21 March 2014

அந்த நாள் ஞாபகம் 15

அந்த நாள் ஞாபகம் என்று திரையரங்குகளில் தொலைந்த நேரங்களை மீட்டிப்பார்க்கும் ஆசையில் இந்த ஞாபகங்கள் இன்னும் பல பதிவு செய்ய பாரிஸ் வாழ்க்கையில் பணிச்சுமை அப்பாவி என்னையும் இடைவேளை போடச்சொல்லுது:)) !

இடைவிடாமல் எழுத்தச் சொல்லி இன்னொரு மனம் இயக்குகின்றது .இந்த பதிவு இன்னும் தொடரும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் :)))!

இன்று என்னோடு நீங்கள் பார்க்கப் போகும் திரையரங்கு- கிங்ஸ்
                                 


இருந்த இடம் -பதுளை( இப்போது இந்த திரையரங்கும் இல்லாமல் போய்விட்டது வெய்யில் படம் போல)§



விற்பனைப்பிரதி நிதி வேலையை கண்ணும் கருத்துமாக செய்தேனோ இல்லையோ?  அந்த அந்த ஊரில் இருக்கும் தியேட்டரில் முதல் காட்சி பார்க்கும் ஆவர்வம் மட்டும் குறைவில்லாமல் தொடர்ந்தது .


மேலதிகாரிகள் இலங்கை அரசியல் போல  இடமாற்றம் செய்து பந்தாடினாலும் பயம் இல்லாமல் பல படம் காலைக் காட்சிக்கு ஒதுக்கிய காலம் மீண்டும் வராத நந்தவனத்தெரு :)) .


நான் மட்டும் நாசமாகமல் நல்ல நண்பர்களையும் கூட்டிச் சென்று அவர்கள் வீட்டில் அர்ச்சனைப்பூக்கள் வாங்கியதை நினைக்கும் போதெல்லாம் விவேக்கின் வசனமான எப்படி இருந்த நான் இப்படி ஆகிவிட்டேனே என்ற கவலை அதிகம் தான்!


இந்த திரையரங்கில் பல படம் பார்த்தவன் இன்னும் நீங்காத நினைவுச்சின்னம்:))).


இந்தப் படம் பார்க்க முதலில் ஆர்வம் தோன்றிய்துக்கு காரணம் யுவன் சங்கர் ராஜா இந்த  திரைப்படத்தின் மூலம் தான் இசையமைப்பாளராக முதல் அறிமுகம் ஆகிய நிலையினால் தான் .

போட்ட மெட்டுக்க எல்லாம் இன்னும் மறக்க முடியாது பிடித்த பாடல்கள் எல்லாம் .என்றாலும்  ! இந்தப்படத்தில் இந்தப் பாடல்க்காட்சி நீக்கப்பட்டு இருந்தது .


கொடுத்த20 ரூபாய்க்கு இப்படி துரோகம் செய்திட்டாங்களே என்று புலம்பிய போது  நண்பன் சொன்னான் ".இங்க வந்த நேரம் அடுத்த திரையரகில் ஷாகிலா படம் பார்த்து இருக்கலாம் என்று .

1997 இல் படம் பார்தோம் ரசித்து அதே திரையரங்கில் இந்த நாயகியையும் பார்த்தோம் நக்மாபோல .



இன்று பணி மாறி  பலரும் மறந்த விடயத்தை மீண்டும் தூசு தட்டி என்னையும் எழுதவிடான் நண்பன்.

 நண்பன்  இப்போது  முகநூல் வராமை பணிச்சூழல் காரணமாக . தனிமரமும் முகநூலில் காத்து இருக்கின்றேன்:)))

தொடர் படித்து விட்டு துடைப்பக்கட்டு வருமா ?,இல்லை ஆல்த் பெஸ்ட் என்று வாழ்த்து பூக் கொத்து வருமா?

காலத்தின் கைகளில்  தனிமரமும் முகநூலையும் விட்டு ஓடும் மனநிலை வருமா?? :))!

 வாங்க பாடல் ரசிப்போம்.


8 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் போது எது வந்தால் என்ன...?

Anonymous said...

ஏன் அண்ணா இனிமீ வர மாடீன்களா

Unknown said...

ஆல்த பெஸ்ட் !!!!!

காற்றில் எந்தன் கீதம் said...

மறக்க முடியாத ஊர் மறக்க முடியாத ஒரு இடமும் கூட.... இன்னும் நினைவின் அலைகள் உங்களிடம் பலமாகவே வீசுகிறது நேசன்...வாழ்த்துக்கள்

தனிமரம் said...

எதையும் ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் இருக்கும் போது எது வந்தால் என்ன...?//நிஜம் தான் தனபாலன் சார் முதல் வருகைக்கு பரிசாக ஒரு பால்க்கோப்பி குடியுங்கோ!நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஏன் அண்ணா இனிமீ வர மாடீன்களா?,ஹீ தனிமரம் வரும் வாத்து என் நட்பை கானவில்லை !ம்ம் நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கலை.

தனிமரம் said...

ஆல்த பெஸ்ட் !!!!!/நன்றி யோகா ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

தனிமரம் said...

மறக்க முடியாத ஊர் மறக்க முடியாத ஒரு இடமும் கூட.... இன்னும் நினைவின் அலைகள் உங்களிடம் பலமாகவே வீசுகிறது நேசன்...வாழ்த்துக்கள்//ம்ம் மறக்க முடியாத நினைவுகள் .நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் காற்றில் என் கீத்ம்.