யாசிப்பது உன் அன்பை அன்றி
யாதும் மாறும் யாக்கையை அல்ல
யாழினியே யாசிக்கும்
ஏதிலியும் யாசகம் கேட்கின்றேன்
உன்னிடம் என் காதல் சொல்லி!///
------------------------------------------------------------------------------
விழுந்துவிடும் அருவியில் கூட
விளக்கேற்றலாம் மின்சாரம்மாக்கி
விரைந்து வரும் துயரத்தின்
விழிகள் நனைக்கும் பன்னீரில்
விடுதலை எப்போது???!
//////////////////////////////////////////////
நாதியற்றுப்போவேன் என்று
நம் உறவுகள் சொன்ன போதும்
நான் இருக்கின்றேன் என்று
நல்ல வழிகாட்டிய தைரியசாலி
நற்றினைபோல நட்பு நீயடா
நண்பா!
முன்னம் கவிதை இங்கே-http://www.thanimaram.org/2016/08/blog-post_16.html
3 comments :
சைக்கிள் டயரிலும் காற்று இல்லை ,அதுவும் கவிதை போல் காற்றிலே கலந்திடிச்சா :)
நற்றினைபோல நட்பு நீயடா
நண்பா!
நட்பு போற்றுவோம்
அருமையான படங்களும் வரிகளும்
Post a Comment