23 April 2014

தாலியுடன் தனிமரம் போல தவிக்கின்றேன் --19

கண்களில் ஆரம்பிச்சு இதயத்தில் முடியும் காதல்க்கோட்டை படம் போல இல்லை சாமானிய வாழ்க்கை பரதன்.

படிக்கும் காலத்தில் சரியாக படிக்காமல் மனசை அலைபாய  விட்டுவிட்டு பின் சரியாக  படிக்கலையே என்று முகாரி ராகம் பாடும் நிலையும் உனக்கு வேண்டாம்.

 நல்ல ஆட்சியாளரிடம் நாட்டைக்கொடுக்காமல் விட்டு விட்டு ஊழல் ஆட்சி ,சீராக வழிநடத்தத் தெரியாத இந்த அரசாங்க ஆட்சி என்று எல்லாம் கோசம் போடும் நிலை போல நம் வாழ்க்கையும் ஆகும் நிலை வேண்டாம் பரதன்!

நீ யார் ?எங்கு இருந்து வந்தவன் என்று எல்லாம் எனக்கு முழுமையாக தெரியாது!

  இலங்கையின் பிரதமர் கொள்கலனை விடுவிக்க துறைமுக அதிகார சபைக்கு கொடுத்த கடிதம் போல நீயும் காதல் கடிதம்   தந்தாய் .

என் தகுதி என்ன ?
நான் யார் ?என்று எல்லாம் நீ தேடிப் பார்த்தியோ அரச புலனாய்வாளர்கள் போல என்று எல்லாம் தெரியாது ?

காதலுக்கு கண் இல்லை மனசு போதும் என்று எல்லாம் யாதார்த்த வாழ்க்கை புரியாத புதிர் போல பாடம் கற்பிக்காத .
உயர் தரம் படிக்கும் இந்த இரண்டு வருடமும் எங்களின் வாழ்க்கைப்படி ஒரு மலையேற்றம் போல இதில் எங்காவது வழி தவறிவிட்டாள் பின் பொது வெளியில்  படிக்காதவன் என்று சொல்ல வேண்டிய நிலையை ஏற்படுத்தாத.

அதுக்காக உன்னிடம் என்னை நேசிக்க  என்ன பொருளாதார ,சமூக அடிப்படைத்தகுதி இருக்கு?

என்று கேட்பதாக பொருள் கொள் வேண்டாம் !
உருகும் பிரெஞ்சுக்காரி போல ஜீவனி  இல்லை!

உன்னிடம் கவி ஆழுமை இருக்கு அதை ஊடகப்பக்கம்  திசை மாற்றினால் இந்த ஊர்  சமூக,கலை, கலாச்சார சீரழிவுகள் ஒரு புறம் சாமானியர்களின் ஏக்கம்? ஒவ்வொரு  அரசியல்வாதிகளும் ஏதாவது  தேவையான சாமானிய பொருளாதார  ,சமூக அடிப்படை வசதியைச்சரி முன்னேற்றுவார்கள் என்ற எதிர்ப் பார்ப்பை எதிர்க்காற்று படம் போல ஆக்கும் இந்த  ஊர்க்கதை எல்லாம் எழுதலாம் .



எனக்கு இந்த ஊரில் ஏதாவது ஒரு பொதுப்பணி செய்ய வேண்டும்  என்ற ஆர்வம் இருக்கு!

தயவு செய்து அதை எல்லாம் காதலே நிம்மதி, காலம் எல்லாம் காதல் வாழ்க, காத்திருந்த காதல் ,கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்று எல்லாம்  காதலில் விழுந்தேன் என்பது போல கல்லூரி மாணவன் இதயம் பட முரளி  போல  எல்லாம் உன்னை வீணாக்காத.

 இது ஒரு நண்பியாக சொல்லுகின்றேன் எனக்கு அப்பாதான் முக்கியம்.

 தம்பியின் படிப்பு. வீட்டுப்பொறுப்பு என்று எல்லாம் குருவி தலையில் பனங்காய் போல இருக்கும்  என்  படிப்பு நிலையில் இப்ப காதல் ராகம் மீட்ட நேரம் இல்லை பரதன்.

நீங்கள்  மனசை தேர்ந்த ஞானி போல கட்டுப்படுத்தி  அடுத்த தவணையில் நல்ல மார்க்கு எடுக்க முயற்ச்சி செய்யுங்க. .

மீண்டும் அடுத்த தவணையில் சந்திப்போம் என்று வந்த  வேகத்திலேயே தேர்தல் பிரச்சாரம்  போல பேசி முடித்து சென்றாள் ஜீவனி.

 அதுவரையும் பரதன் ஒரு வார்த்தையும் ஜனாதிபதியின்  ஊடக சந்திப்பில்  குறுக்கு கேள்வி கேட்கும் கால அவகாசத்தையும் நிரூபருக்கு  கொடுக்காமல்  ஊடக சந்திப்பை பகிஸ்க்கரித்த ஜனாதிபதி  போல!

காதல் சொல்ல வந்தேன் என்பது போல பேசமாட்டாளா என்று இருந்தால்


 ஜீவனி கோகுலம் பானுப்ரியா  போல இருக்கின்றாலே!

தொடரும்.............


5 comments :

திண்டுக்கல் தனபாலன் said...

யதார்த்த வாழ்க்கை புரியாத புதிர் தான்...

Unknown said...

சுவர் இருந்தால் தான் சித்திரம்!நம் இனத்தின் முதலீடே கல்வி தான்.ஏனையவை எல்லாம் அதற்குப் பின்னர் தான்.ஜீவனி சரியாகத் தான் பேசுகிறார்!

Unknown said...

ஐயா நிர்வாகி,"நிகண்டு தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்" ..........போதும் ஒரு தடவை விளம்பரப்படுத்தியது!பதிவுக்கும் ஊக்கம் கொடுங்கள்,இல்லாவிடில் கண்டு கொள்ள 'நாதி' இருக்காது.

துரை செல்வராஜூ said...

அன்பின் நேசன்..
தஞ்சையம்பதி தளத்தினை அறிமுகம் செய்வித்த தங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி!
என்றும் அன்புடன்,
துரை செல்வராஜூ..

துரை செல்வராஜூ said...

கல்வியே இளம் வயதில் முக்கியம்..
ஜீவனி சொல்வது சரியே!..

இனிய நடையில் எழுதும் அன்பின் நேசனுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்..