16 July 2011

ஆடிப் பிறப்பூ!!

மாதங்களில் ஒவ்வொன்றும் சிறப்பானது .அதிலும் இன்று பிறக்கும் ஆடி மாதம் தமிழர் வாழ்வில் ஆனந்தமும் இன்னலும் கொண்டது.

ஆடிப்பிறப்புக்கு நாளை விடுமுறை என்று நாவாலியூர் தங்கத்தாத்தா சோமசுந்தரப்புலவர் பாடிய ஒரு பாடல் பள்ளியில் சொல்லித்தந்தது ஞாபகம் .

 ஆடிப்பிறப்பிற்கு கஞ்சி(கனிமொழிக்கு) காச்சுவது எல்லா வீடுகளிலும் முக்கிய நாளாக ஈழத்தில் இருந்தது.

  ஒரு காலத்தில் நல்ல சிவப்பு அரிசி தேடி நல்லாக்கழுவி தேங்காய்ப்பாலுடன் பயறு பனம் கருப்பட்டி போட்டு காச்சும் (கசிப்பு இல்ல)போது வரும் வாசம் நாசியில் ஊரி நித்திரைவிட்டு எழும்பிய ஒரு காலம் பள்ளி விடுமுறையாக அதிகமாக இருந்தால் நித்திரைதான் கொண்டோம்!  ம் அது ஒரு கனாக்காலம் ?

இந்தக் கஞ்சி ஆடிக்கு என்று எல்லாரும் முன்கூட்டியே ஆயத்தம் செய்து விடுவார்கள் .உறவுகள் வீட்டுக்குசென்றால் இனிய கஞ்சியை குடிக்க வைத்தே பானை வண்டியாக்கி  விடுவார்கள் .

இப்படியான நாளில் மாமிமார் வீட்டுக்குப் போனால் அதுவும் மச்சினியை கொண்டவர்கள் வீட்டுக்குப் போனால் நீங்கள் ராஜ குமாரர்கள் தான் .எல்லாக் கஞ்சியும் உங்களுக்கு குடிக்கக் கொடுத்து தங்கள் வருங்கால மருமகன் என்று ஒப்பந்தம் போட்டுவிடுவார்கள் .

அதுவரை ஆத்தாவின் குரலுக்கு அடுப்படி போகாத அத்தைமகள் ரத்தினம் இன்று அடுப்படியில் ராஜாங்கம் என்றாள் நீங்கள் ஆடிக்கஞ்சியை அவஸ்தைப் பட்டுத்தான் குடிக்கனும்.

 கிராமத்து வாழ்வில் இது ஒரு குதுகலம் நீங்க வருவீங்க என்று இன்று கோழி கூவமுன்னமே எழும்பி உங்களுக்காக கஞ்சி காச்சினேன் என்று மச்சாள் மயக்கம் கொடுத்து கஞ்சியைக் குடித்தால் .அடிப்பாவி !
சக்கரைக்குப் பதிலாக உப்பைப் போட்டே கஞ்சியை நாறடித்தாலும் நம்மலும் சூப்பர் நீ செய்த கஞ்சி என்று ஒரு சாமரத்தை வீசாட்டி .அவளிடம் ஈக்கு மாறு சாத்துத்தான். மாதம் பிறந்து வாங்கனும் இப்படியான குறும்புகள் பல அன்நாளில் பார்த்திருக்கிறேன்.

 சில வீடுகளில் பல மச்சாள்மார் எனில் அங்கே கஞ்சி குடிக்கும் போது முன் ஜாக்கிருதை தேவை .ஒவ்வொர் வீட்டிலும் ஒரு முடல்(சிறிதளவு) குடித்து எல்லா வீட்டிலும் நீங்கள் உங்கள் இருப்பை தக்க வைப்பது அது ஒரு தனி அரசியல் .பின்னாளில் எந்த
 மச்சாள் உங்கள் துனைவியாக வரப்போவது என்று சில நேரங்களில் தெளிவாகத் தெரியாதே! அதனால்தான்

.ஒரு மச்சாளிடம் இளித்துக் கொண்டும் ,மற்றவளிடம் முறைத்துக் கொண்டும் குடிக்காதீர்கள் .தேங்காய்ப்பாலுக்கு  பதிலா கள்ளையும் கலந்து தந்து பழிவாங்கிவிடுவாள்கள் .

பிடித்தாலும் பிடிக்காட்டியும் சிரியுங்கள் இப்படிச் செய்தாள் மச்சாள் மாரின் முகத்தில் உப்பும் மிளகாய்யும் வெடிக்கும் அழகு எத்தனை இன்பம்!

சில இடங்களில் ஆடிக்கூழ் காய்ச்சுவார்கள் நல்லாக அரிசியை ஊறவைத்து. அதிகாலையில் அரைத்து நல்ல பயத்தம் பருப்பும் தேங்காய்ப்பால் பனம்கருப்பட்டி கலந்து தேங்காய்ச் சொட்டும் போட்டு ஆவி பறக்க கூழ் குடித்தால் எந்த சளியும் ஒடிபோகும் ஆளைவிடு  என்று .சில கோயில்களில் ஆடிக்கூழ் பிரபல்யம் .

நேர்த்திவைத்து காய்ச்சிப் படைப்பதை பலதடவை பார்த்திருக்கிறேன்.  இன்று கூழ் குடிக்கவும் கஞ்சி குடிக்கவும் கதியற்ற இனமாக காத்தாலை எழும்பி ஓடுகின்றோம்!

ஆடிப்பிறப்பு அன்று பின்னேரம் பல வீடுகளில் கொழுக்கட்டை அவிப்பார்கள்.  சிலர் மோதகம் அவிப்பார்கள். இதற்குஅரிசி ஊறப் போட்டு இடிப்பது என்றாள்!

  எங்க வீடுட்டுப் பெருசுகள் எல்லாம் ஒன்றாக இருந்து கும்மியடிக்கும் .அயலில் இருக்கும் அவர்கள் மாலையில் ஊரப் போட்ட அரிசியுடன்  பாட்டி வீட்டு மாட்டுக் கொட்டைகளில்  சாக்கு விரித்து பெரிய உரலில் அரிசியை போட்டால் ஐந்து பேர் உலக்கை போடுவம் .இதில் அருடன் கோபமோ அவருடன் அடிக்கடி உலக்கை மோதும் தலையில் .

இடையில் கைமாற்ற மச்சாள் வந்தாள் மாப்பிள்ளை ஹீரோதான் .அவள்  ஒரு இடி போடுவதற்குள் மாவு பதமாகிவிடும் .

இதைப் பார்க்கும் பாட்டியோ கிளிமாதிரி என் பேத்தியை குரங்கான உனக்கு சேர்த்துவைப்பன் என்று பிராக்குப் பார்க்காமல் இடிமாவை என பாக்குரல் குத்திக்கொண்டே என்னையும் உள்குத்து குத்தும் அந்தக்கிழவி சொன்ன படியே என் ஆசையில் மண்போட்டது தனிக்கதை.

 இது எல்லாம் தெரியாமல் ஒரு சிரிப்பு சிரிச்சே என்னை ஆக்கினால் உதவாக்கரை என்று.

 அவள் உலக்கை  போடும் நேரம் பார்த்து இலங்கை வானொலியில் பாட்டு வரும் "அரிசிக்குத்தும் அக்காள் மகளே "என்ற மண்வாசனைப் பாடலை காந்தக்குரலோன் ஹாமித் சுழலவிட  நேயர் விருப்பத்திற்கு நான் போட்ட தபால் அட்டை அப்பவந்து கழுத்தறுக்கும் என்வீட்டில் களவு போன காசுக்கு வழி பிறந்து.

அதன்பின் கொழுக்கட்டையுடன் அகப்பைக் காம்பும் சேர்ந்து வந்து ஆ(அ)டிபிறந்த நாள் வாழ்வில் மறக்க முடியாது .

இப்படி இருந்த நம் வாழ்வில் ஆடிக்கலவரம் வந்து அடுத்த வேலைச் சாப்பாட்டுக்கு ஈச்சம் பழம் கொண்டுவந்த முன்னால் முதலாளித் தாத்தா அதன் பின் போகவே இல்லை மீளவும் வியாபாரம் செய்ய.
ஆடியில் வரும் அமாவாசைக்கு தனிப்பதிவு போடலாம் .

ஆடிவந்தால் சுபகாரியங்கள் செய்வதில்லை.
இளைஞ்ஜோடிகளை பிரித்து வைக்கும் நடைமுறை பல திரைகளில் பார்த்திருக்கிறேன் .
பின் கம்பளையில் வேலை செய்த   போது கண்டும் இருக்கின்றேன்.


சகோதரமொழி நண்பர்கள் நண்பிகள் .எனக்கு சகோதர மொழி நண்பர்கள் என்பது சிங்களமொழி உறவுகள் அவர்களுடன்  அரசியல்  செய்வதிலை நட்பு ,இசை , உபசரிப்பு என பலதில் தனிமரம் ஒன்றிப் போனது என் வியாபாரம் நிமித்தம் இது பனங்காட்டு நரி யாருடைய சலசலப்புக்கும் அஞ்சாது ஆனால் நான் இருக்கும் நாடு எதையும் சட்டத்திற்கு உட்பட்டு பேசலாம் என் உயிர் உறவுகள் அங்கு இருப்பதால் தனிமரம் மெளனம் காக்கிறது.பின் வரும் பாடலில் எப்படி கூடி கும்மாளம் இட்டோம் என காட்சி சொல்லும் நாளை காலை இடியப்பம் சாப்பிட மாவு இடிக்கனும் எனப்பாடுவது ஜிப்சிஸ்.

 கவுண்டமணி ஒரு படத்தில் சொல்லுவார் ஆடிக்காற்றில் அம்மியே பறக்குதாம் ஆம்பளை நான் எம்மாத்திரம் !என்று எனக்கும் அந்தவரி பிடிக்கும்.

.பட்டம் பறப்பதைப் போல் நாமும் ஈழம்விட்டு வந்து பல ஆடி போனாலும் முன்னர் போல் கஞ்சி குடிக்க ஏனோ ஆவல் இல்லை இப்போது.

இப்பாடல் பிடிக்கும் என்றும் எனக்குப்பிடித்த ஜோடி இவர்கள் என்றுமே திரையில் சேர்ந்து வாழ்வதில்லை யாராவது ஒருவர் மரணித்துவிடுவார்கள் இதைப்பற்றி தனிப்பதிவே போடுலாம் சித்திராவின் குரல் தேவா இசை பாடல் ஆசிரியர் யார் என்பது தெரியவில்லை  நமக்கு  நடனம் தெரியாது ஆனால்  இந்தப் பாடலில் வரும்  ரேவதி  ஆட்டம்  பிடிக்கும்!

18 comments :

Mathuran said...

ஆஹா ஆடிக்கூழா.. வாயூறுதே பாஸ்

Unknown said...

ஆடி பற்றிய அட்டகாசமான பதிவு! :-)

MANO நாஞ்சில் மனோ said...

.பட்டம் பறப்பதைப் போல் நாமும் ஈழம்விட்டு வந்து பல ஆடி போனாலும் முன்னர் போல் கஞ்சி குடிக்க ஏனோ ஆவல் இல்லை இப்போது.//

மனசுக்கு மிக்க வலி தரும் சொற்கள்...கண்ணில் கண்ணீராய்....

காட்டான் said...

என்ன மாப்பிள காட்டான கால வாரீட்ட
பின்ன.. ஆடி கோடின்னு.. ஆப்பு வைச்சிட்ட உன்ர அடுத்த பதிவு பள்ளிக்கூட லீவை பற்றி வரும்ன்னு பார்த்து விமர்சனம்ன்னு ஒரு மாஹா பாரதம் எழுதி வைச்சேன் கவுத்திட்ட மாப்பு.. ஆனாலும் காட்டான் இங்கேயும் குழ வைச்சிட்டான்..

தனிமரம் said...

நன்றி மதுரன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !

தனிமரம் said...

நன்றி ஜீ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !

தனிமரம் said...

நன்றி மனோ அண்ணா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !

தனிமரம் said...

நன்றி காட்டான் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் !பதிவு போடுவது தோன்றும் உணர்வுகளைப் பொறுத்தது,

நிரூபன் said...

ஆடிக்குரிய சிறப்புக்களையும், ஆடிக்குரிய சிறுமைகளையும் தாங்கி, காற்றிலேறி உங்கள் பதிவு ஆடி வந்திருக்கிறது.

ஹேமா said...

ஆடி என்றாலே இப்போ ஞாபகம் வாறதெல்லாம் ஆடிக்கூழ் இல்லை.
நம் இனம் கூழாக்கப்பட்டதுதான்.1983 ஆடி,கருப்புஆடி,கரும்புலிகள்...
இப்பிடி இப்பிடி !

தனிமரம் said...

நன்றி நிரூ உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்!

தனிமரம் said...

நன்றி ஹேமா உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் ம் என்ன செய்வது பலருக்கு இந்த ஆடி பல அனுபவம் தந்து இருக்கு!

சுதா SJ said...

நம்ம ஊர் வாசனைப்பதிவு

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .

கவி அழகன் said...

பிரான்ஸ் இல இருக்கிற எல்லாரும் பம்பலான ஆக்கள் போல பதிவு முழுக்க பகிடி பம்பல் இடக்கு மடக்கு யதார்த்தம்

நீங்க கட்டானுக்கு பக்கத்து வீடோ

மச்சாள் மார் கனக்க இருந்த எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும்

சப்ப்பா

தனிமரம் said...

நன்றி கவி அழகன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும். மச்சாள்மார் இல்லாத வீடு எங்கள் பக்கம் குறைவு அவங்களைப் பற்றி தனிப்பதிவே போடலாம் பிரான்ஸ் எப்போதும் பலதையும் பேசக்கூடிய தேசம்!

காற்றில் எந்தன் கீதம் said...

உங்களுக்கு அமோகமான நினைவாற்றல் நேசன்... ஒவொரு சிறிய விசயத்தையும் விவரிப்பது அழகு...

தனிமரம் said...

நன்றி காற்றில் என் கீதம் தோழி உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்