15 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --17

காதல் தோன்றும் நேரத்திலே சிந்தனையில் காதல் சொல்ல கையில்  ஒரு பூப் போல ரோஜாவும் வந்து விடுகின்றது .!

மது பாலாவுக்கு ரோஜா படம் போல என்றாலும்  !

வெள்ளைரோஜா ,சிவப்பு ரோஜாக்கள் பேசப்பட்டது போல கறுப்பு ரோஜா படம் அதிகம் பேசப்படலை  மச்சான் பரதன் .

நாசாப்போனவனே  ஈசன்.

'நான் நெஞ்சத்தை கிள்ளாதே என் காதல் கண்மனி ஜீவனி என்று அலைபாயுதே போல தவிக்கின்றேன்'
 நீ என்னடா என்றால் அவங்க அப்பன் அரசியலில் பெரிய பிஸ்த்தா!

எங்க  ஐயா ஒரு பூந்தோட்டக் காவல்க்காரன் என்பது போல ஓவராக் பில்டப் கொடுக்கின்றாய் .

'காதல் என்றாலே மோதல் தானேடா ?அதுவும் அரசியல்வாதி மகளுக்கு என் மேல் காதல் வரக்கூடாதா?

 என் காதல் நிச்சயம் வெற்றிவிழா காணும்.

 நானும் ,ஜீவனியும் இந்த மலையக வீதியில் டூயட் பாடத்தான் போறம் இருந்து வேடிக்கை பாரு !



காதலுக்கு முன் அரசியல் மகுடம் ஒரு காலணி போல நிஜமான நேசிப்பு நம்மைச் சேர்த்துவைக்கும் மச்சான் ஈசன்!

நான் ஜீவனியை உயிரோடு உயிராக யாசிக்கின்றேன் .

ஏன் உயிரிலே கலந்தது போல உயிரே உயிரே அழைத்த தென்ன என்று பாடவோ??:)))

நீ என் உயிர்தோழனா இல்லை காவல்க்காரனா ?

நான் ஏழைஜாதிடா!

போடா ஈசன் என்னைப் புரியாதவனே !

ஆமாடா நீ நல்லா இருக்கணும் ,ஜீவனி வேண்டாம் என்றால்  எதிர்ப்பு அரசியலே புரியாதவன் நீதாண்டா!

அரசியலும் ஒரு  காதல் தான்  மதவாத பீடாதிபதிகள் இனவாத மகுடி ஓதுவது போல!

இங்கு பலருக்கு ஒரு செருப்பு வீசினாலும் ,ஒரு கல் எறிந்தாலும் சிரித்துக்கொண்டு புகைப்படத்தில் காட்சி கொடுத்துவிட்டு !

செருப்பு எறிந்தவன் மீது மீண்டும் சுதந்திரமாக   வெளிவரமுடியாதா வழக்கில் எல்லாம் பொய்ஜாக ஜோடி சேர்த்து ஜீவஜோதி போல சிறையில் சித்திரம் தீட்டவும் ,சிறுவிரல் இல்லாது செயல் இழக்கச் செய்வதில் முத்திரை வழக்கு எல்லாம் அண்ணாச்சி கதை போல சிதம்பர ரசசியம் எல்லாம் ஊடகத்தில் படித்தது இல்லைப் போலும் !

அரசியலில் மகளையும் ,மகனையும் கூட முதலீடு செய்வதில் நம் நாடும் இந்தியாவைப்போலத்தான் !

ஜீவனியின் தனிப்பட்ட விருப்பு ,வெறுப்பு  அறியாமல் அவளையும் தேர்தல்க் களத்தில் பிரச்சார வாக்குச் சூறாவளிக்கு நடிகையைப் போல திடீர் என்று இறக்குவதக்கும் தயங்காதவர் அவங்க அப்பா முத்தையா!

இது எல்லாம் ஜோசிக்க வேணும் ?
யதார்த்த நிலைக்கு  முன் உன் காதலும் ஒரு அரசியல் அரங்குதான்!

இங்கு யார் வெல்வார்? யார் மகசின் சிறையில் சந்தேகக்கைதி போல தனிமையிலோ ?

இல்லை இனம் தெரியாத உடலாக மகாவலி கங்கையிலோ வீசப்படும் நிலையை ஊடகத்தில் புனை பெயரில் எழுத வைக்காத பரதன்.

இனி ஜீவனி பற்றி ஏதும் என்னோடு பேசாத மச்சான் .


அது நம் நட்புக்கு இருகோடுகள் போல...படிக்க வேண்டிய பைல் அதிகம் தொலைச்சிடாத!

இன்னும் தவிக்கின்றேன்....................

6 comments :

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

தனிமரம் நல்கும் தமிழும் இனிமை!
கனிமரம் என்பேன் கமழ்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

திண்டுக்கல் தனபாலன் said...

முதலீடு சேவைக்காக அல்ல...! ம்...

Unknown said...

வணக்கம் நேசரே!நலமா?///நன்றாக உவமைகளுடன் கதை (கொஞ்சமாக)நகர்கிறது,தொடரட்டும்!

தனிமரம் said...

வணக்கம்!

தனிமரம் நல்கும் தமிழும் இனிமை!
கனிமரம் என்பேன் கமழ்ந்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//வணக்கம் கவிவேந்தே தனிமரம் நாடி வந்து கவியில் வாழ்த்திய நெஞ்சுக்கு கவிப்பரிசு இனிய பாணம் பால்க்கோப்பி முதல்க்கொடை! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும் கவி வேந்தே!

தனிமரம் said...

முதலீடு சேவைக்காக அல்ல...! ம்...//ம்ம் நிஜம் தான் நன்றி தனபாலன் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

தனிமரம் said...

வணக்கம் நேசரே!நலமா?///நன்றாக உவமைகளுடன் கதை (கொஞ்சமாக)நகர்கிறது,தொடரட்டும்!//வாங்க யோகா ஐயா நாம் நலம்! நன்றி வருகைக்கும் கருத்துரைக்கும்.