10 July 2011

நொந்து போகும் ஒரு இதயம் -2

இதன் முதல் பாகம் இங்கு செல்க 24/09/2011 பதிவைப் பாருங்கள்.




என் அருமை பதிவாளர்களே! இந்தத் தனிமரம் புதிய நீண்ட தொடருடன் உங்களிடம் வருகின்றேன்.
இதில் என்னுடன் முரன்பட்டிருக்கும் முன்னால் நண்பனின் கதை சில மாற்றங்களுடன் .
.விடை தேடுகின்றேன் .கதையில் யாரையும் புண்படுத்தும் என்றால் மன்னிப்பை இங்கேயே கேட்கின்றேன்
.தனித்தனியாக வருவதற்கு புலம் பெயர் தேடலில் தொலைந்து போகின்ற நேரம் அதிகம் என்பதால்!
////////////////////////////////////////////////////////////////////////////////////
.பிரபு கந்தசாமியின் தவப்புதல்வன் .அவர் நண்பர் தேவனின் விருப்புக்குரியவன் ..தேவன் என்கின்ற வியாபார செல்வந்தரிடம் கைநீட்டி செய்த வேலைக்கு  மாதமுடிவில் கூலிவாங்கும் தொழிலாளிகளில் என் தந்தையும் நானும் சேர்ந்து கொண்டேம்.

 3மாதங்கள் குறுங்கால திட்டம் போடும் எனக்கும். நீண்ட கால திட்டம் போடும் என் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல்கலால் வேலை தேடி சந்தைப்படுத்தல் அதிகாரியான சில தினங்களில் .

யாதார்த்தமாக வந்து நலம் விசாரிப்புக்களுடன். தோல் கொடுத்தான் பிரபு.

 முன்னர் கடைக்கு வரும் போதெல்லாம் வெறும் பார்வையுடன் போனவன் .என்னுடன் சகலதும் பேசிக்கொள்ளும் அளவிற்கு அந்தரங்க நட்புப் பாலத்துக்குள்ளும் வந்துவிட்டான் விரைவில்.

 பார்ப்பதற்கு ஹிந்திப்பட சன்சய்தத் போல் நெடியவனும் திடகாத்திரமான உடம்பும் பழுத்த பூசனிக்காய் போல் மாநிறம் கொண்டவன்.

நானோ சோமாலியில் இருந்தவன் போல் இருந்தேன். இப்ப மட்டும் என்ன அதே கோலம்தான் தலையில் தான் மாற்றம் தலைமுடியை தானம் கொடுத்துவிட்டேன் ரஜனி விக்வைக்க கேட்டதில்.

சாதாரன தரத்தில் எட்டுப் பாடங்களையும் ஒரே எறிதல் குண்டில் வீசி எறிந்து கா/பெ/  உயர்தரம் என்ற இரண்டாவது ஏணியில் ஏறும் ஆண்டாக 1997 ஆவனி பகுதியில் பள்ளிக்குள் உள்நுழைந்தவன்.

எனக்கும் அவனுக்கும் வயது வித்தியாசம் பாஞ்சாலியின் கணவர்களைப் போல்!

நல்ல பாடல் ரசனையும் 1980 இல் வெளியான படங்கள் என்னைப் போல் அவனுக்கும் பிடித்திருந்தது.

இடப்பெயர்வில் என் இனிய பல நண்பர்களை  பலதிக்கிற்கும் மண் மீட்பு என்றும், கானாமல் போனவர் பட்டியலிலும் ,புலம் பெயர்ந்தும் போனவர்களையும் விட்டு தனிமரம் தனியாக பாலைவனமாக இருந்த போது நட்பு என்று உறவுப் பாலம் இட்டு பனிமழையைப் போல் வந்தான்.

 அதுவும் எனக்கு அப்போது தேவையாக இருந்தது. ஊர்சுற்றுவதும் உதவாக்கரை என திரிந்து கொண்டிருந்த தனிமரத்திற்கு வவுனியாவின் சதுரங்கள் தெரிந்து கொள்ளவும் என் இருப்பு ஏது என்று தெரியாமல் திக்கு முக்கடியபோது தத்தளிக்கும் ஒரு ஓடமாகிப் போனவனுக்கு வழிகாட்டும் பாதைசாரியாகவும் பாரதியின் கண்ணன் போல் எனக்கும் யாதுமாகி வந்து இருந்தான்.பிரபு.


 நாம் இருவரும் வேலைமுடிந்தும் ,பள்ளிமுடிந்தும் பல இடங்களை கோவலனைப் போல் காலினாலும் சைக்கிள் மூலமும் அளந்த தூரம் .வைரமுத்து சொல்வது போல் பழைய பர்மாவிற்குப் போகும் தூரம்

.ஒவ்வொரு குச்சு ஒழுங்கைகளையும் பாதுகாப்பு காவலர்களிடம் வரும் தேடல்களையும் தாண்டி ,மாற்றுக்குழுவினர்களின் மர்மப்பார்வைகளையும் ,
எனக்கு மொழி பெயர்த்தவன் அவனே .

எனக்கு சகோதரமொழியில் குருவாக இருந்தான். எங்கள் நட்பு அவன் வீடுவரை நண்பன் என்ற பயணத்தில் அவர்கள் குடும்பத்தில் நானும் ஒருவனானேன்.

ஓயாமல் நான் கேட்கும் பால்கோப்பியை தாயும் சரி பிரவுக்குப் பின் பூமிக்கு வந்த இரு  சகோதரிகளும் தம்படிப்புக்கு இடையிலும் உரிமையுடன் போட்டுத் தருவார்கள் அண்ணா என்று.

. ..என்
குடும்பத்தினர் மறுபக்கத்தில் நானும் தந்தையும் இக்கரையில் இப்படிப் பலர் இருந்தார்கள் அக்காலத்தில்
.
வவுனியாவின் தண்ணீர் ஒரு வித்தியாசமானது.  சில பகுதியில் சில படிமங்களை கொண்டிருக்கும் கொதித்தாறிய தண்ணீரை வடிகட்டிக் குடிக்காவிட்டாள்.
 காலப் போக்கில் சிறு நீர் கழிக்கும் போது எரிச்சலும் அதனைத்தொடர்ந்து  சலக்கடுப்பும் சிலருக்கு  ஏற்படும் .( இதற்கு மருத்துவ விளக்கம் தம்பி மதிசுதா பாடம் போட்டு விளக்குவார் என நம்புகின்றேன்)


எனக்கும் வந்த புதுசு. தாகத்தைப் போக்க எதையும் ஜோசிக்காமல் அரசியல் வாதியின் தேர்தல் பிரச்சாரம் போல் அருந்திக் கொண்டிருந்தேன்.

ஒருநாள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த போது ஆமிக்காரன் காதுக்குள் பேனையை வைத்து காதைப் பொத்தி அடித்தது போல் அடிவயிற்றில் தாங்க முடியாத வலி ஏற்பட நான் போய் நின்றது.

  மன்னார்  வழி காட்டும் குருமன்காட்டுச் சந்தியில் இருந்த தனியார் கிளினிக் .வைத்தியரும்  என்னை ஏற இறங்க பார்த்து பரிசோதித்து விட்டுச் சொன்னது தான்  எனக்கு அடி வயிற்றில் கல் இருப்பதாக  .கேனியா என்பார்கள் பேச்சு வழக்கில்.

எனக்கு விரைவாக சத்திர  சிகிச்சை செய்யனும் என்றார் .அப்போது உதவிக்கு இருந்து இரண்டு நாளும் பார்த்தது அவனின் தாய்.
 என்னையும் தன் மகன் போல் என்று பாசம் கொட்டிய குசுமாவதி அம்மாவை .

இந்தப்
பதிவு எழுதும் ஏகாந்த நேரத்திலும் என்னிப் பார்க்கின்றேன் அதே பாசத்துடன் .

தனிமரம் வெளிநாட்டுவாசி ஆனதன் பின்பு மாறிவிட்டான் .என்று நீங்கள் கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்தின் பிடியில் பூஸாவில் வாடும் என் உறவுகள் போன்றது

.உண்மையில் நடந்த
எல்லாம் நீங்கள் அறியவில்லை என் பக்கம் உள்ள நியாயத்தை என்பது மட்டும்
என்னாள் உறுதியாக எந்த நியாயத்தைக் கண்டரியும் ஆனைக்குழு முன் சாட்சியம் கூறுவேன்

.அன்று உங்களிடம் கற்ற  சகோதர மொழியில்  இன்றும் மறக்கவில்லை  காலமாற்றத்தில்.

 எந்த புயலிலும் தனிமரம் கானாமல் போன செம்பனி விவகாரமல்ல என்றாவது தீர்ப்பு வரும் என்று என்னும் ஒரு கிரிசாந்தியின் தம்பியின்  ஆவி போல் என்னையும் நம்புவீர்கள்.

காலமாற்றம் மீண்டும் நடந்தவையை  ஞாபகப் படுத்து கின்றது.

தொடரும்-

12 comments :

நிரூபன் said...

வணக்கம் பாஸ், மனதின் உள் அறைகளுக்குள் பதியமிட்ட ஞாபக அலைகளினை எழுத்துருவாக்கி கோர்த்திருக்கிறீங்க.

இறுதிப் பந்தி....மனதினை கனக்க வைத்து விட்டது.- கேணியா ஆப்பிரேசன் மேட்டர்.

சுவாரஸ்யமாக, மொழி கடந்த நட்பின் மகோன்னததுவத்தை மெய்பித்து எழுதியிருக்கிறீங்க.

தனிமரம் said...

நன்றி நண்பா உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நெஞ்சில் முள் என்ன செய்வது இத்தொடர் முடியும் முன்னே உங்களின் இனிய புதிய அழைப்பு அதுதான் துடிக்கின்றேன் முடிவு உங்களிடமே!

சுதா SJ said...

பாஸ் உங்கள் பதிவின் இடைக்கிடையே ரத்தின கருத்துக்களை சிதரவிட்டுசெல்வது
படிக்க சுவராசியமாக இருக்கு

சுதா SJ said...

பழைய ஞாபகங்கள் என்றும் சுவைதான் இல்லை பாஸ்

தனிமரம் said...

நன்றி உங்கள் வருகைக்கு துஷ்சந்தன் எழுதுவது என் கடந்தகால துயரத்தை  தொடர்ந்து இனைந்திருங்கள் உங்களைப் போன்றவர்களின் தீர்ப்புத்தான் இனிய நட்பை தொடர்வதா  எனத் தீர்மானிக்கும் கருத்துத்துக்கள்.

தனிமரம் said...

சில பழைய ஞாபகங்கள் நம்மை சீரலிக்கிறது என்பதும் உண்மையே!

காட்டான் said...

ஏன் மாப்பிள எல்லாத்தையும் சேர்த்து ஒன்றா எழுதினா காட்டானுக்கு படிக்க சுகமெல்லோ..? இப்ப பார் பழைய பதிவுல என்ன என்ன எழுதினாய் என்பத மறந்து போச்சு..!

 இந்த காட்டானுக்கு ஞாபக சக்தி குறைவப்பா..? போனகிழமை வாங்கின சோம பாண குவளையை இன்னும் தேடிகொண்டிருக்கேன்னா பார்த்துக்கோ மாப்பிள..?

தனிமரம் said...

ஆதவன் இது ஒரு நீண்ட சிக்கலான விடயத்தை ஒருபதிவில் அடக்க முடியாது அதனால் தான் தொடராக கொண்டுவாரன் இன்னொன்று புலம்பெயர் ஓட்டம் என் நேரங்களை திருடுகிறது அதனால்தான் இப்படி பிரித்து எழுதுகின்றேன் உங்கள் வருகைக்கு நன்றி.

ஹேமா said...

ஓ...நீங்க மொட்டை பாஸ் நேசனா !

உங்கள் எழுத்தில் வலியும் பாசமும் நேசமும் கலந்த ஈர்ப்பு.அருமையா எழுதுறீங்க நேசன் !

தனிமரம் said...

வணக்கம் ஹேமா !
 தலையில் முடி நடலாம் என்றாள் என் வீட்டுக்காரி இனி என்ன பிரென்ஸ்சுக்காரியுடன் டூயட் பாடப்போறீங்களோ என  ஊரில் இருந்து ஏப்பைக்காம்புடன்  சண்டைக்கு வாரால்.
நன்றி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்.

vidivelli said...

அழகான படைப்பு,,,,
கடைசியாய் மனசிற்கு கஸ்ரமாய் போட்டுது,,,
வாழ்த்துக்கள்,,

தனிமரம் said...

நன்றி விடிவெள்ளி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். .