03 July 2011

காதலும் கடவுளைப் போல!!

நாட்டில் அதிக விலைவாசி ஏற்றம் !அதனால் அதிகமான வருமான தேவைகள் என்று இன்று ஒவ்வொரு தனிமனிதர்களையும் துரத்தியடிக்கும் நிலையில். ஆற அமர்ந்து யாருடனும் அன்பு பாராட்டுவது அருகிவரும் நிலையில்

.அதிலும் புலம் பெயர்ந்த யாவர்க்கும் இருக்கும் தன் இருப்பு மீதான தேடல்கள் முடியாத ஒரு யுத்தம். இதனால் இழக்கப் படும் சந்தோஸங்கள் அதிகம். ஒரு பாடலை ரசித்து நண்பர்களிடம் சிலாகித்துப் பேச இப்போதெல்லாம் அதிக சாத்தியம் இல்லை.

 எனக்கு ஓய்வான பொழுதில் அவர்கள் ஓடும் நிலை. அவர்கள் ஓய்வாய் இருக்கும்போது எனக்கு ஓடும் நிலை.

 அதையும் மீறி அவர்களுடன் பொருளாதார, இல்லற விடயங்களை பேசுவதால் .நம் மற்றைய விடயங்கள் கதைப்பதற்கு இடையில், கடமையும் பிற சுமைகளினால் தொடர்பும் துண்டிக்கப் படுகின்றது.

 இதில் யாரை நோவது புதிய தலைமுறையினர் தினருவதை மூத்த தலைமுறையினர் பார்த்துக் கண்ணீர் விடும் நிலையில்.

 எனக்குப் பிடித்த இந்தப் பாடலை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வலை ஏற்றுகின்றேன்

.இந்தப் படம் வந்த ஆண்டு 2005 தீபாவளி வெளியீடாக வந்தது .அக்காலத்தில் எனக்குவதிவிட அனுமதி அற்ற நிலையில் இருந்தேன்.

பல படங்கள் வந்தாலும் சில படங்கள் வெற்றி பெற. மற்றைய படங்கள் ஊத்திக் கொள்வது யாருடைய தவறு ?என எனக்கு தெரியாது.
 இப்படம் ஒரு அழகிய சினிமா விடயத்தை சினிமாவில் பேசுகின்ற படம்.
 நந்தா+தியா ஜோடியாக நடித்த படம் கோடம்பாக்கம் பலருக்கு இப்படி ஒரு படம் வந்ததே தெரியாது?.

சிற்பியின் இசையில் இதில் மாறு பட்ட இசை .வழமையாக அவர் தாங்கிவரும் அரபுலகின் இசையை தமிழில் வெற்றி பெறும் வித்தை தெரிந்தவர்.

 சுந்தர் -C உடன்அதிகமான படம் செய்திருக்கிறார்.

பாடல் பாடியவர் ஹரிஸ் ராகவேந்திரா இனிய குரல் என்றாலும். இல்லற வாழ்வில் ஏற்பட்ட விரிசலில் அதிகம் குடும்ப நலநீதிமன்றத்தில் அலைந்தார் .இடையிடையே நல்ல பாடல்கள் பாடுகிறார்.
 இன்னும் பிரபல்யமாக முட்டி மோதும் சிறப்பானபாடகர் .
எனக்கு அதிகம் பிடிக்கும் இவர் குரலும் விகடன் பட நடிப்பும் ..


பாடகி ஹரினியின் குரல். காதலிகுழைந்து பேசுவது போல் மயக்கும் குரல். திருமதி திப்பு கணவர் குரலை விட இவர்அதிகம் என்னைப் பல பாடல்களில் கவர்கிறார்.

இவற்றை எல்லாம் மீறி இப்பாடல் காட்சியில் நான் பல நிலையில் மீளப் பிறக்கின்றேன். உணர்வால் எப்போதுமே கிராமத்து வாழ்வும் சொளகரியமும் பட்டணத்து வாழ்வில் பந்தி வைத்தாலும் வராது.

ராமராஜன் படத்தில் ஒரு வரிவரும் "எங்கஊரு காதல் பற்றி என்னை நினைக்கிற ...
....,..
மனச மட்டுமே முதலில் பார்ப் போம் மற்ற சேதி அதுக்கு மேலதான் "

அதுபோல் இந்த கிராமத்துக் காதல் என்பது .இப்பாடல் காட்சியில் வருவது போல் பார்த்துக் கொள்வதும் றல்லி சைக்கிலில் பின் தொடர்வதும் .ஏதாவது சந்தியில் தள்ளி நின்று ஏங்குவதும்.
தவிப்பதும் ,

தோழிகளின் கிண்டல்களை. தாங்கி சில ஆசாமிகள் குனிந்து போவதையும் பல தடவை பார்த்திருக்கின்றேன் .
இவற்றை மறந்து நான் காட்சியில் ஒன்றிப் போவது.

 ஒரு காலத்தில் இயற்கையாக மக்கள் ஆராதித்து வந்த கிராமத்து வயல்களில் நாற்று நடுவதுடன் தொடங்கி கிராமத்து குளிர்ச்சிமாரியின் வரவை கட்டியம் கூறும்போது .

மழை தொடங்கி கோடை வரும் வரை விறகுகள் .பரனில்அல்லது கொட்டகைகளில் தேக்கி வைப்பதும் .தென்னமட்டை ,தேங்காய்மட்டை,பண்ணாடை ஊமல் கொட்டை பூவரசங்கட்டை எனப்பலது முன் ஆயித்தம் செய்வதும்.

 தென்னம் தோப்பில் தேங்காய் பறித்து விற்பனைக்கு அனுப்புவதும் ஆங்காங்கே புதிய தென்னம்பிள்ளையை நடுவதும் என பல கிராமத்து இயல்புகள் வந்து என்னை தீண்டுகிறது .

நாற்று வளர்ந்து வயல்களில் பச்சை சேலை உடுத்தி தாலாட்டும் அழகு கண்ணுக்குள் இன்னும்.

 அதிகாலை பனிப் பொழிதில் வாய்க்காலில் வாத்து ஓட்டிய காலங்கள். !

மனதிற்குப் பிடித்த மாரிகாலத்தில் .வான்கதவு திறந்து மழை நீர் மண்ணாக ஓடி வரும் அந்த 4 ம் வாய்க்கால்களில் நண்பர்களுடன் குளித்த காலங்கள் !

ஒமந்தையில் இருந்து கேரைதீவு- சங்கிப் பிட்டி ஊடாக யாழ் கொண்டு போன அந்த நீலநிற மண்னெண்னை எத்தனை கலன்களில் சைக்கிலில் கட்டியிருப்பம்.!

சூடுமிதிச்சு வண்டிலில் ஏற்றிய வைக்கோலில் படுத்திருந்து போன காலங்கள்எத்தனை....!

 வீடுகளில் முன்னர்லவ் பேர்ட்ஸ் பறவைகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன். அதற்கு வைக்கும் சிறிய தானியம்.

நாகரிகம் வளராத என் கிராமத்தில் மாமரத்தடியிலும் தென்னை மரங்களுக்கிடையிலும் எங்கள் வீடு வந்து முடிவெட்டிச் செல்லும் அந்த முடிதிருத்துனர்.

 அவரிடம் இருந்த சொத்தான அந்த கத்தரிக் கோலும்,
 பிடரி மண்டையில் கிச்சு கிசு மூட்டும் கட்டர் மிசின்.

 இப்போது நாகரிகமாக பலர் தலையில் மொட்டை போட்டு விட்டாலும் அவரின் ஆடாத அசையாத எனத்தலையை பிடித்துவிட்ட. அந்த இனிமையான காலங்கள் எத்தனை.

 பொருளாதார முன்னோற்றம் கான. நான் அறிய எங்கள் கிராமத்தில் இருந்து மலேசியா போனவர் அவர்.
 இப்படி என் பல ஞாபகங்களை தட்டி எழுப்புகின்றன.

 இவை ஒரு புறம் என்றாள்!
நாகரிகவளர்ச்சியில் எந்த உடைஅணிந்தாலும் சாரத்திற்கு ஈடாகுமா ?
அதை கட்டிக் கொண்டு எத்தனை தூரங்கள் சைக்கிளில் சுற்றி வந்து இருபேன்!
.எத்தனை தென்னை மரங்களில் ஏறி இளனீர் புடுங்கி குடித்திருப்பேன்.!

கொடிகட்டும் கயிறுகள் எத்தனை விதம் !அது ஒரு இனிமையான இளமைக்காலங்கள். போனவை அதிகம் யுத்தம் எங்களை இயற்கையான கிராமத்தில் இருந்து பிரித்தது கிளிஞ்சல் கண்ட பாட்டியின் சேலையைப் போல் !

பலதை மீண்டும் போய் ஒரு கட்டுப் பாடும் இல்லாத அந்தகிராமத்து வயல்களில் படுத்துப் புரல முடியுமா? என்று ஏங்கும் தருணங்கள் அதிகம்.

பாடலில் கற்பனை என்பதை மிஞ்சி நிற்கும் சொல்லாமல் செய்யும் காதல் சுகமானது வரிகளாகட்டும் காதலும் கடவுலைப்போல அதை உணரனும் மெல்ல. இப்படி கவிஞரின் வார்த்தைகள் இன்னும் தெவிட்டாத பாடல்.
 .இக்கவிக்கு சொந்தக்காரர் விஜய் சாகர் இவரின் இன்னொரு பாடல் சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் தீனா படப்பாடல்.
 இப்போது இவர் ஒரு படத்தை இயக்கி முடியும் தருவாயில் இருக்கின்றது.
இப்பாடலை நயமாக இயக்கியவர் ஜெகன்ஜி.
 காட்சியை தத்துரூபமாக ஒலி/ஒளியாக்கியவர்  செந்தில்குமார்.

இதோ தனிமரத்தின் வலையில் உங்களை நாடி ஒலி/ஒளியாக.

11 comments :

சுதா SJ said...

கடைசியில் வரும் பாடல் சூப்பர் பாஸ்
குரல் பின்னணிகாட்சி நடிகர்கள் தேர்வு ஒளிபதிவு
எல்லாமே சூப்பர்

சுதா SJ said...

நல்ல பதிவு பாஸ்

சுதா SJ said...

//"காதலும் கடவுளைப் போல!!"//

உணர்ந்தவர்களுக்கு மட்டும்

தனிமரம் said...

நன்றி துஷ்யந்தன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும்.

காட்டான் said...

மாப்பிள உண்மையிலேயே இந்த காட்டானின் மனச தொட்டுட்டீங்க இப்பிடித்தான் நானும் சின்ன வயதில மழைக்காலம் வர முன்னர் பண்ணாடை பொறுக்கி மால்ல போட்டனாந்தான் அதுக்கு ஆச்சி 50சதம் தருவா அதை வைத்து அடுத்த நாள் ஐஸ்கிறீம் வாங்கினதெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க .. மால்ல மாடு மட்டும் கட்ட மாட்டோம் விறகுகள் மம்பட்டி அலவாங்கு இது எல்லாமெல்லோ வைப்பம் மாட்டுக்கு கொஞ்ச இடம் விடுவம் இப்ப அந்த பாவம்தான்..!?பாரீசில் மாட்டுமாலவிட குறுகிய இடத்தில் இருக்கிறம்...

காட்டான் said...

மாப்பிள உண்மையிலேயே இந்த காட்டானின் மனச தொட்டுட்டீங்க இப்பிடித்தான் நானும் சின்ன வயதில மழைக்காலம் வர முன்னர் பண்ணாடை பொறுக்கி மால்ல போட்டனாந்தான் அதுக்கு ஆச்சி 50சதம் தருவா அதை வைத்து அடுத்த நாள் ஐஸ்கிறீம் வாங்கினதெல்லாம் ஞாபகப்படுத்திட்டீங்க .. மால்ல மாடு மட்டும் கட்ட மாட்டோம் விறகுகள் மம்பட்டி அலவாங்கு இது எல்லாமெல்லோ வைப்பம் மாட்டுக்கு கொஞ்ச இடம் விடுவம் இப்ப அந்த பாவம்தான்..!?பாரீசில் மாட்டுமாலவிட குறுகிய இடத்தில் இருக்கிறம்...

தனிமரம் said...

நன்றி ஆதவன் உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் .
புலத்தில் பலர் மாட்டுமால்கூட இல்லாத நிலையில் இருக்கும் போது உங்கள் நிலை மேல் என்பேன்.

Unknown said...

உண்மையில் சிர்ப்பியின் இசை எனக்கு மிக பிடிக்கும்...அழகிய லைலா பாடலுக்கு நான் சிறு வயதிலேயே அடிமை!!

தனிமரம் said...

நல்ல இசையமைப்பாளர் அவர் இசை இப்போது அதிகம் வருவது இல்லை என நினைக்கிறேன் மைந்தன் சிவா. சின்ன வயசில் ரம்பா மெயில் போடவில்லையா பாஸ்?

ஹேமா said...

புலம்பெயர் வாழ்வில் தொடங்கி நடுவில் ஊர் ஞாபகங்களையும் கிளறி ரகசியமான காதலில் முடித்த பதிவு அருமை நேசன் !

தனிமரம் said...

சில பாடல்கள் என்னை பல நினைவுகளில் கரைந்து போகச் செய்கின்றதன் விளைவுதான் இந்தப் பதிவு நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.