29 September 2015

முகம் காண ஆசையுடன் -22

 முன் வாசிக்க இங்கே -http://www.thanimaram.org/2015/09/blog-post_22.html!

கையேந்தியே காலங்கள்  வீனாக   ஆறில் இருந்து அறுபது படம் போல  வாழ்க்கை சிறையில் வீனாக போகுது கருணை காட்ட யாருமில்லாத கையறுநிலையில்!

நாம் இதோ கலப்பு நீதிமன்றம் என்ற புதிய கோஷம் நயன்தாராவுக்கு கூடிய கூட்டம் போல ஊடங்களில் இலங்கை பற்றி  தினமும் கூட்டம் பற்றி  எழுதினாலும் ,எல்லாத்தையும் பெரியண்ணா என்ற கோடாரி எப்படி கொன்றது நம் உறவுகளை என்பதை தியாகதீபம் நேற்றைய வரலாறு!


 நாளை என்னவாகும் ஐநா  தீர்மானத்துக்கு என்று எல்லாம் ஆவலுடன் காத்து இருப்போர் போலத்தான்! இன்னும் போர் முடிந்தும் அரச படையாள், புலனாய்வு துறையால் ,சந்தேக காவல்துறையால் சிக்குப்பட்டு சிறையில் இருப்போருக்கு பொது மன்னிப்புக் கொடுத்து விடுதலை செய்யக்கூட நினைக்காத இனவாத  சிந்தனை மனம் கொண்ட  மகா ஆசை துறந்த புத்தன் தேச அதிபர் குப்பை அகற்றுகின்றார்!




 அதனை வானொலியில் நேரடியாக வர்ணனை செய்யும் இன்றைய விடலைப்பையன் இனவாத வானொலி அறிவிப்பாளருக்கு. கடந்தா காலத்தில் வானொலியில் பணியாற்றியவர்களில் கூட சந்தேக குற்றச்சாட்டில் சிறையில் இருப்போர் பற்றி சிந்திக்க ஏனோ சுயதேடல் வழிவிடுவது இல்லை!மேலதிகாரி என்ற கட்டுப்பாட்டாளர் கடந்து தானே அவரும் அறிவுப்பு செய்ய வேண்டும் பொது வெளியில் ! இது  எல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டம் தானே!


 ஒரு ஊடகம் தானும் தமிழ்/சிங்கள/ஆங்கிலம் என்று இன்றுவரை   முன்வந்து சிறையில் இருப்போர் வரலாற்றை ஒலி/ஒளியாக நேரடியாக ஏன் சிறையில் சில ராகம் போல சில மனிதர்கள் என்று விருமாண்டி படம் போல நேரடி ஒளிபரப்பு செய்ய நினைப்பது இல்லை??


 சட்டாமா அதிபர் சர்வ வல்லமை மிக்க சர்வார்திகளுக்கு மட்டும் சட்டச்சிக்கல் இல்லை! விடுதலை  என்று நீதிமன்றத்தில் நீதி எழுதும் போது! வீனாக அப்பாவிகள் கண்ணீர் விடும் சாமானிய போராளிகளுக்கு யார்  துணையாக சட்ட ஆலோசனை வழங்கபோறார்கள்?, வழக்கு முடியுமா?, அல்லது வாழ்வு தொலையுமா?, என்று ஆயிரம் சித்திரைவதைகள் தாங்கியும் புறநானூற்று விழுப்புன் வாங்கிய வீரர்கள்; வீராங்கனை போல இன்றும் புலிகள் என்ற போர்வையில் இனவாதம் சிறைபிடித்து வைத்து இருக்கும் உறவுகளின் அடுத்த கட்டம் என்ன??


 அதுக்கு நாம் என்ன செய்யப்போறோம் ?,


ஊதாரி தேர்தலுக்கு புலம்பெயர் நிதி அன்பளிப்பு; ஊரில் இருக்கும் கோயிலுக்கு ஆயிரம் நன்கொடை.;ஊரில் ஆள் இல்லாத பாடசாலைக்கு ஆயிரம் கணனி அன்பளிப்பு;
அந்த சங்கம்; இந்தச்சங்கம்; அவர்கள் ஊர் ;இவர்கள் ஊர் ;என்று போட்டி போட்டு ஆடுவோம்முகநூலில் பொது வெளி  நாகரிகம் தெரியாது !நான் யாழ்ப்பாணாத்தான் ! என்பள்ளி தான் கோட்டை மற்றது எல்லாம் குடிசை போல!குதறி எறியும் நாய்கள் எல்லாம் புலம்பெயர்ந்து நவீன வாழ்க்கை வாழுது குத்துப்பட்டு கிடப்பது எல்லாம் அப்பாவிகள் விளம்பரபோதை பிடிக்காத வேர்கள்!



 இன்னும் இளமை இதோ இதோ என்று ஆனால் நாங்கள் வாழ கடைசியில் தாயபூமி தணித்துவமாக வாழ தாக தீபம் ஏந்திய அப்பாவிகள் எல்லாம் இன்னும் அனல் தீயில் !

ஆனாலும் அறுத்தான் தாலி. அந்த நடிகையின் அந்தரங்கம் இதோ என்று கிளுகிளுப்புக்கு நாளும் பஞ்சம் இல்லாத செய்தியை நாளிதழ்கள் கொண்டு வரும்!

 ஆனால்  நாலாம் மாடியில் நாசமானவள் .மெனிக்காம்பில் மூர்க்கமாக இனவாத படையின் இச்சை வெறிக்கு  மூச்சையடக்கியவள் . இன்னும் தெய்யத்த கண்டியில் புனர்வாழ்வு முகாம் . வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் என்று சீரழியும் நம் உறவுகளுக்கு நேரும் கெதி

 தேடாமல் நடைப்பிணமாக வாழ்வோர் பற்றி நாம் பேசமாட்டோம்!

 நாமுக்கு தேவை பப்பறதான்!நவீன காலம் ஆச்சே!


 இதுதானே இன்றைய காலம்!நம்மை இந்த நிலைக்கு கொண்டு வந்த வம்சம் எல்லாம்  நாசமாக போகட்டும் !

என்று திட்டும் அப்பாவிகளின் விடுதலைக்கு நாம் என்ன செய்யப்போறம் அகிலன் ?,

 விடாது தொடரும் வலி அசுரன்! ஆனால்!!  என்ன ஆனால்??

 எல்லாம் அரசியல் வியாபாரிகளை/விபச்சாரிகளை/ நாதாரிகள் /நாட்டைக் கெடுத்த பண்டிதர்கள் நாய்வேஷம் போட்ட ஈனப்பிறப்புகள் வாய்மூடித்தூங்குது என்று  மட்டும் கைகாட்டி விட்டு நாமும்  பொறுப்புக் கூறாது  தப்பி ஓடச்சொல்லுவதா ?,


!!நிச்சயம் இல்லை !!அரச அதிகாரிகள் ;இனவாத ஊடகவாதிகள்; இன்னும் தன் வருமானம் மட்டும் நோக்கம் கொண்ட தனியார் குழுக்கள் ;எல்லாம் இன்னும் சிந்திக்கணும்!!

 இன்னும் இருக்கே சட்டக்கல்லூரி `மாணவர் சமூகம் அது எந்த இனவாத போதையில் இன்னும் இருக்கு மச்சான் இவர்கள் எல்லாம் ஏன் இன்னும் சிந்திக்கவில்லை சிறையில் சிந்தும் இரத்த உறவுகளின் நிலை பற்றி!



தொடரும்....

//

8 comments :

கரந்தை ஜெயக்குமார் said...

அரச அதிகாரிகள் ;இனவாத ஊடகவாதிகள்; இன்னும் தன் வருமானம் மட்டும் நோக்கம் கொண்ட தனியார் குழுக்கள் ;எல்லாம் இன்னும் சிந்திக்கணும்

கரூர்பூபகீதன் said...

வணக்கம் சகோ! ஒவ்வொரு வரியிலும் சாட்டையடிகள்!இவர்கள் சிந்திப்பார்கள் வருமானத்தை பெருக்க மட்டும்! மற்றதுக்கு,,,,,??????

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

படைப்புகள் வந்து சேர இறுதி நாள் இன்றோடு முடிவடைகிறது... விரைந்து செயல்படுவீர்... போட்டியை ஊக்கப்படுத்தும் ஒரு பட்டியல்... காண்க... கருத்துரையிடுக... பகிர்க...

இணைப்பு: →http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_30.html

நன்றி...

புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்
http://dindiguldhanabalan.blogspot.com

கரூர்பூபகீதன் said...

அன்பு சகோ! தாங்கள் சொன்ன வழிமுறைகளை செய்துவிட்டேன்! அதற்கு நன்றிகள் பல! இன்னும் ஒரு கட்டூரைக்கு தாங்கள் கருத்தை தந்தால் சிறப்பாக இருக்கும் ! நன்றி

balaamagi said...

தன் பாக்கெட் நிறைக்க மட்டும் தெரிந்தவர்கள்,,,,,,,
அருமை சகோ,,,

Unknown said...

சுயநலவாதிகளுக்கு உங்களின் சாட்டை அடி உறைக்குமா ?

Yarlpavanan said...

நம்மாளுங்க அப்படித்தான்
ஆனால்
நாடு மட்டும் அழுகின்றது

Thulasidharan V Thillaiakathu said...

எல்லா அரசியல்வாதிகளும் இப்படித்தான் சுயநலவாதிகள்தான்..இவர்கள் கையில் நாடுதான் பாவம், நாட்டு மக்கள்தான் பலியாடுகள்...தொடர்கின்றோம்...நண்பரே!