரதமர் ஆன பொருளாதார சிங் போலத்தான் .இன்றைய பள்ளி நிலையும்!இதுக்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா என்பது போலத்தான்
பரதனின் நிலையும்..
ஜீவனிக்கும் கவிதை பிடிக்கும் என்பதை அவள் கொண்டுவரும் கவிதை நூல்கள் மூலம் நன்கு உணர்ந்தவன் .
தன் விருப்பையும் இப்படித்தீட்டினான் வார்தைகளில்!!
பரதன் என்ற ஒரு அப்பாவி
பாதுகை கொண்டு
பாரதம் ஆண்டான் !
படித்திருப்பாய் வரலாறு!
பதுளைக்கு வந்த ஒரு அப்பாவி
பரதனும் உன்னை அன்பில் ,
பண்பில் ஆழத்துடிக்கின்றேன்
பாவையே!
பட்டென்று வெட்டிவிடாதே
பல ஊர் கடந்தவன்!
பார்த்ததில் பிடித்தவள் நீ!!!
பாதகமான பதில் பார்த்தால்
பாய்ந்து விடுவேன்
பஸ் முன்னால்!
பார்த்து பரிவுடன் சொல்லு
பதில்?,
பரிதவிப்புடன் பரதன்!
படபடப்புடன் கவிதை எழுதி ஜீவனியிடம் கொடுத்துவிட்டு விளையாடப் போனான் பரதன் !
இன்னொரு பார்வையும் இவர்களை பார்த்து அறியாமல்!
இன்னும் தவிக்கின்றேன்.........................
குறிப்பு!-
மெனிங்க் மார்க்கட்-கொழும்பில் இருக்கும் ஒரு சந்தை சென்னை கோயம் போடு போல!

6 comments :
நல்ல பதில் வந்ததா...?
ஆவலுடன்...
ம்..........கவிதையில் சம்மதம் கேட்டாச்சு....பதில்???????வரும்!///மெனிங் மார்க்கட் ஒரு பகுதி இப்ப,புதிய கட்டிடத்தில்.
இன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் "மிச்சக் காசு" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா!!!
நல்ல பதில் வந்ததா...?
ஆவலுடன்...//வாங்க தனபாலன் சார் ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ. காத்து இருங்கோ பதிலுக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.
ம்..........கவிதையில் சம்மதம் கேட்டாச்சு....பதில்???????வரும்!///பார்க்கலாம் ஐயா!ஹீ
மெனிங் மார்க்கட் ஒரு பகுதி இப்ப,புதிய கட்டிடத்தில்.ஓ அப்படியா நன்றி புதிய தகவலுக்கு.நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் யோகா ஐயா.
இன்றைய வீரகேசரி(இணையப் பத்திரிக்கை)யில் ம.தி சுதா வின் "மிச்சக் காசு" விமர்சனமும்,குறும்படமும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.வாழ்த்துக்கள் ம.தி.சுதா!!!//நானு முகநூலில் பார்த்தேன் யோகா ஐயா வாழ்த்துக்கள் சுதாவுக்கு.
Post a Comment