05 March 2014

இது கதைபோல ஒரு இளிப்பூ )))))))))

இந்தகருவுக்கும் இணையத்தில்
இருக்கும் நேரத்தில்
இயற்றிப்பாடும் இந்த 
இளம் வாலிபன் தனிமரத்துக்கும்
இதில் தொடர்பு இல்லை
இப்படிக்கு! 
இனி உள்ளே வாங்கோ 
இந்தகோட்டைத்தாண்டி))))))))))))))!
   




இலங்கை என்ற தேசத்தில்
இருக்க முடியாத 
இனவாத கோஷத்தில்
இருந்த வீடு
இழந்த முகவரி இன்னும் பல
இருட்டறையில் இன்னல் பல
இருந்து அனுபவித்துவிட்டு
இனியும் வேண்டும் 
இந்த உயிர் என்ற ஆசையில்
இங்கு வந்தேன்! 


இனியும்
இவன் வாழவேண்டும்.
இங்கு கிடைக்குமா?
இந்த தேசத்தில்
இருக்க ஒரு 
இருப்பிடம் .
இதுக்குத்தான் ஏதிலி 
இன்னொரு நாட்டில் 
இருந்து வந்தவன் !
இயல்பில் ஒரு பிரெஞ்சு
இலக்கியமும் பிரெஞ்சு இனமும்
இரண்டறக் கல்லாதவன் 
இன்னொரு பிரெஞ்சு புரட்சிபோல)))))
இப்படி ஒரு மனுக்கொடுத்தேன்
இந்த நாட்டில் 
இருக்கும் ஒப்ரா என்ற 
இந்த அரச  அமைப்பிடம்.


இடைப்பட்ட காலத்தில்
இப்பூமியில் இப்படியும்
இரவில் ஒரு வேலை.


இனியும் என்ன 
இருள் அகன்றது 
இனி வானம் வெளிச்சிடும்
இந்த நூல் போல

இதயம் என்ற இருட்டறையில்
இவளைப்போல் ஒருத்தி!


இனக்கவர்ச்சி உடையுடுத்தி
இருபத்தாறில் இவன் பருவத்தில்
இந்தக்குளத்தில் கல் எறிந்தது போல 
இருதயம் துடித்தது
இதயம் படம் போல:)))

.
இருவரும் இணைவோமா?
இல்லறத்தில் என்று இந்தமனமும்
இரங்கி நின்றது  !
இந்த நாட்டு
இறைமையும் இவனுக்கு இருக்க
இங்கு ஒரு முகவரி தந்தது போல.

இந்த நங்கையும் இவனுக்கு
இல்லறத்தில் இணைய 
இரங்கியிருந்தால்!


இருவரும் ஒருவர் என்று 
இனி எல்லாம்
இன்பமே உந்தன் பெயர் 
இதயக்கனி என்றும் !
இதயத்தில் பருவக்கனி
இந்தமான் இப்படி 
இன்னும் பல
இயற்கை வர்ணனை
இப்படி என்றெல்லாம் 
இருக்கும் என்று
இன்னொரு நண்பனிடம்
இரயிலில் சொல்ல!


இணையத்தில் இதை 
இந்த உலகம் எங்கும்
இதயச்சுமையை 
இலங்கை வானொலி
இதயராகம் போல
இறக்கி விட்ட
இலங்கை  நண்பனின்
இனனொரு பெயர் 
இப்படியாமே !



இன்னும் 
இந்தகதை 
இந்திய சின்னத்திரை  நாடகம் போல
இருக்குமோ???
இந்தப்பாடல் போலவோ??
 .. 
இன்னும் வரும்:)))))


8 comments :

Yarlpavanan said...

தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிமை...!

Unknown said...

ஹி!ஹி!!ஹீ!!!

அம்பாளடியாள் said...

இ இ இ இ இ .....என்ன ஒரே இ யா வே இருக்கு ?...:)))))))) வாழ்த்துக்கள் சகோதரா .

தனிமரம் said...

தங்கள் பதிவை வரவேற்கிறேன்.

http://thamizha.2ya.com/ என்ற இணைப்பில் web directory உருவாக்கி உள்ளேன். தங்கள் தளங்களையும் அதில் இணைத்து உதவுங்கள்.//நன்றி ஐயா பார்க்கலாம்.

தனிமரம் said...

இனிமை...!//நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

ஹி!ஹி!!ஹீ!!!/நன்றி யோகா ஐயா சிரிப்புடன் வருகைக்கு!ஹீ

தனிமரம் said...

இ இ இ இ இ .....என்ன ஒரே இ யா வே இருக்கு ?...:)))))))) //ஒரு நட்பு கேட்டது தனிமரம் எழுத முடியுமா என்று அதன் முயற்ச்சி இது கவிதாயினி!வாழ்த்துக்கள் சகோதரா !நன்றி அம்பாளடியாள் வருகைக்கும் வாழ்த்துக்கும்..